எவர் சிறியர் எவர் பெரியர் எவருறவர்
எவர் பகைஞர் யாது முனையன்றி யுண்டோ
இகபர மிரண்டிலு முயிரினுக்குயிராகி
எங்கு நிறைகின்ற பொருளே”
என்று தாயுமானவ ஸ்வாமி பாடுவது போல உட்கார்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும், தூங்கியபடியும், விழித்தபடியும், நின்றபடியும், ஓடியபடியும்,
தச்சர்களாயும், குயவர்களாயும், வேடர்களாயும், செம்படவர்களாயும், கள்வர்களாயும் என எல்லாமுமாய் அவரே இருக்கிறார்.
அற்பம் அற்பமன்று.
அவரை ஆராதிக்க தும்பையைப் போலவே ஊமத்தையும் உதவும்.
பால்வண்ண நாதர், மருந்தீஸ்வர் ஔஷதநாதர், பால்வண்ண நாதர் ஆகிய பெயர்களால் ஈசன் வணங்கப்படும் ஆலயம் சென்னையை அடுத்த திருவான்மியூரில் அமைந்துள்ளது புகழ் பெற்ற மருந்தீஸ்வரர் ஆலயம்.
வால்மீகி முனிவருக்கு ஈசன் காட்சி தந்த தலம் என்பதால் வான்மீகியூர் என்று வழங்கப்பெற்று, தற்போது திருவான்மியூர் என்று அழைக்கப்படுகிறது.
"எல்லா மருந்துகளுக்கும் மேற்பட்ட மருந்து, மருந்தீஸ்வரரின் திருநீறு. எல்லா மருத்துவர்களுக்கும் மேற்பட்ட மருத்துவர் மருந்தீசர். மருந்தீஸ்வரரை நம்பிக்கையோடு வழிபட்டால் நிறைவேறாத காரியமே இல்லை' என்பது நம்பிக்கை.
.
தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது.
அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், "நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய்' என்று சாபமிட்டார்.
தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க,
"வான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்'
என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால்
சாப விமோசனம் பெற்றது காமதேனு.
"வான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்'
என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால்
சாப விமோசனம் பெற்றது காமதேனு.
பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால்
இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார்.
இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார்.
இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார்.
அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர்
(ஔஷதம்- மருந்து) என்றழைக்கப்படுகிறார்.
அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர்
(ஔஷதம்- மருந்து) என்றழைக்கப்படுகிறார்.
அன்னை திரிபுரசுந்தரி என்னும் திருப் பெயரோடு நின்ற கோலத்தில், மேலிரு கரங்களில் பாசம், அங்குசத்தோடும், கீழிரு கரங்களில் அபயமும், வரதமும் கொண்டு தெய்வீகக் காட்சி தருகிறாள்.
ஆலயச் சந்நிதிகள் திறக்கப்படும்போது, அம்பாள் சந்நிதியில் வைக்கப்பட்டிருக்கும் சுவாமியின் வெள்ளிப் பாதங்கள் இரண்டை ஒரு பல்லக்கில் வைத்து எடுத்துச் சென்று மருந்தீஸ் வரரின் சந்நிதிக்குள் வைக்கும் சடங்கும் இங்கு நடைபெறுகிறது.
அதிகாலையில் நடத்தப் படும் கோபூஜை மிகச்சிறப்பு வாய்ந்தது.
மும்மூர்த்திகளும், திருமகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் வாசம் புரிகின்ற சிறப்புடைய பசுவையும் கன்றையும் அன்னை திரிபுரசுந்தரி சந்நிதிக்கு எதிரேயுள்ள மண்டபத்திற்கு அழைத்து வருகின்றனர்.
அர்ச்சகர் அவற்றிற்கு நெற்றி முதல் உடலின் பல பாகங்களிலும் குங்குமமிட்டு அட்சதையும் போடுகிறார். ஊதுவத்தி, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. பின்னர் பழங்கள் நிறைந்த கூடையை பசுவுக்கும் கன்றுக்கும் எதிரே வைக்கின்றனர். அவை ஆவலுடன் அவற்றை உண்கின்றன. அந்த சமயத்தில் பக்தர்கள் சூழ்ந்து நின்று, "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே' என்று மணிவாசகரின் திருவாசகப் பாடலை இனிமையாகப் பாடி, பின்னர் மூவர் இயற்றிய தேவாரப் பாடல்களையும் பாடுகின்றனர். இந்நிகழ்ச்சி முடிந்ததும் அர்ச்சகர் சந்நிதிகளைத் திறக்க, பசுவையும் கன்றையும் உள்ளே அழைத் துச் சென்று பூஜைக்குப்பின் வெளியே அழைத்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொள்வதைப் பெரும் பேறாக பக்தர்கள் கருதுகின்றனர்.
காலை சுமார் எட்டு மணியளவில் ஆலயத்திலுள்ள அனைத்து தெய்வ வடிவங்களுக்கும் பாலாபிஷேகம் செய்யப் படுகின்றது.
இந்த அபிஷேகத்திற்கு பல பக்தர்கள் பால் வாங்கித் தருகின்றனர். (ஆலயத்திற்குள்ளேயே பால் விற்கப்படு கிறது. இதற்காக கோவிலின் உள்ளேயே பசுமடம் அமைத்து, சுத்தமாகப் பராம ரித்து பசுக்களை செழுமையாக வளர்த்து வருகின் றனர்.)
பக்தர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்), அரை மண்டலம், கால் மண்டலம் என்று அவரவர் சக்திக்கு ஏற்ப வேண்டிக் கொண்டு, அதற் கான பாலை அபி ஷேகத்திற்கு வாங் கித் தருகின்றனர். இவ்வாறு செய்வ தால், வேண்டிக் கொண்ட கால அளவு முடியும் முன்பே தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.
விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை, சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் சிறப்பாக அமைந்துள்ளன. நவகிரக சந்நிதி தனியே இல்லை. நடராஜ சபையும் அற்புதமாக அமைந்துள்ளது.
ஆலயத்தை வலம் வருகையில் தென்திசையில் தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம். அருகில்,
"கல்லாலின் புடையமர்ந்து நான் மறை ஆறங்க முதற்கற்ற கேள்வி கிறந்த
வல்லார்கள் நல்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்து காட்டி சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்'
என்னும் பரஞ்சோதி முனிவரின் துதிப்பாடல் எழுதப்பட்டுள்ளதுதியைப் பாடி தட்சிணாமூர்த்தியை வணங்கலாம் ..
பாபநாசினி, ஜென்மநாசினி என்று அழைக்கப்படும் தீர்த்தக் குளம் தீர்த்தத்தில் நீராடி மருந்தீஸ்வரரையும் திரிபுரசுந்தரியையும் வணங்கிய பின்னர் தலவிருட்சமான வன்னி மரத்தை மும்முறை வலம் வந்தால், பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்ச மும் சித்திக்கும் என்பது ஐதீகம்.
புதுப்பொலிவுடன் திகழ்கிற ஆலயம் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பிரம்மோற்சவம் பங்குனி மாத பஞ்சமி நாளில் தொடங்கி பௌர்ணமியில் நிறைவு பெறும். பிரதோஷ நாட்களில் சிறப்பான அபிஷேகம் கண்கொள்ளாக்காட்சியாகும் ...
மனக்குறை தீர்த்து நிம்மதி கிடைக்க, வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேற, நோய்கள் அகன்று நல்வாழ்வு பெற, அனைத்துக்கும் மேலான முக்தியைப் பெற மருந்தீஸ்வரரை யும் அன்னை திரிபுர சுந்தரியையும் பிரார்த்திப்போம் ..
”திருவான்மியூர் திகழும் திருவருள்”
ReplyDeleteஆஹா, இன்றைக்கே இன்னொரு இரண்டாவது பதிவா?
மகிழ்ச்சி. ;)))))
>>>>>
மருந்தீஸ்வரர், பால்வண்ணநாதர், ஒளஷதநாதர், அன்னை திரிபுரசுந்தரி போன்ற பெயர்களெல்லாம் அழகாக மருத்துவ குணம் கொண்டதாக அமைந்துள்ளது.
ReplyDelete>>>>>>
நல்ல தேவாம்சமான பதிவு , எல்லாம் வல்ல மருந்தீஸ்வரர் அருள்பெற வேண்டுவோம்
ReplyDeleteநல்ல தேவாம்சமான பதிவு , எல்லாம் வல்ல மருந்தீஸ்வரர் அருள்பெற வேண்டுவோம்
ReplyDeleteவிளக்கமான தகவல்கள், படங்கள் அருமை அம்மா...
ReplyDeleteஅழகிய படங்களுடன் அற்புதமான மருந்தீஸ்வரர் பற்றிய பதிவு. கோபூஜை பற்றிய குறிப்பு சிறப்பாக உள்ளது.
ReplyDeleteஎல்லாப்படங்களும், விளக்கங்களும் அருமையாக உள்ளன. காமதேனு, கோபுரங்கள், தெப்பக்குளங்கள், தேர் திருவிழா முதலியன மிகவும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன.
ReplyDelete>>>>>
மனக்குறை தீர்ந்து நிம்மதி கிடைக்க மருந்தீஸ்வரரையுm அன்னை திரிபுர சுந்தரியையும் பிரார்த்திப்போம்.
ReplyDeleteஅசத்தலான பதிவுக்குப்பாராட்டுக்கள்.
மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
ooooo
எல்லா மருந்துகளுக்கும் மேலான மருந்து மருந்தீஸ்வரர் திருநீர். உண்மை மருத்த்வர்களுக்கு எல்லாம் பெரிய மருத்துவர் அல்லவா!
ReplyDeleteஅருமையான் பதிவு. வாழ்த்துக்கள்.
உடல் மற்றும் மனக்குறைகள் என்னும் நோய்கள் நீங்க மருந்துதரும்
ReplyDeleteதிருவான்மியூர் திகழும் திருவருள் !!!
அற்புதம்! அழகு! சிறப்பம்மா!
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
Every thai velli and adivelli villakku poojai is performed here with perfect shotosobacharapooja.
ReplyDeleteVery nice post dear.
viji
குழுவினருடன் கோவில் கருவறைக்குள் அமர்ந்து அபிசேகத்தின் போது ருத்ரம்,சமகம் ஜபிக்கும் பாக்கியம் எனக்கு இப்பிறவியில் அருளினார் மருந்தீஸ்வரர்!
ReplyDeleteதிருவான்மியூர் தல வரலாறும் படங்களும் அருமை! சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஅழகிய படங்களுடன் நல்லதோர் பதிவு.
ReplyDeleteசிறப்பான பகிர்வு மற்றும் படங்கள்.
ReplyDeleteபுஷ்கரிணியும், கோவில் கோபுரமும் ஒரு சேர காட்சி அளிக்கும் புகைப்படம் மனத்தைக் கவர்ந்தது.
ReplyDeleteஅறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.
பால் வண்ண நாதர் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteஒரு முக்கிய தகவல்
ReplyDeleteஅங்கு மருந்திஷ்வரர் சன்னிதியில் இடது பிரகரத்தில் 108 சிவலிங்கங்கள்
அமைக்கப் பட்டுள்ளன. அவை பாணலிங்கஙகள்
ஓரு ராசிக்கு 9 பாதம் விதம் 12 * 9 = 108 என்ற அமைப்பில் உள்ளதை
பார்த்தலும் வணங்கினலும் அனைத்து தோஷமும் பாபமும் நிங்கும். அவரவர் நட்சத்திரத்தன்று வழி பட நலம் உண்டாகும்.
ஆஹா அழகிய படங்களும் விளக்கமும். சிலபடங்கள் வரவில்லை (தெரியவில்லை)எனக்கு...
ReplyDeleteபுகைப்படங்களும் பகிர்வும் மிக அருமை!
ReplyDeleteபுதுப்புது நோய்கள் வாட்டும் இந்நாளில்
ReplyDeleteமிகத் தேவைப்படும் பதிவு வெளியிட்டுள்ளீர்கள் .
நன்றி.