Monday, January 9, 2012

மகாராசா பாலமுருகன்





முருகா! முருகா! முருகா! 
வருவாய் மயில் மீதினிலே 
வடிவே லுடனே வருவாய்! 
தருவாய் நலமும் தகவும் புகழும் 
தவமும் திறமும் தனமும் கனமும் 



திருவள்ளூர் மாவட்டம் மேட்டுக்குப்பம், வானகரம் என்னும் ஊரில் அபூர்வ மச்சக்கார சுவாமிநாத பாலமுருகனைத் தரிசிக்கலாம்..
[Image1]
தலவிநாயகர் ஸ்ரீசக்ர விநாயகர், விமானம்: மயில் விமானம்

கிரக வஸ்திர பூஜை: முருகப்பெருமான் இக்கோயிலில், பால வடிவில் நின்ற கோலத்தில் அருளுகிறார். மயில் விமானத்தின் கீழ் காட்சி தருவதால், மூலஸ்தானத்தில் மயில் இல்லை.
மூலவர் சுவாமிநாத பாலமுருகன்

விசேஷ நாட்களில் இவரது கன்னத்தில் மச்சம் உள்ள இடத்தில், குங்குமம் வைத்து அலங்காரம் செய்கின்றனர். அப்போது மட்டுமே மச்சத்தைப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் இவருக்கு எண்ணெய்க்காப்பு செய்வதால், மச்சத்தைக் காண முடியாது.
மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன்


உற்சவர் முருகன்


ஒவ்வொரு நாளும், அந்தந்த கிரகங்களுக்குரிய நிறத்தில் வஸ்திரம் அணிவித்து அலங்காரம் செய்வது மற்றொரு சிறப்பு.

கிரக தோஷம் உள்ளவர்கள், அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில், கிரகத்திற்குரிய நிறத்தில் முருகனுக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கிருத்திகை உச்சிக்காலத்தில் முருகனுக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அன்று மாலையில் சுவாமி புறப்பாடாகிறார்.

ஸ்ரீசக்ர விநாயகர்: முருகன் சன்னதிக்கு வலப்புறம் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார். விநாயகர், அம்பிகையிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரை சக்தி அம்சமாக கருதுகின்றனர். இதன் அடிப்படையில், அம்பாளுக்குரிய ஸ்ரீசக்ரம் இவரது சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. எனவே,
 "ஸ்ரீசக்ர விநாயகர்' என்று அழைக்க்கிறோம்...


பிரகாரத்தில் சீதை, லட்சுமணனுடன் ராமர், யோக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், விஷ்ணு துர்க்கா லட்சுமி தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்கின்றனர்.
ராமர்

சனீஸ்வரர்



தட்சிணாமூர்த்தி

கடன் நிவாரண பூஜை: இங்கு பைரவியுடன் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார். பைரவர் கையிலுள்ள கும்பத்தில் மகாலட்சுமி சிற்பம் உள்ளது. அஷ்டமி திதியன்று உச்சிக்காலத்தில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கடன் தொல்லையிலிருந்து விடுபட துர்க்கை மற்றும் பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்


தினைப்புனம் என்பது உலக இன்பத்தைக் குறிக்கும். அதில் மூழ்கிக் கிடந்தாள் வள்ளி. இவ்வாறு அறியாமல் மூழ்கிக் கிடக்கும் உயிர்களையும் தானே வலியத் தேடிச்சென்று ஆட்கொள்ள வருகிறான் இறைவன். முருகனும் வள்ளியை ஆட்கொள்ள வலிய வந்தார்.

இறை சிந்தனையே இல்லாத உயிர்கள் அவனைச் சிந்திப்பதே இல்லை. இது முருகனைக் கண்டு வள்ளி ஒதுங்கி ஓடியதைக் குறிக்கிறது. பின்னர் விநாயகர் உதவியுடன் அவளை மணந்தார். இது கந்தபுராணக்கதை,
ஆனால், கர்ண பரம்பரையாக மற்றொரு செய்தி கூறப்படுகிறது.

முருகன் முதியவர் வடிவில் வள்ளியைத் தேடிச்சென்ற போது. ""கிழவரே! கன்னியர் இருக்கும் இடத்தில் உமக்கென்ன வேலை?'' என்று கேட்டாள். முருகனும் திரும்பிவிட்டார். மறுநாள் அழகிய இளைஞன் வடிவில் சென்றார். அவரிடம், ""என்ன முதியவரே! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வருகிறீரே! நேற்று கிழவன், இன்று இளைஞனா? வந்ததன் காரணம் என்னவோ?'' என்றாள்.

தான் வேடம் மாறி வந்தது வள்ளிக்கு எப்படித் தெரிந்தது என முருகனுக்கு ஆச்சரியம்! தன்னைக் கண்டுபிடித்தது எப்படி? என அவளிடமே கேட்டார். அவள் முருகனின் கன்னத்தைச் சுட்டிக்காட்டி, ""உம்மை இந்த மச்சம்தான் காட்டிக் கொடுத்தது!'' என்றாள். வள்ளியின் ஞானத்தை மெச்சிய முருகப்பெருமான், அவளை பாராட்டினார்.

இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு முருகப்பெருமான்,  கன்னத்தில் மச்சத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர், "மச்சக்காரன்' என்று அழைக்கப்படுகிறார். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது அபூர்வம்.
நந்தகோபாலர்

வானதீஸ்வரர்








tamil god murugan.jpg

29 comments:

  1. மச்சக்கார மஹாராஜா தரிசனம் அருமை .

    ReplyDelete
  2. அபூர்வமான மச்சக்கார முருகன் பற்றிய சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  3. முன்னாள் வலைச்சர ஆசிரியரான தங்களை, மற்றொரு முன்னாள் வலைச்சர ஆசிரியரும், இன்றைய வலைச்சர ஆசிரியருமாகச் சேர்ந்து வாழ்த்தியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  4. // சந்திர வம்சம் said...
    ஒரு வருட உங்கள் உழைப்பை தெளிவாகவும் அருமையாகவும் வெளிப்படுத்திஉள்ளீர்கள்.
    இவ்வளவு அருமையான ஆக்கதிற்கு காரணமான "மணிராஜ்" க்கும் நன்றி.//

    கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  5. "மச்சக்கார மகாராசா பாலமுருகன்"
    அதிர்ஷ்ட மச்சத்துடன் கூடிய அழகான தலைப்பு.

    முதல் படத்தில் ”யாமிருக்க பயமேன்” என்று வேலுடன் அபயஹஸ்தம் காட்டும் முருகன் நல்ல அழகாக உள்ளார். முருகன் என்றாலே அழகன் என்று தானே சொல்லுவார்கள்.

    அழகென்ற சொல்லுக்கு முருகா....;)))

    ReplyDelete
  6. காணக்கிடைக்காத நல்ல படங்கள்.முருகனுக்குப் பெருமை.

    ReplyDelete
  7. ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எரியும் சுடர் ஒளியுடன், காத்திடும் முருக வேலுடன் மும்முறை காட்டியுள்ளது சிறப்பாக உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் மேட்டுக்குப்பம், வானகரம் என்னும் ஊரில் அபூர்வ மச்சக்கார ஸ்ரீ சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில்+ஸ்ரீ இராம ஆஞ்சநேயர் ஆலயம் நுழைவாயிலை நான்கு பெரிய தூண்களுடன், முருக சித்தர் ஆஸ்ரம் என்ற பெயர் பலகையுடன் அழகாகக் காட்டியுள்ளது இனிமை.

    ReplyDelete
  8. இடது கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு போல குங்குமம் இட்டுக்காட்டப்பட்டுள்ள மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

    சக்தியின் அம்சமான ஸ்ரீசக்ர விநாயகர் பற்றிய விளக்கங்களும், படமும் நன்றாக உள்ளன.

    ReplyDelete
  9. //பிரகாரத்தில் சீதை, லட்சுமணனுடன் ராமர், யோக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், விஷ்ணு துர்க்கா லட்சுமி தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்கின்றனர்.//

    என்ற செய்தி மட்டும் உள்ளது. ஏனோ அந்த விஷ்ணு துர்க்கா லட்சுமி + யோக ஆஞ்சநேயரை தரிஸிக்கும் யோகம் [பாக்யம்] எங்களுக்கு இன்று அளிக்கப்படவில்லை.

    ReplyDelete
  10. //கடன் நிவாரண பூஜை: இங்கு பைரவியுடன் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார். பைரவர் கையிலுள்ள கும்பத்தில் மகாலட்சுமி சிற்பம் உள்ளது. அஷ்டமி திதியன்று உச்சிக்காலத்தில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கடன் தொல்லையிலிருந்து விடுபட துர்க்கை மற்றும் பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.//

    அருமையான விளக்கங்கள்,
    அற்புதமான் படத்துடன் கொடுத்துள்ளீர்கள்.

    கடன்பட்டான் நெஞ்சம்போல இனி யாரும் கலங்க வேண்டியது இல்லையே ;))))

    ReplyDelete
  11. கந்தபுராணக்கதையும், கர்ணபரம்பரையான செய்தியையும் சொல்லி தினைப்புனம் என்ற உலக இன்பத்தில் மூழ்கிக் கிடந்த வள்ளியை தானே வலியத் தேடிச்சென்று ஆட்கொள்ள வந்த இறைவன் முருகனைபற்றி கதை விளக்கமும், தன் தம்பியையும், வள்ளியையும் இணைத்து வைக்க, யானை வடிவில் வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகப்பெருமானின் செயலையும் விளக்கும் காட்சிப்படமும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    அரிய செய்திகள்.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  13. நான் இதுவரை அறிந்திராத செய்தி !
    உங்கள் அழகு கொஞ்சும் ஆன்மீக இடுகைகளைப்
    பார்த்தாலே புண்ணியம் எங்களுக்கு . நேரிலே செல்லக் கூட வேண்டியதே இல்லை.
    அவ்வளவு தத்ரூபம் & சிறப்பு. உங்கள் ஜாதகத்தில் ஞான காரகன் உச்சம் போல் உள்ளது.

    ReplyDelete
  14. //தன்னைக் கண்டுபிடித்தது எப்படி? என அவளிடமே கேட்டார். அவள் முருகனின் வலது கன்னத்தைச் சுட்டிக்காட்டி, ""உம்மை இந்த மச்சம்தான் காட்டிக் கொடுத்தது!'' என்றாள். //

    கொடுத்து வைத்த நல்லதொரு அதிர்ஷ்டக்காரி, கெட்டிக்காரி அந்த வள்ளி.

    ஆனாலும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்:

    இந்த இடத்தில் வலது கன்னத்தில் மச்சம் என்று எழுதியுள்ளீர்கள். பிறகு கடைசியில் காட்டப்பட்டுள்ள கோயில் விளம்பரப் பலகையிலும், ஸ்வாமி திருவுருவத்திலும் இடது கன்னத்தில் மச்சம் என்று உள்ளதே!

    ஒரு வேளை அந்த வலதுகன்ன மச்சம் வள்ளிக்கு மட்டுமே தெரியக்கூடியதோ!
    இருக்கலாம். இருக்கலாம். அல்லது முருகன் மேல் கொண்ட காதல் மயக்கத்தில் வலது கன்னம் இடது கன்னம் வித்யாசம் தெரியாமல், அதுவும் யானை துரத்தி வருவதால் முருகனைக் கட்டி அணைத்துக் கொண்டதில் ஏற்பட்ட குழப்பமாகவும் இருக்கலாம். ;)))))

    ReplyDelete
  15. புல்லாங்குழலுடன் நந்தகோபாலன், நந்தியுடன் வானதீஸ்வரர், கோயில் கோபுரங்கள் யாவும் நன்றாக உள்ளன.

    மச்சக்கார மஹாராஜாவின் திருவருளால் அதிர்ஷ்ட மச்சமுள்ளவர், மச்சமில்லாதவர் என அனைத்து மக்களுக்கும் அவன் அருள் கிடைக்கட்டும்.

    கடைசியில் காட்டியிருக்கும் ஐந்து குட்டிக்குட்டிப்படங்களும் நல்ல அழகு.

    தங்கள் ஆன்மிகப்பணி தொடரட்டும்.
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. மச்சக்கார மகராசன்
    பச்சை மயில் வாகனன்
    பாலமுருகனின் அருள் கடாட்சம்.

    ReplyDelete
  17. மச்சக்காரனை தமிழர்களின் இச்சைக்காரனை
    தங்கள் பதிவின் மூலம் மிக அழகாக தரிசித்தேன்
    படங்களும் விளக்கங்களும் அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த அழகான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //தன்னைக் கண்டுபிடித்தது எப்படி? என அவளிடமே கேட்டார். அவள் முருகனின் வலது கன்னத்தைச் சுட்டிக்காட்டி, ""உம்மை இந்த மச்சம்தான் காட்டிக் கொடுத்தது!'' என்றாள். //

    கொடுத்து வைத்த நல்லதொரு அதிர்ஷ்டக்காரி, கெட்டிக்காரி அந்த வள்ளி.

