Friday, September 20, 2013

திரு திகழும் திருச்செங்கோடு


Arthanareeswarar Gayatri Mantra by Guruji Shri Narendra Babu Sharmaji





அர்த்தநாரீசுவரர் சன்னிதி முன்மண்டபமும் கொடிமரமும்
படிமம்:Thiruchengodu Arthanareeswarar Sannidhi-Front mandapam.jpg
‘‘அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!’’என வணங்கிப் போற்ற
 எழில் கொண்ட அதிசயத் திருமேனி.இடப்பாகத்தில் அம்மை. வலப் பாகத்தில் அப்பன். அம்மையின் பக்கம் பின்னல்; லேசான ஒயில்; அப்பனின் பக்கம் ஜடாமுடி; கையில் தண்டாயுதம். அம்மையின் திருவடியில் சிலம்பு. அப்பன் திருவடியில் கழல். அருகே  தேவ தீர்த்தமாக நீர் சுரந்து கொண்டே இருக்கிறது.

முன் மண்டபத்திலுள்ள உற்சவ அம்மையப்பத் திருமேனியில், அர்த்தநாரீஸ்வர வடிவத்தின் எழிலை முழுமையாகக் காணலாம்.

இடப் பாதியில் பெண்மையின் நளினமும், வலப் பாதியில் ஆண்மையின் கம்பீரமும் இழையோடுகின்றன.

கண்களில், வலக் கண்ணுக்கும் இடக் கண்ணுக்கும் துல்லி யமான வித்தியாசம் தெரிகிறது.

அன்னை பார்வதி தேவி  புரட்டாசி மாத வளர்பிறை தசமியில் தொடங்கி ஐப்பசி கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நாள் வரை மரகதலிங்கத்தைக் கேதார கௌரி என்னும் திருநாமத்துடன் வழிபட, நோன்பின் விளைவாக, சிவனிடமிருந்து பிரிக்கப்பட முடியாத வகையில்,  வாமபாகத்தைப் பெற்று பாகம்பிரியாள் என்று பெயர் பெற்றார் என்பது வரலாறு 

ஆதி கேசவப் பெருமாள் ,  தங்கை பார்வதிக்கு கேதார கௌரி நோன்பைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தவர் ..

கேதார கௌரி அம்மன். அருகிலேயே தட்சிணாமூர்த்தி. அருள்கிறார்..

நாரி கணபதியை தரிசித்தபின் அம்மை அப்பனை தரிசிக்கிறோம் ..!

முத்துசாமி தீட்சிதர், இந்தத் தலத்தைத் தன்னுடைய 
அர்த்தநாரீஸ்வரர் குமுதக்ரியாவில் பாடுகிறார்.

அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகதலிங்கம் உள்ளது; 
தவசீலரான பிருங்கி மகரிஷியின் திருஉருவமும் உள்ளது.

தங்கத்தேரும் வைரக்கிரீடமும் மரகத லிங்கமும் சிறப்பானவை..,
பாததூளியார் என்ற  அடியார் நெடுநாட்கள் பிள்ளையின்றித் தவித்த அவரும், அவர் மனைவியாரும் செங்கோட்டுவேலருக்கு வேண்டிக் கொள்ள, ஆண் குழந்தை பிறந்தது. உமைபாகன் என்று பெயர் சூட்டினர்.  குழந்தை வாய் பேசாதிருக்க, குழந்தையைக் கொண்டு வந்து செங்கோட்டுவேலரின் தேர்க் காலில் இட்டாராம் பாததூளியார். தேர் உருண்டோடத் துவங்க, சட்டென்று விழித்துத் தப்பித்த குழந்தை எழுந்து பேசத் தொடங்கினானாம்.

சிவப்பிரகாசர் என்னும் மகான் இங்கு வந்தபோது, கல் நந்திக்கு நிலக்கடலை கொடுத்துச் சாப்பிட வைத்ததாக தகவல் நிலவுகிறது.

கொங்கு நாட்டுப்பகுதிக்கு வந்த ஞானசம்பந்தர்,  இங்கு வந்தபோது, தன்னுடைய பரிவாரங்களையும் பிறரையும் நளிர்சுரம் (குளிர்சுரம்) தாக்கி இருப்பதைக் கண்டார். 

இறையனாரை வணங்கி, ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்று தொடங்கி, ‘தீவினை வந்து எம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்’ என்று ஆணையிட்டுப் பாடினார். 

அடியார்களைப் பற்றியிருந்த நளிர்சுரம், அவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், இந்தப் பகுதியை விட்டே ஓடி விட்டது. 

இந்தப் பதிகம் ‘திரு நீலகண்டப் பதிகம்’ எனப்படுகிறது. திருஞான சம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகத்தின் முதல் பாடல்:

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்

இந்தப் பதிகத்தை பாடினால், நோய்கள் அண்டாது.

திருமணங்களில் இந்த பாடலைப்பாடி திருஷ்டி சுற்றுதல் வழக்கமாம் ..

ஆணொரு பாதியும், பெண்ணொரு பாதியுமாக அகிலத்தின் ஆதார உண்மையை வெளிப்படுத்தும் வடிவம் கொண்டு ஆண்டவன் இலங்கும் இடம் திருச்செங்கோடு. 

பாகம் பிரியாளாக பிராட்டியம்மையும், மாதொரு பாதியனாக ஐயனும் காட்சி தரும் அற்புதத் திருத்தலம் !
ஆணும் பெண்ணும் சமமென்பதையும், ஒருவருக்கொருவர் உதவிகரமானவர்கள் என்பதையும் காட்டுகிற கொடிமாடச் செங்குன்றூர் என்பது  திருச்செங்கோட்டின் பழங்கால இலக்கியப் பெயர்..!


மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ் ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே!

நாகாசல வேலவா!’ என்றே முருகப் பெருமானை அருணகிரிநாதர் பாடும் தலம் திருச்செங்கோடு..!
மயில். முருகன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில், அழகான இரண்டு துவாரபாலகர்கள். சூட்சுமமான சிற்ப அழகுடன்   துவார பாலகர் அணிந்திருக்கும் மாலைக்கும், அவருடைய மார்புக்கும் இடையில் இந்தப் பக்கம் ஒரு ஊசியை நுழைத்து அந்தப் பக்கம் வாங்கி விடலாம். 
சிற்பக் கலையில் நுட்பம் ஆச்சரியப்படவைத்தது ..!
மலையடிவாரத்தில், பிரதானமாக கோயில்  அருள்மிகு பரிமளவல்லி உடனாய அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில். கயிலாச நாதருக்கு 
‘நிலத் தம்பிரான்’ என்றும், மலை மீதுள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு 
‘மலைத் தம்பிரான்’ என்றும் திருநாமங்கள் உண்டு.

காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறந்திருக்கும். இறைவன் அர்த்தநாரீஸ்வரருக்கு உச்சி கால பூஜை மதியம் சுமார் 12 மணி முதல் 1 வரை நடைபெற்று வருகிறது.

1,200 படிகள் ஏறி மலைக் கோயிலுக்குச் செல்லலாம்.

தேவஸ்தானப் பேருந்துகள் மலைப்பாதையில் கோயில் வரை செல்கின்றன. தனியார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கும் மேலே போக அனுமதி உண்டு.

மலைக் கோயிலில் மாலை 6 மணிக்கு நடை மூடி விடுவார்கள். வாகனங்கள் மலையேற, மாலை 5.30 வரை மட்டுமே அனுமதி.
படிமம்:Thiruchengodu Arthanareeswarar Temple-path.jpg
பெரிய ஆதிசேஷன் உருவம். ஐந்து தலைகளுடன் படமெடுத்து நிற்கிறது. 
படிமம்:Thiruchengodu Arthanareeswarar Temple-Adhiseshan.jpg
 தெற்கு நோக்கிய காலபைரவர். நான்கு கரங்களும், மந்தகாசப் புன்னகையுமாக வாகனத்தோடு இருக்கும் நின்ற திருக்கோல பைரவர்.

நாச்சாரம்மன். பீடம் மட்டும் உள்ளது .. அருவமாக அம்பாள் இருப்பதாக ஐதீகம் ..
அருகில் ஜேஷ்டாதேவி.

செல்வ விநாயகர்.அருள்கிறார்..

வாகனத்தில் வந்தால், உள்ளே வரும் வாயில் மேற்கு கோபுரம்.

கிருஷ்ண தேவராயரால் கட்டப் பெற்ற மண்டபத்தில்  தூணெல்லாம் பொங்கி வழியும் சிற்பங்கள். 

ஒரு தூணிலிருந்து வீரபத்திரர் அருளுகிறார். 

குறி சொல்லும் பெண், 

மேளம் அடிக்கும் கட்டியக்காரன், 
யாழினி, அர்ஜுனன் தவக்கோலம், 
நாட்டியப் பெண் என்று எங்கு திரும்பினாலும் அழகு. 
சில தூண்களை, கீழே நான்கு சிம்மங்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. 

எந்த மாவட்டத்தில் இருந்துநுழைந்தாலும் ஒரு மலையைத் தொட்டுத்தான் நுழைய முடியும் என்கிற அளவுக்கு மலைகளும், மலைக் குன்றுகளும் நிறைந்ததாக மலைகளின் மாநகராக நாமக்கல் விளங்குகிறது.

தரைமட்டத்திலிருந்து 2000 அடி உயரத்தில் மலைக்கோயிலின் உச்சியில் அமைந்துள்ளது உச்சி பிள்ளையார் கோவில் . 
 மேரு மலையின் சிகரங்களில் ஒன்றாகிய சந்தனபாக்கியம் வழங்கிடும் வல்லமை வாய்ந்த வந்தியபாடான சிகரத்தின் அருகே வந்தீசர் என்னும்  சிவலிங்கத்தை நிறுவி பிரமனும், திருமாலும் வழிபட்டு வந்தனர்.  
நாரத முனிவரின் வேண்டுகோளின் படி சூரபன்மன்  அந்த சிகரத்தையும் பிரமதேவன் பூசித்த வந்த சிவலிங்கத்தையும் எடுத்து வந்து நாககிரியின் உச்சியில் வைத்து வழிபட்டு வந்தான்.

அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலன், ஆதிகேசவப் பெருமாள் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் தனித்தனி சந்நதி உள்ளது.

மாதொரு பாகன் திருமுன் நேர் எதிரில் சபா மண்டபம் என்னும் நிருத்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.   

சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரைச் சிறப்பித்த இடம் இது. மண்டபத்தின் தூண்களில் உள்ள காளி, ரதி, மன்மதன் போன்ற சிற்பங்கள் கலையழகும், வடிவழகும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. 

ஆமை  மண்டபத்தின் மேல் பகுதி மரத்தாலானது. இறைவனை ஆமை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து வழிபாடு நிகழ்த்தும் போது அதன் மேற்பகுதியில் மலர்களைக் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் துவாரத்தின் வழியாக ஒவ்வொரு பூவாக மூர்த்தியின் மீது விழும். 
அற்புத அமைப்பு பராமரிப்பின்றி இருக்கின்றது..!
ஆமை மண்டபம்-
ஆமை வடிவை மண்டபத்தின் கீழ்ப்பகுதியிலும் 
அர்த்தநாரீசுவரர் சன்னிதிப் பலகணியைப் பின்புலத்திலும் தரிசிக்கலாம்.
படிமம்:Thiruchengodu Arthanareeswarar Sannidhi-Amai mandapam.jpg


மண்டபக் கூரையி லுள்ள சிற்ப அதிசயங்கள் கண் களைக் கவர்கின்றன. மேலே இருந்து தொங்கும் சங்கிலிகள். மேலே இருந்து தொங்கும் தாமரைப்பூ. அதன் இதழ்களில் அமர்ந்து, மகரந்தத்தை ருசிக்கும் எட்டுக் கிளிகள். கிளிகளுக்குக் காவலாக, வெளியில் நான்கு பாம்புகள்.
ஆஹா! தாமரையும் கிளியும்...எல்லாம் கல் சிற்பம்.


படிமம்:Thiruchengodu Arthanareeswarar Sannidhi-sculpture..jpg
திருச்செங்கோடு மலையில் 1008(ஸஹஸ்ர)லிங்கம்


ஸ்தல விருட்சம் இலுப்பை மரம் ..!







திருச்செங்கோடு மலையின் அடிவாரத்திலுள்ள பச்சியம்மன் ஆலயத்தில்  நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்றோம் ..
படிமம்:A view of PachchiyammaaL Temple 9.JPGபடிமம்:A view of PachchiyammaaL Temple 12.JPG

பச்சியம்மனின் திருவாசியில் பச்சைக்கிளிகள் அலங்கரிக்கின்றன..!

பச்சை வண்ணத்தில் அருள்பாலிக்கும் பச்சையம்மனின் அருகில் அலையாழி அறிதுயிலும் மாயன் திருமால் சேஷசயனத்தில்  திருமகள் சமேதராக தரிசனம் த்ந்தார் ...

பச்சையம்மனின் அருகில் அமர்ந்திருக்கும் இரு மாதர்கள் முன்  சிலம்புகள் இருந்தன.. அம்மனின் தோழிப்பெண்கள் என்று தெரிவித்தார்கள்..

கண்ணகி திருச்செங்கோடு மலையிலிருந்து வானுலகம் ஏகியதாக வரலாற்றுக்குறிப்பு உண்டு ..!

வாழ் முனி , கருமுனி , செம்ம்முனி ,  என்று பிரம்மாண்ட
முனிகள் காவலுக்கு உண்டு ..

வன்னி மரத்திடியில் அனுமனும் அருள்கிறார்.

பாம்பாட்டி சித்தர் மகுடி வாசித்தபடி பாம்புகளை வசப்படுத்தியவாறு 
சுதை வடிவில் காட்சியளிக்கிறார்..
. திருமண மண்டபத்தில்  அலங்காரம் ...

திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன ..

நாங்கள் மலைக்குச் சென்றிருந்த சமயம் அர்த்தநாரீஸ்வரர்  ஆலயத்தில் நிறைய திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன..

ஒரு திருமணத்தில்  மணமகனின் தோட்டத்தில் வேலை செய்யும் பெரியவர் ஒருவர் மணம்க்களுக்கு  பாத அணிகள் அணிவித்து பாதத்தைத்தொட்டு நமஸ்காரம் செய்தார்..

மணமக்கள் ஒரு விரிப்பின் மீது புது பாத அணிகளை வைத்து பெரிவரின் பாதங்களைத்தொட்டு அணிவித்து  வணங்கி ஆசி பெற்றார்கள்..

ஒவ்வொரு திருமணத்திலும் புதுமையான அர்த்தமுள்ள சடங்குகள் வியப்பளிக்கின்றன் ..!

திரும்பும் வழியில் பல்லடத்தில் கும்பகோணம் டிகிரி காபி என்று ஒருகடையில் காபி சாப்பிட்டோம் ..
பீதமபரி பவுடர் போட்டு தேய்த்த பளபளப்பான பித்தளை டபரா டம்ளரில் காபி பில்டர் காபி தந்தார்கள்..
ரீபைண்ட் ஆயிலில் ஒருமுறை மட்டுமே உபயோகித்து பலகாரங்கள் செய்கிறோம் என்று அறிவிப்பு இருந்தத்து..
மீதி எண்ணையை  தள்ளுவண்டியில்  பலகாரம் சுடுபவர்கள் வந்து எடுத்துக்கொள்வார்களாம்..

ஒரு தம்பதியர் தான் கடையை நிர்வாகம் செய்கிறார்கள்..

மூன்று இடங்களில் கடை நடக்கிறதாம் ..
சூடாக ராகி வடை சாப்பிட்டோம் ..சுவையாக இருந்தது ..

 கடையில் டி. வி ..  வைத்தால் லாரிக்காரர்கள் வந்து மணிக்கணக்கில் அமர்ந்துகொண்டு சத்தமாகப்பேசிக்கொண்டு தொல்லை தருகிறார்கள் என்று   சமையல் அறையில் டி .வி .ஓடிக்கொண்டிருந்தது..

24 comments:

  1. படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்... தகவல்கள் அதை விட... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. படங்களும் பகிர்வுகளும் அருமை. நன்றி அம்மா.

    ReplyDelete
  3. திரு
    திகழும்
    திருச்செங்கோடு என்ற பதிவை

    திருச்சியிலிருந்து
    திகட்டாமல்
    தித்திப்பாகப் படித்து
    திருப்தி அடைந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  4. படங்கள் எல்லாமே வழக்கம் போல அழகு.

    கற்சிற்பங்கள் காண கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

    >>>>>

    ReplyDelete
  5. ’பாகம்பிரியாள்’ என்ற அம்பாள் நாமத்தினைக் கேட்கவே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளதே ! ;)

    அந்த ஸ்வாமி கொடுத்து வைத்தவர் அல்லவா !

    >>>>>

    ReplyDelete
  6. திருமண மண்டபத்தில் எங்கு தேடியும் உங்களைக் காணுமே ! ;(

    கும்பகோணம் டிகிரி காஃபியை பளபளப்பான பித்தளை டவரா டம்ளரில் நீங்களும் அருந்தினீர்களா ! சந்தோஷம்.

    தங்கள் திருக்கரங்கள் பட்ட அந்த டவரா டம்ளர் என்ன பாக்யம் செய்தனவோ!

    >>>>>

    ReplyDelete

  7. திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி செங்கற்பட்டு வரை இருபுறமும் நூற்றுக்கணக்கான ‘கும்பகோணம் டிகிரி காஃபி’ கடைகள் காளான்கள் போல முளைத்துள்ளன.

    டார்க் ப்ளூ கலரில் மிகப்பெரிய விளம்பர போர்டுகள் ஆங்காங்கே வைத்துள்ளனர்.

    வாடிக்கையாளர்களைச் சுண்டி இழுக்கின்றனர்.

    ’ONLY COFFEE’ என்றும் மிகப்பெரிய போர்டுகள் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

    அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ‘கும்பகோணம் டிகிரி காஃபி’ கடை வர உள்ளது, என அட்வான்ஸ் விளம்பரங்கள் வேறு தந்து கொண்டே இருக்கிறார்கள்.

    சமீபத்திய கார் பயணத்தில் இவற்றையெல்லாம் பார்த்து ரஸித்து ஆங்காங்கே அனுபவித்து பிரமித்து வியந்துபோனேன்.

    >>>>>

    ReplyDelete
  8. இறுதியாக......

    பதிவுக்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ஒருவரைவிட்டு ஒருவர் மணிக்கணக்காக, நாட்கள் கணக்காக [தகவல் ஏதும் சொல்லாமல் கொள்ளாமல்] பிரியாமல் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் பாடு எவ்வளவோ தேவலாம். ;)

    -oOo-

    ReplyDelete
  9. படங்கள் அழகு அம்மா...
    அர்த்தநாரீஸ்வரரை தத்ரூபமாக பார்ப்பது போன்ற படங்கள்...
    தகவலுக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  10. இந்த கோவிலுக்கு நான் போயிருக்கிறேன்..ஓவ்வொரு முறையும் திருச்செங்கோடு வழியாக போகும்போது இந்த கோவிலைப்பத்தி பதிவு எழுதனும் என்று நினைப்பேன்...இன்று வரைக்கும் இயலவில்லை..உங்கள் பதிவு குறையை தீர்த்தது..

    ReplyDelete
  11. அழகிய படங்களும் தகவல்களும்... அருமை!
    வாழ்த்துக்களுடன் நன்றியும்!

    ReplyDelete
  12. excellent pictures i had not seen anything like this even though we go during aadi kiruthigai for worship every year thanks for sharing madam

    ReplyDelete
  13. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் எடப்பாடியில் நடந்த நண்பர் ஒருவர் திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்று வந்தேன். வரும்போது இடையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில் சென்றேன். உங்கள் பதிவும் படங்களும் எனது பழைய நினைவுகளை அசைபோட வைத்தன. நன்றி!

    ReplyDelete
  14. சுத்தமான கோவில் வளாகமும் சிற்ப வேலைப்பாடுகளும்
    சரித்திர காலத்தை நினைவூட்டுகின்றன. வைரக்கிரீடம்,
    மரகத லிங்கம் படங்கள் அருமை. பெண்கள் அனைவரும்
    ஒருமுறையாவது சென்று தரிசித்து வர வேண்டிய தலம் .
    நீங்கள் சென்று வந்து பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி.
    நன்றி !

    ReplyDelete
  15. சில ஆண்டுகளுக்கு முன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர தரிசனம் கண் குளிரக் கண்டோம். இப்போது மீண்டும் தங்களின் வலைத்தளத்தில்!.. நிறைவான பதிவு!..

    ReplyDelete
  16. உற்சவ அர்த்தநாரீஸ்வரரின் எழில் கோலம் மனதை அள்ளுகிறது.கும்பகோணம் டிகிரி காப்பியையும் ஒரு புகைப்படம் எடுத்துப் போட்டிருக்கலாம்! ஒருவேளை காப்பி பற்றிய பதிவிற்காக வைத்திருக்கிறீர்களோ?:)))

    ReplyDelete
  17. படங்களும் அருமை! பகிர்வும் அருமை!

    ReplyDelete
  18. நன்றி அம்மா எங்கள் மாவட்ட கோவிலை மிக அருமையாக தரிசிக்க வைத்திருகிறீர்கள் ...எத்தனை முறை தரிசித்தாலும் மீண்டும் மீண்டும் மெய்மறக்க வைக்கும் செங்கோட்டு ஆலயம் ....மீண்டும் நன்றி .

    ReplyDelete
  19. padangal best karuthukkal arumai mendum parkka thudikkudhu

    ReplyDelete
  20. padangal best karuthukkal arumai mendum parkka thudikkudhu

    ReplyDelete
  21. padangal best karuthukkal arumai mendum parkka thudikkudhu

    ReplyDelete
  22. arputhamana padangal.. neril parpathu pol irunthathu

    ReplyDelete
  23. arputhamana padangalum, vilakkangalum..neril parthathai vida arumai..nandri..

    ReplyDelete
    Replies
    1. அழைத்துச்சென்று தரிசனம் செய்துவைத்தமைக்கு
      இனிய நன்றிகள்..

      Delete