பூரணி யோக புவனேஸ்வரி கதி நீயே அம்மா
நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே மோக்ஷதாயகியே
அரணருளாகவே ஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே அம்மா
வரதாயகி சித்தகௌரி மனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா
மஹேஸ்வரி தாயே ஜெய மங்களம், சுப மங்களம்
நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே மோக்ஷதாயகியே
அரணருளாகவே ஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே அம்மா
வரதாயகி சித்தகௌரி மனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா
மஹேஸ்வரி தாயே ஜெய மங்களம், சுப மங்களம்
ஸர்வ சைதன்யரூபாம் தாம் ஆத்யாம் சக்திம் ச தீமஹி
ஹ்ரீங்கார ரூபிணீம் தேவீம் தியோ யோந: ப்ரசோதயாத்
(சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளியது)
கால வெள்ளத்தில் புவனவெளிகளை பூத்து மலரச் செய்தவள்
அன்னை புவனேஸ்வரி
ஏகாட்சரமான ஹ்ரீம் பீஜமே, சாக்த ப்ரணவம் என போற்றப்படுகிறது. அந்த ஹ்ரீம் பீஜத்தில் விரும்பி உறைபவள் புவனேஸ்வரி.
ஹ்ரீங்காரம் என்ற கூட்டை அழகுபடுத்தும் பெண் கிளியாகவும் கோடிக்கணக்கான பிரமாண்டங்களை காப்பாற்றும் திறனுடையவளாகவும் சதாசிவமயமான பீடத்தில் அமர்ந்தருள்பவளுமானவள் புவனேஸ்வரி. ஹ்ரீங்காரம் எனும் மஹா மந்திரம் வர்ணிக்கும் பெருமையுடையவள்.
புவனங்கள் எல்லாம் பூக்கக் காரணமாகிய புவனேஸ்வரி உலகங்களைப் படைப்பதற்கு முன்தான் தங்குவதற்குரிய இடம் வேண்டுமென எண்ணி மணித்வீபத்தைப் படைத்தாள்.
நவரத்தினங்களால் ஆன பதினெட்டு பிராகாரங்களைக் கொண்டு மூவுலகிலும் நிகரற்ற அழகு வாய்ந்த நகரமாகத்திகழ்கிறது ..!
அமுதமயமான கடலின் நடுவில் உள்ள மணித்வீபத்தில் அமுதமயமான கடலின் நடுவில் சங்கநிதி, பத்மநிதி இரண்டிற்கும் நடுவில் தேவி புவனேஸ்வரருடன் அமர்ந்து அருள்கிறாள்.
ஸ்ரீசக்ரதாடங்கங்களை அணிந்து தாமரை போன்ற முகத்துடன், சந்திரப் பிரபை, சூரியபிரபையைத் தலையில் சூடி அருட்காட்சியளிக்கிறாள்.
சந்தனக்குழம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்ற வாசனைத் திரவியங்கள் பூசி, சங்கு போன்ற கழுத்து, மாதுளை முத்துகள் போன்ற பற்கள், ரத்தினங்கள் இழைத்த கிரீடங்கள், கங்கையின் சுழல் போன்ற நாபிக் கமலம், மாணிக்கக் கற்களால் ஆன மோதிரம், தாமரை தளம் போன்ற முக்கண்கள், இச்சா, க்ரியா, ஞான சக்திகள் துலங்கத் திகழ்கிறாள்.
லஜ்ஜை, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, காந்தி, க்ஷமை, தயை, புத்தி, மேதை, ஸ்ம்ருதி, லக்ஷ்மி போன்ற பணிப்பெண்கள் தேவிக்கு பணிவிடை செய்கிறார்கள்.
விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா, விலாஸினி, தோக்த்ரீ, அகோரா, மங்களா, நவா ஆகிய பீட சக்திகள் தேவியை சேவிக்கிறார்கள். ரக்தா, சாமுண்டா, பத்ரா, மஹாமாயா போன்றோர் புவனேஸ்வரியின் நாற்புறங்களிலும் இசைக் கருவிகளை இசைக்கிறார்கள்.