    ஆனாலும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்:

    இந்த இடத்தில் வலது கன்னத்தில் மச்சம் என்று எழுதியுள்ளீர்கள். பிறகு கடைசியில் காட்டப்பட்டுள்ள கோயில் விளம்பரப் பலகையிலும், ஸ்வாமி திருவுருவத்திலும் இடது கன்னத்தில் மச்சம் என்று உள்ளதே!

    ஒரு வேளை அந்த வலதுகன்ன மச்சம் வள்ளிக்கு மட்டுமே தெரியக்கூடியதோ!
    இருக்கலாம். இருக்கலாம். அல்லது முருகன் மேல் கொண்ட காதல் மயக்கத்தில் வலது கன்னம் இடது கன்னம் வித்யாசம் தெரியாமல், அதுவும் யானை துரத்தி வருவதால் முருகனைக் கட்டி அணைத்துக் கொண்டதில் ஏற்பட்ட குழப்பமாகவும் இருக்கலாம். ;)))))

    நன்றி ஐயா.. சரிசெய்துவிட்டேன்..

    ReplyDelete
  19. இராஜராஜேஸ்வரி said...
    // சந்திர வம்சம் said...
    ஒரு வருட உங்கள் உழைப்பை தெளிவாகவும் அருமையாகவும் வெளிப்படுத்திஉள்ளீர்கள்.
    இவ்வளவு அருமையான ஆக்கதிற்கு காரணமான "மணிராஜ்" க்கும் நன்றி.//

    கருத்துரைக்கு நன்றி..

    வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு வழங்கப்பட்ட கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    "மச்சக்கார மகாராசா பாலமுருகன்"
    அதிர்ஷ்ட மச்சத்துடன் கூடிய அழகான தலைப்பு.

    முதல் படத்தில் ”யாமிருக்க பயமேன்” என்று வேலுடன் அபயஹஸ்தம் காட்டும் முருகன் நல்ல அழகாக உள்ளார். முருகன் என்றாலே அழகன் என்று தானே சொல்லுவார்கள்.

    அழகென்ற சொல்லுக்கு முருகா....;)))

    அழகான கருத்துரைக்கு மனம் நிரைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  21. Nice post. I never heard of this temple Rajeswari. Let me go there and have darshan one day.
    Thanks for all information and very pretty picture of alagan murugan.
    viji

    ReplyDelete
  22. 5 நாட்களாக பதிவு பக்கம் வர முடியவில்லை. இன்று தான் தங்களின் அத்தனை பதிவுகளையும் படித்தேன். அழகிய படங்களுடன் சிறப்பான பதிவுகள். குறிப்பாக இந்தப்பதிவில் மச்சக்காரனின் தரிசனம் பெற்று மகிழ்ந்தேன்.நன்றி மேடம்.

    ReplyDelete
  23. மச்சக்கார முருகன் கோவில் புது தகவல்.
    பார்க்க ஆவலை தூண்டியது .

    உலக இன்பம் என்ற மாயையில் மூழ்கி கிடக்கும் பக்தர்களை ஆளவந்த
    மச்சக் கார முருகன் என்னயும் ஆண்டு கொண்டான்.
    நன்றி.

    ReplyDelete
  24. மச்சக்காரன் புதிய தகவல். வள்ளி கண்டு பிடிக்க ஆதாரமானது...நன்றி வாழ்த்துகள் சகோதரி...
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  25. மச்சக்காரரின் தரிசனத்தை உங்கள் உதவியால் பெற்றேன். மிக்க நன்றி

    ReplyDelete
  26. இந்த பாலமுருகன் பதிவை படித்ததால் நாங்களும் மச்சக்காரர்கள்தான்.

    ReplyDelete
  27. 1964+10+1=1975 ;)))))

    2 பதில்களுக்கும், கன்னத்து மச்சத்தில் மாற்றம் செய்துள்ளதற்கும் நன்றிகள். மொத்தத்தில் இது ஓர் அதிர்ஷ்ட மச்சம் உள்ள பதிவாக அமைந்துள்ளது. ;))))) நன்றிகள்.

    ReplyDelete