
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

மூர்த்தி, தலம், தீர்த்த சிறப்புடன், பெரிய கோயில் எனப்படும்
தாண்டேஸ்வரர் திருக்கோவில் ' அமராவதி ஆற்றின்
தென்கரையில் அமைந்துள்ளது.
தென்சிதம்பரம்: தில்லையில் அமைந்துள்ளது போலவே, இடது காலைத் தூக்கியபடி ஆனந்த தாண்டவ கோலத்தில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் நடராஜர் காட்சி தருவதால் "தென் சிதம்பரம்' என சிறப்பிக்கப்படுகிறது.
இவரை வணங்கிட கலைகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.
தாண்டேஸ்வரர் திருக்கோவில் ' அமராவதி ஆற்றின்
தென்கரையில் அமைந்துள்ளது.
தென்சிதம்பரம்: தில்லையில் அமைந்துள்ளது போலவே, இடது காலைத் தூக்கியபடி ஆனந்த தாண்டவ கோலத்தில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் நடராஜர் காட்சி தருவதால் "தென் சிதம்பரம்' என சிறப்பிக்கப்படுகிறது.
இவரை வணங்கிட கலைகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T5_47.jpg)
இப்பகுதியை குமண மன்னர் ஆட்சி செய்ததால் "குமணன் நகர்' எனவும், வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் "குழுமூர்' எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி "கொழுமம்' எனப்படுகிறது.
ஜமன்னர், இங்கு நடராஜரை உற்சவராக வைக்க விரும்பி, அவரை சிலையாக வடித்த போது இரண்டு முறை சரியாக அமையவில்லை.
கோபமடைந்த அவர், அடுத்த சிலை சரியாக அமையவில்லை எனில் சிற்பிக்கு மரணதண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
வருந்திய சிற்பி இறைவனிடம், "மன்னர் கையால் உயிர் போவதை விட நீயே எனது உயிரை எடுத்துக் கொள்!' என முறையிட்டார்.
மனமிரங்கிய நடராஜர், அவருக்கு அருட்காட்சி தந்து, அழகிய அம்சத்துடன் தானாகவே சிலைவடிவில் அமைந்தார்.
தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயரில் அழைக்கப்படும் இவரது பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது.
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T9_47.jpg)
சுவாமிக்கு இடப்புறம் அம்பாள் தனிச்சன்னதியில் அருள்கிறாள்..,

அவளுக்கு முன்பகுதியில் ஜேஷ்டாதேவி,

பிரகாரத்தில் சுந்தரவிநாயகர், பாலமுருகன், சூரியன், ஐயப்பன், மகாவிஷ்ணு, துர்க்கை, பைரவர், நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மேற்கு நோக்கியபடி சனீஸ்வரன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர்.
கல்மண்டபம் போல் உள்ள இங்கு கருவறைக்கு பின்புறம் உள்ள அக்னீஸ்வரர் சன்னதியும், 32 தத்துவங்களை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்ட தூண்களும் கலையம்சத்துடன் உள்ளன
பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரியதோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால், நாடு, வீடு, பேறு என அனைத்தும் செழிப்பின்றி இருந்தது. அச்சம்கொண்ட மன்னர் தனது குருவிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்யும்படி கூறினார். அதன்படி, வில்வ வனமாக இருந்த பகுதியை சீரமைத்து கோயில் எழுப்பினார்.
இரட்டை சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி: தெட்சிணாமூர்த்திக்கு நான்கு சீடர்கள் உண்டு. ஆனால், இங்குகருவறை சுற்றுச்சுவரில் அருளும் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் இரண்டுசீடர்கள் தனியே தவக்கோலத்தில் அமர்ந்துள்ளனர்
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T1_47.jpg)






![[Image1]](http://img1.dinamalar.com/Kovilimages/T_500_47.jpg)


