வல்லமை மின் இதழில் வெளியான எமது ஆக்கம் ..
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீதையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
வீட்டையும், நாட்டையும் ஒரு சேர ஆள முடியும் என்று
பெண்கள் நிரூபித்துக் கொண்டுள்ளனர்.
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மநிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று பலதுறைகளிலும்
இணையற்று சாதனைகள் நிகழ்த்திவருகிறார்கள் பெண்கள்..
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந் தோமென்று வேதனைகள் தீர்க்கின்றனர் பெண்கள்..
சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம் என பலதுறைகளிலும் முனைப்புடன் சாதனை படைத்துவருகிறாள் புதுயுக நவ யுவதியாக வலம் வரும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம் நாம்...
வீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது.
புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் மலர்ந்து மணம் வீசும் மகளிர் தினம் மகிழ்ச்சிக்குரியது ..
மனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்!
இந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.
புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும். தையலை உயர்வு செய்! என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும்
இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் -
நிச்சயமாக நம்புங்கள் - அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.
1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது.
1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகவும் சமத்துவமாகவும் பங்குபற்றுவதன் மூலமே ஸ்திரமான சமாதானத்தையும் ஐ.நா. சாசனத்தின் கீழான சமூகத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும்' என வலியுறுத்தும் வகையில் சிறப்பாக மகளிர் தினம் கவனத்தில் கொள்ளப்படுகிறது ...
தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
மகளிர் தினத்தையொட்டி சில ஆண்டுகளாக ஆண்கள் துணையின்றி பெண் விமானிகளே பங்கு பெறும் விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
விமானத்தை பெண்களே இயக்குவது ஒரு புதுவிதமான அனுபவம். . நவீன யுகத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் பெண்களுக்கு வழங்குவது ஊக்குவிப்பதாக உள்ளது.
ReplyDeleteமகளிர் தின வாழ்த்துக்கள்! தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.
வணக்கம் ஐயா..
Deleteவலைச்சர அருமையான அறிமுகத்திற்கும் ,
வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம். நல்ல விஷயம்தான். அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றனவே. இதற்கு என்ன செய்யமுடியும்? மக்கள் சிந்திக்கவேண்டும்.
ReplyDeleteவணக்கம் ஐயா..
Deleteமக்கள் சிந்தித்து களைகளைக்களைந்து
நல்ல சமுதாயத்தை உருவாக்கவேண்டும் ..
ஆக்கபூர்வமான கருத்துரைக்கு மனம் நிறைந்த
இனிய நன்றிகள் ஐயா..
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள் சகோதரி !......
ReplyDeleteவாருங்கள் சகோதரி ...
Deleteவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் //
தங்களுக்கும் மகளிர் தின மகிழ்ச்சிவாழ்த்துகள்..
இன்று மட்டுமல்ல... என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம்..
Deleteவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
Happy womens day
ReplyDeleteவணக்கம்..
Deleteவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
Happy Women's day!!
ReplyDeleteவணக்கம்..
Deleteவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
ReplyDeleteஅகில உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.
வணக்கம் ஐயா.
Deleteதங்கள் தளத்திலும் சிறப்பான கருத்துரைகள் தந்து
மகளிரை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்..
வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
அன்பான இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
வணக்கம் ஐயா..
Deleteவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
வல்லமை மின் இதழில் வெளியான ஆக்கத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல் வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
மிகச்சிறப்பான கட்டுரை.
ReplyDeleteமிக அழகான படங்கள்.
அற்புதமான விளக்கங்கள்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo
சிறப்பான அழகான கருத்துரைகள் தந்து
Deleteபாராட்டியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
தாய், சகோதரி, மகள் மனைவி என மகளிரின்றி ஒருநாளும் மனிதன் வாழ முடியாது இப்புவியில்.. அந்த வகையில் இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் மகளிர் தினமே..
ReplyDeleteமகளிர் தின வாழ்த்துகள்.
வணக்கம் ..
Deleteஆக்கபூர்வமான கருத்துரைக்கும் ,
வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த
இனிய நன்றிகள்
இன்று 09.03.2013 தங்களின் படைப்பு ஒன்று வலைச்சரத்தில் அடையாளம் காணப்பட்டு பாராட்டிப்பேசப்பட்டுள்ளது.
ReplyDeleteஅதற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.
-oOo-
வலைச்சர அடையாளத்தைப் பாராட்டியதற்கு
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
இன்றைய வலைசரத்தில் பாராட்டுப் பெற்றிருக்கிறது உங்கள் பதிவு ஒன்று. அதற்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவல்லமையில் வெளி வந்துள்ள பதிவிர்காகவும் வாழ்த்துக்கள்.
வாருங்கள் ..வணக்கம் ..
Deleteவலைச்சர பாராட்டு ,வல்லமை ஆக்கம் ஆகியவற்றை
வாழ்த்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
அழகிய படங்களுடன் நல்ல பகிர்வு ..இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteவாருங்கள் வணக்கம் ..
Deleteஅழகிய கருத்துரைக்கும் ,வாழ்த்துகளுக்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
தங்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்...
வல்லமையில் இந்த கட்டுரை வந்தைமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான கருத்துக்களை கொண்ட பதிவு.
உங்கள் திறமையை எல்லோரும் புகழும் போது மனது பெருமை கொள்கிறது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
வாருங்கள் ..வணக்கம் .. வாழ்க வளமுடன் ..
ReplyDeleteதங்களின் பெருமை மிகு வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்
இதயம் நிறைந்த இனிய நன்றிகள்...
பின்னூட்டப்பெட்டியின் வடிவமைப்பினை இன்று முதல் புதிதாக மாற்றியுள்ளது மகிழ்வளிக்கிறது. இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும், மற்றும் அனைத்து மகளிருக்கும்... மகளிர்தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅழகிய படங்கள்.
Happy Women's Day. Nice write
ReplyDeleteவியப்பு மேலிடச் செய்யும் அரிய தகவல்கள்.
ReplyDeleteசிறப்பு.