அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் உளரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்
அஞ்சனை மைந்தனுக்கு, வாயு புத்திரனுக்கு, ராமதூதனுக்கு
வடைமாலை சாத்துவது ஏன் ? :
ஒருசமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள்.பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்தி படுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.
ராமாயணப் போர்க்களத்தில் அரக்கர்களை வடை தட்டுவதுபோல தட்டி சம்ஹாரம் செய்தவர் ஆஞ்சநேயர். அதை நினைவுபடுத்தும் வகையிலேயே அவருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. திருப்பதி போன்ற கோவில்களிலும் வடை நைவேத்தியம் செய்கிறார்கள்.
இந்த நிவேதன வடைகளை, அவை எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து, அதிக பருமன் இல்லாமல் பக்குவமாக தயார் செய்கின்றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் வடை மாலையை இஷ்ட தெய்வங்களுக்கு சாத்துவதும் உண்டு. இந்த மாலையில் உள்ள வடைகள் கர கரவென்று இருக்கும். இதை உட்கொள்கிறவர்களுக்கு புத்தி பலம், தைரியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்துவது ஏன்?
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வடை போன்றவை பிரியமானவை. வடை மாலை, வெற்றிலை மாலை, பேப்பர்களில் வேண்டுகோளை எழுதி அதை மாலையாகச் சாத்துதல் போன்ற பழக்கங்கள் இடையில் புகுத்தப்பட்டுள்ளன. இப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இன்று நிறைய தெய்வங்களுக்கு பல வகையான மாலைகள் சாத்தப்படுகின்றன. பக்தி என்ற நிலையில் மகிழ்ந்தாலும், சாஸ்திரம், மரபு என்ற நிலையில் இதற்கு காரணம் ஏதும் சொல்ல முடியவில்லை.
தண்டகாரண்யத்தில் சஞ்சரிக்கும் போது அங்குள்ள மஹரிஷிகள் லக்ஷ்மணனுக்கு பலவித ஆகாரங்களைக் கொடுத்ததாகத் தெரிகிறது. அகஸ்த்ய மகரிஷியும் ஸ்ரீஇராமர், லக்ஷ்மணன், சீதை மூவருக்கும் போஜனம் செய்வித்ததாகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
கொண்டிருந்தார்களாம்,
ஸ்ரீஇராம பட்டாபிஷேகத்தின் பொழுது சீதாதேவி தன் கழுத்திலிருந்த அழகிய முத்துமாலை ஒன்றைக் கழற்றி ஸ்ரீஇராமருடைய அனுமதியின் பேரில் ஹனுமாருக்குக் கொடுத்தாள். ஹனுமார் அந்த மாலையில் இருந்த ஒவ்வொரு முத்தையும் தனித்தனியே எடுத்துக் கடித்துக் கடித்துத் துப்பிவிட்டார் என்றும், தான் எப்பொழுதும் தன் நாவில் தரித்திருக்கும் ஸ்ரீஇராம நாமத்தின் ருசி, இந்த முத்துகள் ஒன்றில்கூட இல்லை என்று அவர் சொன்னதாகவும் ஒரு கற்பனை
அனுமன் முறை வருகையில் அன்னையவள்
அனுமன் முறை வருகையில் அன்னையவள்
தன் மணி மாலை தனை வழங்க.. பணிவுடன் பெற்ற
அனுமனோ.. அதை பல்லால் கடிக்க, தன்னை
அவமதித்தான் என அன்னை துடிக்க
அன்பொழுக ராமன் அவன் தனைக் கேட்க
விளக்கினார் அனுமன்.. "ஐயனே உன் நாமம்
சொல்கையிலே உள்ளத்திலே தோன்றும்
உவகையும், நாவிலே ஊரும் ரசமும்,
இல்லாத பொருளை நான் தீண்டேன்..." என..
அன்னையவள் வினவினள்.. உன்னகத்தே
உள்ளாரோ என்னவர் என... இதோ என
நெஞ்சம் பிளந்து.. காட்டினன்.. அங்கே
அன்னவர் ராமனும், அன்னை சீதையும்
அலங்கார சொரூபமாய்.. ஆனந்த ஜோதியாய்..
கண்டவரெல்லாம் மெய் சிலிர்க்க, பொய்மை பொடிபட, தூய அன்பு துலங்கிட,
அதன் ஈரத்தில், அன்னவர் எழுந்து வந்து
ஆலிங்கனம் செய்தனன்.. காடாலிங்கனம்
ஆலிங்கனம் செய்தனன்.. காடாலிங்கனம்
உடலோடு, உடல் ஆரத்தழுவி, உள்ளமும், உள்ளமும் ஒருங்கே சேர,
இதயமும், இதயமும் அன்பைப் பரிமாற,
நிறைந்து நின்றன கண்டவர் விழிகளும்...
நிறைந்து நின்றன கண்டவர் விழிகளும்...
இணக்கம் இயல்பாக மலரவேண்டும்,
ராமாயணத்தில் இந்த இணக்கமான தழுவலை காடாலிங்கனம் என்று வர்ணிக்கிறார்கள்
இந்தக் காடாலிங்கனத்தை பெற்ற இரு பாக்கியசாலிகள் என்று குறிப்பாக இருவரை சொல்லலாம்,
ஒருவர் குகன் குகனோடு ஐவரானோம் என்று கூறிக் கொண்டே குகனை காடாலிங்கனம் செய்து கொண்டாராம் ஸ்ரீராமன்.
எவ்வளவு இணக்கமான ஜாதி மத பேதங்களைக் கடந்த தழுவல் அது,,,?
எவ்வளவு இணக்கமான ஜாதி மத பேதங்களைக் கடந்த தழுவல் அது,,,?
இரண்டாவது இப் பேறு கிடைத்தவர் அனுமன்..
அனுமன் உடனே அந்த முத்து மாலையை கடித்துப் பார்த்தானாம், சீதா தேவிக்கு கோபம் தான் கொடுத்த முத்து மாலையை மதிக்காமல் அதைக் கடித்து தன்னுடைய வானர புத்தியைக் காண்பித்து விட்டாரே அனுமன் என்று ஸ்ரீராமனிடம் முறையிட்டாளாம்,ஸ்ரீ ராமன் சாந்தமான முகத்தோடு அனுமனைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தார் என்று கேட்க அதற்கு அனுமன் மன்னிக்கவேண்டும் அன்னை சீதா தேவியின் மனதைப் புண்படுத்த எண்ணி அவ்வாறு செய்யவில்லை, அந்த முத்து மாலையில் ஸ்ரீ ராமனின் நாமாவளியை சொல்லும் போது வருகின்ற ரசம், உவப்பு ,ஸ்ரீராமநாம ருசி இருக்கிறதா என்று பார்த்தேன் என்றாராம்
அனுமன் உடனே அந்த முத்து மாலையை கடித்துப் பார்த்தானாம், சீதா தேவிக்கு கோபம் தான் கொடுத்த முத்து மாலையை மதிக்காமல் அதைக் கடித்து தன்னுடைய வானர புத்தியைக் காண்பித்து விட்டாரே அனுமன் என்று ஸ்ரீராமனிடம் முறையிட்டாளாம்,ஸ்ரீ ராமன் சாந்தமான முகத்தோடு அனுமனைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தார் என்று கேட்க அதற்கு அனுமன் மன்னிக்கவேண்டும் அன்னை சீதா தேவியின் மனதைப் புண்படுத்த எண்ணி அவ்வாறு செய்யவில்லை, அந்த முத்து மாலையில் ஸ்ரீ ராமனின் நாமாவளியை சொல்லும் போது வருகின்ற ரசம், உவப்பு ,ஸ்ரீராமநாம ருசி இருக்கிறதா என்று பார்த்தேன் என்றாராம்
ஸ்ரீ ராமனுக்கு அப்போது புரிந்ததாம் அனுமனுக்கு என்ன பரிசளிப்பது என்று
உலகிலேயே உயர்ந்ததான காடாலிங்கனம் மட்டுமே அனுமனுக்கு உவந்தது என்றுணர்ந்து அப்படியே அனுமனை ஆரத்தழுவி காடாலிங்கனம் செய்துகொண்டாராம் ஸ்ரீ ராமன்
இறைவனின் நாமத்திற்கு எதிரில் அனைத்தும் தூசு என்பதை விளக்கினார். மனிதனின் புகழ், மனித மேம்பாடு, உலக நன்மை என்ற இலட்சியங்களை இராமாயணம் விவரிக்கின்றது. காலம், செயல், காரண காரியங்கள், கடமைகளைப் பொறுத்தே ஒவ்வொரு பாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது.
சீதாப்பிராட்டி அளித்த முத்து வட மாலையே வடைமாலையாகி இருக்கலாம என்றும் விளக்கம உண்டு.
ராமநாமத்தைப் பற்றி சமய வரலாற்றிலும் ஒரு கதையுண்டு. சிவபெருமான் நடத்திய திருவிளையாடலில் சிவன் தனது கணங்களுக்கு அதிபதியாக யாரை நியமிக்கலாம் என்ற போட்டியில் தம்பி முருகனை முந்திக்கொண்டு, "ராமநாமத்துக்குள்' இந்த பிரபஞ்சமே அடங்கியுள்ளது என்ற ரகசியத்தை தெரிந்துவைத்துக் கொண்டு தரையில் "ராமா' என எழுதி அதைச்சுற்றி வந்து விநாயகர், கண அதிபதி பட்டம் பெற்றாராம்.
அனுமன் ஸ்ரீராமரின் பிரதம சீடன். ஸ்ரீராம நாமத்தை மட்டும் ஜெபிப்பதே இவரது கடன். இராமாயணம் ஜெபிக்கும் இடங்களில் இவர் இருப்பதாக ஒரு ஐதீகம். ஸ்ரீராம நாமம் அனுமன் பக்தர்களின் தாரகமந்திரம்..
அனுமன் ஸ்ரீராமரின் பிரதம சீடன். ஸ்ரீராம நாமத்தை மட்டும் ஜெபிப்பதே இவரது கடன். இராமாயணம் ஜெபிக்கும் இடங்களில் இவர் இருப்பதாக ஒரு ஐதீகம். ஸ்ரீராம நாமம் அனுமன் பக்தர்களின் தாரகமந்திரம்..
அனுமனின் துதியில் நாம் வேண்டிக் கொள்வது, புத்தி, பலம், யஸஸ்(செல்வம்), தைரியம், பயமின்மை, உடல் நலம், மனத் திண்மை, சொல்வன்மை இவையெல்லாம் அனுமன் நமக்கு அருளட்டும் என்பதுதான்.
அப்போது ஜாம்பவான், ""ஆஞ்சனேயா! என்ன செய்கிறோம் என்பதனை உணர்ந்துதான் செய்கிறாயா? இராமன் அளித்த விலை மதிப்பற்ற பரிசுப் பொருளை அவர் எதிரிலேயே அலட்சியப் படுத்துகிறாயே! இது இராமனுக்குச் செய்யும் அபசாரம் அல்லவா?'' என்று கேட்டான்.
""ஐயா! பகவான் தந்த பரிசுக்குள் இராமன் இருக்கிறாரா என்று அறியவே முத்துக்களை உடைத்துப் பார்க்கிறேன். ஒரு முத்திலும் அவர் திருவுருவம் இல்லையே! அவர் திருவுருவம் இல்லையென்றால், அது எதுவாயினும் வீண் தானே! அதனால்தான் இப்படிச் செய்கிறேன்'' என்றான் அனுமன்.
""ஆஞ்சனேயா! நீ சொல்வதும் செய்வதும் சரியாகவே இருக்கலாம். இராமன் உருவம் இல்லாதவை அனைத்தும் வீண் என்றே வைத்துக் கொள்வோம். இதோ, உன் திருமேனி இருக்கிறதே! இதில் இராமன் இருக்கிறாரா? அதைச் சோதித்துப் பார்த்தாயா! அதில் இராமன் இல்லாவிட்டால் உன் உடலும் வீண்தானே'' என்றான் ஜாம்பவான்.
""இந்த உடலில் இராமன் இல்லாவிட்டால், இதனையும் இந்த முத்துக்களைப் போல் சுழற்றி வீசி விடுகிறேன்; இதோ பாரும்'' என்று கூறிக் கொண்டே, தன் நெஞ்சை இரண்டாகப் பிளந்தான் அனுமன்.
என்ன அதிசயம்! அனுமன் நெஞ்சினுள்ளே சீதையுடன் இராமன் காட்சியளித்தான்!
கூட்டத்தினர் அனைவரும் அரியாசனத்தை நோக்கினர். அங்கே இராமன் வீற்றிருந்தான்.
அதே நிலையில் அனுமன் நெஞ்சிலும் கொலு விருந்தான் இராமன்.
""ஆஞ்சனேயா! உன் இராம பக்தியின் பெருமையை அறியாமல் பேசிவிட்டேன். நீ முத்துக்களை உடைத்து எறிந்தது சரிதான். நீ பிளந்து காட்டிய நெஞ்சை மூடிக் கொள்'' என்று வேண்டிக் கொண்டனர்.
அனுமனின் அதீத பக்தி கண்ட இராமன், ""அனுமா! நீ எங்கள் அனைவரது உயிரையும் காத்தமையால் உயிர் காத்த உத்தமன் எனப் புகழ் பெற்றாய்!
உன் செயற்கரிய உதவிக்குக் கைம்மாறாக இந்த முத்து மாலையைக் கொடுத்தது தவறுதான். மூன்று உலகங்களையும் கொடுத்தாலும் போதாது. ஆதலால், நான் என்னையே உனக்குக் கொடுக்கி றேன். போருக்கு உதவிய உன் திண்ணிய தோள் களால் என்னைத் தழுவிக் கொண்டு என்னை உன் உடமை ஆக்கிக் கொள்!'' என்று அனுமனின் அருகில் சென்று நின்றான் இராமன்.
அனுமனுக்குத் தகுந்த பரிசு இதுதான் என்று சீதை தன் புன்முறுவலால் உறுதிப்படுத்தினாள். அனுமன் "ஸ்ரீராம், ஸ்ரீராம்' என்று கூறிக் கொண்டே ஏதும் அறியாதவன்போல் தியானத்தில் ஆழ்ந்தான்.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். எல்லா காரணங்களையும் ஏற்றுக் கொண்டு வடைமாலை, (வடநாட்டில் இனிப்பான ஜாங்கிரி மாலை போடுகிறார்கள்.)
பழமாலை என்று விருப்பப்பட்ட மாலைகளை போட்டு ஆராதிப்போம்.
வடையில் இருக்கிறது விடை!
அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.
வெற்றிலைமாலை ,,,,,,,சீதையைத் தேடிதேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில் அவரை சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள் வெற்றிலை வயிறு சம்பந்தமான
எல்லா தோஷங்களையும் போக்கும் பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்
வெண்ணெய் சாத்துதல்,,,,,,,ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
சிந்தூரக் காப்பு ,,,,,,சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள். "என் அவர் நலமா?" என்று அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றதும் மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்., இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்
ராம் எழுதி மாலையாக அணிவித்தல் அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார்.
சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம்
ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார். ராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை
வாலில் பொட்டு வைப்பது ,,,,,,அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான். இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவண்னுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் வாலில் வைத்த நெருப்பினால்தான் அவருக்கு சூடு தெரியாமல்
இலங்கை தகனமானது.
ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை …நம்புகிறவர்களுக்கு பலிக்கிறது
வீட்டில் கைக்குழந்தைகள் அழுதால் நிலவைக்காட்டி வேடிக்கையாய் சாப்பிடவைப்போம்.
சாதாரண்குழதைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள். ராமதூதனாகிய அனுமனுக்கு சூரியனே விளையாட்டுப்பொருளானது. ஜிவுஜிவு என்று செக்கச்சிவந்த பழமாக மனித வாழ்விற்கு ஜீவாதாரமான சூரியனை பிடித்து உண்ண வாயுபுத்திரனான அனுமன் ,பிறந்த கொஞ்சநேரத்திலேயே பறந்து சென்றான்.
கிரஹணகாலத்தை உண்டாக்க நகர்ந்த ராகு பகவான் அனுமனிடம் தோற்க நேர்ந்தது.
அனுமனுக்கு அங்கீகாரம் கொடுக்க விரும்பிய ராகுபகவானுக்கு உகந்த தானியமான உளுந்தில் பண்டம் செய்து, தன் உடல் போல் -பாம்புபோல் வளைந்து -மாலைகளாகத்தொகுத்து அனுமனுக்கு சம்ர்ப்பித்தால ராகு தோஷம் நிவர்த்தியாகும் என்று அனுகிரகித்தார்.
வடையாகட்டும்,ஜாங்கிரி ஆகட்டும் உளுந்தினாலேயே தயாரிக்கப் படுகிறது.
தென்னக்த்தில் உப்பளங்கள் அதிகம்.
வடநாட்டில் கரும்பு விளைச்சலும் சர்க்கரை உற்பத்தியும் அதிகம். வட இந்தியர்கள் காலை உணவில்கூட இனிப்புப்பண்டம் அதிகம் விரும்புவார்கள்.ஆகவே அவர்கள் ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்.
உப்போ, சர்க்கரையோ தோஷம் தொலைந்தால் சரிதானே.
Baby Hanuman Offering Flowers to Ram
படங்களும் விவரங்களும் அருமை. நல்ல பகிர்வு.
ReplyDeleteபக்தியில் திளைத்தேன்
ReplyDelete//தரையில் "ராமா' என எழுதி அதைச்சுற்றி வந்து விநாயகர், கண அதிபதி பட்டம் பெற்றாராம்.//
ReplyDeleteஅருமையான தகவல் இதுவரை நான் அறியாத தகவலும்கூட.மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு.
எல்லா வடையும் எனக்குத்தான்
ReplyDeleteஎல்லா ஜாங்கிரியும் எனக்கும்தான்
ஜெய் ANJINIEYAA
ஆஞ்சனேயர் ப்ரியம் அதிகமோ?
ReplyDeleteவடைமாலை விவரத்துக்கு நன்றி. முத்துவட மாலை சாத்தியம் ஒத்துப் போகிறது. வடை என்பது தெற்கத்தியப் பலகாரம் என்பார்கள. அதனால் தெற்கே எங்கிருந்தாவது அவருக்கு வடைப் பிரியம் வந்திருக்குமோ?
ராம நாம ருசி - cute.
தினமும் எழுதும் உங்கள் உழைப்பு அசாத்தியமானது.
அனுமனுக்கு வடை சாற்றுதல் பற்றி நீங்கள் சொல்லிய முதல் தகவல் அறிந்ததுண்டு..மேலும் பல தகவல்கள் அறிந்ததில் மகிழ்ச்சி! நன்றி!!
ReplyDeleteஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ReplyDeleteஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
மிகவும் அருமையான பதிவு . வாழ்த்துக்கள்
ReplyDeleteஆஞ்சநேயர் பற்றிய விளக்கங்களும்
ReplyDeleteவடைமாலை குறிப்புகளும் அருமை.
குறிப்பாக
படக்காட்சிகள் அற்புதம்
கிடைத்தற்கரிய படங்கள்... தகவல்கள்! நொடிக்கு நொடி ஸ்ரீ ராமர் பாதங்களை வணங்கும் அனுமன் படமும், முதலில் இடம்பெற்ற வடைமாலை சாத்தப்பட்ட அனுமாரும் மனதை கொள்ளை கொள்கிறார்கள்.
ReplyDeleteஅருமையான பக்தி பதிவு .
ReplyDeleteபடங்களும் அருமை .
இடையில் ஒரு படம் மட்டும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது .
மன்னிக்கவும் மேடம் .
தூக்கிய வாலில் அழகிய மணி.
ReplyDeleteஇடது கையில் க(gha)தை.
வலது அபய ஹஸ்தம்.
சிவந்த உப்பிய ஆப்பிள் வாய்
அருள் பார்வை
லட்சக்கணக்கான வடைகள்
முதல் படமே
வடவடைக்க வைக்கிறதே!
ஸீதா லக்ஷ்மண ஹனூமத் ஸமேத அழகான ஸ்ரீ கோதண்டராமர் படம் இரண்டாவதாக அருமை.
ReplyDeleteமண்டியிட்டு ஸ்ரீராமருக்கு பாதபூஜை செய்யும் அந்த அசையும் ஹனுமன் .. அசத்தி விட்டீர்களே!
அரிய தகவல்கள். நன்றி.
ReplyDeleteஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருகண ஸ்ரீ ஹனூமத் ஸமேத ஸ்ரீ இராமசந்திர மூர்த்தியின் பட்டாபிஷேகப்படம் வெகு ஜோர். ஸ்ரீ பட்டாபிராமனல்லவா! அது தான் அழகோ அழகு.
ReplyDelete//உடலோடு, உடல் ஆரத்தழுவி,உள்ளமும், உள்ளமும் ஒருங்கே சேர,இதயமும், இதயமும் அன்பைப் பரிமாற,நிறைந்து நின்றன கண்டவர் விழிகளும்...
ReplyDeleteஇணக்கம் இயல்பாக மலரவேண்டும்//
வாத்ஸல்யம் என்பதை வார்த்தைகளால் இப்படி வடித்து விட்டீர்களே!
உங்களின் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.
மிக்க நன்றி.
நெஞ்சில் நிறைந்துள்ள அன்பையும் வாத்ஸல்யத்தையும் விண்டு காட்டிட முடியுமா? என்பார்கள் என் மாமியார்.
ReplyDeleteஅதையும் விண்டு காட்டிவிட்டாரே இந்த ஹனுமார்சாமி!
மெய்சிலிரிக்க வைக்கிறது,
அவரின் ஸ்ரீராம பக்தி.
அசைவ உணவுக்கு இணையான புரதச்சத்து நம் சைவ உணவில் உளுந்துக்கு மட்டுமே உள்ளதாம்.
ReplyDeleteவடைமாலை, வெண்ணெய் சாத்துதல், சிந்தூரக்காப்பு, வெற்றியைத்தரும் வெற்றிலைமாலை முதலியனபற்றி விரிவாக அனைத்து விபரங்களையும் வழக்கம்போல அழகான படங்களுடன், உங்களுக்கே உரித்தான தனித்திறமை + சொல்லாற்றலுடன், அளித்து எங்களையும் மகிழச்செய்துள்ளீர்கள்.
நெஞ்சார்ந்த நன்றிகள் + பாராட்டுக்கள் + வாழ்த்துக்களை அந்த ஹனுமன் போல என்னால் நெஞ்சைப்பிளந்து தங்களுக்குக் காட்டமுடியாமல் உள்ளேன் என்பதே உண்மை.
பேரன்புடன், பிரியத்துடன் உங்கள் vgk
அருமையான பதிவு.
ReplyDeleteநிறைய படங்கள்.
அனைத்தும் சேமித்து வைக்க வேண்டிய படங்கள்.
வாழ்த்துக்கள்.
//ராமாயணப் போர்க்களத்தில் அரக்கர்களை வடை தட்டுவதுபோல தட்டி சம்ஹாரம் செய்தவர் ஆஞ்சநேயர். அதை நினைவுபடுத்தும் வகையிலேயே அவருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. //
ReplyDeleteஆன்மீக பதிவில் இப்படி ஒவ்வொரு விசத்துக்கும் விளக்கம் கொடுத்து காரணத்தை புரிய வைத்தமைக்கு நன்றி
அந்த அனிமேசன் ஸ்ரீராமரை வணங்கும் ஆஞ்சனேயர் அழகாக உள்ளது....
ReplyDeleteஎவ்வளவு பொறுப்புணர்வோடு பதிவிடுகிறீர்கள் என அதிசயிக்க வைக்கிறீர்கள்.
ReplyDeleteபடங்களும் விவரங்களும் அருமை. நல்ல பகிர்வு.
ReplyDeleteஆஞ்சனேயருக்கு வடைமாலை ஏன் சாத்தப்படுகிறது என்பதர்க்கான காரணங்கள் நன்றாக கொடுத்துள்ளீர்கள் மேடம். புதிய விஷயம் தெரிந்துகொண்டேன்.படங்கள் ரொம்ப அழகா இருக்கு..
ReplyDeleteபடங்கள், தொழில் நுட்ப உதவியுடன் கூடிய படங்கள்
ReplyDeleteவிளக்கங்கள்,புதிய தகவலாக கடா ஆலிங்கனம்
என பலசுவைகள் சேர்ந்த பதிவாக இந்தப் பதிவு
அமைந்துள்ளது.சுவையான பதிவாக இருந்ததால்
பதிவின் நீளம் சுகமாக இருந்ததது'
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
Graphics images looking nice.......
ReplyDeleteவடை மாலை பற்றிய புதிய தகவல்கள்.நன்று
ReplyDeleteஒரு பதிவில் இத்தனை தகவல்களா-வடைமாலை,வெண்ணெய்க்காப்பு என்று எத்தனை விளக்கங்கள்?
ReplyDeleteநன்றி!
நல்ல பதிவு சகோதரி ! நானும் அனுமன் பக்தனே !! நன்றிகளும் வாழ்த்துக்களும் !!!
ReplyDeleteஇதற்கு மேல் கருத்திட்டது நானே !! நல்ல பதிவு சகோதரி ! நானும் அனுமன் பக்தனே !! நன்றிகளும் வாழ்த்துக்களும் !!!
ReplyDeleteஅறிய தகவல்கள்..
ReplyDeleteநன்றி தோழி..
அருமை. அருமை. வாழ்த்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. தெரியாத பல விசயங்களைத் தெரிவித்துள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteதங்கள் பதிவுகளை இப்போது தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.
ReplyDeleteகோவில், வழிபாடு, ஆன்மிகம் இவற்றைப் பற்றி இதுகாறும் அறியாத பல விடயங்களை நான் அறிந்து வருகின்றேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
குறிப்பாக இந்தப் பதிவில் ஆஞ்சிநேயப் பெருமானுக்கு ஏன் வடை மலை சாத்துகிறோம், ஏன் வெண்ணை உடலில் பூசுகிறோம் என்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது சிறப்பாக உள்ளது.
அத்துடன் 'காடாலிங்கனம்' என்ற ஒரு புதிய சொல் மற்றும் விளக்கத்தை அறியும் பாக்கியமும் பெற்றேன்.
தங்கள் பதிவை வாசிக்கும் போது, அதற்கு உகந்த படங்களை பார்க்கும் போது ஏதோ ஒரு நிம்மதி என் மனதை தழுவுகிறது.
வாழ்த்துகள்.
http://jayarajanpr.blogspot.com/2011/12/29.html
ReplyDeleteஅன்பு வலைப்பதிவு உரிமையாளருக்கு,
ReplyDeleteவலைப்பதிவு உலகத்தில் நன்கு அறியப்பட்ட வலைப்பதிவாளர் என்ற முறையில், நாம் ஒரு புதிய வலைத்தளத்தை எளிய தலையங்க நாள்காட்டியை (http://www.ezedcal.com) உங்களக்கு அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறான். இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வலைப்பூவை மிக எளிதில் நிர்வகிக்கலாம். இந்த தலையங்க நாள்காட்டியை உலகில் உள்ள பல வலைப்பதிவாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த தலையங்க நாள்காட்டியை மிக எளிதாக பயன்படுத்தாலம். இந்த வலைதாலத்தை பயன்படுத்த உங்களுக்கு எந்த ஒரு தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. உங்களால் ஒரு வலைப்பூவை நிர்வகிக்க முடியும் என்றல் இந்த வலைத்தளத்தையும் உங்களால் எந்த பிரச்சினை இல்லாமல் பயன் படுத்த முடியும்.
நன்மைகள்
1) ஒவொரு நாட்களுக்கும் என்ன பதிவு போடவேண்டும் என்று உங்களுக்கு தெரிந்துருப்பதால் உங்கள் வலைப்பூ பதிவுகளின் தரமும் எண்ணிக்கையும் கண்டிப்பாக உயரும். பதிவின் தரம் உயரும் பொது பார்வையாளர்கள் எண்ணிக்கை தானாகவே அதிகரிக்கும்.
2) உங்கள் வலைப்பூவின் விளம்பர வருமானம் கூடும்.
3) நீங்கள் உங்கள் வலைப்பதிவிற்கு தலையங்கம் நாள்காட்டி (http://wwww.ezedcal.com) பயன்படுத்த தொடங்கும் போது நீங்கள் எப்போதும் முன்னதாகவே திட்டமிடுகிறிர்கள். இதனால் இன்று வலைப்பதிவில் என்ன எழுத வேண்டும் என்று கடைசி நிமிடத்தில் பதரவேண்டியது இல்லை.
உங்களுக்கு வேறு எதாவது தகவல் தேவைப்பட்டால் எங்கள் மினஞ்சளுக்கு (info@ezedcal.com) தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றியுடன்,
எளிய தலையங்க நாள்காட்டி குழுமம்
info@ezedcal.com
அச்யுதாநந்த கோவிந்த
ReplyDeleteநாமோச்சாரண பேஷஜாத்!
நஸ்யந்தி ஸகலா ரோகாஸ்
ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!-7
ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்ய
முத்ருத்ய புஜமுச்யதே!
வேதாசாஸ்த்ரம் பரம் நாஸ்தி
நதைவம் கேசவாத்பரம்!!-8
ஸரீரே ஜர்ஜரீபூதே
வ்யாதிக்ரஸ்தே களேபரே!
ஒளஷதம் ஜாஹ்நவீதோயம்
வைத்யோ நாராயணோ ஹரி:!!-9
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி
விசார்ய ச புந: புந:!
இதமேகம் ஸுநிஷ்பந்நம்
த்யேயோ நாராயணோ ஹரி:!!-10
-oOo-
797+8+1=806 ;)))))
ReplyDelete