மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
ஸர்வாபாதா விநிர்முக்தோ தனதான்ய ஸுதான்விதஹ
மனுஷ்யோ மத்ப்ரஸாதேன பவிஷ்யதி நஸம்சயஹ”
உமா மகேஸ்வரர்,லக்ஷ்மிநாராயணன், என்று அன்னையின் பெயருடன்தான், ரிஷிகள் ஸ்வாமி பெயர்கள் வரும்... இன்றோசத்யவான் சாவித்திரி என்று சத்யவான் முன்பாகவும் சாவித்திரி அடுத்தாகவும் கணவனே மாதா, பிதா, பதி தெய்வம் என எல்லா வகையிலும் கணவனுக்கு முக்யத்துவம் கொடுத்து, அவன் வாழ்வே தன் வாழ்வு என நினைத்து, கணவன் வாழ்வுக்காக, கணவனை எமன் எங்கெல்லாம் இட்டுச் சென்றானோ அங்கெல்லாம் தன் தவவலிமையால் சென்று, எத்தனையோ பல வகையான வரங்கள் தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு வரனிலும் விருப்பமில்லாமல், கணவன் மீண்டும் வரவேண்டும் என ஒரே வரத்தோடு கணவனை மீட்டு வந்த காரிகை சாவித்ரி. ஆகவேதான் சத்யவான் சாவித்ரி என்று வணங்கி நோன்பாக கடைப்பிடிக்கும் உன்னத நாளாக அமைகிறது ,,,,
விதியின் பலத்தையும் மாற்றி கணவனோடு வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்யத்தை பெற்றவள் சாவித்ரி.
ஆகவே காரடையான் நோன்பின் தத்துவம் கணவனோடு எப்பொழுதும்
சுமங்கலியாக வாழவேண்டும் என்பதுதான்....
தமிழ் மாதங்களான மாசி பங்குனி மாதங்கள் கூடும் வேளையில் வரும். ‘மாங்கல்ய பலம் விரதம்’ என்று சிறப்பாக திகழ்கிறது ...
வெல்ல அடை, சிறிது வெண்ணை இலையில் வைத்து, நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, துளசிச் செடியில் ஒன்று கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள்.
“உருகாத வெண்ணையும், ஓரடையும் நான் வைத்தேன் ஒரு நாளும் என் கணவர் பிரியாத வரம் தருவாய் ” என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்வார்கள்.
தம் தம் கணவருக்காக சிரத்தையாக செய்யும் விரதமே – காரடையான் நோன்பு.
மாசியும்,பங்குனியும் சேரும் வேளையில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த விரதம் சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த விரதம் மூலம் கணவன் & மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்ய, ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது ஐதீகம்.
இந்த விரதம் வடநாட்டிலும் கர்வா சவுத் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நோன்பை அறிந்தேன்.
ReplyDeleteதுவக்கத்தில் இருக்கும் அம்பாளின் படம் மனதை அடிமை கொண்டது. எத்தனை தெய்வீகமான அழகிய படம்! காரடையான் நோன்பு பற்றிய உங்களி்ன் விளக்கம் நன்று!
ReplyDeleteகாரடையான் நோன்பு பற்றி இன்று அளித்துள்ள கூடுதல் தகவல்களும், ஏராளமான படங்களும் மிகச்சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
ReplyDeleteபடங்கள் எல்லாமே மிக அழகு.
ReplyDeleteஎனக்கு உப்புக்கொழுக்கட்டை மிக பிடிக்கும் ஆனால் எங்கள் வீட்டில் வெல்ல கொழுக்கட்டை மட்டும்தான்.உப்பு செய்யும் வழக்கம் இல்லை.
அருமை அம்மா...
ReplyDeleteஇதுவரை இந்த நோன்பு பற்றி தெரியாது இருந்தேன்..
ReplyDeleteஅருமையான விளக்கங்களுடன்
அழகிய படங்கள்....
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே என்று உங்கள் வலைப்பூ சொல்கிறது.
ReplyDeleteசொல்ல வார்த்தகள் இல்லை சுடர்மிகு சுந்தரதேவி அன்னை கௌரியின் அழகான படங்கள். அருமையான பதிவு!
அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்...
பகிர்வுக்கு மிக்க நன்றி!
அருமையான தகவல் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள
ReplyDeleteவேண்டிய தகவல்களில் இதுவும் ஒன்று .அழகிய படங்களுடன்
பகிரப்பட்ட சிறப்பான பகிர்வுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்
சகோதரி .
உங்கள் தளத்திற்கு வந்தாலே என்னை பாட வைத்துவிடுகிறீர்கள்.
ReplyDeleteகௌரி நோம்பு இந்த காரடையான் நோம்பு சிறப்பாக பதிவு ஆக அமைந்து உள்ளது.
எல்லோரும் படிக்கவேண்டும். அன்னை காமாட்சி அம்மனின் அருள் உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எ ந் நாளும் கிட்ட எனது பிரார்த்தனைகள்.
சுப்பு தாத்தா.
காரடையான் நோன்பு பற்றிய படமும் தகவல்களும் அருமை.
ReplyDeleteநன்றி பகிர்விற்கு.
கொழுக்கட்டைகளுடன் படையல் சிறப்பு. நோன்பு பற்றிய தகவல்களும் மங்களரூபினி பாடலும் பாட வைத்தன.
ReplyDeleteஅருமையான படங்களுடன் அழகாக காரடையான் நோன்பு குறித்த தகவல்களை தொகுத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநல்ல பகிர்வு;வெல்ல அடை வெண்ணையுடன் சாப்பீட்டது போல் இருந்தது!
ReplyDeleteஅருமை... வெல்ல அடை - உப்படை எங்கே!
ReplyDeleteஇங்கு கர்நாடகத்தில் ஆவணி முதல் அமாவாசையன்று பீமன அமாவாசை பூஜை என்று கணவனின் நலத்திற்காக செய்கிறார்கள்.
ReplyDeleteபல தகவல்களை அறிந்து கொண்டேன்.
நன்றி!
நோன்பு பற்றியதகவல்கள் அறிந்தேன். அழகிய அம்மனின் படம். பார்க்க பரவசம் ஏற்படுகிறது.அம்மனின் அருள் தாங்களுக்கு கிடைக்க என் பிரார்த்தைனைகள்.
ReplyDeleteஅ
ReplyDelete