










ஆயிரம் ரூபாய் காசில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
1000 Rupees Coin Denomination on
Brihadeeswarar Temple - Reverse


1000 Rupees Coin Denomination on
Brihadeeswarar Temple - Front





தமிழரின் பெருமை அடங்கியுள்ள ஆயிரம் ரூபாய் காசுகள்
சில சிறப்பு நிகழ்வுகளுக்காக வெளியிடப்படுகின்றன..
ஆயிரம் ரூபாய் காசு தஞ்சை பெரியகோயிலான பிரகதீஸ்வரர் ஆலயத்தின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு நினைவாக சென்ற ஆண்டு புக்கிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு மே மாதம் வாக்கில் வெளியிடப்படுகிறது.
ஆயிரம் ரூபாய் காசு 35கிராம் எடை கொண்டதாகவும் 44 மிமி விட்டம் உடையதாகவும் ஆன வட்ட காசு ஆகும்,
. 80% வெள்ளி மற்றும் 20% தாமிரம் கலந்து உருவாக்கப்பட்டது.
இதே போன்று ஒரு 5 ரூபாய் காசும் வெளியிடப்படுகிறது.
1000 மற்றும் 5 ரூபாய் காசின் விலை ரூபாய் 4775,
வெளிநாட்டுக்கு அனுப்ப $120 ஆகும்.
இந்த காசு பொதுவாக புழக்கத்தில் கிடைக்காது
புக்கிங் செய்து தான் வாங்க வேண்டும்,
ஆனால் இதற்கான புக்கிங்க் தேதி சென்ற ஆண்டு 31.08.2012 அன்றே முடிந்துவிட்டது.
இம்மாதிரி சிறப்பு காசுகள் பற்றிய தகவல்களை இந்த தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறியலாம்
http://www.mumbaimint.in/
காசேதான் கடவுளப்பா. அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா?




கட்டடக்கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும், இராச ராச சோழ மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் !இன்றளவும் விளங்கி வருகிறது.தஞ்சைப் பெரிய கோவில்
பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைத்து உள்ளத்தை கொள்ளைகொள்கிறது ..
சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு
நெறிப்படுத்தப்படது..
மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெரும் கோவில்.தஞ்சைப் பெரிய கோவில்

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவிலாக இருந்தும் உலக அதிசயங்களில் இடம்பெறாதது சிந்திக்கத்தக்கது ....

ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 68 எணிக்கை கொண்டு 6 அடி உயரத்திற்கு மாலையாக கோர்த்து அணிவித்த அதிர்ஷ்ட்ட விநாயகர் -செங்கோட்டை

கைய நீட்டினா காசு மழை கொட்டனும்
பூமி வட்டமே காசும் வட்டமே நாடே சுத்துதே நாகரீகம் கத்துதே















- 1. free your heart from hatred
- 2. free your mind from worries
- 3. live simply
- 4. give more
- 5. expect less
- And of course remember to eat ice cream
கைய நீட்டினா காசு மழை கொட்டனும்
பூமி வட்டம காசு வட்டம
நாடே சுத்துதே நாகரீகம் கத்துதே
பூமி வட்டம காசு வட்டம
நாடே சுத்துதே நாகரீகம் கத்துதே



GOOD MORNING !
ReplyDeleteHAVE A VERY NICE DAY !!
>>> இடைவேளை >>>
வெளியிடப்ப்ட உள்ள ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் புதிய நாணயங்கள் பற்றிய அருமையான தகவல்கள்.
ReplyDeleteதமிழ்நாட்டின் தஞ்சை பெரியகோயிலின் கட்டடக்கலையின் வயதான ஆயிரம் ஆண்டை ஒட்டி இவை வெளியிடப்படுவது, நமக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் பெருமை தரும் விஷயமே.
சுழலும் நாணயங்களும், மற்ற அனைத்துப்படங்களும், விரிவான தகவல்களும் அருமையோ அருமை தான்.
ReplyDelete>>>>>
4775 - 1005 = 3770 பிரீமியம் போலிருக்கு.
ReplyDeleteஅதுவும் அலாட்மெண்ட் ஓவர்.
வேடிக்கையாகத்தான் உள்ளது.
செகண்டரி மார்க்கெட்டில் நல்ல விலைக்குக் கிடைக்கலாம். ரூ. 50000 கூடச் சொல்லலாம்.
>>>>>
1835 இல் EAST INDIA COMPANY யால் வெளியிடப்பட்ட அரை அணா காசு என்னிடம் இன்றும் பொக்கிஷமாக உள்ளது.
ReplyDeleteநீங்கள் இந்த ஆயிரம் ரூபாய்க்கு சொல்லும் எடையை விட அதிகம். விட்டமும் அதிகம். முழுவதும் தாமிரத்தால் செய்யப்பட்ட காசு.
IT WAS JUST EQUAL TO 3.125 PAISE OF TODAY.;)))))
>>>>>>
விறுவிறுப்பான சுவையான செய்திகளுடன் இன்றைய பதிவு நல்லாவே இருக்கு.
ReplyDeleteசெங்கோட்டை அதிர்ஷ்ட விநாயகர், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஐந்து விஷயங்கள், நடுவே ஓர் கிளி, கோபுரங்கள், பல்வேறு காசுகள், பாட்டு, இன்னும் ஏதேதோ என்று ஒரேயடியாக அமர்க்களப் ப டு த் தி ;) உள்ளீர்கள், வழக்கம் போல.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ஆஹா!!!. ஆயிரம் ரூபாய் காசுகளைப் பற்றிய அற்புதத் தகவல்கள். எத்தனை அழகாகத் தந்திருக்கிறீர்கள். படங்களும் ஒன்றையொன்று மிஞ்சும் அழகு. கட்டுரையின் சிறப்பே, 'பணத்தோடு குணமும் பெரிது' என்பதை உணர்த்தும் விதமாக, 5 Rules to live a happier life ம் சேர்த்துக் கொடுத்தது. அற்புதம்!!!
ReplyDeleteபல தகவல்களை கொண்ட மிக சிறப்பான பகிர்வு
ReplyDelete
ReplyDeleteவணக்கம்
தஞ்சைப் பெருங்கோயில் தண்டமிழின் சீருரைக்கும்!
நெஞ்சைக் கலைகள் நிறைந்தாளும்! - நஞ்சை
விளைந்தாடும் நன்னாடு! வெல்லுதமிழ் நாடு!
மலா்ந்தாடும் வண்டமிழ் மாண்பு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தஞ்சை கோவில் மற்றும் புது நினைவு ரூ 1000 நாணயங்கள் பற்றிய அறிமுக விளக்கச்செய்தி
ReplyDeleteஇப்பொழுது தான் அறிகிறேன்.
தஞ்சையில் 1962 முதல் 1994 வரை ஒரு 32 வருட காலம் இருந்திருக்கிறேன். இன்னமும் எங்கள் வீடு
அங்கு தான் இருக்கிறது. தஞ்சை கோவிலுக்கு மிக அருகின்.
எனது உயிரனைய நண்பர்கள் பலர் அங்குதான் இருக்கின்றனர்.
B Positive என்று ஐந்து விரல்களைக் காட்டும் செய்தி அழகு.
ஓ !! அப்படியா !!
நான்
ஓ பாஸிடிவ்.
சுப்பு தாத்தா.
இன்று தளம் செல்வச் செழிப்போடு இருந்தது...
ReplyDeleteAha, seeing this much coins................
ReplyDeleteA news for me the 1000 Rs. coin......
You are touching all the cornors of the world dear. Nice post.
viji
தமிழருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் இவை. படங்கள் அருமை.
ReplyDeleteஎனக்கு தெரியாத் விஷயத்தை அறிய வைத்தற்கு நன்றி 1000 ரூபாய் பற்றி லிங்க் கொடுத்தற்கும் நன்றி
ReplyDeleteசகோதரி எங்கதான் இப்படியெல்லாம் படத்தை கண்டு பிடிக்கரீங்க எல்லாமே சூப்பர் கோவில் படங்கள் அருமை ரசித்தேன்
ஞாயிற்றுக்கிழமை.. அப்பாடா நிம்மதியா எந்தக்கவலையுமில்லாம கொஞ்சம் தூங்கி எழுந்திருப்போம்னு தூங்கி எழுந்துவந்து இங்கின பார்த்தா காசு காசு காசுன்னு மறுபடி வேதாளத்தை முருங்கையில ஏத்திவிடுறீங்களே...:)
ReplyDeleteஅருமையா இருந்திச்சு உங்க பதிவு. ஆமா அந்த 1000 ரூபா கொயின் நீங்க வாங்கிட்டீங்களா...;)
வாழ்த்துக்கள் சகோதரி!
பகிர்தலுக்கும் மிக்க நன்றி!
தஞ்சை டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் என்கிற முறையில் தஞ்சை பெரியக் கோயில் ஆயிரம் ரூபாய் காசில் இடம்பெறுவது சந்தோசமான செய்தி.நல்ல பகிர்வு மேடம்.
ReplyDeleteதகவல்களும் படங்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete
ReplyDeleteஅறியாத தகவல்கள் அருமை.! வாழ்த்துக்கள். .நன்றி.
புதிய தகவல், காசு பாடல் அருமை.
ReplyDeleteகையை நீட்டினா காசு மழை கொட்டனும்.
ஆயிரம் ருபாய் காசுகளைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteதஞ்சை பெரிய கோவிலைப் பற்றிய விஷயங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யம்
படங்கள் அனைத்தும் மிக அருமை. நாணயங்கள் பற்றிய தகவல் சிறப்பு.
ReplyDeleteஅடடா.. முடிஞ்சு போச்சா!
ReplyDeleteice cream புன்னகையை வரவழைத்தது.
வைகோ சார்... அடுத்த தடவை வரப்ப கண்ணால பாத்துடறேன்.
Mr. அப்பாதுரை Sir,
ReplyDeleteஎன் பொக்கிஷத்தொடரிலேயே அந்த 1835 இல் வெளியிடப்பட்ட அரை அணாவும் வருகிறது. அதிலேயே கூட நீங்கள் இப்போதைக்குக் கண்ணால் பார்த்து விடலாம் ;)))))
சிறப்பான தகவல்.
ReplyDeleteதஞ்சை பெரிய கோயில் ஆயிரமாம் ஆண்டை நினைவு கொண்டு வெளியிடப்பட இருக்கும் நாணயங்கள் உங்கள் பகிர்வின் மூலம் காணக்கிடைத்தது மகிழ்ச்சி.
ReplyDeleteநீங்க சொன்னபடி ஏன் தஞ்சைக்கோவில் உலக அதிசயத்தில் வரவில்லை
ReplyDeleteஎன நானும் நினைத்திருக்கிறேன். அக்கோவிலை 3 தரம் மிக நன்றாக ரசித்துப்பார்த்தலும் பிரமிப்பு நீங்கவில்லை.
1000 ரூபாய்க்கான தகவல்கள்,படங்கள் சிறப்பு. அதில் யூரோ நாணயத்தையும் இணைத்திருக்கிறீங்க?. நன்றி