அஸத்தோமா சத்கமயா தமஸோமா ஜோதிர்கமயா
ம்ருத்யோமா அமிர்தம்கமயா ஓம் சாந்தி சாந்தி சாந்தி:
என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இருள் அகன்று, ஒளி ப்ரகாசிப்பதும். அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்குவதும்தான் தீபாவளிப்பண்டிகையின் முக்கியத்துவம்
இன்ப ஒளியேற்றி தீமையென்னும் இருளகற்றி
திருநாளாகக் கொண்டாடப்படுவது தீபாவளித் திருநாள்.
“தமஸோ மா ஜ்யோதிர்கமய’ எனும் வேதவாக்கிற்கிணங்க, இருளிலிருந்து பேரின்பப் பேரொளிக்கு அழைத்துச் செல்லும் தீபாவளித் திருநாளுக்கு தத்துவங்கள், காரணங்கள், வழிபாட்டு நியதிகள், நீராடும் முறைகள் ஏராளம் உண்டு
துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகத் தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞானமும், அறியாமையும், அஹங்காரமும் அழிந்ததற்கு அடையாளமாக எல்லோரும் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி தீபங்கள் ஏற்றி வாண வேடிக்கைகளுடன் கொண்டாடவேண்டுமென்று அந்த அரக்கன் கேட்ட வரத்தின்படி கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய் காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது..
.
இறைவனைப் பிரிந்து வருந்திய உமாதேவி, கேதாரகௌரி விரதம் கடைப்பிடித்து அவருடன் இணைந்ததும் தீபாவளி நாளில்தான்.
கோகுலத்தில் தொடர் மழை பெய்வித்த இந்திரனால் கோகுலவாசிகள் துயரமடைந்தபோது, கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதனடியில் கோகுலவாசிகளைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அடக்கினார். கோகுலவாசிகள் கோவர்த் தனகிரியை வழிபட்ட நாள் தீபாவளி.
சாவித்திரி, எமனோடு வாதிட்டு சத்தியவானை உயிருடன் மீட்ட நாளும் இதுவே.நசிகேதன், எமலோகம் சென்று வரம்பெற்று திரும்பிய நாளும் இதுதான்.
வாமனரால் பாதாள உலகத்திற்கு அழுத்தப்பெற்ற மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டு மக்களைக் காண பூமிக்கு வரும் நன்னாளே தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
சமணர்கள் மகாவீரர் மகா நிர்வாணம் அடைந்த நாளாக
தீபாவளியைக் கொண்டாடு கின்றனர்.
ராமபிரான் இராவணனை வென்று சீதையை மீட்டுவந்த
திருநாளாக,ராமரின் வெற்றித்திருநாளாக
தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது
தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து முதலில் விஷம் தோன்றியது. அதை உலகம் உய்யும் பொருட்டு சிவபெருமான் உண்டார்.
அடுத்து பல பொருட்கள் தோன்றின. அதில் பாற்கடலிலிருந்து மகாலட்சுமியும் தோன்றினாள். ஸ்ரீமகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள்.
பிறகு, தன்வந்திரியானவர், கீழ் வலது கையில் அட்டைப்பூச்சி, இடது கையில் அமிர்த (மூலிகை) கலசத்துடனும், மேலிருகைகளில் சங்குசக்கரத்துடன் தோன்றினார். இவரே ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்த நிகழ்ச்சிகள் எல்லாம் தீபாவளித் திருநாளில் நடந்ததாகப் புராணம் கூறுகிறது.
பகீரதன், தன் முன்னோர்கள் புனிதமடையவேண்டி தேவலோக கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த நாளும் தீபாவளித் திருநாள்தான்.
துலா மாதமான ஐப்பசி மாதத் தேய்பிறையில் திரயோதசி நாளில், மகாபிரதோஷ வேளையில் பூஜை செய்து, எமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வழிபடவேண்டும்.
எமதர்மராஜனை மனதார பிரார்த்தனை செய்வதால் துன்பங்கள் நெருங்காது. அகால மரணம் ஏற்படாது. தீவினைகளினால் நரகத்தில் துன்பப்படும் முன்னோர்கள் சுவர்க்கம் செல்லவும் இந்த எமதீபம் அருள்பாலிக்கும். வாழ்வு நலம்பெறும். எடுத்த காரியத்தில் தடைகள் ஏற்படாது”
நரகசதுர்த்தியான தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடவேண்டும். அன்று எண்ணெயில் திருமகளும், எல்லா நீர் நிலைகளிலும் கங்கையும் உறைகிறது.
எனவே, எண்ணெய் தேய்த்து புனித நீராடினால் கங்கையில் நீராடிய பலனும், திருமகள் கடாட்சமும் கிடைக்கும். கங்கா ஸ்நானம் முடிந்ததும் புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்கள் படைத்து இறைவனை வழிபட்டால் எல்லாம் நலமாகும்.
தீபாவளிப் புனித நாளில் அரப்புப் பொடியில் கலைவாணியும்,
சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கௌரியும்,
மலர்களில் மோகினிகளும், புத்தாடைகளில் விஷ்ணுவும்,
பட்சணங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் உறைகின்றனர்..
புனிதமான தீபாவளித் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடி
மனிதநேயம் வளர்க்கிறோம்..!.
தீபாவளி பற்றிய நல்ல தகவல்
ReplyDeleteதங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி வாழ்த்துக்கள் தோழி! அருமையான படங்கள்.
ReplyDeleteதீபாவளி - ஒரே பண்டிகை பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு இடங்களில் கொண்டாடப்படும் தகவல்களை ஒரே பதிவினில் தொகுத்துச் சொல்லியதற்கு நன்றி!
ReplyDeleteவலையுலகில் ஆன்மீகப் பதிவர் என்று பாராட்டப்படும் தங்களுக்கு, எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteHAPPY DEEPAVALI
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும்,தங்கள் குடும்பத்தவர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதீபாவளி குறித்து பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteதீபாவளிச் சிறப்புப் பதிவு
ReplyDeleteமிக மிக அருமை
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி சிறப்பு பகிர்வு நன்று.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
மிக அருமை!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
ReplyDelete"இவ்வண்ண பெருவிழாவில் வனப்புடனே மகிழ்ச்சி வெள்ளம்
ReplyDeleteஎண்ணமெலாம் வழிந்தோடி வாழ்வில் ஏற்றங்கள் பெருகிடவே
சின்னவன்(??) நான் வாழ்த்துகின்றேன்- அதுவும்
சின்சியராய் வாழ்த்துகின்றேன்
சிறப்புடனே வாழ்கவென்று!".