Thursday, January 12, 2012

கூடார வல்லி.





சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் அவளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம். இந்த கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனுடன்
கூடியிருக்கும் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
[andal.JPG]
காஞ்சி பெரியவர், ’நைவேத்யம் பகவானுக்கு இல்லை; பக்தனுக்குத் தான்’ என்று கூறியுள்ளார். 
அதனால்,  விரதம் இருந்தாலும், பிரசாதத்தை மறுக்கக் கூடாது என்று கூறுவார்கள். 
அதனால் தான் கண்ணன் கொடுத்த பரிசை ஆண்டாள் உண்டு நோன்பை நிறைவு படுத்திக் கொள்கிறாள்.

பாற் சோறும், பொங்கலும் பொங்கிப் பொங்கி,
உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்கிப் பொங்கி,
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
கோபியருடன் கோவிந்தன் கூடி குளிர்ந்து பால் சோறு பொங்கி அதில் நெய் நிறைய விட்டு முழங்கை வரை வழியுமாறு உண்ணும் நாளே கூடார வல்லி.
நாராயணன், பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், கண்ணன், மாயன், புள்ளரையன், அரி, மாதவன், கேசவன், தேவாதி தேவன், வைகுந்தன், முகில் வண்ணன், பங்கய கண்ணன், மணி வண்ணன், விமலன், பூவைப் பூ வண்ணா, நெடுமாலே, மாலே, திருமால், கோவிந்தா, பத்மநாபா,தாமோதரா
இதற்குப்பின் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் குறையொன்றுமில்லாத கோவிந்தா உன்னுடைய திருவடிகளே சரணம் என்று பிரதிக்ஞை எடுத்து கொண்டு ஆண்டாள் கூடியிருப்பதால் இது கூடாரவல்லி.

Sri Ranganatha and Andal devi

27 comments:

  1. கூடார வல்லி பற்றி கேள்விபட்டிருக்கேன் .இப்பதான் முழு விபரங்களும் தெரிந்து கொண்டேன். படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு வழ்துகள் நன்றி

    ReplyDelete
  2. Lakshmi said...
    கூடார வல்லி பற்றி கேள்விபட்டிருக்கேன் .இப்பதான் முழு விபரங்களும் தெரிந்து கொண்டேன். படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு வழ்துகள் நன்றி/

    வாழ்த்துகளுக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா..

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு.நன்றி.

    ReplyDelete
  4. கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.//

    பெருமாளையும், ஆண்டாளையும் பார்த்து விட்டோம். உங்கள் அழகான படங்கள் மூலம்.

    எங்களுக்கு எல்லா வளங்களும், நலங்களும் வந்து சேரும்.

    ReplyDelete
  5. பிறவிப்பயன் அடைகிறோம் உங்கள் பக்தி இடுகைகள் மூலம்.
    இதுவும் புண்ணியம் சேர்க்கும் ஒரு உழவாரப் பணியே.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  6. அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  7. கூடாரவல்லி பற்றியே இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.பகிர்வுக்கு நன்றி.வழக்கம்போல படங்கள் அருமை.

    ReplyDelete
  8. கூடாரவல்லி பற்றிய தெளிவான விளக்கம் அறிந்தேன் சகோதரி.

    ReplyDelete
  9. கூடாரவல்லி பற்றி முன்பு கேள்விப்படவே இல்லை. இது எனக்கு அரிய தகவல். மகிழ்வடைந்தேன் மிக்க நன்றியுடன் வாழ்த்துகள். சகோதரர் வை .கோபாலகிருஷணனுக்கு மன அமைதி கிட்ட எல்லாம் வல்ல ஆண்டவன் அருள்வாராக.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  10. பகவான் அருள் பெற்றேன். படங்கள் அனைத்தும் நேரில் பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திவிட்ட்து, படங்கள் அனைத்தும் வெகு நேர்த்தி

    ReplyDelete
  11. wow! beautiful pictures..!
    கூடாரவல்லியன்று சர்க்கரைப் பொங்கல் மட்டுமே சாப்பிட்ட ஞாபகம்.. (திருப்பாவையெல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டிருப்பார்கள் :)

    ReplyDelete
  12. கூடாரவல்லி அப்படீங்கறது சாமி பேர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் அது ஒரு வைபவம் என்று தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  13. கூடார வல்லி பற்றிய அரிய செய்திகளும், எல்லாப் படங்களும், வழக்கம்போல மிகவும் அழகாகவே உள்ளன. பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  14. 27 ஆம் நாளின் பாசுரத்தைத்தந்து அதற்கான அழகான
    விளக்கத்தையும் அழகிய திரு உருவப் படங்களுடன் கொடுத்து
    மனம் மகிழச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இறைபக்தி பற்றியும், திருத்தலங்கள் பற்றியும் தாங்கள் தொகுத்து பகிரும் தகவல்கள் மிகவும் வியப்பூட்டுபவை.

    பல கட்டுரைகளை வாசித்து விட்டு, என்ன சொல் கொண்டு பின்னூட்டமிடலாம் என நினைத்து, முடியாமல் திரும்பிய அனுபவமே எனக்கு அதிகம்.

    இந்த பதிவை பைத்ததும் வைரமுத்துவின் பாடலொன்று நினைவுக்குள் ஒலிக்கிறது. “சூடித்தந்த சுடர்க்கொடியே சோகத்தை....” எனும் பாடல்.

    ReplyDelete
  16. படங்களில் பக்தி மணம் தவழ்கின்றது அருமை

    ReplyDelete
  17. படங்களில் பக்தி மணம் தவழ்கின்றது அருமை

    ReplyDelete
  18. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  19. இன்றைய அனைத்துப்படங்களுமே மிகவும் அழகாகவே இருப்பினும், கீழிருந்து மூன்றாவது படம் என்னை மிகவும் கவர்ந்தது.

    மிகப்பெரிய காசு மாலை, கல் அட்டிகை, மஞ்சள் பட்டுப்பாவாடை, அரக்குக்கலரில் ஜரிகை பார்டர், அரக்குச்சட்டையில் ஜரிகை பார்டர் என எல்லாமே அழகாக அந்த அம்மன் காட்சி தருவது சிறப்பு.

    அதில் நெருக்கமாகக் கட்டியுள்ள குண்டு மல்லிக்கைச்சரம் கும்மென்று வாசனை அடிப்பதில் அப்படியே சொக்கிப்போய் விட்டேன் நான்.

    ReplyDelete
  20. இன்றைய வலைச்சரத்தில் தங்களின் பதிவுகள் மீண்டும் அடையாளம் காட்டப்பட்டு, சிலரால் மிகச்சிறப்பாக பாராட்டப்பட்டுள்ளது.

    என் அன்பான வாழ்த்துக்கள்.

    இதே வெற்றியையும், நற்பெயரையும் என்றும் கட்டிக்காத்து, எங்களுக்கு இது போன்ற மனதுக்கு ஆறுதலும் சாந்தியும் அளிக்கும் மேலும் பல பதிவுகள் தொடர்ந்து தர வேண்டுமாய் அன்புடன் உரிமையுடன் பாசத்துடன் வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  21. Fine pictures Rajeswari.
    What a wounderful day this day is.
    Thanks for the postings.
    viji

    ReplyDelete
  22. //இதற்குப்பின் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் குறையொன்றுமில்லாத கோவிந்தா உன்னுடைய திருவடிகளே சரணம் என்று பிரதிக்ஞை எடுத்து கொண்டு ஆண்டாள் கூடியிருப்பதால் இது கூடாரவல்லி//

    அடடா... இப்படிப்பட்ட கோதையின் அன்பினால் தானே அந்தப் பரந்தாமானே சொக்கிப் போனார்... அருமையான தரிசனம் உங்கள் இந்தப் பதிவின் மூலம் பார்த்தாகிவிட்டது. அரிய பதிவின் மூலமாய் அறிய வைத்தமைக்கு நன்றி தோழி.

    - நுண்மதி.

    ReplyDelete
  23. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete