Friday, January 27, 2012

நவகிரக தோஷம் நீக்கும் சூரியத் தோட்டம்





[ganesh03-745315.jpg]




ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். 

இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் “நாளை வா’ என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு “முதுகைப் பார்’ என்கிறார். 

அவர் முதுகில் “நாளை வா’ என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். 

மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார். 

இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை 
விநாயகரை சனியால் பிடிக்க முடியவில்லை என்று புராணம் கூறும்.

சுமார் ஐம்பத்து நான்கு அடி உயரமுள்ள மகாகணபதியின்முதுகுப் பகுதியைத்தான் நாம் முதலில் தரிசிக்கிறோம். 

இந்த விநாயகரின் முதுகில் “நாளை வா’ என்ற 
வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, 
விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர்.

அரிய மூலிகைகளினால் உருவானவர் என்பதால், கால மாறுதல்களால் ஏற்படும் எந்த நிலையையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவராகத் திகழ்கிறார். 

பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். 

இவரைத் தரிசிக்க 27 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 

படிகள் ஏறுவதற்கு முன் ஒரு சிறிய சிவலிங்கம் உள்ளது. 

அதற்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நல்லெண்ணெயில் 
அபிஷேகம் செய்யலாம். இதனால் நம் தோஷங்கள் நீங்கும் என்பர்.

இந்த கணபதியின் எதிரேதான் உலகிலேயே மிக உயரமான 
சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில்- 
நின்ற கோலத்தில் மிக கம்பீரமாகக் காணப்படுகிறார்.

இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் அருள் பொழிகிறார்..
“பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர்.

பீடத்துடன் இவர் உயரம் முப்பத்து மூன்று அடியாகும்.

தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கிறார். 
ஆகமங்களில் இவரது வாகனம் கழுகு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார்.

கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார்.

இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால்
எப்படிப்பட்ட துன்பங்களையும் நிவர்த்தி செய்வார் என்று சொல்கிறார்கள்.
இரண்டரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திறந்தவெளி வளாகத்தில், நவகிரகங்கள் தாங்கள் இருக்க வேண்டிய திசையில், பதினாறு அடி உயரத்தில் (கல் விக்ரகம்) தங்களுக்குரிய வாகனத்துடன் காட்சியளிக்கின்றன.

அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது.
சூரியத் தோட்டம் (சன் கார்டன்ஸ்) என்று அழைக்கப்படும் இந்தத் தோட்டத்தினைச் சுற்றி 27 நட்சத்திர மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன

வண்ண வண்ண ரகம் கொண்ட ரோஜா மலர் வகைகளும் மற்றும் பல மலர்ச் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் .

"இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பூகம்பம், பிரளயம் (சுனாமி), எரிமலைச் சீற்றம், புயல், பலத்த மழை, வெள்ளம் ஆகிய வற்றிற்கு சனி, சூரியனிடமிருந்து வெளிப்படும் ஊதா நிறக் கதிர்கள்தான் காரணம் என்று அறிவியலாளர்களும் விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள். 

இதனை நம் ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லியிருப்பதை நாம்  அறிவோம். 
இந்த ஊதா நிறக் கதிர்கள் சனீஸ்வரனின் அம்சம். 

அதாவது சனிக் கிரகத்தின் வெளிப்பாடு என்பதைக் கோள்களை ஆராய்ச்சி செய்யும்  ஜோதிடர்கள் சொல்வர். 

விஞ்ஞானமும் அதனை ஏற்கிறது. 

இந்தக் கதிர்களின் தாக்கத்திலிருந்து உலக மக்களைக் காப்பாற்ற, 

"எந்த இடத்தில்  பஞ்சலோக சனீஸ்வர பகவான் முறைப்படி சாஸ்திர ரீதியாகப் பிரதிஷ்டை செய்து வழிபடப்படுகிறதோ, அது பஞ்ச பூதங்களால் ஏற்படும் பேரழிவு களிலிருந்து காப்பாற்றப்படும்' என்பது நம்பிக்கை. 

இந்தக் கருத்தினைக் கொண்டுதான் பரிகாரத் தலமான சித்தர் பெருமக்கள் வாழ்ந்த இந்த இடத்தில் விக்கிரகங்கள் நிறுவப்பட்டுள்ளன''
இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித்தால் வாஸ்து தோஷம் நீங்குமாம்.

மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில்
திருமணக்கோலத்துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தினாலான
மகாவல்லபகணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள்.

இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும்
காட்சி தருகிறார்.
கிரகசாந்தி கணபதிக்கு, 57 அடி உயர சிலை, 
சனீஸ்வர பகவானுக்கு, 27 அடி உயர சிலை, 
நவகிரகங்களுக்கு, 12 அடி உயரத்தில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், மற்றொரு சிறப்பம்சமாக உலகிலேயே, மிகவும் உயரமான, 80 அடி உயர மகர கும்ப வாசல் கட்டும் பணி நடந்து வருகிறது. 

மகர கும்ப வாசலில் தேவலோக வடிவம், யானையின் துதிக்கை, சிம்மக் கால்கள், மீன் உடல், பன்றி காதுகள், அன்னத்தின் இறக்கை, மயிலின் தோகை, குரங்கின் கண்கள், முதலையின் கோரைப் பற்கள், பல்வகை இலைகள் உள்ளிட்ட வால் உடைய, ஓர் அபூர்வமான உருவத்தை அமைத்திருக்கிற்ர்ர்கள்..
சனிப் பெயர்ச்சியின் போது, இந்த மகர கும்ப தீபம் பிரதிஷ்டை செய்யப்பட்டு , 8,000 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி, 
மகர கும்ப தீபம் ஏற்றப்படுகிறது
இத்திருத்தலம் திண்டிவனத் திலிருந்து புதுச்சேரி செல்லும் 
வழியில் உள்ளது. பேருந்தில் பயணித்தால் கோரிமேடு 
என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் 
உள்ள மொரட்டாண்டி கிராமத்திற்குச் செல்ல வேண்டும்





Thanks for these photos...


Kannan J 
morattandi photos 





14 comments:

  1. மிகவும் அற்புதமான படங்களுடன் சிறந்த பதிவு.
    இவ்வளவு பெரிய விநாயகர்,நவக்கிரக சிலைகளா என பிரம்மிப்பாக இருக்கு மேடம். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  2. இன்றைய படங்களும் விஷயங்களும் வெகு அருமையாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

    முதுகைப்பார்; நாளை வா !
    நல்ல வேடிக்கையான தகவல்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    நீண்ட நாட்களாக நீங்கள் எழுதவில்லையா, அல்லது எனக்கு LINK வரவில்லையா?
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  4. புதிதாக இப்போது இணைக்கப்பட்டுள்ள
    அந்த இரண்டாவது படம் இந்தியா மேப் போல வெகு அழகாக உள்ளது.

    மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. அடடா! ஒரு முரட்டுப்பிள்ளையாருக்குள் எத்தனை குட்டிப்பிள்ளையார்கள்! ;))))

    குட்டிபோட்டப்பிள்ளையாராக இருக்குமோ!

    அவருக்குத்தான் திருமணமே ஆகவில்லை; தன் தாய் பார்வதி தேவிபோலவே அழகான பெண்ணைத் தேடி ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு முக்கிலும் அமர்ந்திருப்பதாகச் சொல்வர்களே!

    அந்த அழகான பெண் கிடைக்கும் வரை ஸித்தியும், புத்தியுமே அவருக்கு மனைவிகள் என்பார்களே; )))))

    தொந்திப்பிள்ளையார் ! ;)))))

    ReplyDelete
  6. அன்பின் இராஜைராஜேஸ்வரி

    அருமையான பதிவு - ஆனைமுகனின் அழகிய படங்கள் - சனீஸ்வரர் உள்ளிட்ட நவக்க்கிரகங்கள் - 108 மரங்கள் - மகர கும்ப வாசல் - அடேங்கப்பா - விள்கக உரைகளுடன் கூடிய படங்கள் - மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. பிள்ளையார் எத்தனை பிள்ளையார்? இரண்டாவது படத்தில் எத்தனை பிள்ளையார் இருக்கார் ? அழகு.

    ReplyDelete
  8. நேரில் தரிசிக்க இயலாவிட்டாலும் தங்கள் பதிவின் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது ...நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. மூல முதல்வனின்
    திருவுருவங்கள் அனைத்தும்
    மனத்தைக் கவர்ந்தது சகோதரி...

    ReplyDelete
  10. நவக்கிரக தோஷம் நீக்கும், சூரிய தோட்டம் மிக அருமை.

    பார்க்காத கோவில்.

    படங்கள் அருமை.

    ReplyDelete
  11. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete