


ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ
ஆதிசேஷா அனந்தசயனா ஸ்ரீநிவாஸா ஸ்ரீ வெங்கடேசா
வைகுண்டநாதா வைதேகிப்ரியா ஏழுமலை வாசா எங்களின் நேசா
வேணுவிலோலனா விஜயகோபாலா நீலமேக வண்ணா கார்மேகக் கண்ணா
காளிங்க நர்த்தனா கமனீய கிருஷ்ணா கோமள வாயனா குருவாயூரப்பனா
ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பாடு தீவினை யகல அவன் திருவடி தேடு
பார்த்த சாரதியின் பாதம் பணிவோம்
திருப்பதி மலையில் திருமுகம் காட்டும்
திருவேங்கடத்தான் திருவருள் பெறுவோம்
ஸ்ரீரெங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும்
ஸ்ரீரெங்கம் சென்று திருவடி பணிவோம்
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ

திருப்பதி திருமலையில் ஜேஷ்டாபிஷேகத்தில் ஏழுமலையானின் உற்சவ மூர்த்திகளான மலையப்பஸ்வாமி மற்றும் , ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு சாற்றியிருக்கும் தங்கக் கவசத்தை களைந்து மூலிகை நீரால், முதல் நாள் திருமஞ்சனம் செய்த பின் வைர கவசம் சாற்றுவர்.
2-ஆம் நாள் முத்து கவசமும், 3-ஆம் நாள் மீண்டும் தங்கக் கவசமும் அணிவிக்கப்படும்.
2-ஆம் நாள் முத்து கவசமும், 3-ஆம் நாள் மீண்டும் தங்கக் கவசமும் அணிவிக்கப்படும்.

இதனால் ஓராண்டு ஏழுமலையான் சேவையில் நடைபெறும் குறைகள் இருந்தால் அது நிவாரணம் செய்யப்படும்.
ஓராண்டு காலம் உற்சவ மூர்த்திகளுக்கு அணிவித்திருக்கும் தங்கக் கவசம் ஜேஷ்டாபிஷேகத்தின் போது மட்டுமே நீக்கப்பட்டு திருமஞ்சனத்திற்கு பின் சிறப்பு பூஜைகள் செய்து அணிவிக்கப்படும்.




"பூலோக வைகுண்டம்' என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம், பெரிய திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேக விழா சிறப்பாக நடப்பது வழக்கம்.
ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் இருந்து, கோவில் யானை ஆண்டாள் மீது தங்கக்குடத்தில் புனித நீர், மேள, தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு. உற்சவர் அழகிய மணவாளனுக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யவிக்கப்படும்..

ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டது. மூலவருக்கு திருமஞ்சனம் செய்யும் வழக்கம் ஸ்ரீரங்கம் கோவிலில் இல்லை. பூ, மாலைகள் அணிவிக்கப்படுவது இல்லை. வஸ்திரங்கள், திருவாபரணங்கள் மட்டுமே ரங்கநாதருக்கு அணிவிக்கப்படுகிறது.

மூலவருக்கு பதில் திருமஞ்சனம், மலர் அலங்காரங்கள் உற்சவரான
அழகிய மணவாளனுக்கு செய்யப்படுகின்றன.
ரங்கநாதருக்கு சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் போன்ற வாசனை திரவியங்களை கொண்டு, பராம்பரிய முறையில் தயாரித்த தைலம், காப்பாக திருமேனியில் இடப்படுகிறது.

மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், உபய நாச்சியார்கள் திருமேனிகளில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் களையப்பட்டு, எடைகள் சரிபார்க்கப்படும்... பழுது ஏற்பட்டுள்ள நகைகள் சரி செய்யப்பட்டு, மெருக்கூட்டப்படும்..


ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி, கருவறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பராமரிப்பு பணிகள் மற்றும் சிறப்பு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்..
ஜேஷ்டாபிஷேகத்தின் இரண்டாம் நாளாக திருப்பாவாடை திருநாள் கடைபிடிக்கப்படுகிறது.
ரங்கநாதர் கருவறையின் முன்புறம் உள்ள சாந்தனு மண்டபத்தில் துணி விரித்து, பெருமளவு சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், கீரை, முக்கனிகள் சேர்த்து, ரெங்கநாதருக்கு அமுது செய்யவிக்கப்பட்டு இந்த பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்..
தாயார் சன்னதியில் ஜேஷ்டாபிஷேக விழா நடக்கிறது.



அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனி தேர்த் திருவிழா கொடியேற்றத்துக்குப் பின்னர் நடைபெற்ற மஹாதீபாராதனை.
.

.சிதம்பரம் நடராஜர் கோயிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம்கொடியேற்றத்துடன் தொடங்கிய நடராஜர் கோயில் தேரோட்டத் தேர்கள் .


சீரமைக்கப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயில், சிவகாமி அம்மன் தேர்





அற்புதமான அரிய புகைப்படங்கள்!.. அருமையான தகவல்கள் நிறைந்த பதிவு!.. பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஆனிமாத திருவிழாக்காள்ப் பற்றி மிக அழகான செய்திகள்.
ReplyDeleteஅருமையான காணொளி, அழகான படங்கள்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ஆண்டாள் ஸ்ரீதரன் பிரிவுத் துயரிலிருந்து மீண்டு விட்டாளா தெரியவில்லையே.... படங்களுடன் பகிர்வு அழகு.
ReplyDeleteஅருமையான தகவல்கள்... அற்புதமான புகைப்படங்கள் அம்மா... நன்றி...
ReplyDelete’ஜேஷ்டாபிஷேக உற்சவங்கள்’ என்ற தலைப்பினில் இன்றைய தங்களின் ஜேஷ்டை ஆரம்பித்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சியே.
ReplyDelete>>>>>
ReplyDeleteபடங்கள் அத்தனையும் பவித்ரமானவை. பார்க்கப்பார்க்க பரவஸம் அளிப்பவை. தங்களைத்தவிர வேறு யாராலுமே இதுபோலக் காட்டி திவ்ய தரிஸனம் தர இயலாது.
>>>>>
தனித்து நிற்கும் யானை ......
ReplyDeleteநெற்றியில் அழகிய நாமம்.
தலையில் பூ மாலை.
கம்பீரமான தோற்றம். ஜோர் ஜோர்
இரு காதுகளிலும் சங்கும் சக்கரமும் !
உடம்பில் தொங்கும் மணிகள் ..... ஜகமணியாக !!
கால்களில் அழகான முரட்டு கொலுசுகள் !!!
மொத்தத்தில் அனைத்தும் அசத்தல்.
>>>>>
இறுதியில் அம்மா மண்டபக் கரையில் ஜேஷ்டாபிஷேகத்திற்காக தன்னால் ஆன ஜேஷ்டைகளைச் செய்து காட்டிடும் இரு யானைகளும், அவற்றின் படங்கள் கவரேஜும் சூப்பர்.
ReplyDeleteஎத்தனை முறை காட்டினால் திகட்டாத திரட்டுப்பால் போன்ற காட்சிகள்.
>>>>>
விளக்கொளியில் பிரகாசிக்கும் சங்கும் சக்கரமும் மனதை மிகவும் கவந்தன.
ReplyDelete>>>>>
ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா
ReplyDelete’கோபு’ர நுழைவாயில் பிரமாதம்.
>>>>>
ஸ்ரீரங்கம் வீணை ஏகாந்தமும், திருப்பதி பாலாஜி தரிஸனமும் காணொளிக்காட்சிகளாக விலையில்லா [இலவச] இணைப்பாக தந்துள்ளதில் ’அம்மா’வின் கருணையை இங்கும் இதிலும் காண முடிகிறது. ;)
ReplyDelete>>>>>
’ஓம் நமோ நாராயணாய’வில் ஆரம்பித்து எழுதியுள்ள அனைத்து ஸ்லோகங்களும் படிக்க இனிமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
’திருப்பாவாடைத் திருநாள்’ என்று படிக்கும் போதே உள்ளத்திற்கு உவகையாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது.
ReplyDeleteஇதை நேரில் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
>>>>>
ஸ்ரீரங்கம் திருப்பதி மட்டுமல்லாமல் நெல்லையப்பர் + சிதம்பரம் நடராஜர் கோயில்களுக்கும் கூடவே கூட்டிச்சென்றதும் + தேர்த் திருவிழாக்களைக் காட்டியதும் மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDelete>>>>>
தங்கத்தில் ஜொலிக்கும் ஸ்ரீரங்க கருவறை விமானம் அட்டகாசம் ! ;)
ReplyDeleteதங்கமானவர்களால் காட்டப்பட்டுள்ளதால் மேலும் ஜொலிப்பதாகத் தோன்றுகிறது.
>>>>>
அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஅடுத்த பதிவுக்கு இன்னும் முழுசாக ஒருநாள் அல்லவா காத்திருக்க வேண்டும் என நினைக்கையில் என் மனம் கிடந்து தவிக்குதாக்கும். ஹூக்க்க்கும்.
;) 1326 ;)
ooo ooo ooo ooo
’திருப்பாவாடை’ என்பதைப் படித்ததும் எனக்குள் குபுக்கெனச் சிரித்துக் கொண்டேன்.
ReplyDeleteVGK-07 ”ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்” கதையில், ஜிகினாஸ்ரீயின் உள்பாவாடைக்கு நாடா கோர்த்துக் கொடுக்கும் அரியதோர் வாய்ப்புக்கிடைத்த சீமாச்சூ என் நினைவுக்கு வந்ததால் சிரிப்பும் வந்தது.
http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html
வணக்கம் ..வாழ்க வளமுடன்.. கருத்துரைகள் அனைத்திற்கும் நிறைந்த நன்றிகள்..
Deleteசுவாமியை இப்படி எல்லாம் கிண்டல் பண்ணி சிரித்தால் கண்ணைக் குத்திவிடாதோ..!
ஜேஷ்டாபிஷேகம் பற்றிய தகவல்கள் அருமை.. மகிழ்ச்சி..
ReplyDeleteஅருமையான தகவல்கள், அழகான படங்கள், சிறப்பான பகிர்வு.நன்றி.
ReplyDeleteஜேஷ்டாபிஷேகம் திருமலையிலும் ஸ்ரீரங்கத்திலும் எவ்வாறு செய்விக்கப்படுகிறது என்பதை அழகிய படங்களுடன் விரிவாக பகிர்ந்தமை சிறப்பு! ஆனி திருமஞ்சன காட்சிகளும் அற்புதம்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅர்த்தமுள்ள பதிவு.அருமையான படங்களுடன்.ராஜேஸ்வரி தங்கள் இந்தப் பக்திசேவை என்றும் போற்றத்தக்கது. கோவிந்தனையும் ஸ்ரீரங்கனையும் ஜேஷ்டாபிசேகக் கோலங்களில் காணுவது மனம் நிறைகிறது. திருப்பாவாடா உத்சவர் உள்ளம் கொள்ளைகொள்ளும். இறைவன் அளித்த அன்னம் அவனுக்கே படைக்கப்பட்டு மீண்டும் நமக்கு வந்தடைவது எவ்வளவு பெரிய கொடை. நன்றி அம்மா.
ReplyDeleteஜேஷ்டாபிஷேகம் பற்றிய சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅருமையான படங்களுடன் அற்புதப் பதிவு
ReplyDeleteநன்றி சகோதரியாரே
சிதம்பரத்தில் தேர்த் திருவிழாவினைப் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று தடுத்து விட்டனர். ஆனால் இங்கு .....?திருமஞ்சனம் என்பதே ஜேஷ்டாபிஷேகமா. ? படங்களும் பதிவும் அருமை.
ReplyDeletegreat post
ReplyDeleteஜேஷ்டாபிஷேக தகவல்களும் படங்களும் சிறப்பாக இருந்தன. தன்வந்திரி சன்னிதியின் ஜேஷ்டாபிஷேக தீர்த்தம் கிடைத்தது.
ReplyDelete