


ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் வாராதிங்கு இடர்.”
- கவிச்சக்கரவர்த்தி கம்பர்

அறியும் திறனுக்கு அரணாய் இருந்து, அருள்பாலித்து, ஈடு இணையற்ற கல்விச் செல்வத்தை அளித்து, காக்கும் சக்தியாய் உலவும் அன்னை சரஸ்வதி தேவி மென்மையின் இருப்பிடம்.

மென்மை உள்ள இடத்தில்தான் அறிதல் இருக்கும். வன்மை உள்ள இடத்தில் மட்டுமே நிலைக்கும். ஆணவம்கொண்டோருக்கு அன்னையின் அருள் கிட்டுவதில்லை.

அன்னை சரஸ்வதி கல்விக்கும் ஆயகலைகள் 64 க்கும் அதிபதி. சமயோசிதம், புத்திக்கூர்மை, நாவன்மை ஆகியவைகளுக்கும் அதிபதி கலைவாணியே.
பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிக்கும் சகலகலா வல்லியினது திருவடிகளை வெள்ளை நிறத் தாமரையே தாங்கியுள்ளது!

வஞ்சனையற்ற குளிர்ந்த எளியோர்களின் வெண்தாமரை போன்ற மனதினை திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ள ஏங்கி துதிக்கிறோம்.!


மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்வது போன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் அன்னம் சகலகலாவல்லி -

அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்வதைப்போன்று பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு வழங்கி அருள்பாலிக்கும் வெண்மையான பெண் அன்னம் -கலைமகள்

படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் கலைமகளைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவள் சகலகலாவல்லியே! -



சரசுவதித் திருநாளில் வணங்குவோம்
ReplyDeleteஅருள் பெறுவோம்
நன்றி சகோதரியாரே
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteசரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகலகாலவல்லி படங்கள் எல்லாம் மிக அழகு.
சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் அம்மா
ReplyDeleteவழமை போல் பேசும் படங்களின் அழகு ஜொலிக்கிறது !
ReplyDeleteஉங்களுக்கும் என் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் தோழி !
சரஸ்வதிபூஜை நல்வாழ்த்துக்கள். சரஸ்வதியின் அருட்கடாட்சம் எந்நாளும் உங்களுக்கு கிடைக்கட்டும்.அழகான படங்கள். சரஸ்வதிதேவியின் சிறப்பான பகிர்வு. நன்றி
ReplyDeleteஅரிச்சுவடியை வழங்கிய அருள்தேவி(சரஸ்வதி) யின் கருணையை பெற்றுவிட்டீர்கள் இந்த படைப்பின் மூலம். மகிழிச்சி வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதுவை வேலு(KUZHALINNISAI.BLOGSPOT.COM)
இன்று முற்பகலிலேயே உங்கள் பதிவினைப் படித்து விட்டேன்.
ReplyDeleteதங்களுக்கு எனது உளங்கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!
இந்த பதிவினில் படங்கள் பளிச்சென்று பல்வேறு அழகிய வண்ணங்களில்! மனதைக் கொள்ளை கொண்டன.
உங்களுக்கு எனது இனிய ஆயுத பூசை வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்! விஜயதசமி வாழ்த்துக்களும்!
ReplyDelete