


காற்றில் கதகளி ஆடிக் களிக்கும் நெற்கதிர்கள்,
முகில்களை முட்டி மோதிக் கொண்டிருக்கும் நெடிதுயர்ந்த பாக்குமரங்கள், பார்க்குமிடமெல்லாம் மனதை கொள்ளைகொள்ளும் நீர்வளம் மிக்க இயற்கை அழகு பின்னிப் பிணைந்த பச்சைப்பசேல் மாவட்டம் வயநாடு..
வற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டம் வயநாடு.

கடவுளின் சொந்த நாடு என வர்ணிக்கப்படும் கேரளத்தின் மலைப் பகுதிக்கு தவமிருக்க வந்த சில முனிவர்கள் குடிக்க நீரும் உண்ண உணவும் கிடைக்காமல் தவித்தபோது காக்கும் தெய்வமான திருமால் நெல்லி மரம் இருந்த இடத்தையும் நீர் நிலையையும் காட்ட , பழங்களை உண்டு தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்துக் கொண்ட நெல்லி மரத்தை திரு நெல்லி அதாவது அருள் புரிந்த நெல்லி என்ற பெயரில் திருநெல்லி எனப் போற்றி மஹாவிஷ்ணுவை வழிபட்டு மஹாவிஷ்ணுவின் ஆலயமும் அமைந்த இடம் திருநெல்லி ..

கேரளத்தில் வயநாட்டில் உள்ள மனந்தவாடி எனும் இடத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் உள்ள பிரும்மகிரி மலைப் பகுதியில் பாபநாசினி நீர்வீழ்ச்சி ஓடும் இடத்தில் உள்ள. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முழுமையாக கட்டப்படாமல் இருக்கிற புகழ் பெற்ற விஷ்ணு ஆலயம் திருநெல்லி

மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது போன்ற அனைத்து சடங்குகளையும் இங்கு ஓடும் பாபநாசினி நதிக்கரையில் செய்கிறார்கள்.
கங்கை நதியும், சரஸ்வதிநதியும் இணைந்ததே பாபநாசினி நதி.

பித்ருக்களுக்கு கர்மா செய்வது சிறந்தது என்பதால் திருநெல்லி, தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது
பரசுராமர் தன்னுடைய தந்தைக்கு திருநெல்லியில்
இறுதி காரியங்களை செய்ததாக தல வரலாறு.கூறுகிறது ..ராமபிரானும் தனது தந்தைக்கு பித்ரு கர்மா செய்தார் என ஐதீகம் ..
பத்ம தீர்த்தம் என்ற குளம் நடுவில் உள்ள பாறை ஒன்றில் பாத அடையாளம் மஹா விஷ்ணுவின் திருப்பாதம் என்றும், அங்கு நின்றபடிதான் விஷ்ணு பகவான் பிரம்மாவுக்கு தரிசனம் தந்தார்
என்பதும் நம்பிக்கை..

நெல்லிமரத்தின் கீழ் மஹாவிஷ்ணு அமர்ந்துள்ள இடம் என்பதால் முதலில் திருமால் நெல்லி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி திருநெல்லி என்று அழைக்கப்படுகிறது.








மனதிற்கு அமைதியையும் ஆறுதலையும் தரும் சூழல் அமையப்பட்ட அழகிய இயற்கையோடு அமைந்த பக்திமணம் பரவும் திருத்தலம். கண்கொள்ளாக் காட்சியாக அருமையாக இருக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி உங்கள் பகிர்விற்கு....
திருநெல்லி திருத்தலம் பற்றி இன்று நிறைய விஷயங்கள் உங்கள் பதிவின் மூலம் புதிதாக தெரிந்து கொள்ள முடிந்தது. சந்தோஷம்.
ReplyDelete>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன. மகிழ்ச்சி.
ReplyDelete>>>>>
தென்னிந்தியாவின் காசியா?.
ReplyDeleteபரசுராமரும், ஸ்ரீ ராமரும் தங்கள் தந்தைக்காக பித்ரு கடன் செய்த புனித ஸ்தலமா?
கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
>>>>>
நெல்லிக்கனி போன்ற மிகவும் சுவையான பதிவு.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo