கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில்
தேர் திருவிழாவின் தொடக்கமாக பூச்சாட்டு நடைபெறும்...
.புலி வாகனம், கிளிவாகனம், சிம்ம வாகன ஊர்வலம் காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவிளக்கு வழிபாடு ,திருக்கல்யாண உற்சவம், பூதவாகனம், மஹிஷாசுர தமிழில் லட்சார்ச்சனை, தெப்பத் திருவிழா, அடுத்த நாளில் கொடியிறக்கமும், வசந்த விழாவும் நடைபெறுகின்றன
மைசூர் தேசத்து மன்னர்களால் ஆலயத்து தேவி மகிஷாசுரமர்தினியாக வணங்கப்பட்டு ஆலயம் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது ....
ஆலயத்தின் தேவி சுமார் இரண்டரை அடி உயரமாக அருட்காட்சி தருகிறார்... நான்கு கைகள். வலது கைகளில் சூலம், உடுக்கை, வாள் மற்றும் சங்கு வைத்து இருக்க இடது கையில் சக்கரம், மணி, கபாலம் மற்றும் கேடயமும் வைத்து காட்சி தருகிறாள்...
வலது காதில் குண்டலம் அசைய
இடது காதில் வெறும் காதணி மட்டுமே உள்ளது .
மகிஷாசுரமர்த்தினியைப் போல உள்ள கோனியம்மன் தேவி சக்தியின் அம்சம் .. பல மகிமைகளை செய்தவள் ... வேண்டியன நடத்தித்தரும் கண்கண்ட தெய்வமாகவும் திகழ்கிறாள்...
கோன் என்றால் மன்னன் என்று அர்த்தமாம். ஆகவே கடவுட்களில் தலைவி போல உள்ள தேவிக்கு கோனி அம்மன் அதாவது கோனியம்மன் என்ற பெயர் வந்ததாம்.
ஆலய விழாக்களில் முக்கியமானது தெப்ப உற்சவம், தேர் உலா,
திரு விளக்கு எற்றுதல் போன்றவை வெகு சிறப்பாக நடைபெறுகின்றன....
கோனியம்மன்__இந்தப் பெயரிலான அம்மனை இன்றுதான் கேள்விப்படுகிறேன்.படங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி & நன்றி.
ReplyDeleteஇந்த அம்மனின் பெயராலேயே கோயமுத்தூர் என பெயர் வந்ததாக கூறுவர்.
Deleteஅருமையான படங்கள்... நன்றி...
ReplyDeleteஆஹா.. அருமை.. இதே ஊர்ல இவ்வளவு வருஷமா இருக்கேன்.. கோயிலுக்கு எதிரில் உள்ள பள்ளியில் மூணு வருடங்கள் படித்தேன்.. பல முறை திருவிழாவுக்கு வந்திருக்கேன்.. ஆனா உங்க புகைப்படங்களும், விளக்கமும் அதை இன்னும் பிரம்மாண்டமா காண்பிக்கிறது..
ReplyDeleteபுதுப்பிக்கப்பட்ட பிறகு இன்னும் போகவில்லை.. போகணும்..!
கோனியம்மன் - தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகோனியம்மன் தேர்த்திருவிழா பற்றிய எல்லாப்படங்களும், விளக்கங்களும் அருமையோ அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவிளக்கங்களும் படங்களும் மிகவும் அருமை...
ReplyDeleteநானும் கோவை சென்றிருக்கிறேன் இவ்வாறு நானே நேரில் பார்க்கவில்லை அவ்வளவு அற்புதமாக படங்களுடன் விளக்கியுள்ளீர்கள்
ReplyDeleteபதிவின் முடிவில் சில படங்கள் வரவில்லை... Refresh செய்து பார்க்கிறேன்...
ReplyDeleteகோனிஅம்மனைப் பற்றிய நல்ல பதிவு. படங்களும் அருமை.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
கோனியம்மன் கோவிலைப் பற்றி தெரிந்துகொண்டதில் ரொம்ப மகிழ்ச்சி. நன்றி.
ReplyDeleteபடங்களும் தகவலும் அருமை. நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteதிருவிழாவிற்கு கூட்டி கொண்டு போனதற்கு நன்றி
ReplyDeleteI was feeling sad that i was not seen the Ther this year. My feeling went away on seeing your pictures.The red building on the Ther photo is my school. I felt very happy viewing the photos. Thanks dear for this post.
ReplyDeleteviji
ReplyDeleteஇந்தமுறை நாங்கள் கோவையில் இருந்தபோதிலும் திட்ட மிடாததால் திருவிழா காணமுடியவில்லை. இருந்தால் என்ன. பதிவில்தான் கண்டாயிற்றே.
நான் கோனியம்மன் தேர்திருவிழாப் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது. நாங்கள் சமீபத்தில் போனபோது ராஜகோபுரம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். முடிந்து விட்டதா?
ReplyDeleteபடங்களும் தகவலும் அருமை.
வாங்க ..வணக்கம் .. வாழ்க வளமுடன் ..
Deleteராஜகோபுரப்பணி இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது ..
இப்போதுதான் புதிய தலைமுறை தொலைகாட்சியில் 'கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு' நிகழ்ச்சியில் கோனியம்மன் கோயில் பற்றி காண்பித்தார்கள். இங்கே வந்தால் அதே கோவில் திருவிழா காட்சிகள். கோவை போய்விட்டு வந்ததுபோல இருக்கிறது.
Delete