Showing posts with label மகளிர் தினம். Show all posts
Showing posts with label மகளிர் தினம். Show all posts

Saturday, March 8, 2014

சந்தோஷம் மலரும் சர்வதேச மகளிர் தினம்








மார்ச் மாதம் எட்டாம் நாளினை மற்றொரு சுதந்திரதினமாகப் போற்றி மிகவும் உற்சாகமாகவும்,மகிழ்ச்சியாகவும் ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மகளிர் தினம் என்பது  வெறுமனே ஒரே ஒரு தினக் கொண்டாட்டமாக அமையாமல், மார்ச் மாதம் முழுக்க அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாசாரம் முதலான இன்னோரன்ன துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களை, சாதனைகளை அடையாளப்படுத்தும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் 
மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே 

என பெண்ணுரிமையை ஏத்தினார் புரட்சிக்கவி பாரதியார்..! 

போற்றி போற்றியோராயிரம் போற்றி 
நின் பொன்னடிக்குப்  பல்லாயிரம் போற்றிகாண் .

என்ற பாரதி 

பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார்..

பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று முழங்கினார்..!




பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கவும் இருக்கிறது..

மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் 
சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும்..

அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதும் வருத்தம் தரும் நிகழ்வாகும்..! 

பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் யாராலும் 
மறுக்கப்படமுடியாத ஒன்றாகவும் திகழ்கிறது..!



“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - 

சாதி, இன, மத, மொழி ஒடுக்கு முறைகளை விடக் கொடியதும் அதிகம் பேரை பாதிப்பதும் இந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான். 

மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதை, சமூக மதிப்புடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும். 

இதற்கு உத்வேகமளிக்கக் கூடிய நாளாக 
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாள் விளங்குகிறது.

பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாள் 
பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.


**அமெரிக்காவிலிருந்து வரும் ‘தென்றல்’ மார்ச் இதழில் எமது வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்ட செய்தி  தோழி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் மூலம் தெரியவந்தது. இணைப்பு கொடுத்திருக்கிறேன். 

ஆனால் தென்றல் இதழ் உள்ளே போக பதிவு செய்து கொள்ளவேண்டும். பயனர் பெயர், பாஸ்வேர்டு வேண்டும்.

வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில் எமது மணிராஜ் வலைத்தளம் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 
ஆன்மீகக்கட்டுரைகள் , ஆலய தரிசனங்கள்.ஸ்லோகங்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. ஆன்மீகச்சுற்றுலா மேற்கொள்ள சிறந்த வழிகாட்டி என்றும் சொல்லலாம் ..
காயத்ரி மந்திரத்தின் மகிமை பற்றி கூறும் மிக விரிவான கட்டுரை சிறப்பு..
வரலக்ஷ்மி விரதம் கோகுலாஷ்டமி,ஆவணி அவிட்டம் ,சங்கடஹர சதுர்த்தி - என பல தலைப்புகளில் படங்களுடன் கூடிய விரிவான தகவல்களும் நிறைந்துள்ளன..
சுயஅனுபவக்குறிப்புகள் இந்த வலைப்பூவிற்கு மேலும் பலம்.// என அறிமுகப்படுத்தி மணிராஜ் வலைத்தளத்தின் இணைப்பும் கொடுத்திருக்கிறார்கள்...

 இனிய நன்றிகள் தென்றல் இதழ்! 
என்னுடன் எனக்குத் தெரிந்த நிறைய பெண்பதிவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

எங்கள் பிளாக் வலைத்தளத்திலும் சர்வதேசப் பெண்கள் தினமான இன்று, எழுத்துலகில் சாதனைகள் பல செய்துவரும், பல்வேறு திறமைகள் அமையப்பெற்ற  நம் வாசக பெண் நண்பர்கள் அனைத்து பெண்பதிவர்களையும் சிறப்புகளைக் குறிப்பிட்டிருப்பதோடு  எமது தளத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. 
எங்கள் பிளாக்கிறகு எங்கள் நன்றிகள்..


"குடும்பம் என்பது ஜனநாயக பண்புகளை வளர்க்கும் தொட்டிலாக இல்லை" என்தை அன்றாட நிகழ்வுகளில் கண்கூடாகக் கண்டே வருகிறோம்..!

மனிதநேயம், தன்னலமற்ற பாசம் பகிர்ந்துகொள்வது, பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது, பண்பு கலாசாரம் ஆகியவற்றை மதிப்பது போன்றவைகளை சிறுவயதிலேயே குழந்தைகளூக்குப் பாலோடுபுகட்டும்போது சாதகமான சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மாற்றங்களை இளைய தலைமுறையினரால் கொண்டுவர இயலும் என்பதை மகிழ்ச்சி நிறைந்த மகளிர் கொண்டாட்ட தினத்தில் மனதில் கொள்வோம்..!


Saturday, March 9, 2013

புதுயுக மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..










வல்லமை மின் இதழில் வெளியான எமது ஆக்கம் ..



ஏட்டையும் பெண்கள் தொடுவது தீதையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்;

வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

வீ‌ட்டையு‌ம், நா‌ட்டையு‌ம் ஒரு சேர ஆள முடியு‌ம் எ‌ன்று
பெண்கள்  ‌நிரூ‌பி‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மநிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று பலதுறைகளிலும்
இணையற்று சாதனைகள் நிகழ்த்திவருகிறார்கள் பெண்கள்..

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந் தோமென்று வேதனைகள் தீர்க்கின்றனர் பெண்கள்..

சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம் என பலதுறைகளிலும் முனைப்புடன் சாதனை படைத்துவருகிறாள் புதுயுக நவ யுவதியாக வலம் வரும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம் நாம்...


வீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது.

புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் மலர்ந்து மணம் வீசும் மகளிர் தினம் மகிழ்ச்சிக்குரியது ..

மனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்!

இந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.

புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும். தையலை உயர்வு செய்! என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும்

இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் -
நிச்சயமாக நம்புங்கள் - அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.


 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது.

1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
 அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகவும் சமத்துவமாகவும் பங்குபற்றுவதன் மூலமே ஸ்திரமான சமாதானத்தையும் ஐ.நா. சாசனத்தின் கீழான சமூகத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும்' என வலியுறுத்தும் வகையில் சிறப்பாக மகளிர் தினம் கவனத்தில் கொள்ளப்படுகிறது ...


தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.


மகளிர் தினத்தையொட்டி சில ஆண்டுகளாக ஆண்கள் துணையின்றி பெண் விமானிகளே பங்கு பெறும் விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருவது  மகிழ்ச்சி அளிக்கிறது.

விமானத்தை பெண்களே இயக்குவது ஒரு புதுவிதமான அனுபவம். . நவீன யுகத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் பெண்களுக்கு வழங்குவது ஊக்குவிப்பதாக உள்ளது.


Friday, March 8, 2013

மகிழ்ச்சி மலரும் மகளிர் தினம் ..!


Happy women's day animations





போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் 
பல்லாயிரம் போற்றி காண் என்று முழங்கிய  பாரதி 
பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். 

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் 
மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என 
பெண்ணுரிமையை ஏத்தினார் பாரதி

பெண்கள் அறிவை வளர்த்தால் இந்த வையகம் பேதைமை 
அற்றிடும்' என்பது பாட்டுக்கொரு புலவன்  பாரதியாரின் 
அழுத்தம் திருத்தமான - ஆணித்தரமான கருத்து.

ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினம் சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளன.

இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்கப்படுவரும் மகிழ்ச்சியான. கொண்டாட்டங்கள் மகத்துவமிக்கவை...
சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் 
அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை 
கோரும் பெண்ணாக உயர்த்தியது 
பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். 

பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். 

பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.

பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் 
எறிந்த காலம் மலையேறிப் போகட்டும்..

எத்துறையிலும் மகளிரின் சாதனைத் தடத்தைப் பார்க்கப் 
புறப்படு பெண்ணே புவியசைக்க

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”

உலகில் நடைபெறக் கூடிய அனைத்துச் செயல்களையும் ஆக்குபவளும் பெண்ணே, தீயவற்றை, அநீதியை அடியோடு அழிப்பவளும் பெண்ணே. அதனால்தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று இன்று வரை நிலவி வருகிறது.
பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெண்களே நாட்டின் கண்கள் என்று போற்றிப்பாடுவோம். 

காலம் காலமாகக் கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம், காத்து வரும் கண்ணிய உணர்வால்தான் இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது. 

மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் முன்னேற்றமே, ஒட்டு மொத்த உயர்வுக்கு வழி வகுக்கும்
தன்னையே நம்புகிறாள்! ‘தன்னம்பிக்கை’ இருப்பதால்.
மதியோடு பெண் இருக்கிறாள், அதனால் தான் மதிப்பெண்ணிலும் முதலிடம் பெற்று மதிப்புப் பெறுகிறாள்! 

மக்கள் தொகையில் சரி பாதியான பெண்களின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்கும் எந்தச் சமூகமும் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது.

அன்பிற்கு அடையாளமாகயும், தெய்வங்களாகவும், தெய்வத் தன்மை சூட்டப்பட்டாலும், பெண் சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்தியச் சமூகம் வைத்திருந்தது என்பது வரலாற்று உண்மை.. 




பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது