Wednesday, July 2, 2014

மகத்துவம் மிக்க வியாச பௌர்ணமி




'வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே

மகிமைகள் மிக்க   வேத முனிவராகத்திகழும் .ஸ்ரீவியாச பகவான் தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் அவசியமான வேதங்களைப் பிரித்து தொகுத்தளித்த புண்ணிய புருஷர் ஆவார்..!- 

வியாசர்  பூவுலகுக்குக் கிடைத்த மாபெரும் வரம், பொக்கிஷம், 
உபகாரம், ஆசீர்வாதம்...!!

.வேத சாரங்களை இன்னும் எளிதாக நமக்குப் 
புரியவைக்க 18 புராணங்களைப் படைத்தார்; 

மகாபாரதம் எனும் காலத்தால் அழியாத காவியத்தை அளித்தார். 

வேதாந்த சித்தாந்த கண்ணாடியாக திகழும் பிரம்ம சூத்திரத்தை தந்தவரும் ஸ்ரீவியாசர்தான். 

இதற்கு த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத ஆச்சார்யர்கள் பாஷ்யம் (பொழிப்புரை) அருளியிருக்கிறார்கள்.

இவ்வளவு மகத்துவங்களுக்கும் சொந்தக்காரரான ஸ்ரீவியாச பகவானுக்கு, மூன்று மத ஆச்சார்யர்கள் செய்யும் பூஜையே ஸ்ரீவியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதமாகும்

அற்புதமான இந்த விரதத்தை நான்கு மாதங்கள் செய்யவேண்டும்.

ஆனாலும்... ஒரு பக்ஷத்தை ஒரு மாதமாகக் கணக்கில் கொண்டு, நான்கு பக்ஷங்களாக, அதாவது இரண்டு மாதங்கள் விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாகிவிட்டது.

மழைக்காலத்தில் யதிகள் பாத யாத்திரையாகப் போகும்போது, பல சிறு சிறு பூச்சி வகைகள் மிதிபட நேரிடும் என்று அஞ்சி, இதைத் தவிர்க்க குறிப்பிட்ட அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் இருந்து சாதுர்மாஸ்யம் மேற்கொள்வார்கள். 

அந்த தருணத்தில் சிஷ்யர்களும் பக்தர்களும் குருமார்களுக்கு 
சிஷ்ரூக்ஷை செய்வார்கள். 

இந்த புண்ணிய காலத்தில்... வேதாந்த கிரந்தங்கள், சாஸ்திர வாக்யர்த்தங்கள் என யதிகள் (சாதுக்கள்) தாம் தங்கியிருக்கும் இடத்தையே புனிதமாக்குவார்கள்.இது ஸ்ரீவேத வியாசருக்கு மிக உகந்ததும் விசேஷமானதும் ஆகும். 

ஆனி மாதம் பௌர்ணமி அன்று விரதம் ஆரம்பமாகும்  . எனவே 
ஆனி பௌர்ணமி வியாச பௌர்ணமி எனப் போற்றப்படுகிறது..

சந்நியாசி ஒருவரின் வயது அவர் செய்த வியாச பூஜையின் எண்ணிக்கையைக் கொண்டே கணக்கிடப்படும்.

விரத பூஜை துவங்கும் நாளன்று, புனிதமான கலச தீர்த்தத்தில் ஸ்ரீவேதவியாசர் ஆவாஹனம் செய்யப்பட்டு பூஜிக்கப்படுவார். 


அன்று அவருடன் சேர்த்து ஆறு வகையான மூல புருஷர்கள் கொண்ட பஞ்சகங்கள்... அதாவது ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீவியாச, ஸ்ரீசங்கர பகவத் பாத, ஸ்ரீசனக, திராவிட மற்றும் குரு பஞ்சகமும்...  அத்துடன் ஸ்ரீசுகர், ஸ்ரீநாரதர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீகணபதி, க்ஷேத்திர பாலகர்கள், ஸ்ரீசரஸ்வதி மற்றும் இந்திரன் முதலான தச திக்பாலகர்கள் எல்லாம் எலுமிச்சை பழத்தில் ஆவாஹனம் செய்து பூஜிப்பதுடன், கடைசியாக 10 சுத்த சைதன்யர்கள் பூஜை செய்து (சாளக்ராமத்தில்) நிறைவு செய்வார்கள். 

பின்னர் புனர்பூஜை செய்து அவர்களிடம் வியாச பூஜை அக்ஷதையைப் பெற்றுக்கொண்டால்,  பாவங்கள் யாவும் விலகி, நல்வாழ்வு 
வாழ அனுக்கிரஹம் கிடைக்கும்.

