Sunday, July 17, 2011

மலர்க்கடலில் மகாராணி நகரம்

படிமம்:Flores.gif
ஆஸ்திரேலியாவில் City of Toowoomba, சென்றிருந்தோம்.
நூறு நூறு மலைகளின் ராணி ஊட்டி, இளவரசி கொடைக்கானல், ஏழைகளின் ஊட்டி ஏற்காடு ,காஷ்மீர் மலர் பள்ளத்தாக்கு ஆகியவற்றை சேர்த்தால் கூட அத்தனை பிரம்மாண்ட பூக்கடல்காட்சி கிடைக்குமா என்று மலைக்க வைத்து மகிழ்ச்சிப்படுத்தியது.
Toowoomba Carnival of Flowers

வசந்தத்தை வரவேற்கும் உற்சாகத் திருவிழாவாக செப்டம்பர் மாதம் பூக்களின் கண்காட்சி அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சி. மலர்களின் ஊர்வலம் பேரணியாக நடைபெற்ற்து. உணவுத்திருவிழாவும் சிறப்பு.
Toowoomba flower festival - Toowoomba, Queensland
Brisbane, Sydney, Melbourne and Darwin  ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து 90 நிமிடப் பயணத்தில் கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது பூக்களின் கடலான City of Toowoomba,
toowoomba garden city
ஹாலந்தைத்தாயகமாகக்கொண்ட துலிப் மலர்களின் தோட்டக்காட்சி வசீகரித்தது.

பாப்பி மலர்கள் வெகு அழகானவை. சமையலுக்குப் பயன்படும் கசகசா பாப்பி செடியின் விதைதான். இதன் பிசின்தான் போதைதரும் அபின் என்று சொல்கிறார்கள். 
அரபு நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் கசகசாவை மசாலாப்பொருள்களுடன் எடுத்துச் சென்றால் அரபுநாட்டுக் கொடுஞ் சிறையில் வாடவேண்டியதுதானாம்.

ரோஜாத்தோட்டம்தான் எத்தனை அழகு! மனதைக் கொள்ளை கொண்டது. பிறந்தநாள் விழாவோ, திருமணக் கொண்டாட்டமோ நிகழ்ந்திருந்த மகிழ்வலைகள் நிரம்பியிருந்தது. 

அங்கே ஒரு ஆராய்ச்சிக்கூடமும் இருந்தது. பார்வையிட ஆசைப்பட்டேன். காட்சி நேரம் முடிந்திருந்ததால் பார்க்க முடியவில்லை.லதா மண்டபமாகவண்ண வண்ண ரோஜாப்பூக்களாலேயே ஆன பெரிய குடில் மணம் பரப்பி அழகால் நிறைத்தது 

அரபுநாட்டிலிருந்து வந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பெயர் விசித்திரமாக இருந்தது -டெவில் ட்ரீ என்று எழுதியிருந்தது.

இன்னொருமரம் இத்தாலியிலிருந்து வந்திருக்கிறேன் 
ஏஞ்செல் ட்ரீ - தேவதை மரமென்று சொன்னது.
toowoomba queensland
செர்ரீ மரம், அவகேடா மரம் இன்னும் இன்னும் பெயர் வாயில் நுழையாத பூக்களை சுமந்திருந்த மரங்களின் பெயர்களை எல்லாம் படித்தவாறே வலம் வந்தோம்.

வசந்தங்கள் வந்து வாழ்த்தும் பொழுதெங்கும் மனம் நிறைந்த விழாக்கோலம்..

தலைக்குமேல் உச்சியில் வாட்டிவதைக்காத சூரியன் பார்த்துக்கொண்டிரும்போதே மெதுமெதுவாக வர்ணஜாலம் காட்டி மெல்லிய பூமழையாக தூறலுடன் வானவில்லும் காட்டியது. 

சின்னஞ்சிறுமியாய் பூக்களுக்குப் போட்டியாக பலவர்ணங்களை ஹோலிப்பண்டிகை போல் ஈஷிக்கொண்டு வானம் எழில் காட்சி காட்டியது.நிறங்கள் நிரம்பிய வானம் அழகா? பூக்களின் வண்ணம் அழகா??
சொல்லமுடியாமல் சந்தோசமாக தோற்றுப் போனோம்.
Rose Sky
நடுக்கடலில் கப்பல் ஒன்றின் மேலிருந்து பார்த்தால் சுற்றிலும் நீலக்கடலும் மேலே நீலஆகாயமும் காட்சிப்படுவது போல இங்கோ சுற்றிலும் எங்கும் பூக்கள் ...

பூக்கள் நிறைந்த பூக்கடலும் வானத்தில் பலவர்ண மாயாஜால நிறங்களாக நொடிக்கொரு நிறம் கட்டிக்கொண்டு எங்கெங்கும் வண்ணப்பந்தல். தத்தகாயமாய் எழிலுற சிரித்தவாறே முழு நிலவு எழுந்து எழில் கோலம் காட்டியது.
Posted Image
243a5c64.jpg Toowoomba Lions
பூங்காவில் வண்ண வண்ண விளக்குகள் பளிச்சிட்டு இந்திர லோக மாய உலகிற்கு அழைத்துச்சென்றது. இவ்வளவு நேரம் பார்த்த காட்சி சட்டென மாறி மாறி வேறு காட்சியாக காட்டிய விஞ்ஞான விந்தை.

toowoomba queensland
குளிர் வாட்ட ஆரம்பித்தது. மனமே இல்லமல் கிளம்பிவரவேண்டி இருந்தது.மரங்கள் பொன்துகள்களாக மஞ்சள் நிற மலர்களைதூவி பொற்பாதை அமைத்துக்கொடுத்தது.

34 comments:

  1. இந்த அழகைக் காண கொடுத்து வைத்திருக்கவேண்டும் ...

    ReplyDelete
  2. அடேயப்ப வண்ணமயமாக
    படங்களை மனமகிழக் கொடுத்து
    அசத்திவிட்டீர்கள்
    குறிப்பாக சூரிய உதயம் மிக மிக அருமை
    நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அழகிய இடம் பற்றி எழுதியிருக்கிறீர்கள்

    சென்று பார்க்க தஊண்டுகின்றது

    ReplyDelete
  4. அருமையான படங்கள்.

    ReplyDelete
  5. Toowoombaவில் மலர் கண்காட்சி. அருமையான புகைப்படங்கள். வயலெட்டும் பிங்குமாக அடர்ந்த பூக்களின் புகைப்படம் அழகு.

    ReplyDelete
  6. தனியாக ஒரு பூவை பார்த்தாலே சந்தோசம் .இதில் கூட்டமாக பல வர்ணங்களை காண இரு கண்கள் போதுமா .பார்த்தால் பிரிய மனம் வருமா ?

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. kavitendral panneerselvam to
    )
    எத்தனை அழகு ! படிக்க , பார்க்க பரவம்தாங்க . அருமையான படைப்பு.

    mportant mainly because it was sent directly to

    எத்தனை அழகு ! படிக்க , பார்க்க பரவம்தாங்க . அருமையான படைப்பு//

    Thank you.

    ReplyDelete
  8. இன்று ஆடி மாதம் ஒண்ணாம் தேதி. தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்.

    //"மலர்க்கடலில் மகாராணி நகரம்"// பதிவின் தலைப்பே பரவசமூட்டுவதாக உள்ளது.

    மாறிமாறி வரும் முதல் படமே வெகு அருமையாக உள்ளது.

    ReplyDelete
  9. //ஆஸ்திரேலியாவில் City of Toowoomba, சென்றிருந்தோம்.//

    மிக்க மகிழ்ச்சி. எங்கள் எல்லோருக்குமாகாகவே சென்றுள்ளீர்கள்!

    //நூறு நூறு மலைகளின் ராணி ஊட்டி, இளவரசி கொடைக்கானல், ஏழைகளின் ஊட்டி ஏற்காடு,காஷ்மீர் மலர் பள்ளத்தாக்கு ஆகியவற்றை சேர்த்தால் கூட அத்தனை பிரம்மாண்ட பூக்கடல்காட்சி கிடைக்குமா என்று மலைக்க வைத்து மகிழ்ச்சிப்படுத்தியது.
    Toowoomba Carnival of Flowers//

    ஏழைக்கான எள்ளுருண்டை என்பது போல, எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

    ReplyDelete
  10. //பாப்பி மலர்கள் வெகு அழகானவை. சமையலுக்குப் பயன்படும் கசகசா பாப்பி செடியின் விதைதான். இதன் பிசின்தான் போதைதரும் அபின் என்று சொல்கிறார்கள்.//

    புதிய தகவல், இன்று தகவல் களஞ்சியத்தின் மூலம் அறிய வாய்ப்புக்கிடைத்தது. அபின் சாப்பிட்டது போல மனம் மயக்கம் கொண்டது.

    ReplyDelete
  11. //லதா மண்டபமாகவண்ண வண்ண ரோஜாப்பூக்களாலேயே ஆன பெரிய குடில் மணம் பரப்பி அழகால் நிறைத்தது//

    லதா என்றாலே கொடி என்று அல்லவா பொருள்! படத்தில் பார்த்த எங்கள் மனமும் அந்த குடிலெனெ மணம் பரப்பி அழகால் நிறைந்து விட்டதே! நன்றி.

    ReplyDelete
  12. அந்த பச்சைக்குதிரை மேல் ஏறியோ அல்லது அதை அப்படியே பச்சைக்குதிரை தாண்டியோ மகிழ மனம் விரும்புதே!

    குதிரை தின்னும் புல்லாலேயே குதிரையை வடிவமைத்துள்ளது புல்லரிக்கச் செய்குதே!

    ReplyDelete
  13. வண்ண வண்ண பலூன்களைப் பார்க்கும்போது, நம்மை அப்படியே ஒரு சிறு குழந்தையாக மாற்றிவிடுகிறதே!

    //தலைக்குமேல் உச்சியில் வாட்டிவதைக்காத சூரியன் பார்த்துக்கொண்டிரும்போதே மெதுமெதுவாக வர்ணஜாலம் காட்டி மெல்லிய பூமழையாக தூறலுடன் வானவில்லும் காட்டியது. சின்னஞ்சிறுமியாய் பூக்களுக்குப் போட்டியாக பலவர்ணங்களை ஹோலிப்பண்டிகை போல் ஈஷிக்கொண்டு வானம் எழில் காட்சி காட்டியது.நிறங்கள் நிரம்பிய வானம் அழகா? பூக்களின் வண்ணம் அழகா??//

    தாங்கள் ஒரு மென்மையான, அழகை ரஸிக்கும் உன்னதமான, வர்ணனையாளர் என்பதை வெளிச்சமிட்டு காட்டிவிட்டீர்களே!
    சபாஷ்!

    ReplyDelete
  14. //குளிர் வாட்ட ஆரம்பித்தது. மனமே இல்லாமல் கிளம்பிவரவேண்டி இருந்தது.மரங்கள் பொன்துகள்களாக மஞ்சள் நிற மலர்களைதூவி பொற்பாதை அமைத்துக்கொடுத்தது.//

    ஆஹா! பொற்பாதையில் கடும் குளிரில் நடந்து செல்வது போன்ற அழகிய உணர்வு எனக்கும் இப்போது.

    நல்ல பதிவு. நன்றி; பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  15. புகைப்படங்கள் அனைத்துமே கொள்ளை அழகு!

    "சொல்லமுடியாமல் சந்தோசமாக தோற்றுப் போனோம்."

    உண்மை தான்! சில‌ விஷ‌ய‌ங்க‌ளில் தோற்றுப்போவ‌து கூட‌ ம‌கிழ்வாக‌வும் நிறைவாக‌வும் ஆகி விடுகிற‌து.

    த‌க‌வல்க‌ளுக்கு அன்பு ந‌ன்றி ராஜ‌ராஜேஸ்வ‌ரி!

    ReplyDelete
  16. வணக்கம் நண்பரே

    உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

    http://www.valaiyakam.com/

    ஓட்டுப்பட்டை இணைக்க:
    http://www.valaiyakam.com/page.php?page=about

    ReplyDelete
  17. அருமையான பதிவு.
    மலர் கூட்டங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. படங்களும் பதிவும் ஆகா!!

    ReplyDelete
  19. அருமையான புகைப்படங்கள்.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  20. மிகவும் அருமையான பதிவு.படங்கள் கொள்ளை அழகு இராஜராஜேஸ்வரி மேடம்.பாப்பி செடியின் பிசிந்தான் அபின் என்ற புதிய தகவல் தெரிந்துகொண்டேன்.நன்றி மேடம்..

    ReplyDelete
  21. படங்கள் அழகோ அழகு.உங்கள் மகிழ்ச்சியில் எங்களுக்கும் பங்கு!

    ReplyDelete
  22. அனுபவிக்கிறீங்க... என்ஜாய்...

    ReplyDelete
  23. மிகவும் அருமையான படங்கள். மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் விதமாய் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  24. இராஜேஸ்வரி அம்மையார் அவர்களே! காட்சி ரூபமாக மலர்க்கூட்டத்தைக் காணும்போது மனம் பரவசமடைகிறது.என்ன செய்ய ! நமது ராணிகளும் (ஊட்டி), இளவரசிகளும் (கொடைக்கானல்) காங்கிரீட் காடுகளாக மாறிவருவதைப்ப் பார்க்கும்பொது வருத்தமாக இருக்கிறது."வர்ணாஸ்ரம அதர்மம்" என்ற என் இடுகையை பாருங்களேன். முடியுமானால் பின்னூட்டமிடுங்கள். வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

    ReplyDelete
  25. //"சொல்லமுடியாமல் சந்தோசமாக தோற்றுப் போனோம்."//

    ஆஹா....

    ReplyDelete
  26. ஆஸ்திரேலியாவில் City of Toowoomba.... புத்தம்புது மலர்களே என் வாழ்த்தை சொல்லவா... மலர்களே மலர்களே இது என்ன புகைப்படத்தில் அழகாய் ...பூக்கள் என்றும் அழகுதான் உங்கள் பதிவுகளிலும்

    ReplyDelete
  27. என்ன ஒரு அழகு.இது பூக்களின் நகரமா.வாசனைகூட மனதில் மணக்கிறது தோழி !

    ReplyDelete
  28. கண்ணைக் கவரும் அழகான காட்சிப் பதிவு அருமை அருமை அருமை சகோதரி .பகிர்வுக்கு மிக்க நன்றி.
    என் வலைத்தளத்தில் என் முதற்ப்பாடல் அறிமுகம் செய்துள்ளேன்.உங்கள் கருத்துக்
    காணவும் காத்திருக்கின்றேன் சகோதரி.
    சிரமம் பாராமல் என் மறக்க முடியாத நினைவுகளுடன் உங்களையும் இணைத்துக்கொளுங்கள் மிக்க நன்றி.

    ReplyDelete
  29. எல்லா படங்களும் கொள்ளை அழகு !!!

    ReplyDelete
  30. வழமை போலவே
    படங்களும் வர்ணனைகளும் அருமை மேடம்

    ReplyDelete
  31. அருமை!..அருமை!...ஆகா!...ஆகா!....காணக் கண்கோடி வேண்டும். வாழ்த்துகள் சகோதரி. மகிழ்ந்தேன் மன நிறைவு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  32. ராமாய ராமபத்ராய

    ராமசந்த்ராய வேதஸே!

    ரகுநாதாய நாதாய

    ஸீதாயா: பதயே நம:!!-4


    அக்ரத: ப்ருஷ்டதச்சைவ

    பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!

    ஆகர்ண பூர்ணதந்வாநெள

    ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5


    ஸந்நத்த: கவசீ கட்கீ

    சாபபாணதரோ யுவா!

    கச்சந் மமாக்ரதோ நித்யம்

    ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6

    ReplyDelete