Saturday, March 16, 2013

அழகின் சிரிப்பு .. அனுமன் ஆர்கிட் மலர்கள்..





Red Orchid Lovely Flower














The Flying Duck Orchid



சிங்கப்பூர் தேசிய தாவரவியல் பூங்காவில் ஆர்கிட் தோட்டம் மனம் கவரும் வகையில் அமைந்த  ஒரு தனி உலகம்.  சிரிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் .... 

 வெப்பப் பிரதேசங்களில் காடுகளில் அபரிதமாய்ப் பூக்கும் இந்த மலர்களை இப்போது greenhouse எனப்படும் கூண்டுப் பண்ணைகளில் 
மலர வைத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறார்கள். 

ஆயிரக்கணக்கான வகைகள், வண்ணங்கள், கோலங்கள் கொண்ட 
ஆர்கிட் மலர் வளர்ப்பது தாய்லாந்தில் குடிசைத் தொழிலாகும்.  

இந்தியாவில் அசாம், ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற 
மாநிலங்களில் அதிக அளவில் ஆர்கிட் பூ வளர்க்கப்படுகிறது. 

மலேசிய நாட்டின் தேசிய மலர் ஆர்கிட்’ மலர் ஆகும் ..

பார்க்கவே ரம்யமான ஆர்க்கிட் மலர்கள் இயற்கையின் 
நுணுக்கமான படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டு.




கூடலூர் ஜீன்பூல் தாவரவியல் மையத்தில் மலர்ந்துள்ள,
“டான்சிங் டால்’’ ஆர்கிட் மலர்,  பார்வைக்கு இதம் தந்து
பரவசப்படுத்துகிறது.
“டான்சிங் டால்’’ மலர், . நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதால்
அலங்காரத்துக்கு, பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன..



தாவரங்களில் ‘ஆர்கிட்’தான் மிகப்பெரிய குடும்பம். 

இந்தக் குடும்பத்தில் சுமார் 26,000 இனங்கள் இருக்கின்றன. 

வற்றில் பெரும்பாலானவை கண்கவர் வண்ணங்களும், விதவிதமான உருவங்களும் கொண்ட பூக்களைப் பெற்றிருக்கின்றன. 

உலகம் முழுவதும் ஆர்கிட் இனங்கள் பரவி, அழகு சேர்க்கின்றன.
நாம் பார்க்கும் மந்தாரை மலர் கூட, ஆர்கிட் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். இவற்றில் ஒன்று தான் மங்கி ஆர்கிட்
ஹனுமனுக்கு நாம் பிரம்மாண்டமான ஆலயங்களை எழுப்பி ஆராதிக்கிறோம்.

 இயற்கை, ஹனுமனின் முகத்தோற்றம் கொண்ட 
ஒரு பூவை சிருஷ்டித்து வியப்பளிக்கிறது ...

மங்கி ஆர்கிட்கள், உருவத்தில் மிகவும் வித்தியாசமாக 
பூக்களைப் பார்த்தால் குரங்கின் முகம்போல் தெரிகிறது. 

லூயர் என்ற தாவரவியலாளர் ‘மங்கி ஆர்கிட்’ என்ற பெயரைச் சூட்டினார். 

மங்கி ஆர்கிட்களில் மட்டும் சுமார் 120 வகைகள் இருக்கின்றன.

  எந்த விஷயத்தையும்  தெய்வீகத்தோடு  பொருத்திப் பார்க்கும் 
இயல்பு இருப்பதால், இதை ‘ஹனுமன் ஆர்கிட்’ என்று வைத்து, 
தெய்விகத் தன்மையையும் அளித்து விட்டோம்.

பெரு, ஈக்வடார் போன்ற தென் அமெரிக்க நாடுகளில் உள்ள 
மழைக் காடுகளில்  ஹனுமன் ஆர்கிட்கள் காணப்படுகின்றன. 
The Monkey Orchid Dracula Simia
இளஞ்சிவப்பு, ஆழ்ந்த சிவப்பு, மஞ்சள் என்று வண்ணங்களால் வேறுபட்டாலும், உருவத்தில்  வேறுபடாமல் ஹனுமன் ஆர்க்கிட மலர்கள் அனுமனையே பிரதிபலிப்பது ஆச்சரியமளிக்கிறது .....
















20 comments:

  1. இயற்கையின் அற்புதமே அற்புதம்.

    ReplyDelete
  2. ”மலர்களிலே அவன் நிறம் கண்டேன், திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்” என்பது போல் இன்று சனிக்கிழமை அனுமன் முகம் தெரியும் ஆர்க்கிட் மலர்கள் பகிர்வு அருமை.
    தெய்வீகத்தை எங்கும் பொருத்திப்பார்க்கும் நிலை வந்து விட்டால் வாழ்வில் எல்லாமே தெய்வீகம் தான் நீங்கள் சொல்வது போல்.
    அனுமன் ஆர்க்கிட் படங்கள் அழகு தெய்வீகம்.

    ReplyDelete
  3. Aha...
    What a pretty creation by GOD.
    I just wants to hold the flower, touch it.....
    I know I cannot.
    You made me see......
    Thankyou dear for the post and pictures. I enjoyed it.
    viji

    ReplyDelete
  4. சகோ அறிய வகை பூக்களை பகிர்ந்ததற்கு நன்றி அதுவும் அந்த வைலட் நிற பூ மிகவும் கவர்ந்தது என்னை அழகு அழகு

    ReplyDelete
  5. தங்களின் வெற்றிகரமான இந்த 850 ஆவது பதிவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


    >>>>> நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் வருவேன் >>>>>

    ReplyDelete
  6. ஆர்கிட் மலர்கள் மனதை கொள்ளைக் கொண்டன!

    ReplyDelete
  7. அடடா... அற்புதம். அனைத்திலும் தெய்வீகம்...

    ஆர்கிட் பூஞ்செடிகள் என் வீட்டில் கிட்டத்தட்ட 15 செடிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்கள், வடிவங்கள். கடும் குளிரினால் இம்முறை பூக்கள் அரிதாகவே இருக்கின்றது.
    சில நாட்கள் போகட்டும் இந்த அனுமான் வடிவப்பூகள் என்னிடமும் இருக்கிறதா பார்த்துச்சொல்கிறேன்... :)

    நல்ல அழகிய பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

  8. அழகின் சிரிப்பு ... அனுமன் ஆர்கிட் மலர்கள் ... என்ற தலைப்புக்கு ஓர் சபாஷ்.

    மிகச்சிறப்பான படங்களாகக் கொடுத்துள்ளீர்கள்.

    அருமையான மிக அழகான பல புதிய தகவல்களும் கொடுத்துள்ளீர்கள்.

    >>>>>>

    ReplyDelete
  9. //மலேசிய நாட்டின் தேசிய மலர் ஆர்கிட்’ மலர் ஆகும் ..//

    சந்தோஷமளிக்கும் செய்தியாக உள்ளது.

    //பார்க்கவே ரம்யமான ஆர்க்கிட் மலர்கள் இயற்கையின்
    நுணுக்கமான படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டு.//

    படைப்பாற்றல் தங்களின் இந்த படைப்பிலும் நன்கு வெளிப்பட்டுள்ளது, மிகச்சிறப்பாக மிகவும் ரம்யமாகவே உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  10. //இயற்கை, ஹனுமனின் முகத்தோற்றம் கொண்ட ஒரு பூவை சிருஷ்டித்து வியப்பளிக்கிறது ...//

    தகவலும் தோற்றமும் மிகுந்த வியப்பளிப்பதாகவே உள்ளது.

    //லூயர் என்ற தாவரவியலாளர் ‘மங்கி ஆர்கிட்’ என்ற பெயரைச் சூட்டினார்.

    பொருத்தமான பெயராகவே கொடுத்துள்ளனர். வாழ்க!

    //மங்கி ஆர்கிட்களில் மட்டும் சுமார் 120 வகைகள் இருக்கின்றன.//

    அடேங்கப்பா! ஆனால் மங்கிகளிலும் ”மந்திக்குரங்கு, குட்டிக்குரங்கு, கருங்குரங்கு, செங்குரங்கு என இதுபோல பல ரகங்கள் உள்ளன தானே! ;)))))

    >>>>>>

    ReplyDelete
  11. //எந்த விஷயத்தையும் தெய்வீகத்தோடு பொருத்திப் பார்க்கும் இயல்பு இருப்பதால், இதை ‘ஹனுமன் ஆர்கிட்’ என்று வைத்து, தெய்விகத் தன்மையையும் அளித்து விட்டோம்.//

    இதில் தான் உங்களின் தனித்தன்மையும், புத்திசாலித்தனமும் எங்களால் நன்றாகவே உணர முடிகிறது.

    எங்களின் பேரன்புக்குரிய தெய்வீகப்பதிவர் நீடூழி வாழ்க ! ;)))))

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    oooooo.

    ReplyDelete
  12. கடைசியில் காட்டப்பட்டுள்ள படம் [டிசைன்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    பதிவுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட, அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். ;)

    -oOo-

    ReplyDelete
  13. அழகான நந்தவனத்திற்குள் நுழைந்தது போலிருந்தது.

    ReplyDelete
  14. அனுமன் ஆர்கிட் பூக்கள் வியப்பை தந்தது! இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்று போல அழகான படங்களுடன் அழகிய பதிவு! நன்றி!

    ReplyDelete
  15. இயற்கையின் அற்புதங்களை என்னவென்று சொல்ல?
    ஒவ்வொரு புகைப்படமும் கொள்ளை அழகு!

    ReplyDelete
  16. இவ்வளவு அழகான ஆர்க்கிட் மலர்களை நான் பார்த்த்ததில்லை!!
    அதுவும் அனுமனைத் தாங்கி இந்த மலர்கள் யோகம் பெற்றிருக்கின்றன.

    தேடிச் சென்று படம் பிடித்துப் போட்டு இருக்கிறீர்கள். மிகவும் நன்றி.
    திரு வை.கோபலகிருஷ்ணன் சொல்லி இராவிட்டால் எனக்குத் தெரிந்திருக்காது.

    மிகவும் நன்றிமா. ஒரு அரிய பக்தி விருந்து கிடைத்தது. கடவுளின் படைப்பு மகிமையை என்னவென்று சொல்வது.

    ReplyDelete
  17. ஹைய்யோ!!!!! ஒவ்வொரு பூவும் ஒரு அழகு!!!

    அதிலும் ஹனுமன்................ சூப்பர்!

    இங்கே நம்மூரில் என் தோழியின் சீனத்தோழி ஒரு ஆர்கிட்ஸ் தோட்டம் வச்சு பூ வியாபாரம் செய்யறாங்க. ஏற்றுமதியும் உண்டு. உள்ளூர் காலநிலை குளிர் என்பதால் இதுக்குத் தனியா நிறைய ஏற்பாடுகள். இந்த பெரிய ஷெட்க்கு மட்டும் ரெண்டு மில்லியன் டாலர் செலவு. வகைவகையா கண்ணு நிறைஞ்ச காட்சிகள் அங்கே!

    அங்கே போவோம் என்று தெரியாததால் கேமெரா கொண்டு போகலை. நொந்து போயிட்டேன்னு தனியாச் சொல்ல வேணாம்தானே:-))))

    ReplyDelete
  18. திருமதி வல்லிசிம்ஹன் மேடம்,

    என் அழைப்பினை ஏற்று இங்கு வருகை தந்து சிறப்பித்துள்ளதற்கு நன்றிகள்.

    ஒரே தலைப்பில், ஒரே நாளில், நீங்கள் இருவரும் ஆர்கிட் மலரைப்பற்றி எழுதியிருந்தது தான் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதனால் மட்டுமே தங்களை நான் இங்கு அழைத்திருந்தேன்.

    ReplyDelete