நித்யானந்தமாகி நிஷ்களச் சொரூபமாகி ஆதியாய் அநாதியாய் நின்ற ஜோதிப்பிழம்பு-..!
பஞ்சாட்சர சிவப்பரம்பொருளின் திருக்குமரன் ஷடாட்சரன்சரவணபவ குகன்.
உலகம் உய்ய ஆங்கே வ்ந்துதித்த அன்புக்குமரன் சிங்காரமாய் சொகுசாய் வாழ சொந்தவீடு அமைய அருள்பலிக்கிறான்.
பச்சை மயில் வாகனன் இச்சைகள் அனைத்தும் நிறைவேற்றவே காத்திருக்கிறான் சிறுவாபுரியில்.
உலகம் உய்ய ஆங்கே வ்ந்துதித்த அன்புக்குமரன் சிங்காரமாய் சொகுசாய் வாழ சொந்தவீடு அமைய அருள்பலிக்கிறான்.
பச்சை மயில் வாகனன் இச்சைகள் அனைத்தும் நிறைவேற்றவே காத்திருக்கிறான் சிறுவாபுரியில்.
மாமன் பெயரால் ஊர்ப்பெயர் அமைய அழகிய
மருமகன் பெயரால் புண்ணியக்ஷேத்திரம் ஆயிற்று சிறுவாபுரி என்னும் சிற்றூர்.
சிறுவாபுரி தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை.
இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை.
மருமகன் பெயரால் புண்ணியக்ஷேத்திரம் ஆயிற்று சிறுவாபுரி என்னும் சிற்றூர்.
சிறுவாபுரி தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை.
இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை.
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
மகாமண்டபம்
மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம்.
மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி முகமண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை வள்ளலான பாலசுப்பிரம்ணியப் பெருமானைக் கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடும் கோலவடிவம் தரிசிக்கலாம்.
மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி முகமண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை வள்ளலான பாலசுப்பிரம்ணியப் பெருமானைக் கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடும் கோலவடிவம் தரிசிக்கலாம்.
அருணகிரிநாதர்
முருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகாலத்தில் இம்முருகனும் மரகதக்கல்லாலேயே வடிக்கப்பட்டிருந்தார் எனவும், பிற்காலத்தில் வேறு சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் இம்முருகனும் மரகதக்கல்லாலேயே வடிக்கப்பட்டிருந்தார் எனவும், பிற்காலத்தில் வேறு சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.
முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது.
சிறுவாபுரி வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.
திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.
ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.
திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.
தல வரலாறு:
ராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு, கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால், காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு லவனும், குசனும் பிறந்தனர்.
இதன் பிறகு அவர் அஸ்வமேதயாகம் செய்தார்.
மனைவியின்றி யாகம் செய்வது யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாக குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர்.
குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார் ராமர். லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை.
இதன் பிறகு அவர் அஸ்வமேதயாகம் செய்தார்.
மனைவியின்றி யாகம் செய்வது யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாக குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர்.
குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார் ராமர். லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை.
இதனால் ராமரே, நேரில் சென்று குதிரையை மீட்டு சென்றார் என்பது ராமாயண கால செய்தியாகும்.
இந்த வரலாற்று செய்தியை, "சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்' என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது.
ராமனிடம் லவனும் குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.
கை கொடுத்த கை: இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையை துண்டித்தார். அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்துஅருள் புரிந்தார்.
இதனால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது.
இதனால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது.
சென்னைக்கு மிக அருகிலேயே சிறுவாபுரி இருக்கிறது.
சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையிலிருந்து 33வது கி.மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சிறுவாபுரி, பாலசுப்பிரமணிய ஸ்வாமியின் திருக்கோயில் தோரணவாயில் நமக்கு வழி காட்டுகிறது.
ஆலயம் நோக்கிச் செல்லும்பொழுது இருபுறமும் பசுமை படர்ந்த வயல்களும், வாழைத் தோட்டங்களும் குளுமையாகக் காட்சி தருகின்றன.
அருணகிரிநாதபெருமான் தமது திருப்புகழில் ஆடகம் பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான தென் சிறுவாபுரி என்று போற்றியுள்ளார்
சென்னை, திருவள்ளூர், பொன்னேரி, ரெட்ஹில்ஸ் என்று பல இடங்களிலிருந்தும் நகரப் பேருந்துகள் கோயில் வாசம் வரையிலும் வருகின்றன.
பெரியபாளையம் கோயில் அருகில் இருப்பதால் அம்மாவைப் பார்க்க வரும் பக்தர்கள், பிள்ளையையும் பார்க்க வருகிறார்கள்.
கொடிமரம்
உயரமான கொடிமரம், கொடி மரம் தாண்டி சதுரமான கூண்டில் மயிலுமாடிநீயுமாடி வர வேணும் என்பது போல் மரகதப் பச்சை மயில் சிலா ரூபமாக கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.
முருகப் பெருமானை முதுகில் சுமந்து ஆடி வரும் பெருமிதமான கர்வம் அதற்கு இருக்காதா என்ன?
முருகப் பெருமானை முதுகில் சுமந்து ஆடி வரும் பெருமிதமான கர்வம் அதற்கு இருக்காதா என்ன?
இத்தகைய மரகதப் பச்சை மயில் வாகனத்தை உலகில் வேற எங்கம் காண முடியாது.
அதனால்தானோ என்னவோ இதைப் பாதுகாப்பாக கம்பிகூண்டுக்குள் வைத்துள்ளார்கள்.
அதனால்தானோ என்னவோ இதைப் பாதுகாப்பாக கம்பிகூண்டுக்குள் வைத்துள்ளார்கள்.
கூண்டுக்கு முன்னால் முருகனைப் பார்த்தபடி சாதாரண கல்லினாலான மயில் ஒன்றும் இருக்கிறத.
மரகதப் பச்சை மயிலை ரசித்தபடி கோயிலை வலம் வந்தால் கோயிலின் தென்மேற்குப் மூலையில் சூரியனார் ஒளிபடும் வண்ணம் கிழக்குநோக்கி மரகத கணபதி என்று பெயர் கொண்ட இந்த மரகத விநாயகர், வேண்டுவனவெல்லாம் தருவேன் என்பது போல் அருள் பாலிக்கிறார்.
மரகதப் பச்சை மயிலை ரசித்தபடி கோயிலை வலம் வந்தால் கோயிலின் தென்மேற்குப் மூலையில் சூரியனார் ஒளிபடும் வண்ணம் கிழக்குநோக்கி மரகத கணபதி என்று பெயர் கொண்ட இந்த மரகத விநாயகர், வேண்டுவனவெல்லாம் தருவேன் என்பது போல் அருள் பாலிக்கிறார்.
அடுத்து ஆதிமூலவர் சன்னதி,
இவர் முன்னால் இருப்பது பாலசுப்ரமணிய சுவாமி விக்கிரகமாகும்.
இவர் முன்னால் இருப்பது பாலசுப்ரமணிய சுவாமி விக்கிரகமாகும்.
இவருக்கு சிறப்பான பூஜைகள் உண்டு.
சிறுவாபுரி முருகனை தரிசித்தால் புது வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நடுவே பரவி வருகிறது.
இதன் காரணமாகத்தான் பின் சுவரில் சின்னச் சின்னக் கற்களை வீடுகள் போல் அடுக்கி வைக்கிறார்கள்.
சில சிறுவர்கள் சின்னக் கற்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.
ஆதிமுருகன்
அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலம் சிறுவாபுரி. இத்தலத்தைப் போற்றி நான்கு திருப்புகழ்கள் பாடியுள்ளார். இதில் அர்ச்சனைத் திருப்புகழ் மிகவும் விசேஷம். இந்த நான்கு திருப்புகழ்களும் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.
அண்டர்பதி குடியேற என்ற திருப்புகழ் வேண்டுவன தரும் திருப்புகழ்.
சீதன வாரிஜ பாதர நமோ நம என்பது அர்ச்சனைத் திருப்புகழ். அருணகிரிநாத பெருமான், ஆறுதலங்களுக்கு அர்ச்சனைத் திருப்புகழ் பாடியுள்ளார். அதில் சிறுவாபுரி தலமும் ஒன்று.
அடுத்த தீயவை நீக்கும் திருப்புகழாக வேல் இரண்டெனும் என்ற திருப்புகழைப் பாடியுள்ளார்.
பிறவியான சடமிரங்கி என்ற வரம் தரும் திருப்புகழ் நான்காவது.
கார்த்திகை தினத்தன்று ஒவ்வொரு மாதமும் நகரத்தார் விடுதியில் அன்னதானம் சிறப்பாக நடப்பதாக பிராசாரத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பைரவர் சன்னிதியும் இருக்கிறது. இங்குள்ள நவகிரகங்கள் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பதுதான் விசேஷம். இங்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
பலிபீடத்தின் அடியில் உப்பு, மிளகு போட்டு, பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
மூலவர் பாலசுப்ரமணியரை தரிசனம் கண் கொள்ளாக்காட்சி. பச்சை மயில் வாகனனே சிவபாலசுப்ரமணியனே என்று பாடினாலும் மூலவர் முருகனுக்கு இங்கே மயில் வாகனம் இல்லை.
தேவர்கள் சேனாபதியான முருகனின் முன் வலக்கரம் அடியார்களுக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜெப மாலையை ஏந்தி இருக்க, முன் இடக்கரம் இடுப்பினும் பின் இடக்கரம் கமண்டலம் ஏந்தி பிரம்மசாஸ்தா கோலத்திலும் காட்சி அளிக்கிறார்.
முருகப் பெருமானுக்குத் தெற்கே அண்ணாமலையார் மரகதப் பச்சை வைரமாகக் காட்சித் தருகிறார். இத்தனை பெரிய மரகத ஜோதிலிங்கம் வேறு எங்கும் இல்லை. அபிதகுஜாம்பாள் என்னும் உண்ணாமலை அம்மையும் மரகதப் பச்சையான வடிவில் காட்சி அளிக்கிறார்.
அம்மன் உண்ணாமுலை
அருணகிரிநதர் திருவண்ணாமலைக்கு மயிலுமாடி நீயுமாடி வரவேணும் என்று ஆடியதற்கு இணையாக சிறுவையில் மைந்துமயில் உடனாடி வரவேணும் எனப் பாடியுள்ளதால் அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி மைந்தனின் திருமணக் கோலம் காணும் பெருமிதப் பெற்றோர்களாய் அருளுகிறார்கள்.
அண்ணாமலை - .உண்ணாமலையம்மை திருமுன் வள்ளியம்மையார் நாணம் மேலிட அரைக்கண் பார்வையால் அழகன் முருகனைப் பார்த்துக் கொண்டிருக்கும் திருமண வைபவ கோலத்தைக் காண ஆயிரம் கண்கள் போதாது.
இக்கோவில் விக்கிரகங்களில் ஆதி மூலவர், பாலசுப்ரமணிய ஸ்வாமி, நவ கிரகங்கள் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக் கல்லில் செய்யப்பட்டவை. எல்லா விக்கிரகங்களும் மரகதப் பச்சைக் கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோயிலிலும் கிடையாது.
அத்தனை வியப்புக்குரிய இத்தலத்து வள்ளி மணவாளப் பெருமானை வணங்கினால் வேண்டும் வரங்களைப் பெறலாம்.
சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேகம் மிக விஷேஷமானது.
அண்டர்பதி குடியேற என்ற திருப்புகழ் வேண்டுவன தரும் திருப்புகழ். சொந்த வீடு வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் இதைப் பாடுகிறார்கள். வீடு, தொழில், திருமணம், செல்வம், மோட்சம் என்று அனைத்தையம் தரும் திருப்புகழ் இது.
வாழ்வு செழிக்க குடும்பம் சிறக்க கலியுகத்தில் உத்தரவு தந்து தானே உத்திரவாதமாகவும் இருந்து அருளுகிறான் சிறுவைச் சிறுவன் சிங்காரவேலவன்.
சொந்த வீடு கட்ட,வாங்க இந்த கோவிலில் மனமுருகி பாடும் இனிய தமிழ் திருப்புகழ் பாடல்..
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
ஆறு வாரம் , ஒரே கிழமை சென்று வழிபட்டால் நல்லது என்றார்கள்..
தேவர்கள் இருந்து அமுதுண்ட இடம்.
தேவேந்திர பட்டணம் கிடைக்கபபட்டது
அர்ச்சனைத்திருப்புகழ் பாடல் பெற்ற இடம்
இந்திரனுக்கு இந்திரபதவி கிடைத்தது
இலவகுசர்கள் இராமரின் அசுவத்தைக் கட்டிய இடம்
இராமனுடன் பொரிட அதிகாரம் பெற்ற இடம
இராமனுடன் சிறுவர்கள் போரிட்டு வென்று ஜெயநகராக்கிய இடம்
ஒரேதிருப்புகழ்மூலம் ஐந்து பலன்களைத்த் தரும் தலம்
மரகதப்பச்சைக்கல்லில் ஜொலிக்கும் அற்புதத்தெயவத் திருவுருவங்கள் கொண்ட திருத்தலம்
கலியுகத்தில் பேசும் த்மிழ்க்கடவுளாகத்திகழும் சிறுவாபுரி முருகன் கோவில் அமைந்த பெருமை
முருகம்மையார் கைதழைக்கச் செய்தது
என எடுத்தியம்ப முடியாத எண்ணிகையில் பெருமைகள் கொண்டதலமாகும்.
தெளிவான வரலாறுடன் தெய்வ தரிசனம்
ReplyDeleteபதிவு போட ஏதாவது ஒரு பெரிய ஆபீஸ் வைத்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது. சும்மா இருக்கிற எனக்கே பத்து வரி எழுதினா இருபது நிமிடம் ஓய்வு தேவைப்படுகிறது. தினம் தினம் இவ்வளவு பெரிய பதிவுகள் எப்படி போடுகிறீர்கள் என்று ஒவ்வொரு பதிவைப் பார்க்கும்போதும் ஆச்சரியப்படுகிறேன்.
ReplyDeleteதெய்வ தரிசனம் திவ்ய தரிசனம்
ReplyDeleteபதிவிற்கு மிக்க நன்றி. கடந்த 23ம் தேதி திருமுல்லைவாயிலில் இருந்து சிறுவாபுரிக்குப் பாத யாத்திரை சென்ற குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அதைப்பற்றித் தனிப்பதிவு போட உள்ளேன். அதற்குமுன் தங்கள் பதிவைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteகோபுர தரிசனம் மற்றும் எல்லா படங்களும் நிறைவாக இருந்தன.
ReplyDeleteஅழகுத் தமிழ் முருகுக் கடவுளுக்கு
ReplyDeleteஓர் அழகிய ஆலயம்...
தரிசித்தோம்...
நன்றி சகோதரி..
உங்கள் பதிவை படித்தும் படங்களை பார்த்தும் சிறுவாபுரி ஆலயத்தை நேரில் தரிசித்த மகிழ்ச்சி!!! உங்கள் ஆன்மீக பதிவு தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteபிரதோசமான இன்று சிவனின் மைந்தன் முருகன் தரிசனம் அருமை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
நீங்க பதிவு போடறப்பல்லாம் யோசிக்கிறேன்.கோயில்கள் இவ்ளோ இருக்கான்னு.தோண்டத் தோண்ட வந்துகொண்டேயிருக்கே !
ReplyDeleteஅழகான புகைப்படங்களுடன் அழகான பதிவு ...
ReplyDeleteஉங்க பதிவுகளிலிருந்து தினம் ஒரு கோவில்,அதன் சிறப்பு, தல புராணம் பற்றி எல்லாம் அழகிய படங்களுடன் தெரிந்து கொள்ளமுடிகிறது பகிர்வுக்கு நன்றி மேடம்.
ReplyDeleteஅற்புதப்படைப்பு...
ReplyDeleteதொடரட்டும் தங்கள் ஆன்மீகப்பணி...
என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
ReplyDeleteஎன்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.
புதுப் புது தலங்களைப் பற்றி படங்களுடன் ....மிகவும் அருமை !
ReplyDelete//சென்னைக்கு மிக அருகிலேயே சிறுவாபுரி இருக்கிறது.//
ReplyDeleteசென்னையில் இருக்கிறேன்.இன்று வரை அறியவில்லை.அருமையான பகிர்வுக்கு நன்றி!
பதிவிற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅழகிய ஆலயம்...
ReplyDeleteதரிசித்தோம்...
நன்றி ..
தகவல்களுக்கு நன்றி தோழி..
ReplyDeleteஅழகான புகைப்படங்களுடன் அழகான பதிவு ...
ReplyDeleteஒரு திருத்தலம் எனச் சொன்னால் அது குறித்த
ReplyDeleteஅனைத்து தகவல்களையும் படங்களுடன்
கொடுத்து அசத்திவிடுகிறீர்கள்
வழிபாடுப் பாடலை இம்முறை சேர்த்திருந்தது
கூடுதல் சிறப்பு
நன்றி தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
அருமையாய் இருக்கிறது.
ReplyDeleteஅழகான புகைப்படங்களுடன் தெய்வ வரலாறு...
ReplyDeleteமுருகனின் அருளுடன்
ReplyDeleteபடங்களுடன் ஆன்மீக கட்டுரை பகிர்வுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் ஆன்மிக பயணம்
முருகனைப்போன்றே அழகழகான நிறையப்படங்கள். அருமையான பல்வேறு விளக்கங்கள் எல்லாமே வெகு ஜோராக உள்ளன.
ReplyDelete//சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.//
புதியதொரு அருமையான தகவல்.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
வலைச்சரத்தில் மீண்டும் அடையாளம் காட்டப்பட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்று மிகவும் தாமதமாக வந்து பின்னூட்டம் இடும்படி ஆகிவிட்டது. பொருத்தருளுங்கள்.
DrPKandaswamyPhD said...
ReplyDelete//பதிவு போட ஏதாவது ஒரு பெரிய ஆபீஸ் வைத்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது. சும்மா இருக்கிற எனக்கே பத்து வரி எழுதினா இருபது நிமிடம் ஓய்வு தேவைப்படுகிறது. தினம் தினம் இவ்வளவு பெரிய பதிவுகள் எப்படி போடுகிறீர்கள் என்று ஒவ்வொரு பதிவைப் பார்க்கும்போதும் ஆச்சரியப்படுகிறேன்.//
நீங்கள் ஆச்சர்யப்படுகிறீர்கள். நான் ஆச்சர்யப்பட்டு, ஆச்சர்யப்பட்டு சலித்துப்போய், இப்போது இதுபற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியே செய்து கொண்டிருக்கிறேன்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகள்:
இவர் ஒரு அதிசயப்பிறவி,
தெய்வாம்சம் பொருந்தியவர்,
தகவல் களஞ்சியம்,
மெய் வருத்தம் பாரார்,
பசி நோக்கார்,
கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்,
செவ்வி அருமையும் பாரார்,
அவமதிப்பும் கொள்ளார்,
கருமமே கண்ணாயினார்,
கலைவாணியின் மறுபிறவியோ என்னவோ......?
என் ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இவர் தினமும் ஒரு மிகப்பெரிய பதிவு அழகான படங்களுடன் தருவது மட்டுமல்ல. எந்தப்பதிவரின் வலைப்பூவுக்கு நாம் சென்றாலும் அநேகமாக ரோஸ் கலர் தாமரை பூத்திருப்பதையும், இவருடைய அறிவார்ந்த பின்னூட்டத்தையும் நாம் காணலாம்.
கடந்த 3 நாட்களாக மட்டும், நாம் எழுதும் பின்னூட்டங்களுக்கு பதில் எதுவும் தராமல் இருக்கிறார்கள்; அது ஏன் என்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டியதாய் உள்ளது.
அன்புடன் vgk
ரொம்ப அருமையான பயனுள்ள கட்டுரை.... வருடா வருடம் விடுமுறையில் எங்கள் வீட்டில் பக்திச் சுற்றுலா நடக்கும். இந்த வருடம் சிறுவாபுரி போகலாம் எனத் தோன்றுகிறது... மிக்க நன்றி.....
ReplyDeleteரொம்ப அருமையான பயனுள்ள கட்டுரை.... வருடா வருடம் விடுமுறையில் எங்கள் வீட்டில் பக்திச் சுற்றுலா நடக்கும். இந்த வருடம் சிறுவாபுரி போகலாம் எனத் தோன்றுகிறது... மிக்க நன்றி.....
ReplyDeleteநினைவை விட்டு அகலாத தரிசணப் பதிவு.
ReplyDelete//வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.//
ReplyDeleteரொம்ப நாட்களாக பூச நடசத்திரத்தில் முருகனுக்கு என்ன சிறப்பு (தை பூசம் அது தனி)என வினவிக்கொண்டிருந்தேன்... ஆனால் உங்கள் பதிவு மூலம் தெரிந்துக்கொண்டேன்.... அதுவும் மாசிமாசம் பூசம் நட்சத்திரம் என்று சொல்லியிருக்கிறீர்கள்... அப்படியானால் எனக்கும் முருகனுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை ஏற்கனவே அறிவேன்.. தாங்கள் தயவின் மூலம் இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொண்டேன்... என் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....நன்றி
அருமையான பதிவு.
ReplyDeleteஅழகு தமிழ்.
சென்னைக்கு அருகில் உள்ள கோவில். எனது மூத்த மருமகளுக்கு இந்த பதிவின் லிங்க் அனுப்பி நேரம் இருக்கும்போது குடும்பத்துடன் சென்று தரிசிக்க சொல்லியிருக்கிறேன்.
நீங்களும் உங்களது குடும்பத்தினருக்கும் நிறைய புண்ணியம். நீடூழி வாழ்க.
நன்றி அம்மா.
விவரங்களும் படங்களும்...அபார உழைப்பு!
ReplyDeleteசென்னையில் அத்தனை வருடங்கள் இருந்தாலும் கேள்விப்படாத கோவில். அறிமுகத்துக்கு நன்றி.
சிறுவாபுரி முருகன் .. நான் கேள்விப்பட்டதேயில்லை. நேரில் தரிசித்த உணர்வைத் தருகிறது தங்கள் பதிவு . மிக்க நன்றி மேடம்.
ReplyDeleteஇன்று எனது வலைப்பதிவில்
ReplyDeleteநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
முருக பெருமான் (ஆன்மீக சிந்தனையில் பாரதியார்)
ReplyDeletehttp://maayaulagam-4u.blogspot.com
அச்யுதாநந்த கோவிந்த
ReplyDeleteநாமோச்சாரண பேஷஜாத்!
நஸ்யந்தி ஸகலா ரோகாஸ்
ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!-7
ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்ய
முத்ருத்ய புஜமுச்யதே!
வேதாசாஸ்த்ரம் பரம் நாஸ்தி
நதைவம் கேசவாத்பரம்!!-8
ஸரீரே ஜர்ஜரீபூதே
வ்யாதிக்ரஸ்தே களேபரே!
ஒளஷதம் ஜாஹ்நவீதோயம்
வைத்யோ நாராயணோ ஹரி:!!-9
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி
விசார்ய ச புந: புந:!
இதமேகம் ஸுநிஷ்பந்நம்
த்யேயோ நாராயணோ ஹரி:!!-10
-oOo-
814+3+1=818 ;)))))
ReplyDeleteவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
ReplyDeleteஇன்றே எனது வழி பாடு தொடங்கியது (29-12-2015).முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா.