கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
யானை முகத்தை உடையவரும்,
பூத கணங்களால் வணங்கப்பட்டவரும்,
விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும்,
பூத கணங்களால் வணங்கப்பட்டவரும்,
விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும்,
உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும்
ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன்
பிடியதன் உருவுமை கொள மிகு கரியது,
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே!
தஞ்சை கீழவாசலில் அமைந்துள்ள ஸ்ரீவல்லப அம்பிகா சமேத
ஸ்வேத (வெள்ளை) விநாயகர் ஆலயத்தில் ஆனைமுகனை
கல்யாணக் கோலத்தில் தரிசிக்கலாம் ...!
ஸ்வேத (வெள்ளை) விநாயகர் ஆலயத்தில் ஆனைமுகனை
கல்யாணக் கோலத்தில் தரிசிக்கலாம் ...!
விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி ஐக்கியமாகி,
அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம்.
உற்ஸவர், மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார்.
வல்லபை சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும்
தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள்.
தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள்.
அனைவரும் சிவனாரிடம் வந்து முறையிட்டனர்.
ஈசன் ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார்.
அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன்,
அண்ணனை அனுப்பி வைத்தார்.
அண்ணனை அனுப்பி வைத்தார்.
தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக்கொண்டார் கணபதி.
'மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும்' என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள்.
ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள்;
ஆவணி மாதம் 10 நாள் நடைபெறும் விழாவில், விநாயக சதுர்த்திக்கு மறுநாள் திருக்கல்யாணம். திருமணமாகாத பெண்கள் விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்குமாம்.
சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்குக் கோட்டை விநாயகர் என்றும் பெயர் உண்டு!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
பதிவு அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகல்யாண கணபதி அறியாத செய்திகளும் படங்களும் அருமை
ReplyDeleteஎங்கள் தஞ்சையின் செல்லப் பிள்ளையான வெள்ளை விநாயகரைப் பற்றிய தகவலுடன் அருமையான பதிவு!..
ReplyDeleteஸ்ரீ வல்லப கணபதி எல்லா வல்லமைகளையும்
ReplyDeleteபதிவர்களுக்கும் அனைவருக்கும் அருள்வாராக.
நல்லது.
ஒவ்வொரு பதிவுக்கும் இப்படி பொருத்தமான படங்கள் எங்கிருந்துதான் அள்ளிக்கொண்டு வருவீர்களோ! எப்பவுமே சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteசிறப்பான பதிவு.4 படங்கள் பார்க்க முடியவில்லை.
ReplyDeleteஅதில் தான் வெள்ளை கணபதி இருப்பாரோ.
மணமாகாதவர் விநாயகர் என்று பலர் கூறுவார்கள்.
இங்கு அதன் விவரம் அறிந்து மகிழ்வு.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
’கருணை தெய்வம் கல்யாண கணபதி’க்கு அடியேனின் அன்பான நமஸ்காரங்கள்.
ReplyDelete>>>>>
படங்கள் எல்லாமே அழகோ அழகு !
ReplyDeleteநம் பிள்ளையாரப்பாவை தம்பதி ஸமேதராய்க் காண்பது ஆச்சர்யமாக உள்ளது. ;)
>>>>>
4 படங்கள் இதுவரை திறக்கப்படவே இல்லை.
ReplyDeleteஅதாவது கீழிருந்து நாலாவது வரிசை + ஆறாவது வரிசைப்படங்கள் 2+2 காட்சியளிக்கவில்லை.
ஏதோ தங்கள் அருளால் கொஞ்சமேனும் திறந்து காட்டி அடியேன் தரிஸிக்கும் பாக்யம் கிடைத்தவரை சந்தோஷமே.
>>>>>
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான நல்வாழ்த்துகள்.
ஆவணி மாத சித்ரா நக்ஷத்திரம் பிறக்க ஓரிரு நாட்களே உள்ளன. உலகமே கொண்டாடப்போகும் விநாயகர் சதுர்த்தியும் வரப்போகிறது.
இனிய பிறந்த நாள் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் - என் பிள்ளையாரப்பாவுக்கு ! ;)))))
இது தங்களின் வெற்றிகரமான 1025 ஆவது பதிவு. அதற்கும் என் அன்பான வாழ்த்துகள். ;)))))
om sreem hreem kleem glowm gam ganapathaye namaha
ReplyDeletesubbu thatha
அட அட.. கணபதியே கல்யாண கணபதின்னவுடனே எத்தனை ஆனந்தமாகக் காட்சி தருகிறார்..
ReplyDeleteஅற்புதமான அழகான படங்களும் அருமையான விடயங்களும்!
அன்பு நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோதரி!
As usual this post also is having many pictures of Vinayagar. Good way to celebrate Vinayagar chadhurthy.
ReplyDeleteஅருமையான கல்யாண கணபதி .
ReplyDeleteபடத்தேர்வுகள் அருமை.
வாழ்த்துக்கள்.
விநாயகசதுர்த்தியை வரவேற்கும் சிறப்புப் பதிவு அருமை!
ReplyDeleteகல்யாண கணபதியை தரிசித்து புண்ணியம் பெற்றோம்.
ReplyDeleteகீழிருந்து ஆறாவது வரிசையில் திறக்கப்படாமல் இருந்த வெள்ளை விநாயகர் இப்போ திறந்திடுச்சூஊஊஊ. ;)
ReplyDeleteஇருப்பினும் கீழிருந்து நாலாவது வரிசையில் உள்ள இரு படங்களும் இன்னும் திறக்கவில்லையாகும். ;(
படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு. விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள் அம்மா!
ReplyDeleteபடங்களும் பகிர்வும் மிக அருமை.
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
கீழிருந்து நாலாவது வரிசை தொந்திப்பிள்ளையாரை இப்போது தான் பார்க்க முடிந்தது. ஜோரா வெண்ணெய் தடவிய வெங்கலப்பானை போல தொந்தியும் தொப்பையுமாக கஷ்கு முஷ்குன்னு இருக்கார்.
ReplyDeleteஅசல் அப்படியே இருக்கிறார் !
வெண்ணெய் பிஸ்கட் போல அப்படியே கடித்துச் சாப்பிடணும் போல ஆசையா இருக்கு.
இரண்டு பக்கமும் ஸித்தி புத்தி வேறு ! ;)