Wednesday, July 9, 2014

ஆனி உற்சவ திருமஞ்சன நாற்று நடவு திருவிழா






ஆரூர் அத்தா ஐயாற்று அமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகாவூரானே
பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூர் அம்மானே.

ஆரூர், ஐயாறு, அளப்பூர், கருகாவூர், பேரூர், பட்டீச்சுரம், திருப்பாசூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, அமுதம் போல்பவனே, பிறவாத நெறியை உடையவனே, நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன்.


சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
 உழந்தும் உழவே தலை

என்னும் தெய்வப்புலவரின் வாக்கை மெய்ப்பிக்கவோ என்னவோ அந்த 
முழு முதல் தெய்வமே தன் துணையுடன் வயலில் இறங்கி நாற்று நட்டு எளியோனாய் அருள்புரியும் தலம் கோவையில் அமைந்துள்ள பேரூர்..

சிலப்பதிகாரம் சொல்லும் 'இந்திரா விழா', தமிழகத்தில் நாற்று நடவு திருவிழாவாக,பொன்னேர் பூட்டும் விழாவாக இன்றும் நடத்தி கொண்டு இருக்கும் , கோவை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது. 

ஆனி உற்சவ திருமஞ்சன நிகழ்ச்சி காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது

உழவர் பெருமக்கள்  தாரை, தப்பட்டை முழங்க கோயிலுக்கு முன்பு திரண்டு மாடு, ஏர் பூட்டி பூஜை செய்து அங்குள்ள மடத்திற்கு அலங்கரிக்கப்பட்ட மாடுகள் ஏர் பூட்டி அழைத்து செல்லப்படும்..

மடத்தில் வளர்க்கப்பட்ட நாற்றுக்களுடன் பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து முன்னதாக ஏர் பூட்டி வயலை உழுத நிலத்தில் - நாற்று நடவு வயலில் இறங்கி- கோயில் மூத்த குருக்கள்  முதல் நாற்று நட, தொடர்ந்து பெண்கள் அனைவரும் வயலில் இறங்கி நாற்றுகள் நடும்போது குலவை சத்தம் எழுப்பி, ஆரவாரம் செய்து மகிழ்வார்கள்... 

ஓதுவர்  சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல்களை பாடி மகாதீபாரதனையுடன்    பட்டீஸ்வரர் அம்பாளுடன் கோயிலை வலம் வருவார்...

தொடர்ந்து மண்வெட்டியால் நந்தியின் தாடை வெட்டும் நிகழ்ச்சி நடக்கும்..

சிவபெருமானுக்கு  அணுக்க நண்பராகத் திகழ்ந்த சுந்தரர்  பேரூர் வந்திருந்தபோது சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான்,  விவசாயியாக அவதாரமெடுத்தார். 

சிவபெருமான் விவசாயியாகவும், உமாதேவி  விவசாயப் பெண்ணாகவும் அவதரித்து நாற்று நடச் சென்றனர். 

தனது பக்தரான சுந்தரரை பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் 'சுந்தரன் வந்து கேட்டால் நான் இருக்கும் இடத்தை சொல்லாதே' என்று நந்தி தேவரை எச்சரித்துவிட்டு சென்றார். 

இறைவனை தரிசிக்க கோயிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், கோயிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார். 

சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார். 

சுந்தரரும் நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழந்தார். 

நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் சிவபெருமான் அடித்து விட்டார். 

பேரூர் கோயிலில் நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது. 

பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க, 
தனது தாண்டவ தரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார்.






தொடர்புடைய பதிவுகள்...
 * நாற்று நடவு திருவிழா

**பேரழகு பேரூர்

***பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்
perur_patteeswarar

https://www.youtube.com/watch?v=gXhVKs2C3_sபேரூர் கோவில் குடமுழுக்கு விழா

19 comments:

  1. நாற்று நடவு திருவிழாவைப் பற்றி அறிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி அம்மா.

    படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு

    ReplyDelete
  2. இவ்வாறான ஒரு திருவிழாவைப் பற்றி தற்போதுதான் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  3. அற்புதமான படங்களுடன் திருவிழாவின் சிறப்பை அறிந்தேன்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. எத்தனை சிறப்புக்கள் இம்மாநிலத்தில்...

    சொக்கவைக்கும் படங்களும் பதிவும் அற்புதம்! ஆச்சரியம்!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  5. ஆரத்திக் காட்சி அற்புதம். நந்தியின் தாடையில் அடிக்குமளவு கோபம் இறைவனுக்கும் வருமா...

    ReplyDelete
  6. ரஷ்யா - மாஸ்கோ வுக்குக் கூட்டிச்சென்று சமீபத்தில் நடந்த பரதநாட்டிய காணொளியை கண்டு களிக்க வைத்ததற்கு மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  7. படங்கள் எல்லாமே அழகோ அழகு.

    அதில் உள்ள யானைபோல என்னையும் சலாம் போட வைத்து விட்டீர்கள்.

    சலாம் மாலே கும் ! மாலே கும் சலாம் !!

    ’கும்’ என்று சொல்லும்போதே கும்முன்னு ஜிம்முன்னு மோதமொழங்க ஓர் உருவம் என் கண்முன் வந்து என்னை மகிழ்விக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  8. தாங்கள் சொல்லும் புராணக் கதைகள் எல்லாமே படிக்க சுவாரஸ்யமாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  9. தொடர்புடைய பதிவுகளில் ஏற்கனவே நிறைய கருத்துக்கள் அளித்துள்ளேன்.

    தாங்களும் தொடர்புடைய அந்தப்பதிவுகளுக்குச்சென்று அவற்றை மீண்டும் படித்து மகிழவும்.

    >>>>>

    ReplyDelete
  10. மீண்டும் மீண்டும் நெல்லிக்கனி மாலைகள் .... மீண்டும் மீண்டும் சுவைக்க இனிப்பாகவே உள்ளன .......

    ஜூஸாக, துவையலாக, ஊறுகாயாக ..... விறுவிறுப்பாக ....

    >>>>>

    ReplyDelete
  11. சிலப்பதிகாரத்தில் வரும் ’இந்திர விழா’ என்றோ ‘பொன்னேர் பூட்டும் விழா” என்றோ மட்டுமே அது இருக்கட்டும்.

    எனக்கென்னவோ ’நாற்று’ என்ற சொல்லே பிடிக்காமல் துர்நாற்றம் அடிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. அனைத்துப்படங்களுமே பார்த்ததும், அனைத்துச்செய்திகளுமே கேட்டதும் தான் என்றாலும், நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் பார்க்க / கேட்க, மனதுக்கு மகிழ்ச்சியாக தெவிட்டாமல் உள்ளன.

    எதையும் தெவிட்டாமல் அழகாகச் சொல்லும் அதுதான் தங்களின் + தங்கள் பதிவின் தனிச்சிறப்பே ஆகும் !

    >>>>>

    ReplyDelete
  13. இந்த ஆண்டின் 200வது பதிவுக்கு இன்னும் நவராத்திரி போல 9 நாட்களே உள்ளன.

    அந்த நாளும் வந்திடாதோ என நினைக்க ஆவலாகவும் ஏக்கமாகவும் உள்ளது. இப்போதே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். அன்று என் நேர நிலமை எப்படியிருக்குமோ !

    >>>>>

    ReplyDelete
  14. அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். வாழ்க வாழ்கவே !

    ;) 1330 ;)

    ooo ooo ooo

    ReplyDelete
  15. அழகிய படங்களுடன் இனிய பதிவு..
    நந்தியின் தாடையில் ஈசன் அடித்தார் என்று கூறுவதே பெரும் பிழை!.. இத்தகைய கதைகளை சிவனடியார்கள் சொல்லிக் கொண்டிருப்பதும் விநோதம்!..

    ReplyDelete
  16. நாற்று நடவுத்திருவிழா புதிய தகவல். மிக அழகான படங்கள். இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் படம் காணக்கிடைக்காததொன்று. நன்றி.

    ReplyDelete
  17. என்னதான் படித்தாலும் பேரூர் என்றதும் கோவையில் சிறு பையனாக இருந்தபோது சைக்கிளின் பின் சீட்டில் கால் தூரம் அமர்ந்து சென்றதும் மீதி முக்கால் தூரம் சைக்கிள் பின்னே ஓடிச்சென்றதுமே நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  18. படங்களும் பகிர்வும் அருமை அம்மா...

    ReplyDelete
  19. படங்கள் அனைத்துமே மிக அருமை....

    ReplyDelete