Monday, July 28, 2014

இராமேஸ்வரம் ஆடிமாத திருக்கல்யாண விழா வைபவம்


 






இராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன்  துவங்கி அக்னிதீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்..
கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வாஸ்து சாந்தி பூஜையும் அம்பாள் சன்னதிக்கு எதிரிலுள்ள நவசக்தி மணடபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டு  அருள்பாலிப்பார். 
 கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து  கொடியேற்றப்பட்டு ஆடி திருவிழா வைபவம்  முறைப்படி துவங்கும்.. 

ராமேசுவரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து 
இரு சங்குகளை கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது.

ஸ்ரீராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இராமேஸ்வரம் தலத்தில் பிரத்யேகமாக 1008 அபிஷேகச் சங்குகள் உள்ளன

ஸ்ரீராமனுக்கு உதவிய குகனின் வழித் தோன்றல்கள் தான் சேதுபதி மன்னர்கள் என்று கருதப்படுகிறது.

ராமேசுவரம் கோவிலுக்கு சேதுபதி மன்னர்கள் செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர், நட்சத்திரங்கள் இன்றும் மூலவர் முன்பு சங்கல்பத்தில் ஓதப்படுகிறது.

இராமேசுவரம் தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில்  பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியில் நெய் ஊற்றி விளக்கை எரிய வைத்தால் ராகு-கேது தோஷம் நீங்கும். 

இராமேசுவரம் கோவிலில் ஸ்ரீவைணவ ஆலயங்களில் கொடுப்பது போல தீர்த்தம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

காசியிலும், சிதம்பரத்திலும் பத்து மாதம் தங்கிய பலனையும், நைமிசாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம், மதுரை, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, குடந்தை, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருமுதுகுன்றம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருக்காளத்தி ஆகிய பகுதிகளில் ஓராண்டு தங்கிய பலனையும் தனுஷ்கோடியில் நீராடி இராமநாதரை வணங்கி மூன்றே நாளில் பெறலாம்.

காசியில் இறப்பது முக்தி தரும், பாணலிங்கம் பல திரளும், நர்மதையில் விரதம் இருப்பது முக்தி தரும், பொறாமையால் போர்க்களமாகிய குருசேத்திரத்தில் பிறருக்குத் தானம் செய்வதே முக்தி தரும். 
அந்த மூன்று பலனையும் ஒன்றாக்கித் தரும் பெருமை இராமேசுவரத்திற்கே உண்டு
மண்ணினால் லிங்கம் செய்தாள், சீதை. அதனால் இராமேசுவரத்தில் யாரும் மண்ணை உழுது பயிர் செய்வதே இல்லை.
ஆவுடையாராக நிலமே இருக்க பாணலிங்கமாக மட்டுமே இருக்கும். இராமலிங்கத்தைப் போல் இருப்பதால், செக்கை ஆட்டி எண்ணை எடுப்பதும் இராமேஸ்வரத்தில் இல்லை

காசிக்கு மட்டும் போய் வந்தால் போதாதாம். முதலில் இராமேசுவரம் சென்று நீராடி வணங்கிக் கடலில் மண் எடுத்துக் காசிக்குப் போய், கங்கையில் அதனைக் கொட்டி காசியிலிருந்து மீண்டும் வந்து மறுமுறையும் இராமேசுவரம் போய், காசியிலிருந்து கொண்டு வந்த கங்கை நீரால்  இராமநாதருக்கு அபிஷேகம் செய்தால்தான் காசியின் பலன் பூர்த்தியாகக் கிடைக்கும்
இந்த மரபு தவறி காசிக்கு மட்டும் போய் வந்தால் பயனில்லை. இதைத்தான் காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது என்ற பழமொழி கூறுகிறது.

காசி முக்திக்குச் சிறப்புடையது. அதனால்தான் உயிரை உடனே விட விரும்பாமல் வேறு எதையாவது விட்டுவிட்டு வருகிறார்கள்

இராமேசுவரமோ உரிய காலத்தில் முக்தியும் பிற்காலத்தில் போகமும் அருளும் பாக்கியமுடையதாகும்.
 
மிகுந்த சிறப்புடையது இராமேசுவரம் என்றாலும் தனுஷ்கோடிக்குப் போய் விட்டுத்தான் பிறகு  இராமேசுவரம் வர வேண்டும்.














பாம்பன் நீர் இணைப்பை வில் நாணாகவும் சுற்றிலும் வளைந்த கடல்நீரை வளைந்த வில்லாகவும் கற்பனை செய்தால் அந்த வில்லில் நாண்பூட்டி நிற்கும் அம்புபோலவே இராமேசுவரமும் தனுஷ்கோடியும்  ஆகாயத்தில் நின்று பார்க்கும்போது தெரியும். 
78 அடி உயரமான மேற்குக் கோபுரத்தை சேதுபதிகள் 
முழுவதும் கருங்கல்லாகவே கட்டி விட்டார்கள். 

பெரும்பாலும் நிலையும் மேல் தளமும் வரைதான் 
கருங்கல்லாக இருப்பது வழக்கம். 

சேதுபதிகளோ கலசம் வரை அப்படியே கருங்கல்லாக கட்டியது 
மிகச் சிறப்பே ஆகும்.

ஸ்ரீவைணவத்தில் கருடசேவையும் சைவத்தில் ரிஷபவாகன காட்சியும் முக்தி தரும் என்பார்கள். அதுவும் கோபுர தரிசனமாகும்போது தான் இக்காட்சிகள் மிகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்படும். 
அதற்கு ஏற்ப மண்டப உச்சியில் ரிஷபவாகனக் காட்சியும் பின்புறம் கீழைக் கோபுரம் இருப்பதும் முக்திதரும் தலத்தில் சிறந்த இராமேசுவரத்திற்கு மிகவும் உரியதாய் விளங்குகின்றன.
  

நேபாள நாட்டு பக்தர் ஒருவர் ஒரு லட்சம் ருத்ரங்களால் ஆன ருத்ராட்ச பந்தல் ஒன்றைராமேஸ்வரம் தலத்தில் அனைத்து கொடுத்துள்ளார்.
 ஆடி அமாவாசையன்று அக்னிதீர்த்தக் கடலில் தீர்த்தவாரி உற்சவம்,
பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் தரிசனம் அருளுதல் , வெள்ளி ரதம்,  அம்பாள் தேரோட்டம், அம்பாள் தபசு மண்டகப்படிக்கு எழுந் தருளல், இரவில் பூப்பல்லக்கு உற்சவம், 
பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். 

13 comments:

  1. ஆடிமாதம் திருக்கல்யாண விழா வைபவம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. இம்மையில் அருளும் போகமும், மறுமைக்கு முக்திப் பேறும் அளிக்கவல்ல, எம்பெருமான் பெருமாட்டி தலத்தின் மாண்பினை உணர்த்திய அற்புதத் திருத்தலத்தின் அனைத்து சிறப்புத் தகவல்களையும் ஒரு ருத்திராட்ச மாலையாகவே கோர்த்து எம்பெருமானுக்கு அணிவித்து இறை தொண்டு செய்தமையாகவே கருதுகின்றேன். எம் பெருமானின் திவ்யதரிசனம் பெற்று அனைவரும் சீரும் சிறப்பு பெற வலியுறுத்தும் உன்னத பகிர்வினை நல்கியமைக்கு மிக்க வந்தனம் சகோதரி! வழக்கம் போலவே, கண்ணிற்கு இனிய காட்சிகளும்! தேனில் நனைத்திட்ட அரும்பலா என்பதில் சந்தேகமில்லை!

    ReplyDelete
  3. இனிய காலைப் பொழுதில் - இராமேஸ்வர தரிசனம்.
    விரிவான செய்திகளுடன் அழகிய பதிவு. மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. ஆடியில் காணவே ஐயன் திருமணம்!
    கூடின கைகள் குவிந்து!

    அற்புத தரிசனம்! அழகிய படங்களும் பதிவும்!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  5. Replies
    1. இறுதியில் காட்டியுள்ள இயற்கைக்காட்சி மிகவும் அழகாக உள்ளது.

      Delete
  6. சிவ சிவ கோபுரமும், அதன் அருகே உள்ள கோயில்
    பிரும்மாண்ட பிரகாரமும் சூப்பராக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  7. ஆடி அமாவாசையன்று அக்னி தீர்த்தக்கடலில்
    நடக்கும் தீர்த்தவாரி உற்சவக் கும்பலில்,
    உங்களை நான் தேடோ தேடெனத் தேடிப்
    பார்த்துக் களைத்துப்போனேனாக்கும்.

    >>>>>

    ReplyDelete
  8. வில் + அம்பு போன்ற பாம்பன் பால இணைப்பை
    ஆகாயத்தில் நின்று நீங்கள் பார்த்தீர்களா !!!!!

    போங்கோ .... எங்கு சென்றாலும் என்னை விட்டுட்டு
    தனியாகவே போய் விடுகிறீர்கள்.

    ஆகாயத்தில் தாங்கள் நின்ற நாளும் நேரமும்
    தெரிவித்திருந்தால் நான் அதையாவது பார்த்து
    மகிழ்ந்திருப்பேனாக்கும்.

    >>>>>

    ReplyDelete
  9. அழகான பதிவு.

    அற்புதமான படங்கள்.

    அருமையான காணொளி ... தினம் தினம் தரிஸனம் ;)

    அசத்தலான விளக்கங்கள்.

    >>>>>

    ReplyDelete
  10. அனைத்துக்கும் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

    ;) 1351 ;)

    ooo ooo

    ReplyDelete
  11. காசிக்கு ஒரு முறையும் ராமேஸ்வரத்துக்கு இரண்டு முறையும் சென்றதுண்டு. அப்போது பதிவுலகில் இருக்கவில்லை. ஒரு வழிகாட்டிபோல் விவரிக்க அன்று உங்கள் வலைப்பூவையும் படித்ததில்லை, இழப்பு இப்போது தெரிகிறதுவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ராமநாமசுவாமிவிழாக்கோலம் தர்சித்து மகிழ்ந்தோம்.

    ReplyDelete