கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காளையம் பொழுதாய்
மது விருந்தொழுகின மாமலரெல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களித்தீட்டமும் பிடியொடும் முரசும்
அதிர் தலில் அலைக் கடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
-தொண்டரடிப்பொடி ஆழ்வார்
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
- என்று நம் செம்மொழித் தமிழில் போற்றி வழிபாட்டுக்கு ஆறாம் நூற்றாண்டிலேயே வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் தெய்வத் தமிழின் கம்பீரத்தை உணர்த்திய ஸ்ரீ ஆண்டாள்.
இன்று நாம் சுலபமாக சர்வ சாதாரணமாக கேட்கும் சில மந்திரங்களுக்காக
நம் பெரியோர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
நம் பெரியோர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
‘ஓம் நமோ நாராயணாய” என்னும் இந்த அஷ்டாக்ஷர மந்திர உபதேசம் பெற இராமனுஜர் பல கஷ்டங்களை அனுபவித்து, தான் பெற்ற நிறைவை, இந்த மண்ணுய்ய, மண்ணுலகிலுள்ள மனிதர் உய்ய, நம் எல்லாருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குருவே மேலான ப்ரஹ்மம். குருவே மேலான தனம்.
குருவே மேலான காமம். குருவே மேலான ப்ராப்யம்.
குருவே மேலான கல்வி. குருவே மேலான ப்ராவகம்.
அப்பரம்பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.
செல்வம் நிறைந்ததாய், மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கம்
ஒப்பற்ற க்ஷேத்ரமாகும்.
ஸ்ரீரங்கம் அடைந்த மனிதன் நரகத்தையும் தாழ்ந்த கதிகளையும் அடைவதில்லை
ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்து, இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார்.
கருடருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர்.
அபிஷேகம் கிடையாது.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.
அபிஷேகம் கிடையாது.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.
பெரிய திருவடி (கருடாழ்வார்) சன்னதியின் பின்புறச்
சுவரை ஒட்டியில்லாமல் நடுவிலேயே இருக்கிறார் கருடர்.
சுவரை ஒட்டியில்லாமல் நடுவிலேயே இருக்கிறார் கருடர்.
கருடரது பின்புறம் மற்றொரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது.
கருடரின் பின்னால் ஒரு ரகசிய அறை இருப்பதாகவும், அதில் தங்கம், வெள்ளி என்று பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல்.
அந்த சந்தேகத்துக்கு வலு சேர்ப்பதுபோல் ஜன்னல்களின் இடைவெளிகளும்கூட கற்களால் அடைக்கப்பட்டு விட்டன.
முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின்போது, கோயில் நகைகளைக் காப்பாற்ற அங்கே பொக்கிஷங்கள் குவிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கருடாழ்வார் மீது பூசப்பட்டிருந்த தங்க முலாம் மாலிக்காபூர் படையெடுத்தபோது பல கோயில் நகைகளை சூறையாடிச் சென்றான் என்பது வரலாறு.
அந்த மாலிக்காபூர் கண்ணில் திருவரங்கமும் தப்பவில்லை.
கருடாழ்வார் மேலிருந்த தங்கத்தை எப்படி எடுப்பது என்று யோசித்த மாலிக்காபூர் நிலையின் மேல் நெய் அபிஷேகம் நடத்தி நெருப்பைப் பற்ற வைத்துவிட்டான்.
உருகி ஓடிய தங்கத்தை கட்டிகளாக்கி எடுத்துக் கொண்டு போய்விட்டான்.
அந்த மாலிக்காபூர் கண்ணில் திருவரங்கமும் தப்பவில்லை.
கருடாழ்வார் மேலிருந்த தங்கத்தை எப்படி எடுப்பது என்று யோசித்த மாலிக்காபூர் நிலையின் மேல் நெய் அபிஷேகம் நடத்தி நெருப்பைப் பற்ற வைத்துவிட்டான்.
உருகி ஓடிய தங்கத்தை கட்டிகளாக்கி எடுத்துக் கொண்டு போய்விட்டான்.
With your permission, I am giving a link in my blog
ReplyDeletehttp://pureaanmeekam.blogspot.com
subburathinam
பரம்பொருளை உபதேசிப்பது போல், அதனை பதிவில் போடும் தாங்களும் சிறந்த சேவை செய்கிறீர்கள்.
ReplyDeleteவந்து விட்டது ராஜியின் 'suppose ' ஏகாதசி கொண்டாட்டம்.
ReplyDeleteபடங்கள் பக்தி பரவசம்.
"ஓம் நமோ நாராயணாய”
ReplyDelete=======================
இரண்டாவ்து படத்தின் பின்னனியில், தங்க கோபுரக்கலசத்துடன்
பள்ளிகொண்ட பெருமாளை ஸேவிக்கச் செய்தது அருமை.
வை. கோபாலகிருஷ்ணன்/
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
தங்களின் வலைச்சின்னமான ’அழகிய செந்தாமரைப்பூ’வை நன்கு விரித்து
ReplyDeleteஅந்தத் தங்கக்கோபுரக்கலசத்தையே சிறை பிடித்துக்காட்டியுள்ளதும் அழகு!
வை. கோபாலகிருஷ்ணன்//
அழ்கான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
//அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
ReplyDeleteசென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி//
என்று நம் செம்மொழித் தமிழில் போற்றி வழிபாட்டுக்கு ஆறாம்
நூற்றாண்டிலேயே வழி ஏற்படுத்தித் தந்திருக்கும் ஸ்ரீ ஆண்டாளை
அடுத்த ஐந்தாவது படத்தினில் அழகாகக்காட்டி, போற்றி போற்றி
பாடலையும் பொருத்தமாகத் தந்துள்ள மிகச் சிறப்பாக உள்ளது.
வை. கோபாலகிருஷ்ணன்
=========================/
சிறப்பான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
//இன்று நாம் சுலபமாக சர்வ சாதாரணமாக கேட்கும் சில மந்திரங்களுக்காக நம் பெரியோர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ReplyDelete‘ஓம் நமோ நாராயணாய” என்னும் இந்த அஷ்டாக்ஷர மந்திர உபதேசம் பெற இராமனுஜர் பல கஷ்டங்களை அனுபவித்து, தான் பெற்ற நிறைவை, இந்த மண்ணுய்ய, மண்ணுலகிலுள்ள மனிதர் உய்ய, நம் எல்லாருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.//
ஸ்ரீ இராமனுஜர், அதை ஏதோ ஒரு கோபுர உச்சியின் மேல் ஏறி, நிபந்தனைகளை மீறி, அனைவருக்கும் கேட்குமாறு உரக்கவே சொன்னார் என்பார்கள்.
அதாவது தன் ஒருவனுக்கு, பிறர் கேட்கும்படி, இதைச்சொல்வதனால் என்ன இடர் வந்தாலும் பரவாயில்லை.
இதைக்கேட்கும் பொது ஜனங்கள் பலருக்கும் நன்மை ஏற்பட்டால் போதும்
என்று கருதியே உரக்கச்சொன்னாராம்.
அவரே மிகச்சிறந்த ’குரு’ வாகத்திகழ்ந்தவர்.
அது போலவே தாங்களும் இப்போது அந்த நிகழ்ச்சியை மிகவும்
அழகாகவே இங்கு எல்லோருக்கும் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சி!
வை. கோபாலகிருஷ்ணன்//
=========================
மகிழ்ச்சி தரும் இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
கருட வாகன ஸேவைகளும், 30 மீட்டர் வேஷ்டியுடன் அமர்ந்திருக்கும் கருடனையும், நன்கு காட்டியுள்ளீர்கள். அது போல சக்ரத்தாழ்வார் சந்நதியில் சக்கரத்துடன் கூடிய நுழைவாயில் நன்கு காட்டப்பட்டுள்ளது.
ReplyDelete[அங்கு ஒரு அழகான பூச்சரம் ஸ்ரீ சுதர்சனச் சக்ரம் போன்றே விற்பார்களே!
அது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா!]
கருடாழ்வார் மேல் பூசப்பட்டிருந்த தங்க முலாம் திருட்டு பற்றிய வரலாறையும் நீங்கள் விட்டு விடாமல் எழுதியிருப்பது வியப்பாகவே உள்ளது. எவ்வளவு விஷயங்களை திரட்டி தொகுத்துத் தருகிறீர்கள்! வியப்போ வியப்பாக உள்ளது.
வை. கோபாலகிருஷ்ணன்
========================/
அழகான பூச்சரம் ஸ்ரீ சுதர்சனச் சக்ரம் போன்றே விற்பார்களே!
அது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா!] அந்த இடத்தில் நிறைய முறை நின்று மனம் நிரம்ப பார்த்திருக்கிறேன்..ஐயா..
பத்தாவது படத்தில் உள்ள அம்பாள் திருமாங்கல்யம் பவழமாலை மற்ற அனைத்து ஆபரணங்களுடன் மிகவும் ஜோராகக் காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteஅதுபோலவே, கடைசி இரண்டு படங்களில், காசு மாலை, கல் அட்டிகை, நவ ரத்னக்கற்கள் என அனைத்து ஆபரங்களுடனும் தாயார் சர்வ அலங்கார பூஷிதயாய் ஜொலிக்கிறார்கள்.
அழகிய முரட்டு மாலைகள், அற்புதமான கொண்டை அலங்காரம், அபய ஹஸ்தம் என காலோடு தலை மிகவும் அசத்தலானத் தோற்றம்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்றும் இன்றும் பிரித்துக் கொடுத்துள்ள பதிவுகள் அழகோ அழகு தான்.
தங்களின் கடும் உழைப்பும், ஆர்வமும், பக்தி சிரத்தையும், இந்தப் பதிவுகளில், அந்த அம்பாளின் விக்ரஹம் போலவே ஜொலிக்கின்றன.
மனமார்ந்த பாராட்டுக்கள்+வாழ்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தொடரட்டும் தங்களின் இந்த ஆன்மிகப்பணி. ;))))
வை. கோபாலகிருஷ்ணன்
======================== //
அசத்தலான ஜொலிக்கும் கருத்துரைகளை சிரத்தையுடன்
இ-மெயிலில் அனுப்பி பதிவை நிறைவுறச்செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.
sury said...
ReplyDeleteWith your permission, I am giving a link in my blog
http://pureaanmeekam.blogspot.com
subburathinam/
இனிய நன்றிகள் ஐயா..
Shakthiprabha said...
ReplyDeleteபரம்பொருளை உபதேசிப்பது போல், அதனை பதிவில் போடும் தாங்களும் சிறந்த சேவை செய்கிறீர்கள்./
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்
ஸ்ரவாணி said...
ReplyDeleteவந்து விட்டது ராஜியின் 'suppose ' ஏகாதசி கொண்டாட்டம்.
படங்கள் பக்தி பரவசம்.//
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்
பலே கில்லாடி! தங்கத்தை உருக்கிக் கொண்டு போயிட்டானா! படங்கள் பக்தி பரவசம். வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
வணக்கம் வாழ்த்துக்கள் பக்தி மழை பொழியுது
ReplyDeleteஆண்டாள் பாட்டில் "கையில் வேல் கொண்டாய் போற்றி" என்று வருகிறதே. அப்பொழுது பெருமாள் கையிலும் வேல் உண்டோ ?
ReplyDeleteஆஹா திவ்யமான தரிசனம் என இதைத்தான் சொல்வார்களோ
ReplyDeleteபடங்கள் மிகமிக பிரமாத்ம்
காலையில் முதல் தரிசனம் தங்கள் பதிவுதான்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
வழக்கம்போல படங்களும் பதிவும் நல்லா இருக்கு. இதுக்குமேல என்ன சொல்றதுன்னு தெரியவே மாட்டேங்குது படங்கள் எல்லாம் கட்டிப்போடுது.
ReplyDeleteபழனி.கந்தசாமி said...
ReplyDeleteஆண்டாள் பாட்டில் "கையில் வேல் கொண்டாய் போற்றி" என்று வருகிறதே. அப்பொழுது பெருமாள் கையிலும் வேல் உண்டோ ?
கூர் "வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்! - திருப்பாவை 01
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி! - திருப்பாவை 24
பகைவர்களை அழிக்க உன் கையில் விளங்கும் உனது திவ்ய ஆயுதங்களை வணங்குகின்றோம்.
லேட்டா வந்துட்டேன் போல...படங்களுடன் பதிவு அருமை...இம்புட்டு படம் போடுரீங்க சாமி லோடு தான் கம்பூட்டர்ல சில நேரம் ஆக மாட்டேங்குது..அதான் சில நேரங்களில் படங்கள் காண முடிவதில்லை ஹிஹி!
ReplyDeleteபடங்களின் அழகும்,பதிவின் சிறப்பும் நினைவில் நிற்கும்.
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ - படங்கள் அத்தனையும் அருமை - விளக்கமோ அதற்கும் மேல். மூலமும் உரையும் அருமை. உரையாசிரியர் மூல ஆசிரியரை விஞ்சுகிறார். அருமை அருமை - நல்வாழ்த்துகள் இருவருக்கும். நட்புடன் சீனா
ReplyDelete//cheena (சீனா) January 7, 2012 at 5.10 AM
Deleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை. கோ - படங்கள் அத்தனையும் அருமை - விளக்கமோ அதற்கும் மேல்.
மூலமும் உரையும் அருமை. உரையாசிரியர் மூல ஆசிரியரை விஞ்சுகிறார். அருமை அருமை. நல்வாழ்த்துகள் இருவருக்கும் - நட்புடன் சீனா//
மூல ஆசிரியர் அவர்களே முதன்மையானவர், முக்கியமானவர், முத்தானவர், ஐயா.
எல்லாப்புகழும் அவர்களையே சாரும், ஐயா.
பூவோடு சேர்ந்த நாராக அடியேனையும் தாங்கள் இங்கு பாராட்டியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் ஐயா.
அவர்களும் நானும் ஒரே ஆண்டு ஒரே மாதத்தில் தான் பதிவிடத் துவங்கினோம், ஐயா. அவர்கள் இப்போது வெற்றிகரமாக 1000 பதிவுகளைத் தாண்டியாச்சு, ஐயா.
ஆனால் நான் 400ஐ எட்டவே நாக்குத்தள்ளிப்போயாச்சு ! ;)
அவர்கள் State First Student என்றால் நான் Just Pass Marks வாங்கிடும் மிகச்சாதாரண Student மட்டுமே, ஐயா.
அவர்களைப்போய் நானாவது விஞ்சுவவாவது! என்னால் கெஞ்ச மட்டுமே முடியும். விஞ்ச முடியாது, ஐயா.
இல்லாவிட்டால் ’1000 நிலவே வா .... ஓர் 1000 நிலவே வா’
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html எனச் சிறப்புப்பதிவு வெளியிட்டு கொஞ்ச...ம் .... பாராட்ட மட்டுமே முடியும், ஐயா.
எனினும் தங்களின் நல்வாழ்த்துகளுக்கு நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
1910+8+1=1919 ;)))))
ReplyDeleteஅடியேன் மெயில் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க முடிந்த அனைத்துப் பின்னூட்டங்களையும் சிரத்தையாக வெளியிட்டு மகிழ்வித்து உதவியுள்ளதற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.