



பாங்கான பங்குனி உத்திரத்திருநாள் பல திருக்கோவில்களிலும் உன்னதமான தேர் திருவிழாக்கள் நிகழும் திருநாள் ..
வருடம் முழுவதும் பக்தர்கள் இறையருள் நாடி திருக்கோவில்களுக்குச் சென்று தொழுதற்கு பரம் தயாள மூர்த்தங்களான பரம்பொருள் மனம் உருகி தன் பக்தர்களை நாடி தேரேறி வந்து அருள் த்ரும்
உன்னத திருநாள் ...
பல திருக்கோவில்களில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருநாள் தேரோட்டங்களின் தொகுப்பு ...

நெய்வேலி நகரின் மிகப் பழமையான கோயில் வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியன் கோயிலில் மூலவரான முருகக் கடவுள் வில்லுடன் காட்சியளிப்பார்.பங்குனி உத்திரத் திருவிழா ...

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில், மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய கோவிலில் பிரம்மோத்சவ விழா
தேரோட்டம்

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடு அமைய பெற்ற ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மடாலயத்தில் பங்குனி உத்திர திருவிழா

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் தேரோட்டம்

பழனி முருகன் கோவிலில் தேரோட்டம்





திருமழிசையில் உள்ள குளிர்ந்தநாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்தது திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட 48 கிலோ வெள்ளியிலான 5 அடி உயரத்திலான வெள்ளி சிங்காரச் செடி விளக்கு.

முருகப்பெருமான் திருமணக்கோலத்தில் வள்ளி–தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மயிலத்தில் மயில் வடிவ மலையில் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா என பக்தி கோஷத்துடன் வழிநெடுகிலும் கூடியிருந்த பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த தானிய வகைகள் மற்றும் நாணயங்களை தேரின் மீது வீசியும், கற்பூரம் ஏற்றியும் முருகனை வழிபட்டனர்.
அலகு குத்தியும், பால், பன்னீர், புஷ்ப காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தேரோட்டம்.....
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோயிலில் தேர்த்திருவிழா



அறுபத்து மூவர் திருவிழா
Triplicane Car Festiva

விழுப்புரம் அடுத்துள்ள திருவாமாத்தூரில் ஸ்ரீமுத்தாம்பிகை உடனுறை ஸ்ரீஅபிராமேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்..

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி உத்திரத்தையொட்டி 1008 காவடிகளை சுமந்து வந்த பக்தர்கள்.

கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு மாசி மகம் அன்று குதிரைக்கு வாகனங்களில் காகிதப் பூ மாலைகளை கொண்டு வந்து 35 அடி உயர குதிரை சிலைக்கு அணிவித்தனர்.




அத்தனையும் அருமை
ReplyDelete”பார் போற்றும் பங்குனித் திருவிழாக்கள்”
ReplyDeleteஎன்ற தங்களின் இந்த இன்றைய பதிவு வெகு அருமையாக, கண்களைக்கவர்வதாக உள்ளது..
எப்படித்தான் இவ்வளவு அழகழகான மிகச்சிறந்த RICH ஆன பட்ங்களை உங்களால் தொகுத்துக்கொடுத்து அசத்த முடிகிறதோ!!!!!!
தினமும், மிகக்கடுமையாகத்தான் உழைக்கிறீர்கள் !
அதுவும் எங்களுக்காக மட்டுமே !!
ஒவ்வொன்றாய் பார்த்து படித்து ரஸித்துவிட்டு மீண்டும் தாமதமாக வருவேன்.
>>>>> இப்போது இடைவேளை >>>>>>
படங்களும் பகிர்வும் வழமை போல சிறப்பாக இருக்கு. நன்றி
ReplyDeleteapapa arumai mika mika arumai.
ReplyDeleteI cannot go all the places, But sitting at home viewed all.
Practically shed tears on seeing Patteswarar and Pachainayaki.
Thanks for the post.
viji
மனம் நிறைந்தது
ReplyDeleteசகோதரி... பக்திப்பரவசம் அதி உச்சநிலயில் இருக்கிறது உங்கள் வலைப்பூ இன்று.
ReplyDeleteஅத்தனை படங்களும் அருமையாக இருக்கிறது. பதிவும் சிறப்பு.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
தங்களின் முதல் படம் ஏனோ இதுவரை திறக்க மறுக்கிறது.
ReplyDeleteமுதல் படம் பொதுவாக மிகச்சிறப்பானதாக இருக்கும் என்பதால், தரிஸனம் கிடைக்கவில்லையே என சற்றே வருத்தமாக உள்ளது.
அதனால் பரவாயில்லை. நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. இதுவும் அது போலவே. எனக்குத்தான் அதற்கான பிராப்தம் இல்லை. பரவாயில்லை.
எதையும் அதனதன் போக்கிலேயே, விட்டுப்பிடிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் என் மனதை நான் பக்குவப்படுத்திக்கொண்டு விட்டேன்.
>>>>>
இரண்டாவது படம் முதல் கடைசிவரை அனைத்தும் மிக அழகாகவே உள்ளன. எதை வர்ணிப்பது எதை விடுவது?
ReplyDeleteகடைசிபடத்தில் காட்டப்பட்டுள்ள முருகன் [முருகன் மீது அவ்வளவாக நாட்டம் இல்லாத என்னையே] என்னையே மிகவும் கவர்ந்து விட்டது.
Triplicane Car Festiva என்ற எழுத்துக்களுக்குக்கீழேயுள்ள படத்தில் எத்தனை எத்தனை ஆசாமிகள், பல மொட்டைத்தலையர்கள், கழுத்தில் மாலையுடன், நெற்றியில் நாமத்துடன் ஜோர் ஜோர் சூப்பர் கவரேஜ் ;)))))
>>>>>>>
வீட்டில் அமர்ந்தவாறே தங்கள் பதிவின் மூலம் நான் இன்று சென்று வந்துள்ள புண்ணிய் ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன.
ReplyDelete1] ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் + ஸ்ரீ ரெங்கமன்னார்.
2] நெய்வேலி வேலுடையன்பட்டு சிவசுப்ரமணியர்
3] காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்ப்ள் ஸமேத ஸ்ரீ கைலாச நாதர் [மாங்கனித்திருவிழா]
4] சிதம்பரம் ஆறுபடைவீடு - ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸமேத ஸ்ரீ ஷண்முகர்.
5] பழனி முருகன்
>>>>>
6] திருமழிசை குளிர்ந்த நாயகி ஸமேத ஒத்தாண்டேஸ்வரர்
ReplyDelete[இந்த அம்பாள் பெயரைக்கேட்கும் போதே என் மனம் குளிர்கிறது. ஏனோ உங்கள் ஞாபகமும் எனக்கு வருகிறது. ;))))) ]
7] திருத்தணி திருவாலங்காடு வடாரண்யேஸ்வர ஸ்வாமி
8] சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் வெள்ளி சிங்காரச்செடி விளக்கு
9] மயிலம் மயில்வடிவ மலை கந்தன் காவடிகள்.
10] சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் + ஸ்ரீ கற்பகாம்பிகா அம்பாள்
>>>>>
11] அறுபத்து மூவர் திருவிழா
ReplyDelete12] விழுப்புரம் திருவாமாத்தூர் ஸ்ரீ முத்தாம்பிகை ஸமேத ஸ்ரீ அபிராமேஸ்வரர்
13] உளுந்தூர்ப்பேட்டை சுப்ரமணியஸ்வாமி
14] கீரமங்கலம் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரை பெருங்காரையடிமீண்ட அய்யனார் குதிரை வாகனம்
15] சிவ சிவா!! எத்தனை எத்தனை தகவல்கள், படங்கள், அத்தனையும் அருமையோ அருமையம்மா........ அசாத்ய உழைப்பு உழைத்துள்ளீர்களே! ;)))))
>>>>>>
எலிமேல் அமர்ந்து குதியாட்டம் போட்டபடி, மயிலில் பறக்கு முருகனுக்குப் போட்டியாக உலகைச்சுற்றிவர எத்தனிக்கும் பிள்ளையார் சிரிப்பாக உள்ளது.
ReplyDeleteமிக நல்ல பதிவுக்கு என் அன்பான மனமார்ந்த பாராட்டுக்கள்.
நீங்கள் எப்போதும் க்ஷேமமாக இருக்க என் இனிமையான நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooooo
பரிபூர்ண தரிசனம் கிடைத்தது...
ReplyDeleteஇவ்வளவு தகவல்கள், படங்கள் ... நேற்று உங்கள் தளத்தைப் பற்றி வீட்டில் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம்...
நன்றி அம்மா...
ReplyDeleteமுதற் படம் எனக்கும் திறக்கவில்லை.
உத்தரத் தேர்...
அதே போல சகோதரர் வை கோ இலக்கம் போட்டுக் குறிப்பிட்டபடி அனைத்தம் மிக அழகு சிறப்பு!
தகவல்களிற்கு மிக்க நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
புகைப்படங்களும் தகவல்களும் அருமை!
ReplyDelete
ReplyDeleteஊர் கூடி தேர் இழுத்தல் என்பார்கள். தேர்த்திருவிழா ஊர் மக்களின் ஒற்றுமையைப் பறை சாற்றும். அருமையான படங்கள். நிறைவு தரும் பதிவு. வாழ்த்துக்கள்.
தேர்த் திருவிழா பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்று இங்கு பார்க்க முடிந்தது. நன்றிங்க.
ReplyDeleteஎத்தனை தேரோட்டம்?
ReplyDeleteஅத்தனையும் படங்களுடன் பகிர்ந்த தங்களுக்கு நன்றி
அத்தனைப் படங்களும், தகவல்களும் அருமையாக இருக்கின்றது.
ReplyDeleteவள்ளுவர் வாசுகி கோவில் எங்கு இருக்கிறது. இந்த தகவல் புதிது.
பங்குனி உற்சவத் திருவிழாக்கள் காண்பது சிறப்பு.
ReplyDeleteபடங்கள் சிலிர்க்க வைக்கின்றன.
அப்பப்பா , எத்தனை தேரோட்டங்கள் !
ReplyDeleteபார்க்க அழகு. அருமை !