 வியாச பூஜை வரும் புனிதமான  திருநாளில் ஸ்ரீகுருவருளையும், லோக குரு ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளையும் ஸ்ரீவேத வியாசரின் ஆசியையும் பெற்று, எல்லா விதமான சுபிட்சத்தையும் பெற்றுச் சிறக்க பிரார்த்திக்கலாம் .. கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’




19 comments:

  1. வியாச பௌர்னமி அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. வியாச பூஜை பற்றிய தகவலுக்கும் நன்றி அம்மா...

    ReplyDelete
  3. வியாச பூஜை பற்றி அறியத் தந்தீர்கள் அம்மா...
    அதற்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  5. வியாசபூஜை பற்றியதகவல்கள் அறிந்துகொண்டேன்.நல்பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  6. ’மகத்துவம் மிக்க வியாஸ பெளர்ணமி’ என்ற தலைப்பினில் தாங்கள் எழுதியுள்ள இன்றைய பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    >>>>>

    ReplyDelete
  7. பொதுவாக பலரும் அறிந்திருக்க நியாயமில்லாத மாபெரும் பொக்கிஷங்களை சொற்சித்திரமாக வடித்துக்கொடுத்துள்ளது, மிகவும் பாராட்டுக்குரியது.

    >>>>>

    ReplyDelete
  8. படங்களில் ஆங்காங்கே பல இன்னும் திறக்கப்படவே இல்லை. இருப்பினும் காட்சியளிக்கும் அனைத்துப்படங்களும் அருமையோ அருமையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  9. கீழிருந்து ஐந்தாவதாகக் காட்சியளிக்கும் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. [கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ;) ]

    >>>>>

    ReplyDelete
  10. காஞ்சீபுரத்தில் பலமுறைகளும், கர்நூலில் இருமுறையும், கலவை, குண்டக்கல் அருகே உள்ள ஹகரி, பண்டரிபுரம் போன்ற இடங்களில் தலா ஒவ்வொருமுறையும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா செய்த வியாஸபூஜைகளில் கலந்துகொள்ளும் பாக்யம் கிடைத்து, அவர்களின் திருக்கரங்களால் வியாஸபூஜை பிரஸாதமாக மங்களா அக்ஷதை பெற்று வந்த பாக்யம் பெற்றுள்ளோம்.

    அவைகள் எனக்கு என்றும் நீங்காத நினைவலைகள்.

    இந்த எல்லா இடங்களுக்கும் என் [வயதான] தாயாரையும் என்னுடன் கூட்டிச் சென்றுள்ளேன் என்பதுதான் இதில் உள்ள முக்கியமானதோர் விஷயமாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய LTC [Leave Travel Concession] பயணங்கள் யாவுமே காரினில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா Camp எங்குள்ளதோ அங்கு மட்டுமே குடும்பத்துடன் சென்று வந்ததாகும். மலரும் நினைவுகளாக இன்றும் மகிழ்ச்சியளிப்பவை.

    >>>>>

    ReplyDelete
  11. பூஜிக்கத்தகுந்த ஸ்ரீ வேத வியாசரைப்பற்றிய அனைத்துச் செய்திகளும் மகிழ்வளித்தன.

    >>>>>

    ReplyDelete
  12. வித்யாசமான அழகான அற்புதமான இன்றைய தங்களின் பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    படங்கள் முற்றிலும் தெரிய வரும்போது மேலும் ஏதாவது நான் சொல்ல விரும்பினால், மீண்டும் அடியேன் வருகை தருவேன்.

    இப்போதைக்கு Bye Bye ! - vgk

    ;) 1323 ;)

    ooo o ooo

    ReplyDelete
  13. இப்போது இந்தத்தங்களின் பதிவினில் மொத்தம் 13 படங்கள் எனக்குக் காட்சியளிக்கின்றன. மொத்தமே 13 தான் என நான் நினைக்கிறேன்.

    ஐந்து மற்றும் ஆறாம் படங்களில் உள்ள என் அன்புக்குரிய தொந்திப் பிள்ளையாரப்பாவுக்கு என் வந்தனங்கள். ;) - vgk

    ReplyDelete
  14. சாதுர்மாஸ்ய விரதம் பற்றி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. வியாச பௌர்ணமியைப் பற்றிய தகவல்களும் அழகிய படங்களும் அருமை!.. இனியதொரு பதிவு!..

    ReplyDelete
  16. வியாச பூசை என்ற ஒரு பொருண்மையில் அதிகமான செய்தியை தற்போதுதான் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  17. வியாச பூசை பற்றிய விஷயங்கள் அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  18. superb post about vyasa pournami with pictures

    ReplyDelete
  19. வியாச பௌர்ணமி, வியாச பூசை பற்றி அறிந்தது. மகிழ்வு
    மிக்க நன்றி சகோதரி.
    இனிய பாராட்டுகள்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete