பூஜ்யாய், ராகவேந்த்ராய், சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!
படைப்புக் கடவுள்.பிரம்மா, தேவலோகத்தில் இருந்த ஒரு சிறந்த தேவனான சங்கு கர்ணனை அழைத்து ..'விஷ்ணுவின் தசாவதார சங்கல்பத்தைக் கூறி, அதற்கான மலர்களையும் கனி களையும் பூமிக்குச் சென்று தினமும் எடுத்து வரவேண்டியது உன் கடமை'' என்றார்.
பெருமாள் எடுக்கப் போகும் பத்து அவதாரங்களை பிரம்மனுக்குப் பிறகு காணக் கொடுத்து வைத்த பெரும்பேறு தனக்குக் கிடைத்ததை நினைத்து,மகிழ்ந்தான் சங்கு கர்ணன்.
தசாவதார மூர்த்தங்களுக்குப் பூஜை செய்ய ஆரம்பித்தார் பிரம்மதேவன்.
அவர் அருகில் பவ்யமாக நின்று மலர்த் தட்டினை எடுத்து நீட்டிக் கொண்டிருந்தான் சங்கு கர்ணன்.
கிருதயுகத்தில் மகாவிஷ்ணு என்னென்ன அவதாரங்கள் எடுக்கிறாரோ, அவற்றுக்கு சிறப் பாக பூஜை செய்து முடித்தார் பிரம்மா.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பூஜை முடிந்தது.
அடுத்து, திரேதா யுகத்தின் அவதார புருஷனாக
விளங்கப் போகும் ஸ்ரீராமச்சந்திரனுக்கு பூஜை. ..
விளங்கப் போகும் ஸ்ரீராமச்சந்திரனுக்கு பூஜை. ..
சங்கு கர்ணன் வியப்போடு ஸ்ரீராமனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்ரீராமனுடைய அழகும், கம்பீரமும், சாந்தமும், மனித குலத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கப் போகிற தன்மையும், வீரமும், ஏகபத்தினி விரதமும், தந்தை- தாய் சொல் கேட்டு நடந்து உத்தமனாயும் வாழப் போகிற ஸ்ரீராம தரிசனத் தையும், மகாலட்சுமியான சீதாதேவியையும் கண்ணாரக் கண்டு, ஆனந்தம் பொங்க பரவசத்துடன் தன்னை மறந்து நின்றான் சங்கு கர்ணன்.
பூஜை ஆரம்பித்துவிட்டதை உணராமல், மலர்த் தட்டை எடுத்து பிரம்மதேவனின் அருகே நிற்காமல், கண்களில் ஆனந்த பாஷ்யம் பெருக நின்று கொண்டிருந்த சங்கு கர்ணனைப் பார்த்தார் பிரம்மதேவன்.
அவதாரங்களிலேயே மிகச் சிறந்த அவதாரமாக விளங்கப் போகும் ஸ்ரீராமனுடைய அழகிலே மெய்ம் மறந்து நின்ற சங்கு கர்ணன்.
எந்த அவதார மூர்த்தங் களைக் கண்டு மகிழ்ந்தாயோ, அந்த அவதாரங் கள் வசிக்கப் போகும் பூமியிலே நீ பிறப்பாய். ஸ்ரீராம நாமத்தை பூமியில் பரப்பி, கலியுகத்தில் நீ மீண்டும் சத்திய லோகம் வருவாய்.'' என சாபம் பெற்றான் ..
அந்த சங்கு கர்ணன்தான்-
பிரகலாதன் (கிருதயுகம்).
பாஹ்லீக மகாராஜன் (துவாபர யுகம்).
ஸ்ரீ வியாசராஜர் (கலியுகம்).
ஸ்ரீராகவேந்திரர் (கலியுகம்)
முதல் மூன்று பிறவிகள் வரை தான் யார் என்பது
சங்கு கர்ணனுக்குத் தெரியவில்லை.
சங்கு கர்ணனுக்குத் தெரியவில்லை.
"வேங்கடநாதனின் எதிரே ஸ்ரீ சரஸ்வதிதேவி தோன்றி
.நீ யார் தெரியுமா? நீயே பிரகலாதன்.
நீயே ஸ்ரீகிருஷ்ணரைத் துதித்த பாஹ்லீக மகாராஜன்.
நீயே கிருஷ்ண தேவராயனின் குலகுரு ஸ்ரீ வியாஸராயன்.
இப்போது நீயே வேங்கடநாதன்..
இனி உன் பெயர் ஸ்ரீராகவேந்திரர்.
எனக்காக நீ பல நூல்களை எழுத வேண்டும்.
இனி உன் பெயர் ஸ்ரீராகவேந்திரர்.
எனக்காக நீ பல நூல்களை எழுத வேண்டும்.
நீ சந்நியாசியாகி அதைச் செய்வாயாக!''
என்று கூறி மறைந்தாள் கலைவாணி.
என்று கூறி மறைந்தாள் கலைவாணி.
ஜீவன் முக்தராகி மந்திராலயம் எனும் ஊரில் உறைந்து,
இன்றும் பக்தர்களைக் காக்கிறார் ஸ்ரீராகவேந்திரர்.
இன்றும் பக்தர்களைக் காக்கிறார் ஸ்ரீராகவேந்திரர்.
எழுபது ஆண்டுகள் கர்ம சரீரத்துடனும்,
முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனவாசியாய் இருந்தும், பின்னர் எழுநூறு ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்தும் நமக்கு நல்லருள் புரிந்துகொண்டிருக்கிறார் அவர்.
இந்த எழுநூறு ஆண்டுகள் முடிந்ததும் அவர் மீண்டும் சங்கு கர்ணனாய் பிரம்ம லோகம் சென்று விடுவார் என்பது ஸ்ரீ ராகவேந்திர சரித்திரம் கூறும் பேருண்மை.
இந்த எழுநூறு ஆண்டுகள் முடிந்ததும் அவர் மீண்டும் சங்கு கர்ணனாய் பிரம்ம லோகம் சென்று விடுவார் என்பது ஸ்ரீ ராகவேந்திர சரித்திரம் கூறும் பேருண்மை.
அவருடைய பிருந்தாவனம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு சென்று வழிபடுவோம். செல்ல முடியாதவர்கள் அன்றைய தினம் நீராடிய பின்னர், மிகுந்த ஆசாரத்துடனும், மனசுத்தியுடனும்,
"ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:' என்று முடிந்த அளவு தியானம் செய்து நலம் பெறுவோம்...
"ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:' என்று முடிந்த அளவு தியானம் செய்து நலம் பெறுவோம்...
ரசித்தேன்.
ReplyDeleteபக்தியாய் செய்திட்ட
ReplyDeleteபதிவுகள் அத்தனையும்
அருமை .
வளம்பெற வாழ்த்துக்கள்
வியாழன்று ராகவேந்திரர் தரிசனம்...
ReplyDelete”ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:”
ReplyDeleteஇன்று குருவாரத்திற்கு ஏற்ற மிகச் சிறப்பான பதிவு.
>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDelete>>>>>
விளக்கங்கள் யாவும் வழக்கம் போல அருமையோ அருமை.
ReplyDeleteசங்கு கர்ணன் தான்
கிருதயுகத்தில் பிரகலாதன்
துவாபர யுகத்தில் பாஹ்லீக மகராஜன்
கலியுகத்தில் ஸ்ரீ வியாசராஜர் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் என்பது வியப்பளிக்கும் தகவல்களே.
>>>>>
தன்னை மறந்து வியப்போடு ஸ்ரீராமனைப் பார்த்துக்கொண்டிருந்த சங்கு கர்ணன் என்ற பத்தியில்
ReplyDeleteஸ்ரீ ராமனின் கல்யாண குணங்களை அழகாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்.
மிகச்சிறந்த முறையில் கொடுக்கப்பட்டுள்ள இன்றைய பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். நன்றிகள்.
ooooo
படங்களும் விளக்கங்களும் அருமை அம்மா... நன்றி...
ReplyDeleteWow!!!!!!Its new to me. Now I learnt from here.
ReplyDeleteNice photos. So divine. Thanks for the new information Rajeswari.
viji
interesting information
ReplyDeleteஸ்ரீ ராகவேந்திரர் பற்றி அறிந்திருந்தாலும் நீங்கள் மிகவும் விளக்கமாக சொல்லியுள்ளது மிகவும் பிடித்தது நன்றி படங்கள் அருமை
ReplyDeleteஸ்ரீ இராகவேந்திரர் படங்களையும் விளக்கங்களையும் இரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள் அருமையான பதிவைத் தந்தமைக்கு.
ReplyDeleteஸ்ரீ குருவே நமஹ.
ReplyDeleteபக்தி பரவசத்தில் திளைத்தேன்.
சங்கு கர்ணன் . விளக்கம் . நன்றி
ReplyDeleteஸ்ரீராகவேந்திரர் பற்றிய விளக்கமும் நல்ல படங்களும் அருமை. இப்பொழுதான் இவ்வளவு விபரம் உங்கள் மூலம் அறிகிறேன்.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
ஸ்ரீராகவேந்தர் பற்றி அறிந்துகொண்டேன்.அழகான படங்களுடன் சிறப்பான பதிவு.நன்றிகள்.
ReplyDeleteநாட்களுக்குரிய பகிர்வு. சிறப்புங்க.
ReplyDeleteராகவேந்திரரை பற்றி அறிந்திருந்தாலும்,நான் இதுவரை கேள்விப்படாத கதை.
ReplyDeleteபடங்களும் பதிவும் மிக அருமை.
ஸ்ரீ ராகவேந்திரரின் சரிதமும் படங்களும் சிறப்பு! ஸ்ரீ ராகவேந்திரரை தொழுது நலமடைவோமாக! நன்றி!
ReplyDeleteஅழகிய படங்களுடன் அருமையான பதிவு!
ReplyDeleteஸ்ரீராகவேந்ரரைப் பற்றி படிக்கும் போதே
ReplyDeleteமெய் சிலிர்க்கிரது. எவ்வளவு அழகாக எழுதுகிரீர்கள். படிக்கப் படிக்க ஆர்வமாக உள்ளது.
அருமை!பல ஆண்டுகளுக்கு முன் மந்திராலயம் சென்றேன்.அங்கு தங்கியிருந்த நாட்களில் விவரிக்க முடியாத ஒரு மன அமைதி
ReplyDelete”ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:”
ReplyDeleteகுருவுக்கு உகந்த நாளில் குரு ஸ்ரீ ராகவேந்திரரின் பிறப்பின் விளக்கம் அருமை.
படங்கள் அழகு.
கேள்விப்படாதக் கதை. நன்றி. சங்கு கர்ணன் யார்?
ReplyDeleteஅவதாரங்கள் வசிக்கும் பூமியில் பிறப்பது சாபமா?
வியாழக்கிழமை அன்று நல்ல பதிவு.
ReplyDeleteவிரும்பிப் படித்தேன்.
எல்லாம் புதிய தகவலாக உள்ளது. மிக்க நன்றி.
ReplyDeleteவழமை போல சிறப்பான படங்கள்.
இனிய பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகொண்டேன் இவர்பற்றி...
ReplyDeleteகருத்துக்களும் படங்களும் பதிவிற்கு உயிர் கொடுக்கின்றன!
ReplyDeleteஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் சகோதரி இன்று போல்
ReplyDeleteஎன்றும் பக்தி மணம் கமழும் படைப்புக்கள் இனிதே தொடரட்டும்!....
சிறப்பான பகிர்வு.
ReplyDelete