Thursday, July 3, 2014

ஞான தேவதைகள்



வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பவள்
வீணை செய்யு மொலியிலிருப்பாள்
உள்ளதாம் பொருள் வேதத்தினின் றொளிர்வாள்'


என்று பாரதி கூறிப்பிடும் கலைமகள் மொழி வடிவானவள். 
எழுத்துகள் 51. அவற்றை அட்சரங்கள் என்று சொல்வது மரபு. 

ஆகவே அந்த 51 அட்சரங்களைக் குறிக்கும் விதத்தில் 
தன் கையில் 51 மணிகள் கொண்ட அட்சரமாலையை தரித்திருக்கிறாள். 
அவள் வேதத்தின் உட்பொருளானவள்

சரஸ்வதி தன் கையில் வீணையை வைத்து வாசித்துக்கொண்டிருப்பது- கலைக்கு நாதனாக இறைவனின் உடலாய் அமைந்துள்ளது என்பதைக் காட்டுவதே. 

அவளே கலைகளின் நாயகி என்பதை உணர்த்தவும் அவளது கையில் வீணை இசைக்கிறது.. . வீணா தட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்துடன் விளங்கும் தட்சிணாமூர்த்தியின் கையிலும் வீணை உள்ளது

சரஸ்வதி கையில் உள்ள வீணைக்கு கச்சபி என்று பெயர். 

வீணை தட்சிணாமூர்த்தியாக இருந்து இசை நுணுக்கங்களை உபதேசித்த பின்னர், இறைவன் தான் உருவாக்கிய கச்சபி என்ற வீணையைத் தனது சகோதரியான சரஸ்வதி தேவிக்கு அளித்துவிட்டதாகப் புராண வரலாறு கூறும்.

சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே தம் திருக்கரங்களில் அட்சமாலை ஏந்தியுள்ளனர். "சர்வ வித்யை அளிக்கும் பிரபு (ஈஸ்வரன்) சதாசிவனாகிய தட்சிணாமூர்த்தியே' என்று வேதம் புகழ்கிறது. 
வித்யா தேவதையான சரஸ்வதி தேவதையே வாக்தேவதையாக விளங்குகிறாள். அவள் அருள் இல்லாமல் நம்மால் பேச முடியாது.

ஞான தேவதைகளான இருவருமே  மெய்ஞ்ஞானத்தை 
அருளவல்ல அருட்தெய்வங்கள்
ஞாலம் நாறு நலங்கெழு  நல்லிசை 
நான்மறை முதநூல் முக்கட் செல்வன் ஆலமுற்றம்
என்று அகநானூறு அறிமுகப்படுத்துகிறது..! 
 "ஆலமர் தெய்வம்' என்று புறநானூறு  குறிப்பிடுகிறது..


thenkudi thittai tirutthala raja guru
Theni  Prajna Dakshinamoorthy.
tirutthuraiyur thala dakshinamoorthy

20 comments:

  1. ஞான தேவதை
    அறியாதன அறிந்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  2. ஞான தேவைகளை தரிசித்தும்
    அதன் பெருமைகளை அறிந்தும்
    மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருட்தெய்வங்கள் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி அம்மா...

    ReplyDelete
  4. மெய்ஞானத்தை அருளும் அருட்தெய்வங்களின் விளக்கங்களை அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு. நன்றிகள்.

    ReplyDelete
  5. இராஜராஜேஸ்வரி மேடம் உங்க ஆன்மீகப்பதிவுகளைப்படித்தாலே போதும் கோவில் களுக்கு போயித்தான் தரிசனம் செய்யவேண்டும் என்கிற அவசியமே இல்லை. அவ்வளவு தத்ரூபமான படங்கள் விபரங்கள். நன்றி

    ReplyDelete
  6. அஞ்ஞானம் அகல மெய்ஞானம் தரும் அற்புதப் பதிவு!
    அனைத்தும் சிறப்பு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ஞான தேவதைகளுக்கு என் நமஸ்காரங்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. சிம்பிளான பதிவு. ஆனாலும் சிறப்பான பதிவு.

    >>>>>

    ReplyDelete
  9. ஞான ஸ்வரூபமானவர்களான கலைவாணிக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் உள்ள வீணை, ஜபமாலை போன்ற ஒற்றுமைகளை நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.

    [அ ட் ச மா லை யா ? அ ட் ச ர மா லை யா ?
    என எனக்கோர் சந்தேகம் வந்தது. ஓரிடத்தில் இப்படியும் மற்றோர் இடத்தில் அப்படியும் சிவப்பு எழுத்துக்களில் உள்ளன. அதனால் பொதுவாக ஜபமாலை என எழுதியுள்ளேன்]

    >>>>>

    ReplyDelete
  10. காட்டியுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
  11. கலைவாணி அருளாலும், குருவருளாலும் எல்லோருக்கும் எல்லாவித சந்தோஷங்களும் கிடைக்க பிரார்த்திப்போம்.

    வாக்தேவியான அவள் அருளால் அவள் சொல்வதை மட்டும் இனி கம்பீரமாகப் பேசுவோம், எழுதுவோம்.

    கச்சபி = வீணை ;)

    >>>>>

    ReplyDelete
  12. இன்று குருவாரம் வியாழக்கிழமைக்கு ஏற்றவாறு திருத்துறையூர், தேனி, தென்குடித்திட்டை, ஆலமர் தெய்வமாகிய குரு பகவான் + தக்ஷிணாமூர்த்தி விக்ரஹங்களை மீண்டும் தரிஸிக்கத்தந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள். வாழ்க!

    ;) 1324 ;)

    ooo ooo

    ReplyDelete
  13. ஞான தேவதைகள் பற்றி படித்து பார்த்து மகிழ்ந்தேன்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  14. பல அரிய தகவல்களுடன் இத்தனை தட்சிணாமூர்த்தி தரிசனத்தை ஒரு சேர தரிசிக்கத் தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அழகான படங்கள்.. அக்ஷ மாலை அக்ஷர மாலை எனும் விளக்கங்கள்.. இனிய பதிவு.. மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    ReplyDelete
  16. எழுத்துக்கள் 51..... எந்த மொழி என்று கூறவில்லையே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்..வாழ்க வளமுடன்..
      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      சமஸ்க்ருதத்தில் மொத்தம் ஐம்பத்தியொரு அக்ஷரங்கள் [ஒலிகள்] உள்ளன (अ முதல் अ: வரை 16 + க முதல் ம வரை 25 + य, र, ल, व, श, ष, स, ह 8 + क्ष க்ஷ மற்றும் ஓம் ॐ) – இந்த தொகுப்பே வர்ணமாலா என்று அழைக்கப் படுகிறது.

      Delete
  17. ஞானதேவதைபதிவு சிறப்பு என்றால் படங்கள் இன்னொரு சிறப்ப.
    மிக்க நன்றிசகோதரி.
    இனிய பாராட்டுகள்
    வேதா. இலங்காதிலகம்.
    (என் 1000மாவது பதிவு இட்டுள்ளேன். வாருங்கள்.)

    ReplyDelete
  18. ஞான தேவதைகள்ப்பற்றிய விளக்கம் படங்கள் எல்லாம் மிக அருமை.

    ReplyDelete
  19. சிறப்பானதொரு பகிர்வு!

    ReplyDelete