Monday, October 13, 2014

அற்புத ஆலயம் ஆற்றுப்பிள்ளையார் கோவில்





திருச்செங்கோட்டிலிருந்து சேலம் செல்லும் வழியில் வழியில் உள்ள ஆட்டையாம்பட்டி  பேரூராட்சியில் உள்ள ஏரிக்கு எதிர்ப்புறம் ஆற்றுப்பிள்ளையார் கோவில் என்று பிரசித்தமான ஆலயம் அமைந்திருக்கிறது..

ரோசாப்பூரவிக்கைக்காரி திரைப்படம் எடுத்த ஏரிக்கரை என்றுதான் நிறையப்பேருக்கு பரிச்சயமாகியிருக்கிறது..

 பிரம்மாண்ட நாகர் சிலைக்கு குடைபிடிப்பதாக   ஆலயத்தின் முன்புறம் அடர்ந்த வன்னிமரம் கிளைப்பரப்பி வளர்ந்திருக்கிறது..

ஆலயத்துக்குள் வேப்பமரமும் வில்வமரமும் அருகருகே அமைந்திருக்கிறது.. நந்தியாவட்டை மலர்கள் பூத்துசொரிந்துகொண்டு கவனத்தை ஈர்த்தது..

மூலவர் ஆற்றுவிநாயகர் சங்கு சக்கர சின்னம் தாங்கி அருள்பொழிகிறார்.. அந்த சங்கு சக்கரங்களை டார்ச் ஒளியின் வெளிச்சத்தில் தரிசிக்கத்தந்தார் அர்ச்சகர் சுவாமிகள் திரு ஜெயபால் அவர்கள்..

இந்த ஆற்றுவிநாயகர் ,, மாமுண்டி என்னும் தலத்தில் உள்ள விநாயகர் போன்ற ஐந்து விநாயகர் சிலைகள் சங்கு சக்கர முத்திரை தாங்கிய வைஷ்ணவ விநாயராக ஒரே சிற்பியால் வடிக்கபெற்றது என்கிற கல்வெட்டு தஞ்சாவூரில் இருக்கிறதாம்..

மூலவருக்கு இருபுறம் நீலகண்டேஸ்வரரும் , விசாலாட்சி அன்னையும் அன்னைக்கு அருகில் முருகனும் அழகுற தரிசனம் தருகிறார்கள்..

நீலகண்டேஸ்வரைச்சுற்றி நீரூற்றுகள் உள்ளனவாம் . 
நீர்க்கசிவு எப்போதும் இருப்பதால் ஜலகண்டேஸ்வரர் 
என்றும் அழைக்கப்படுகிறார்.. 

















சுற்றிலும் நீர்வளம் ஆறு ஏரி போன்றவை இருப்பதால் விஷஜந்துகள் நடமாட்டம் அதிகம் உண்டாம். அர்ச்சக்ர் சுவாமியும் மிகவும் தூய்மையாகவும் ஜாக்கிரதையாகவும் சன்னதிகளுக்குள் விளக்குப்போட நுழையும் போது டார்ச் வெளிச்சத்தில் பலமுறை சோதித்தபிறகே உள்ளே செல்வாராம்.. 

தவறுதலாக கால்பட்டு பாம்பு போன்றவை தீண்டிவிட்டால் அர்ச்சகர் என்ன குற்றம் செய்தாரோ என ஊர்மக்கள் பேசுவார்களே என எச்சரிக்கையாக இருப்பாராம்.. இதுவரை இரண்டுமுறை பாம்பு சட்டை சிவன் சந்நிதியில்  கண்டெடுத்துவைத்திருந்தாராம்..

திரு நாகேஸ்வரம் ஆலயத்தில் அந்த சட்டைகளை கன்ணாடிப்பெட்டியில்  பத்திரப்படுத்தி வைத்து காட்சிப்படுத்தி இருப்பதைப்போல்  வைத்திருக்கலாமே என்று கேட்டேன்.. யாரோ கேட்டார்கள் கொடுத்துவிட்டேன் என்றார்..அவர்கண்களுக்கு பாம்பு எதுவும் இன்னு தட்டுப்பட்டதில்லையாம்..

கற்றளிகளால் ஆன ஆலய மேற்சுவரில் பதித்திருந்த மீன் முத்திரைகள் இந்த ஆலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான ஆலயம் என்று பறைசாற்றுகின்றது..

ஆலயம் இரண்டு ஊர்களுக்கு நடுவில் ஒதுக்குப்புறமாக இருப்பதாலும் , விஷஜந்துகள் நடமாட்டம் தொடங்கிவிடுவதாலும்  மாலை ஐந்தரை மணிக்கு நடை சாத்திவிடுவது வழக்கம் .. !

ஆருக்கும் அடங்காமல் ஊருக்கும் அடங்காமல் உலகத்துக்கும் அடங்காமல் இருக்கும் பலருக்கு இந்த ஆலயம் வரப்பிரசாதமாம்.. இங்கே வந்து திருமாங்கல்யம் சூட்டி திருமணம் செய்து  கொள்பவர்கள் அதன்பிறகு வீட்டிற்கு அடங்கி நடப்பது கண்கூடான அதிசயம்..

ஊரைச் சுற்றியுள்ள ஆலயங்களில் கும்பாபிஷேகம் என்றாலும் , மாரியம்மன் பண்டிகை, திருவிழாக்கள் எல்லாவற்றிற்கும்  ஆற்றுவிநாயகர் ஆலயத்தில்தான் தீர்த்தக்குடங்கள் நிறைக்கப்பட்டு பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்..



 ஆலயத்திற்கு சற்றுத்தொலைவில் ஒரு விவசாய நிலத்தினை உழும்போது கிடைத்த சில விக்ரஹங்களை எடுத்து பிரதிஷ்ட்டை செய்து அமாவாசை ,பௌர்ணமி , பிரதோஷகாலங்களில் வ்ழிபாடுகள் செய்வதாக தகவல் கிடைத்தது .. சென்று பார்த்து தகவல் திரட்டினோம்.
தாரமங்கலத்திலிருது உழவாரப்பணி செய்யும் அன்பர்கள் நிதிதிரட்டி ஆலயம் அமைக்க முயற்சிமேற்கொண்டிருக்கிறார்கள்..

சிவலிங்கம் , பலிபீடம் ,அம்மன் சிலை நந்தி சிலை பைரவர் , சண்டிகேஸ்ரர் சிலைகள் கிடைத்ததாம் 





அம்மன் சிலையை ஆலயத்தில் வைக்க எடுத்துச்சென்றுவிட்டார்களாம்..

இந்த விநாயகரும் சமீபத்தில் பூமியிலிருந்து கிடைத்தவர்.. 

ஊரைச்சுற்றிலும் இருபதிற்கு மேற்பட்ட முனியப்பன் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

ஏரிக்கரையில் சப்தகன்னியர் ,,நவகன்னியர் ஆலயம் அமைந்திருக்கிறது..

காவல் தெய்வமான முனியப்பனின் பஞ்ச்லோக சிலைகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு சாமி வீடு என்று ஒரு ஆலயத்திற்குள் வைத்து பூஜிக்கிறார்கள்.

ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட அழகான ஐயப்பன் விகரஹமும் உண்டு..

முனியப்பன் காவல் தெய்வமானதால் ஊர்க்காவலுக்கு குதிரையில் ஆரோகணித்து , ஏந்திச்செல்லும் அரிவாள் , எக்காளம் , சிலம்பு எல்லாம் காணக்கிடைத்தன.. 


5 comments:

  1. சிலம்புகள் கிடைத்தமை வியப்பைத் தருகின்றன சகோதரியாரே
    தகுந்தவர் ஆய்வு செய்தால், அரிய பல செய்திகளள் வெளிப்படலாம் என எண்ணுகின்றேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. எம்மைப் போன்ற பலரும் அறியாத அற்புத ஆலயம். தரிசனம் கிட்டையமைக்கு நன்றி! ஆர்வத்தைத் தூண்டியது அடுத்தமுறை திருச்செங்கோடு செல்லும்போது அவசியம் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள். பயணம் செய்து பல கோவில்களுக்குச் சென்று தகவல்களை தரும் உங்களுக்கு எங்களது நன்றி....

    ReplyDelete
  4. அருமையான படங்கள்.

    புதிய வியப்பான தகவல்கள்.

    அருமை.

    ReplyDelete
  5. சிறப்பான படங்களுடன் ஆற்றுக்கரை விநாயகர் தல தகவல்கள் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete