கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியின் குருவாக வணங்கப் படும் ஹயக்கிரீவ பெருமாள் வெள்ளைக்குதிரை வடிவில் வணங்கப்படுகிறார்.
குதிரை வலிமையின் சின்னம். மின்சக்தி ஹார்ஸ் பவர் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.
குதிரை குப்புறத்தள்ளி குழிபறித்தமாதிரி, நொண்டிக்குதிரைக்குச்ச்றுக்கியது சாக்கு என்றெல்லாம் பழமொழிகள் உண்டு.
குதிரை என்றவுடன் ராஜா தேசிங்கும், மாவீரன் அலெச்சாண்டர் ,அசோகர் போன்ற வீர தீர மன்னர்கள் நினைவில் வருவார்கள்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்களுக்கு வந்தியத்தேவனின் குதிரைக்காலடி ஓசையும், சிவகாமியின் சபதத்தில் நரசிம்மபல்லவரின் குதிரை ஒலியும் மறக்கக்கூடியதா என்ன...
கண்ணபரமாத்மா அர்ஜுனனுக்குத் தேர் சாரதியாகி வெற்றி பெறச்செய்த குதிரைகளை அன்புடன் பராமரித்தாரே..
தென்னாலிராமன் குதிரை வளர்த்தகதை நகைச்சுவையானது.
ஆசியாவில் மிக உயரமான குதிரைச் சிலை என வர்ணிக்கப்படும
ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள குளமங்கலம் கிராமத்தின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த மிகப்பெரிய குதிரை சிலையுடன் கூடிய பெருங்கரையடி மீண்ட அய்யனார் ஆலயம் உள்ளது.
இக்குதிரைச் சிலை ஆசியாவில் மிக உயரமான குதிரைச் சிலை என வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மாசி மகம் எனப்படும் திருவிழா சிறப்புடையது.
குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெருங்காரையடிமிண்ட அய்யனார் திருக்கோயில் ஆசிய அளவில் பிரசித்தி பெற்ற 33 அடி உயரமுள்ள குதிரைச் சிலையைக் கொண்ட இக்கோயில் 1574-ல் கட்டப்பட்டதாகும். 1937-ல் இத்திருத்தலம் செப்பனிடப்பட்டதை கோயில் வரலாறு தெரிவிக்கிறது. 1940 கால கட்டத்தில் குதிரை சிலை சேதம் அடைந்துள்ளதையடுத்து மறுசீரமைப்பு செய்ய முயன்ற போது அதன் வயிற்றுப் பகுதியை உடைக்க முடியாததால் அதன் மேலேயே மறு சீரமைப்பு செய்யப்பட்டது.வானவெளியில் தாவிச்செல்லும் ஒரு குதிரையின் அங்க அசைவுகளுடன் காணப்படும் இந்த குதிரைசிலைதான் ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை என்கின்றனர்.
யானை சிலையும், குதிரை சிலையும்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் யானை சிலையும், எதிரில் அதே உயரத்தில் ஒரு குதிரை சிலையும் இருந்து பிற்காலத்தில் வில்லுனி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அதில் யானை சிலையை அடித்து சென்று விட்டது என்றும் இந்த குதிரை சிலை மட்டும் எஞ்சியுள்ளது என்றும் கூறுகின்றனர்.
ஆலயத்தின் சிறப்பு
இப்பகுதியில் மிகுந்த தமிழ் ஆர்வலர்களும் மற்றும் முத்தரையர் சமூகம் தழைத்து விளங்கியதற்கான அடையாளமும் இவ்வாலயத்தின் கல்வெட்டுகளிருந்து புலப்படுகிறது.இப்பகுதியைச்சுற்றி சுமார் பதினைந்து கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் ஒன்று சேரும் ஒரே இடம் இந்த ஆலயம் ஒன்றேஆகும்.இக்கிராமங்களில் திருமணம்முடிக்கும் ஒவ்வொரு தம்பதியினரும் இந்த ஆலயத்திற்கு தவறாமல் வந்து வழிபட்டு செல்கின்றனர்.மேலும் இப்பகுதியுடன் நெருங்கிய கலாச்சார உறவுகளை முத்தரையர் மன்னர்கள் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது
இக்கோயிலை சுமார் ரூ. 2 கோடியில் புதுப்பித்து குடமுழுக்கு நடத்த கிராமப் பொதுமக்கள் முடிவெடுத்ததைத் தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கின.கோயில் கருவறை, மஹா மண்டபம் ஆகியவை சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் தனிக்கோபுரத்துடன் விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார சாமிகளுக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
இயற்கைப் பொருள்களால் குதிரைச் சிலை வர்ணம் பூசப்பட்டுள்ளது
மேலும் ரசாயனக் கலப்பின்றி இயற்கைப் பொருள்களால் குதிரைச் சிலை வர்ணம் பூசப்பட்டுள்ளது.ஆலயத்தின் கருவறை கோபுரத்தில் தங்கக் கலசம் அமைக்க பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று கலசம் அமைக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு விழா
குடமுழுக்கை காண பல்வேறு மாவட்ட மக்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். ஆண்டு தோறும் மாசிமகம் அன்று திருவிழா நாளில் லட்சம் பக்தர்கள் கூடும் இந்த கோயிலில் குதிரைக்கு மட்டும் சுமார் 1000 காகிதப்பூ மாலை போடப்படும். இந்நாளில் அருகிலுள்ள பல ஊர்களி்லிருந்து அதிக அளவில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இப்பகுதியைச்சுற்றி சுமார் பதினைந்து கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் ஒன்று சேரும் ஒரே இடம் இந்த ஆலயம் ஆகும்.
தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதியிலுள்ள வீரப்ப ஐயனார் மலைக்கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. வீரப்ப அய்யனார் சுவாமி முதல் நாள் தேனி - அல்லிநகரம் நகர்ப் பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். சித்திரை முதல் நாள் காலை 9 மணியளவில் தேனி -அல்லிநகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருந்து வீரப்ப அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களின் காவடிகளுடன் ஊர்வலமாக நகர் பகுதியில் இருந்து மலைக் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். பகல் 2 மணியளவில் மலைக் கோவில் வளாகத்தைச் சென்றடைகிறது. இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, இளநீர் காவடி, பால்குடம் போன்ற நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.
வீரப்ப அய்யனாருக்கு உகந்த மலர் மல்லிகை என்பதால் பக்தர்கள் மல்லிகை மலரிலான மாலைகளை சுவாமிக்குப் பூசைப் பொருட்களுடன் கொண்டு சென்று வணங்குகின்றனர். வீரப்ப அய்யனாருக்குப் பிடித்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல் என்பதால் கோயில் வளாகத்தில் பல இடங்களில் சர்க்கரைப் பொங்கல் வைத்தும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஆடு உள்ளிட்ட பலிகள் இங்கு ஏற்றுக் கொள்வதில்லை. இருப்பினும் அருகில் உள்ள கருப்பசாமி கோயிலுக்குச் செய்வதாக இவ்வளாகத்தில் ஆடு, கோழி போன்றவை பலியிடப்பட்டு அசைவ உணவு உண்ணும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சுயம்பு வடிவிலான வீரப்ப அய்யனார் வளர்ச்சி அடைந்து வருவதாக இங்குள்ள கோயில் பூசாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சுவாமிக்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளைத் தற்போது இலகுவாக போட முடியவில்லை என்பதைக் கொண்டு சுயம்பு வடிவத்தின் வளர்ச்சியை அறியலாம் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
கோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. தங்கள் மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் நிவர்த்தியாகும் என்பதும் இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை.
குதிரையின் வெண்மை வண்ணம்
ReplyDeleteபிரமாதமாக ஜொலிக்கிறது
இயற்கையாக கிடைக்கும் பொருட்களால்
எனக் கூறுகையில் இன்னும் ஆச்சரிய மாக இருக்கிறது
இதுவரை நான்அறியாத ஊர் என்பதாலும்
தகவல்கள் புதியது என்பதாலும்
அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி கொண்டேன்
நன்றி தொடர வாழ்த்துக்கள்
டெம்ப்ளேட் கமென்ட்டுக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஆஜர்.
அழகிய படங்களுடன் அருமையான பதிவு.
ReplyDeleteஇது வரை கேள்விப்படாத ஒரு சிறப்பான கோவிலை பற்றி பகிர்ந்துள்ளீர்கள் ......பக்தி சுற்றுலாவிற்கு திட்டமிட்டால் இத்தகவல்கள் உதவும் ...நன்றி அக்கா !
ReplyDeleteநிஜ குதிரையில் அய்யம்மாள்ல உட்கார்ந்து இருக்கு.
ReplyDeleteகிராமத்து திருவிழாவும் அய்யனார் குதிரையும் வெகு அழகு. மதுரைப்பக்கத்தில்தான் கோவில். ஒருமுறை போய் பார்த்துட்டு வரணும் என்ற ஆவலைத் தூண்டியது தங்கள் கட்டுரையும் படமும். தகவலுக்கு நன்றி அம்மா.
ReplyDeleteஒரு கிராமிய காவல் தெய்வக் கோவிலை
ReplyDeleteவலம் வந்த சந்தோசம் மனதில்...
புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்து
நிறைய தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும்
உண்டென காவியங்கள் கூறுவது மிகச் சரியான ஒன்று.
அய்யனாரை வலம் வந்து அருள்பெருவோம்.
குதிரை சாமியா?
ReplyDeleteஆசியாவில் பெரிய குதிரை சிலையா ஆச்சர்யமான செய்தி
ReplyDeleteஅய்யனார்சாமியின் குதிரை என்று சொல்லலாம் என வந்தால் ஏற்கனவே நண்பர் சிபி முந்தி விட்டார்.. ஹயக்கிரீவ பெருமாள் வெள்ளைக்குதிரை ...ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் குதிரை.... வெள்ளைக்குதிரையிலே ஐயனாரே.. வேகமாய் வந்ததூடும் ஐய்னாரே.. பகிர்வுக்கு பாராட்டுக்கள்
ReplyDelete''...குதிரை வலிமையின் சின்னம். மின்சக்தி ஹார்ஸ் பவர் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது...''
ReplyDeleteபுதிரை பற்றி நிறைந்த தகவல்.. நல்ல விவரணம் வாழ்த்துகள் அன்புறவே!
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordoress.com
சூப்பர் கோயி
ReplyDeleteகுதிரை பற்றிய தகவல்கள் அருமை.
ReplyDeleteதொடர்ந்து ஆன்மிகம் பற்றி பல அறிய தகவல்கள் தந்து கொண்டிருப்பதற்கு நன்றிகள்..
ReplyDeleteமுதலில் காட்டியுள்ள குதிரையின் வெண்மை நிறம், எண்ணெய் அல்ல வெண்ணெய் தடவிய பளபளப்பு. பாயும் நேர்த்தி நல்ல அழகாக உள்ளது.
ReplyDeleteகுதிரையைப்பற்றிய பல பழமொழிகள் நன்கு நினைவு படுத்தியுள்ளீர்கள்.
குதிரையின் திறனும் வேகமும் தெரிகின்றன, எப்போதும் தங்கள் படைப்புக்களில்.
பகிர்வுக்கு நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் பேருந்து சாலையில், இடது புறமாக, ஆங்கரைக்கு சற்று முன்பாக மாந்துறை என்ற ஊரும் அங்கு ஒரு சிவன் கோயிலும், காவல் தெய்வமாக கருப்பரும் உள்ளனர். அது எங்கள் குலதெய்வங்களில் ஒன்று. அதாவது கிராம தேவதை. அந்தக்கோயிலுக்கு நிறைய சிறப்புகள் உண்டு. அந்த ஆலமரத்தடி காவல் கருப்பருக்கு, முன் இரண்டு மிக உயரமான குதிரைகள் (ஒன்று வெள்ளை ஒன்று சிவப்பு) உண்டு. அவற்றையெல்லாம் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று ஒரு எழுதப்படாத சட்டம் எங்களுக்குள் உண்டு. அதனால் அவற்றைப் பற்றியெல்லாம் படத்துடன் பதிவிட முடியாமல் உள்ளேன். நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்கலாம்.
ReplyDeleteமிகவும் சக்தி வாய்ந்த கோயில்.
சிவன் பெயர்: ஸ்ரீ ஆம்ரவணேஸ்வரர்
(ஆம்ர வனம் என்றால் மாங்காடு என்று பொருள்) அழகிய அம்பாள் பெயர்: ஸ்ரீ வாலாம்பிகா அல்லது ஸ்ரீ பாலம்பிகா.
பிள்ளையார், சுப்ரமணியர், ஆதிசங்கரர், ஸ்ரீ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரஹங்கள் எல்லாம் உண்டு. பிரதோஷ நாட்களில் ஸ்வாமி புறப்பாடும் உண்டு.
கோயில் வாசலில் சற்றே தள்ளி இந்த ஆலமரக்கருப்பர் ஸ்வாமிக்கு தனியே கோயில், பிரும்மாண்டமான இரண்டு குதிரைகள். நிறைய வேல்கள் குத்தியிருப்பார்கள்.
இந்தக்கருப்பருக்கு பொரி, பொட்டுக்கடலை, நாட்டுச்சக்கரை, சர்க்கரைப்பொங்கல், சரக்கு என்ற பெயரில் சாராயம், விஸ்கி, பிராந்தி, சுருட்டு முதலியன படையல் உண்டு.
அந்தக்காலத்தில் பூசாரி உடுக்கடிப்பார். துள்ளிக்குதிப்பார். குறி சொல்லுவார்.
வெள்ளைக்காரர்கள் ஆண்டபோது லால்குடியிலிருந்து திருச்சிக்கு வரும் சிப்பாய்கள் போலீஸார் உள்பட, யாரும் காலில் செருப்பு அல்லது பூட்ஸ் உடன் இந்தக் கோயிலைக்கடக்க மாட்டார்களாம். அவ்வாறு கடந்தால் முதுகில் சாட்டைஅடி விழுமாம். அவ்வளவு சக்தி வாய்ந்த கருப்பர் என என் முன்னோர்கள் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.
ஆடி வெள்ளி அல்லது தை வெள்ளிகளில் குடும்பத்துடன் சென்று, அம்பாளுக்கு மாவிளக்கு ஏற்றி, அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து விட்டு, கருப்பருக்கும் எல்லாம் செய்துவிட்டு வருவோம்.
இந்த உங்கள் குதிரைகளைப் பார்த்ததும், எனக்கு எந்தன் குலதெய்வமாகிய, கிராம தேவைதையாகிய ஸ்ரீ மாந்துறைக் கருப்பர் ஞாபகம் வந்து விட்டது.
நன்றி!
ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்பரவணேஸ்வரர் மாந்துறையான் துணை!
ReplyDeleteஸ்ரீ மாந்துறைக்கருப்பர் துணை!
==============================
ஸ்ரீ மாந்துறையான் கோயிலைப்பற்றி மேலும் சில விபரங்கள்:
இங்குள்ள மிகப்பெரிய சிவலிஙத்தின் மீதும் வருடத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் சூரிய ஒளி நேரிடையாக விழுவதுண்டு.
அமைதியான சிறிய அழகான கோயில்.
அம்பாளுக்கு அபிஷேகமும் அலங்காரமும் நாம் கொடுக்கும் வஸ்திரமமும் (புடவை)அழகாக விசிறி மடிப்புடன் கட்டுவார்கள். அழகென்றால் அவ்வளவு ஒரு அழகாக் இருக்கும். அம்பாள் சந்நதியை விட்டு வரவே மனஸு வராது.
வாழ்க்கையில் Study யாக இருக்க வேண்டும் என்பதற்காக கருப்பருக்கு வேல் வாங்கி பிரதிஷ்டை செய்வது வழக்கம்.
5 வருடங்கள் முன்பு திருச்சி மங்கள் & மங்களில் ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்து மிகப்பிரும்மாண்டமான வேல் ஒன்று கழுத்துப்பகுதியில் 4 மணிகள் கட்டி தயார் செய்து, தனியாக ஒரு ஆட்டோவில் ஏற்றி நேராக கோயிலுக்குக்கொண்டு போனேன்.
அதை கடையிலிருந்து வீட்டுக்கு எடுத்துவரக் கூடாதாம். அதனால் நேராக கோயிலுக்கே மாலை வேளையில் எடுத்துச்சென்றோம்.அன்று மாலை கண்குளிர பிரதோஷ ஸ்வாமி புறப்பாடு பார்த்தோம்.
மறுநாள் காலை மந்திர கோஷத்துடன் வேலை பிரதிஷ்டை செய்து விட்டு வந்தோம்.
கருப்பருக்கு கருப்பிலோ, சிவப்பிலோ பட்டுத்துணி சாத்துவது வழக்கம். அனைத்து வேல்களுக்கு எலுமிச்சம்பழம் குத்தி வைப்போம்.
இந்தக் கருப்பர் கோயில் ஆலமரத்தடி மண் மிகவும் விசேஷமானது. அதை எப்போதும் வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
எங்கு சென்றாலும், பஸ், ரயில், விமானப்பயணங்களில் இந்த மண்ணில் சிறிதளவு எங்களுடன் லக்கேஜில் வரும்.
இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் பயமே இருக்காது.இந்த மண்ணுக்கு அவ்வளவு மகிமை.
இந்த மண்ணுடன் பயணம் செல்வதால் நம்மைப்பாதுகாக்க அந்தக்காவல் தெய்வமான கருப்பண்ணஸ்வாமியும் நம்முடன் வருவதாக ஒரு நம்பிக்கை.
!
தல வரலாற்றுடன் பதிவு அருமை.
ReplyDeleteகுதிரை படங்கள் நன்றாக உள்ளன. இவ்வளவு சிறப்பு மிக்க கோயில்களை பற்றி தெரியாத பல செய்திகளை உங்கள் பதிவுகளின் மூலமாக தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி.
ReplyDeleteவண்ணக் குதிரை வாகனமாக ஊர்வலமாக என்றொரு பாடல் உண்டு. அது ஞாபகம் வந்தது. யானை, குதிரை, ரெயில் விமானம் ஆகியவை பார்க்கப் பார்க்க அலுக்காதவை!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநல்ல புதிய தகவல்கள்.
வாழ்த்துக்கள்.
குதிரை நேரில் பார்ப்பது போல் உள்ளது மேடம் .பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteகுதிரை அனிமேஷன் அழகாக உள்ளது
ReplyDeleteஅய்யனார் என்பது எந்தக் கடவுளின் வடிவம்? சிவன், விஷ்ணு, முருகன்,...?
ReplyDeleteஇந்திய வரும்போது தரிசிக்கலாம் ஏன்னு இருக்கேன் . படங்களும் தகவலும் அருமை
ReplyDeleteஅன்பு நண்பரே , நான் பேஸ்புக்கில் இணைந்துள்ளேன். ஆனால் எனக்கு அதில் உள்ள ஆப்பரேடிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை, இதை பற்றி சொல்லித்தர தமிழில் வலை முகவரி உள்ளத, எனக்கு கொஞ்சம் உதவுங்களேன்......
ReplyDeleteஅச்யுதாநந்த கோவிந்த
ReplyDeleteநாமோச்சாரண பேஷஜாத்!
நஸ்யந்தி ஸகலா ரோகாஸ்
ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!-7
ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்ய
முத்ருத்ய புஜமுச்யதே!
வேதாசாஸ்த்ரம் பரம் நாஸ்தி
நதைவம் கேசவாத்பரம்!!-8
ஸரீரே ஜர்ஜரீபூதே
வ்யாதிக்ரஸ்தே களேபரே!
ஒளஷதம் ஜாஹ்நவீதோயம்
வைத்யோ நாராயணோ ஹரி:!!-9
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி
விசார்ய ச புந: புந:!
இதமேகம் ஸுநிஷ்பந்நம்
த்யேயோ நாராயணோ ஹரி:!!-10
-oOo-
809+4+1=814 ;)))))
ReplyDeleteஎங்கள் கிராம தேவதையான மாந்துறைக்கருப்பரைப்பற்றி நான் உங்களுக்கு போய் பாய்ண்ட்ஸ் எடுத்துக்கொடுக்கிறேன்.
ஜஸ்டு ஒரு கோடு போடுகிறேன். நீங்க ரோடு போடப்போறீங்கோ எனத்தெரியாமலேயே. ;)))))))))))