Sunday, July 20, 2014

கோடி நலமருளும் கோமதி அன்னை..





"சொன்னாலும் வாயினிக்கும் சொலக்கேட்டால் காதினிக்கும்
பன்னாளும் சிந்தித்தால் பரந்தினிக்கும் சிந்தையெல்லாம் 
பொன்னாளும் கலையாளும் புவியாளும் புகழ்ந்தேத்தும்
அன்னாயுன் சரிதங்கள் அற்புதமாம் கோமதியே'

"அணியாரும் உன் விழா நாளில் அலங்காரம் பல கொண்டு
மணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்கால்
பணியாத தலை பணியும் பாடாத வாய்பாடும்
தணியாத சிந்தையும் தான் தணிந்து ஒடுங்கும் கோமதியே'

அன்னையின் அருளுக்குப் பாத்திர மாகாதவர்களும், அன்னையின் திருவீதியுலாவைக் கண்டால் பக்திப் பெருக்கோடு வணங்கி மகிழ்வார்கள் ...

மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்புகளையும் உடையது. 

உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் 
ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. 

அம்பாளுக்கு தன் கணவரையும், அண்ணனையும் ஒருசேரக் காணும் எண்ணம் ஏற்பட்டது. அதற்காக, பூலோகம் வந்து தவம் செய்தாள். அவளுடன் தேவர்கள், பசு வடிவில் வந்தனர். 

பசுக்களை, "கோ’ என்றும், "ஆ’ என்றும் சொல்வதும் வழக்கம். 

அம்பாள், அவர்கள் மத்தியில் நிலவை போல் பளிச்சென நின்றாள். இதனால், அவள், "ஆ’க்களை உடையவள் என்ற பொருளில் ஆவுடையம்மாள் என்றும், "கோ’க்களின் மத்தியில் பிரகாசமாக நின்றவள் என்ற பொருளில், கோமதி என்றும் பெயர் பெற்றாள். 

ஆடிமாத பவுர்ணமியன்று, சிவனும், நாராயணனும் இணைந்து, சங்கரநாராயணராக கோமதிக்கு காட்சி தந்தனர்.

சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார்
நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், கோமதி அன்னை  தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். 
Guardian Gods
 கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது.
Nandi
வேலப்ப தேசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு 
ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார். 

அச்சக்கரத்திற்குக் கோமதியம்மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதனருகில் வரும் ஆடாத பேயும் ஆடுகின்றது. தீராத நோயும் தீர்ந்து போகின்றது

இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. 

புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். 

பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்

சங்கரலிங்கப்பெருமானின்  சிறப்பு.... ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும் !

திருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாயெழுந்தருளியிருக்கிறார். கூடவே மனோன்மணி தேவியும் வீற்றிருக்கின்றாள். மண்டபத்தில் தெற்கு பார்க்க நடராஜ மூர்த்தி ஊன நடனமும், ஞான நடனமும் செய்தருள்கின்றார்.சிவகாமியம்மையாரும் தாளம் போடுகின்றனர். காரைக்காலம்மையார் கூடவே இத்திருக்கூட்டத்தைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கி பாடிக்கொண்டிருக்கின்றாள்.,
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 

அம்பலவாணதேசிகர்  பதித்துள்ள  மந்திரச் சக்கர பீடத்தில், . அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

அம்மன் சுற்றுப் பிரகாரத்தில், அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில் சேமிக்கப்பட்டுள்ளது. 

இறையன்பர்கள் நேர்த்திக்கடனாக வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக்காலங்களிலோ, சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்துள்ள தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புதுமண் - புற்றுமண் என்று பனைஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டுவந்து தொட்டியில் கொட்டிச் சேமிப்பர். 

புற்றுமண் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்
புற்றுமண் சர்வரோக நிவாரணி என்பது  நம்பிக்கை.

சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. 

சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் உருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. 

திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். 

திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் இலட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. 

இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும். 

மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். 

பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். 

சிவன் அபிஷேகப்பிரியர். 
திருமால் அலங்காரப்பிரியர்

எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. 

இச்சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. 

சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார். 

மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இதன் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள் ஆடித்தபசு விழா, 12 நாட்கள் நடக்கும். 

அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். 

கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார்

தொடர்புடைய பதிவுகள்..






18 comments:

  1. கோடி நலமருளும்
    கோமதி அன்னைக்கு
    கோடி வீட்டு சாதாரணமானவன்
    கோபாலகிருஷ்ணனின் அனந்த
    கோடி நமஸ்காரங்கள்.

    >>>>>

    ReplyDelete
  2. கோடி இன்பம் தரும்
    கோயில் தரிஸனங்களைக்
    கோர்வையாகக் கொடுத்துள்ள
    கோடீஸ்வரியான
    கோவைத்தங்கத்திற்கு என் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  3. சிவ சிவா !
    எத்தனை எத்தனைப் படங்கள் !!!!!
    அத்தனையும் அழகோ அழகு தான்.
    திகட்டவே இல்லை .......
    திரட்டுப்பால் போல !

    >>>>>

    ReplyDelete
  4. ‘கோ’ விளக்கம் கோலாட்டமாகவும், கொண்டாட்டமாகவும்
    ‘ஆ’ விளக்கம் ஆனந்தம் அளிப்பதாகவும் உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  5. ஆடித்தபசு... புற்றுமண்... சங்கர நாராயணர்.... என எவ்ளோ கதைகள்.... எவ்ளோ தகவல்கள் ...... சுவையோ சுவை தான் !

    திருநெல்வேலி ஹல்வா போல ....

    >>>>>

    ReplyDelete
  6. அன்றாடப் பதிவுகளில் தாங்கள் புதிதாக காணொளிகளை இணைக்கக் கற்றுக்கொண்டுள்ளது என்னை அப்படியேக் கட்டிப்போட்டு கஷ்டப்படுத்துகிறது ..... தெரியுமோ !

    நிறைந்த வயிற்றுக்கு நீர்மோர் பானகம் போல ..... போதாக்குறைக்கு தொடர்புடைய பதிவுகள் வேறு.

    என்னால் வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடமுடியாமல் ஹிம்சிக்கிறதாக்கும். ஹூக்க்கும்.

    இதைவிட வேறு வேலைகளைப்பார்க்கலாமா என தாங்கள் சொல்லாமல் சொல்வதும் புரிகிறது. ;)))))

    OK ..... OK. No Problem.

    >>>>>

    ReplyDelete
  7. பயத்தைப்போக்கலாம் எனச்சொல்லி, படுத்துள்ள இரண்டு படங்களைக்காட்டி பயத்தையல்லவா உண்டாக்கிட்டீங்கோ !

    >>>>>

    ReplyDelete
  8. அனைத்தும் அருமை.. அழகான பதிவு..

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள். வாழ்க !

    ;) 1343 ;)

    oo oo oo oo

    ReplyDelete
  9. கோமதி அன்னை அறிந்தேன்
    உணர்ந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  10. அன்னையின் மாண்பினையும், சங்கர நாராயணின் சிறப்பினையும் உணர்த்தும் உன்னத பகிர்வு!

    ReplyDelete
  11. கோமதிஅன்னையின் புகழ்போற்றும் பதிவு அருமை. சிறுவயதில் ஆடி தபசு பார்த்து இருக்கிறேன். கூட்டமில்லாமல் 10 வருடங்களுக்கு முன்பு நிதானமாய் அமைதியாக அம்மனை தரிசித்து வந்தோம்.
    படங்கள் எல்லாம் அழகு, கடைசி படம் அபூர்வ காட்சி,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அருமையான படங்களுடன் சிறப்பான விளக்கம் அம்மா... நன்றி...

    ReplyDelete
  13. கோமதி அன்னை பதிவு படங்களுடன் அருமை.

    ReplyDelete
  14. அற்புத ஆடித் தவக்கோலம் கண்டேன்.
    அனைவருக்கும் அன்னை நல்லருள் பொழிவாளாக!..

    ReplyDelete
  15. கோமதி அம்மன் ஆலய தகவல்களும் படங்களும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. படங்களும் தகவல்களும் வழக்கம்போல அருமை!

    ReplyDelete
  17. கோமதி அன்னையின் மகிமைகள் உணர்த்தும் பதிவு.
    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  18. கோடி நலன் அருளும் கோமதி அன்னையை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி அம்மா...

    ReplyDelete