தான்டேசுவரர் திருக்கோயில் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தாண்டேஸ்வரர் திருக்கோயில் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு அம்மா... நன்றி...
ReplyDeleteபுதிய ஒரு கோயிலைப் பற்றி அறிந்தேன். நன்றி. அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் என்ற இடத்தில் நண்பர் திரு செல்வபாண்டியன் அவர்களோடு களப்பணி மேற்கொண்டபோது ஒரு புத்தர் சிலையைக் கண்டுபிடித்தேன். குழுமூர் என்றதும் எனக்கு அந்த ஊர் நினைவிற்கு வந்தது. நன்றி.
ReplyDeletegreat pictures
ReplyDeleteஅருமையான தகவல்...அழகான படங்கள்...பாராட்டுக்கள்...
ReplyDeleteதாண்டேஸ்வரர் திருக்கோயில் விவரங்களும், படங்களும் வெகு சிறப்பு.
ReplyDeleteதாண்டேசுவரர் திருக்கோயிலை நன்கு தரிசித்து விட்டேன்.
ReplyDeleteபடங்களும் அழகு. காணொளிமூலம் கோவிலை நன்க்கு சுற்றிப்பார்த்து விட்டேன்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
கொழுமம் - உடுமலை - திருப்பூர் - தாண்டேஸ்வரர் கோயில் பற்றிய முதல் காணொளி அருமையாய் உள்ளது. தென்னை போன்ற பல மரங்களின் அசைவுகளுடன், தூய்மையான ஒரு கோயிலின் சக்திமிக்க பல சந்நதிகள் அதில் தத்ரூபமாக இடம்பெற்று மகிழ்வித்துள்ளன. நேரில் சென்று வந்தது போல ஒரு மகிழ்ச்சி மனதில் உண்டாகியது.
ReplyDelete>>>>>
கலைகளில் சிறக்க அருளுபவரா ?
ReplyDeleteசந்தோஷம். சந்தோஷம்.
காலங்களில் அவள் வஸந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
என்ற பாட்டுத்தான் என் நினைவுக்கு வந்தது. ;)
>>>>>
’ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம்’ என்ற பாடல் வரிகளுடன் ஆரம்பமே இனிப்பாக உள்ளது.
ReplyDelete>>>>>
இடையிடையே ஸ்ரீருத்ர மந்திரங்களும், சிவனுக்கான காயத்ரி மந்திரமும் கொடுத்துள்ளது சிறப்பாக உள்ளன.
ReplyDelete>>>>>
காணொளிக்கு அடுத்த முதல் படத்தில் மும்மூர்த்திகளுடன், என் அன்புக்குரிய ஆசைக்குரிய இஷ்ட தெய்வமான தொந்திப் பிள்ளையாரப்பா சூப்பர் !
ReplyDeleteஅதுபோல அந்தக்கடைசி படத்திலும் குழந்தையாக அவரே ! ;)
அவருக்கு என் ஸ்பெஷல் வந்தனங்கள்.
>>>>>
குமணன் நகர், குழுமூர், கொழுமம் போன்ற பெயர்க் காரணங்கள் கொடுத்துள்ளது அழகு.
ReplyDeleteகொழுகொழு என்றும் மொழுமொழு என்றும், கும்முன்னு ஜிம்முன்னு சிலர், மோத முழங்க கொழுப்பெடுத்து, அங்கு இருந்திருக்கலாம். ;)))))
அதைப்பார்த்துப் பரவஸமான என்னைப்போன்ற யாரோ ஒருவர் தன் கற்பனையில் ‘கொழுமம்’ என பெயர் வைத்திருக்கலாம் எனவும் நினைக்கத்தோன்றுகிறது. ;)))))
>>>>>
சிலையை சரியாக அமைக்காவிட்டால் சிற்பிக்கு மரண தண்டனை - ராஜ தண்டனை ..... என்ன கொடுமை பாருங்கோ. நல்லவேளை சிவனே என இருந்துள்ள அவரை அந்த சிவனே காத்தருளியுள்ளதைக்கேட்க .... அதுவும் தங்கள் மூலம் கேட்க .... மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது.
ReplyDelete>>>>>
இரட்டை சீடர்களுடன் மட்டுமே தக்ஷிணாமூர்த்தி ..... ஆச்சர்யமாக உள்ளது.
ReplyDelete>>>>>
வழக்கம் போல அனைத்துப்படங்களும் அழகாக உள்ளன. பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றியோ நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஎங்கிருந்தாலும் வாழ்க !
;) 1328 ;)
ooo ooo ooo
வணக்கம் வாழ்க வளமுடன்..
Deleteஅருமையான கருத்துரைகள் அனைத்திற்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
அழகான படங்கள்..
ReplyDeleteஇனிய சிவ தரிசனம்.. மகிழ்ச்சி..
பதிவில் எழுதும் கோவில்களுக்குச் சென்றிருக்கிறீர்களா. ?
ReplyDeleteவணக்கம் வாழ்க வளமுடன்..
ReplyDeleteமிகப்பெரும்பாலான ஆலயங்கள் குடும்பத்தோடும் எங்கள் பாகவத, நாராயணீய, சகஸ்ரநாம , தேவிமகாத்மிய திருப்புகழ் குழுவினருடனும் பலமுறை சென்று தரிசித்து தகவல்கள் திரட்டி பதிந்தவையே..
மற்றவை சிலர் வந்து தகவல்கள் சொல்லியும் இ மெயில் அனுப்பியும் எழுதச்சொன்னவை..
செல்லவேண்டும் என திட்டமிட்டு செல்லும் போது குறிப்புகளுடன் செல்ல தகவல்களும் படங்களும் திரட்டிய எனக்கான குறிப்புகள்..
கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..
தகவல்களுக்கு நன்றி.....
ReplyDeleteஅறியாத கோவில் பற்றி அறியத் தந்தீர்கள் அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தாண்டேஸ்வரர் கோவில் காணொளி நாதஸ்வர இசையுடன் அருமையாக இருந்தது நாமும் அக்கோவில் சென்றமாதிரி ஓர் உணர்வு. அழகான படங்கள்,சிறப்பான தகவல்கள்.நன்றி.
ReplyDelete