துர்க்கா, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி ஆகிய பஞ்ச சக்திகளின் ஜனனீ.
பாசம், அங்குசம், வரதம், அபயம் இவற்றால் ஜ்வலிக்கும் கர கமலங்கள் உடையவள்.
தேவியின் கையிலுள்ள பாசம் தன்னை நாடி வரும் பக்தியுள்ளத்தை தன் பால் இழுத்து இறுகக் கட்டி விடுகிறது.
ஜீவன்களைத் தன் வயப்படுத்தும் குரோதத்தை ஈஸ்வரி தன்வயப்படுத்தி வைத்துள்ளாள்.
யானையின் மதத்தை அடக்க அதன் பாகனிடம் அங்குசம் இருப்பதைப் போல ஜீவன்கள் கர்வம், அகங்காரம் அடக்கி சாந்தப்படுத்தவே புவனேஸ்வரி தன் கரங்களில் அங்குசத்தைத் தாங்கியுள்ளாள்.
பாசம், அங்குசம், வரதம், அபயம் இவற்றால் ஜ்வலிக்கும் கர கமலங்கள் உடையவள்.
தேவியின் கையிலுள்ள பாசம் தன்னை நாடி வரும் பக்தியுள்ளத்தை தன் பால் இழுத்து இறுகக் கட்டி விடுகிறது.
ஜீவன்களைத் தன் வயப்படுத்தும் குரோதத்தை ஈஸ்வரி தன்வயப்படுத்தி வைத்துள்ளாள்.
யானையின் மதத்தை அடக்க அதன் பாகனிடம் அங்குசம் இருப்பதைப் போல ஜீவன்கள் கர்வம், அகங்காரம் அடக்கி சாந்தப்படுத்தவே புவனேஸ்வரி தன் கரங்களில் அங்குசத்தைத் தாங்கியுள்ளாள்.
ஜகஜ்ஜனனியான புவனேஸ்வரியின் சக்தியால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. சக்தியின்றி உலகம் படைக்கப்படவில்லை.
ஸ்ரீமாதாவான தேவி ஹரிஹரபிரம்மாதி தேவர்கள் முதல் பிரமாண்டத்தில் உள்ள அனைத்தையுமே படைத்துக் காத்து ரட்சித்து வருபவள். இதை லலிதா ஸஹஸ்ரநாமம் ஆப்ரஹ்மகிரீடஜனனீ என்று போற்றுகிறது.
கருணையில் கடல் வடிவானவள் என்பதை கருணார ஸாகரா எனும் நாமம் உணர்த்துகிறது.
சகல அண்டங்களில் உள்ள சக்திகளுக்குக் காரணமாகவும் ஆதார சக்தியாகவும் இருப்பவள் புவனேஸ்வரி. பரம்பொருளின் ஞான சக்தி.
அனைத்திற்கும் ஆதாரமான ஆகாசதத்துவமே அன்னையிம் திருவுருவம்.
தேவி மஹாத்மியத்தில் தேவர்கள் தேவியைத் துதிக்கும் நமோதேவ்யை என ஆரம்பிக்கும் துதியில் ‘நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ’ என ஐந்து முறை வருகிறது.
பராசக்தி பஞ்சபூதங்களிலும் உறைபவள்.
படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என ஐம்பெரும் தொழில்களையும் புரிபவள். எனவேதான் தேவர்கள் அவளை ஐந்து முறை வணங்குகிறார்கள் போலும்.
‘‘புவனேஸ்வரியை அறிந்தவர்கள், மந்திரத்தை ஜபிப்பவர்கள், திருவுருவை தியானிப்பவர்கள், தோத்திரத்தை கானம் செய்பவர்கள் போன்றோரின் வாக்கிலிருந்து மிருதுவான சொற்கள் வரும்படி செய்வாள்.
அமிர்த தாரை போலும், சரத்காலத்தில் நிலவு போலும் இனிமையாக அந்த உபாசகரின் கீர்த்தி மூன்று உலகங்களிலும் பரவும்’’என்பது ஐதீகம் ..!
அருள்மிகு ஸ்ரீ புவனேசுவரி ஐஸ்வர்யம் அருளட்டும்.
ReplyDeleteYaa devi sara bhoothEshu shanthi roopeNa samsthitha
ReplyDeleteNamasthasmai Namasthasthasmai naMasthasmai
Namo Namha.
Every syllable and every word in Devi Mahathmeeyam
springs solace in one's heart when one recites Devi Mahatmeeyam.
subbu thatha.
ஏழு மாதங்கள் முன்பு புதுக்கோட்டையில் ஓர் சிறிய இரவின் சில மணித்துளிகளில் எனக்குக் கிட்டியது, அன்னை புவனேஸ்வரியின் தரிசனம். உங்கள் பதிவின் மூலம் மீண்டும் அவர் எனக்குத் தரிசனம் தந்திருக்கிறார். இருவருக்கும் நன்றி! - கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.
ReplyDeleteஅனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி அம்மா...
ReplyDeleteஅனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி அம்மா...
ReplyDeleteஐஸ்வர்யம் அருளும் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாளுக்கு அடியேனின் வந்தனங்கள் / நமஸ்காரங்கள்.
ReplyDelete>>>>>
வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற மிக நல்ல பதிவு.
ReplyDelete>>>>>
படங்கள் அத்தனையும் அழகு.
ReplyDeleteமுதல் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
4, 10 + 12 ஆகிய வரிசைப்படங்கள் இன்று இதுவரை திறக்கப்படவில்லை.
>>>>>
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo
புவனேஷ்வரி அம்மனைப் பற்றி படங்களுடன் பகிர்வு அருமை அம்மா...
ReplyDeletethanks for sharing info about bhuvaneswari amman
ReplyDeleteஸ்ரீ புவனேஸ்வரி மாதாவின் படங்களும்அவரது மகிமைகளும் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவெள்ளிக்கிழமையன்று மனம் நிறைவாக மங்களகரமான தரிசனம்!.. நன்றிகள்!..
ReplyDeleteதங்கள் வலைப்பக்கத்திற்குள் நுழைந்தது ஆலயத்திற்குள் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது. அம்மனின் ஆசி என்றும் நமக்கு கிடைக்க தொடர்ந்து தொழுவோம். மங்களகரமான பதிவுக்கு நன்றி அம்மா.
ReplyDeleteஎனது வலைப்பக்கத்திற்கு வருகை புரிந்து கருத்திட்டு தொடர்வர்கள் பகுதியில் இணைந்தமைக்கும் நன்றிகள் கோடி. தங்களின் கருத்தூட்டம் எனது எழுத்தைக் கூர்மைப்படுத்த உதவும். தொடர்ந்து இணைந்திருப்போம், நன்றி அம்மா.
ReplyDeleteவழக்கம்போல அணைத்து அருமை.
ReplyDeleteஇப்போது எல்லாப்படங்களும் காட்சியளிக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
ReplyDeleteமொத்தம் 16 வரிசைகளில் 17 படங்கள் மட்டுமே இப்போது தெரிகின்றன.
ReplyDeleteஅதாவது 6 வது வரிசையில் மட்டும் 2 படங்கள் உள்ளன.
ஆனால் இன்னும் நான்காவது வரிசைப்படம் மட்டும் திறக்கப்படவே இல்லை.
சென்ற பின்னூட்டத்தில் எல்லாம் தெரிவதாகச் சொன்னது அவசரத்தில் தவறாகச் சொன்னதாகும்.
(ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் அருளியது)என்ற வரிகளுக்குக்கீழே உள்ள படம் மட்டும் இன்னும் திறக்காமல் உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனை துதிப்பவருக்கு மிருதுவான சொற்களை வரும்படி செய்வாள் என்று கேட்டு மகிழ்ச்சி.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அற்புதம்.
வாழ்த்துக்கள்.
ஐஸ்வர்யம் அருளும் அன்னைக்கு வணக்கங்கள்..!
ReplyDelete