அபஸ்மார குஷ்டக்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த:
பிஸாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே
பன்னீர் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் எனகிறா சுப்பிரமண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர்
பன்னீர் இலையில் மொத்தம் 12 நரம்புகள் முருக பெருமான் தனது 12 கரங்களால் விபூதிப் பிரசாதத்தை வழங்கியதால் பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும்.
பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று பெயர் பெற்றதாம் ..!
இறைவனுடைய பூஜைக்குரிய பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம்
பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று பெயர் பெற்றதாம் ..!
இறைவனுடைய பூஜைக்குரிய பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம்
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் தனி மகத்துவம் உண்டு..!
பன்னீர் இலை விபூதி பிரசாதம் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
பன்னீர் இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
திருநீற்றைப் பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது ஐஸ்வர்யமான செல்வத்தைச் சேமிப்பது போலாகும்
திருச்செந்தூரின் கடலோரத்தில் அரசாங்கம் கொண்ட மாயோன் மருகன் -
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் உள்ளத் துயரை ஒழித்தருள்வான் ..
ஒருகோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும்
கடற்செந்தில் மேவிய சேவகன்..
வள்ளிக்கு வாய்த்தவனாய் மயிலேறிய மாணிக்கமாய் ஒளிர்பவன் ..
ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம் ..!
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் உள்ளத் துயரை ஒழித்தருள்வான் ..
ஒருகோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும்
கடற்செந்தில் மேவிய சேவகன்..
வள்ளிக்கு வாய்த்தவனாய் மயிலேறிய மாணிக்கமாய் ஒளிர்பவன் ..
ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம் ..!
கோவிலில் 3 கொடி மரங்கள் உள்ளன. இரண்டு தங்க கொடி மரம் ஒன்று செப்புக்கொடி மரம், திருவிழாவுக்கு செப்பு கொடி மரத்தில் கொடியேற்றுவர்.
கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் வைத்து கொண்டுவரப்பட்டு பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேதபாராயணங்கள் பாட, வானவேடிக்கை வெடிக்க அதிகாலை செப்புக்கொடிமரத்தில் சிவாச்சாரியார் ஆவணித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றுவார்கள்..!
தொடாந்து கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், வாசனைத்திரவியங்கள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெறும்..!
வேதவிற்பன்னர்கள் வேதபாராயணமும், திருக்கோயில் ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாட ஆவணித்திருவிழா துவங்கும் ..!.
அப்பர் சுவாமிகள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்தல் நடைபெறும் ..!
தங்கத்தேரில் எழுந்தருளும் உற்சவ மூர்த்தி ஜெயந்தி நாதர் ஆவார்.
திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.
சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட
வண்ண மயில் ஏறி வருபவன் திருச்செந்தூர் முருகன்.
சுவாமி ஆறுமுகநயினார் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வருதலும் தேரோட்டமும் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளி, தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், சப்பரத்தின் பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் ..!
பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைசாத்தி எழுந்தருளி திருவீதிஉலா சுவாமிக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை கண்கொள்ளாகாட்சி..!
தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர்.
சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு.
திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார்.
அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை கூறினார். எனவே "குரு தலமாக' கருதப்படுகிறது.
மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார்.
இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால்
இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால்
"ஞானஸ்கந்த மூர்த்தி' யாகத்திகழ்கிறார்..!
வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும்
தட்சிணாமூர்த்தி, மான், மழுவுடன் காட்சி தருகிறார்.
தட்சிணாமூர்த்தி, மான், மழுவுடன் காட்சி தருகிறார்.
குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால்,
குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.
குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.
நேரில் சென்று முருகனை தரிசித்ததுபோல் மகிழ்ச்சியான படங்கள்.பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபதிவில் இணைத்திருக்கும் புகைப்படங்கள் திருச்செந்தூர் கோவிலையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டன. கோவிலைப் பற்றிய பல தகவல்களையும் இப்பதிலில் தந்திருக்கிறீர்கள். அருமையான பதிவு.
ReplyDeleteநிறங்களின் முக்கியத்துவத்தை விளக்குவதாக உள்ளது
ReplyDeleteமுருகனின் அலங்காரங்கள். பன்னீர் விபூதி , நால் வகை உற்சவர்
பற்றி அறிந்து வியப்புற்றேன்.
பகிர்விற்கு நன்றி !
வியக்கவைக்கின்றன படங்கள் அத்தனையும்!
ReplyDeleteபார்த்துப் பரவசமானேன்...
பதிவுக்கும் பகிர்விற்கும்
நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
முருகப்பெருமானின் அடிமைகளில் நானும் ஒருவன்
ReplyDeleteமண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்.தெய்வீக பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசில தினங்களுக்கு முன் தான் என் மனைவியும் மகளும் மகனும் திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்து வந்தனர். வெளிநாட்டில் இருக்கும் நான் என்று காண்பேனோ - என்று இருந்தேன். கூறும் அடியார் குறை தீர்ப்பவன் அன்றோ குமரன்!.. அந்தக் குறையினை இன்று நீக்கி விட்டான்!.. நன்றி!.. முருகன் திருவருள் முன் நின்று காக்க!..
ReplyDeleteதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்....
ReplyDeleteஅழகு..அழகு.. தாமரைக் குழந்தைகள் இன்னும் அழகு...
படங்களையும் பதிவினையும் படிக்கும்போது , திருச்செந்தூர் சென்றிருந்தாலும் அது பற்றித் தெரியாதது தெரிகிறது/ .
ReplyDeleteதிருச்செந்தூர் பற்றிய நல்லதொரு பதிவு.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.
திருச்செந்தூரின் அழகிய படங்கள்,தகவல்கள் சிறப்பு.நன்றி.
ReplyDeleteசெந்தூர் முருகன் கோயிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் ... ... ” பன்னிரு இலை” என்பது காலப்போக்கில் பன்னீர் இலை என மருவியது என்ற தகவல் எனக்கு புதியது. உங்கள் படங்களில் அடிக்கடி உலாவரும் கோயில்யானை கொஞ்சம் இடைவெளிக்குப் பின் வந்துவிட்டது. நன்றி!
ReplyDeleteமுருகா எனக்கு ஒரு நல்ல பாதையை காட்டு...
ReplyDelete