ஹோலி பண்டிகை வண்ணமயமான பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை..
விவசாயிகள் அறுவடை முடித்து, நிறைந்த மனத்துடன் இதை கொண்டாடுவார்கள்.
இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
கிருஷ்ண பகவான் தன் குழந்தை பருவத்திலும், பால்ய பருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை.
ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் . ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டும். மிக முக்கியத்துவம் வாய்ந்தது,
`பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், `குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வார்கள்..
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான்.
இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்...
இரணியன் தன் சகோதரி - நெருப்பினால் எரியாத தன்மை படைத்த ஹோலிகாவின் உதவியை நாடினான்.
தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான்.
மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன்.
மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள்..
ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
அனைவருக்கும் இனிய ஹோலிப்பண்டிகை நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவண்ணமயமான அழகிய படங்களுடன் இனிய நல்ல பதிவு.
இன்றுதான் உங்கள் மூலம் இதன் விபரம் அறிந்துகொண்டேன்...
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
For Holi, the pictures are so colourfull.
ReplyDeleteHappy Holi.
viji
கண்கொள்ளாக்காட்சி...
ReplyDeleteஅருமையான படங்கள் அம்மா... வாழ்த்துக்கள்...
வண்ணத்திருவிழா ஹோலி, வண்ணமயமாக கலர்க்கலராக உள்ளது. படங்களும் விளக்கக்களும் வழக்கம் போல அருமையாக உள்ளன.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDeleteபண்டைத் தமிழர்கள் “ காமன் பண்டிகை” என்று கொண்டாடியது இதுதானோ. ? வர வர ஹோலி பண்டிகை சில தவறான நோக்கங்களுடன் கொண்டாடப் படுகிறதோ என்று ஐயம் எழுகிறது. வாழ்த்துக்கள்.
ஹோலி பற்றிய விளக்கங்கள் அருமையா சொல்லி இருக்கீங்கம்மா. ரொம்ப நல்லா இருக்கு நன்றிம்மா.
ReplyDeleteஹோலிகா பற்றிய தகவல்கள் இப்போதுதான் தெரிந்துகொண்டேன் நன்றிங்க.
ReplyDeleteஹோலி பண்டிகையின் கதை விளக்கம் அருமை.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு.
ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!
ReplyDeleteபுகைப்படங்களின் அழகு மனசை நிறைத்து விட்டது!
ReplyDeleteஹோலி பண்டிகை வாழ்த்துகள். படங்கள் அழகு.
ReplyDelete