Sunday, October 19, 2014

காசியில் தீபாவளி கொண்டாட்டங்கள்





அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||

 அன்னம் நிறைந்தவளே! என்றும் பூரணமாக இருப்பவளே! 
சங்கரனின் பிராண நாயகியே!

மாதா பார்வதியே! எமக்கு ஞான வைராக்கியம் ஏற்பட
 பிட்சை இட்டு அருள்வாய்!


மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||

 எனக்குத் தாய் - பார்வதீ தேவீ! தந்தை - மகேஸ்வரன்!
சொந்தங்கள் - சிவபக்தர்கள்! என் தேசம் - மூவுலகமுமே!

தினமும் வீட்டில் அன்ன பூரணியின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தால் தேவியின் திருவருளால் செல்வம் பெருகும், தான்ய வளம் கொழிக்கும், உணவுக்கு பஞ்சம் இருக்காது, நல் வாழ்வு கிட்டும்.

தேவி ஸர்வவிசித்ர ரத்னரசிதா தாக்ஷாயணீ சுந்தரீ
வாமாச்வாது பயோதரா ப்ரியகரி ஸெளபாக்ய மாஹேஸ்வரி
பக்தாபீஷ்டகரி சுதாசுபகரி காசிபுராதீஸ்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி

இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக கங்கை நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் காசி அல்லது பனாரஸ் அல்லது வாரணாசி நகரம் தேவ் தீபாவளி கொண்டாட்டத்தின் போது அழகு மிளிர காட்சியளிக்கும். 
வாரணாசியில் ஆண்டுதோறும் தேவ் தீபாவளி பண்டிகை கங்கை நதியையும், காசி விஸ்வநாதரையும் மரியாதை செலுத்தும் விதமாக மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 
இங்கு கொண்டாடப்படும் மஹாஉத்சவம் என்ற பண்டிகையின் கடைசி நாளான தேவ் தீபாவளியின் போது நகரமெங்கும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 
அதோடு கங்கை ஆற்றில் ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் மிதக்கவிடப்படும். அப்போது மாலைவேளையில் நடக்கும் கங்கா ஆர்த்தியை பார்க்க கண்கோடி வேண்டும்

கங்கை நதியின் படித்துறைகள் அனைத்தும் தேவ் தீபாவளி பண்டிகையின்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்படி 84 படித்துறைகளும் வண்ண விளக்குகளால் மிளிரும் போது படகுப்பயணம் மேற்கொள்வது சுற்றுலாப் பயனிகளைடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. 
இந்த அலங்கார விளக்குகளின் அணிவகுப்பு கங்கை நதிக்கு செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது. 
அதோடு பூமிக்கு வரும் தேவதைகள் இதன் மூலம் 
மகிழ்ச்சி அடைவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. 

10 comments:

  1. காசியில் தீபாவளி கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  2. சென்ற வருட தீபாவளி அன்று காசியில் இருந்தேன். கங்காஸ்தானமும்
    கங்கையிலேயே ஆயிற்று. மறக்க முடியாத, வாழ்க்கை பூராவும் கூட
    வருகிற நினைவுகள்!. புண்ணிய ஷேத்ரம் காசி மனதில் விளைவிக்கும்
    புத்துணர்ச்சியே அலாதிதான்!

    ReplyDelete
  3. காசிவிஸ்வநாதர், அன்னபூரணி தரிசனம் கிடைத்தது.
    நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  4. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. புகைப்படங்கள் மனதை அள்ளுகின்றன வாழ்த்துக்கள்
    நண்பர்களின் முகநூல் தகவல்கள்

    ReplyDelete
  6. காசிக்குப் போய் இருக்கிறோம். ஆனால் சில இடங்கள் விழாக்காலங்களில் காணக் கொடுப்பினை இல்லை. கங்கா ஆரத்தி, நதியில் விளக்குகளென்று பார்த்திருந்தும் இப்பதிவைப் படிக்கும் போது எதையோ மிஸ் செய்தமாதிரித் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தீபாவளி சமயத்தில் காசி சென்றதில்லை. உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  8. தீபாவளி வாழ்த்துக்கள் ...!அனைத்தும் அருமை அழகிய படங்களும்.

    ReplyDelete
  9. அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே
    ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ..

    அன்னபூரணி அனைவருக்கும் மங்கலங்களைத் தந்தருள்வாளாக!..

    ReplyDelete
  10. அழகிய படங்கள்.

    ReplyDelete