Tuesday, July 19, 2011

வரம் தந்து காத்திடும் வாராஹி அம்மன்




Flower show

 Flower show















































அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபராசக்தியின் 
தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. 

காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு, தமிழ்நாட்டில் பள்ளூரிலும் ஓர் ஆலயம் உள்ளது. 

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தற்போது வாராஹி தேவி அருள்புரியும் இந்த கருவறையில் மந்திரகாளியம்மன் வீற்றிருந்தாள். 

ஒரு துர்மந்திரவாதி மந்திரகாளியம்மனையே மந்திரத்தால் கட்டிப்போட்டு சக்தியை ஒடுக்கி வைத்திருந்தான். 

அந்த இறுமாப்பில் அட்டகாசங்கள் பல செய்தான். 

அன்னையும் காலம் வருமென்று தெரிந்து வேடிக்கை பார்த்தாள். அருகிலிருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 


அதனோடு அருட்பெருங் கருணையான அன்னை வாராஹியும் மிதந்து வந்தாள். 


மெல்ல கரை தொட்டு எழுந்தாள். அங்கிருந்த கோயிலுக்குள் மந்திரகாளியம்மன்  இருப்பதை அறிந்து கோயில் திறக்க வேண்டி நின்றாள். 

‘துர்மந்திரவாதி என்னை கட்டி வைத்துள்ளான். கதவைத் திறந்தால் ஆபத்து வரும்’’ என்று சொன்னாள் மந்திரகாளியம்மன். 


அகிலத்தையே ஆட்டிவைக்கும் வாராஹி சிரித்தாள். 

‘எப்படியாவது உன்னைக் காப்பாற்றுவேன்’ என்று உறுதி சொன்னாள். 

சப்த மாதர்களில் ஒருவளான வாராஹி துர்மந்திரவாதியை வதம் செய்யப்போகும் நிகழ்வைக் காண மற்ற அறுவரான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஆலய வாயிலில் காத்திருந்தனர்.



நடுநிசியில் ஆலய வாயிலை எட்டி உதைத்தான் துர்மந்திரவாதி.

கோபக் கண்களோடு காத்திருந்த வாராஹி தேவி அவனை இரண்டாக வகிர்ந்து, கிழித்துத் தூக்கி எறிந்தாள்.

மந்திரகாளியம்மன் விடுவிக்கப்பட்டாள்.

வாராஹியிடம், ‘தாங்களே இந்த கருவறையில் அமர வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாள். துர்மந்திரவாதியின் உடல் விழுந்த இடத்தின் அருகில் மந்திரகாளியம்மன் கோயில் கொண்டாள்.

ஆலயத்தின் முகப்பில் சங்கு, சக்கரம், அபய, வரதம் தாங்கிய திருக்கோலத்தில் வாராஹி தேவி அருள்கிறாள்.

இரு புறங்களிலும் தோழியர் சாமரம் வீசி அன்னையை குளிர்விக்கின்றனர். 

அர்த்தமண்டபத்தின் முகப்பிலும் வாராஹி தேவியின் இரு புறங்களிலும் இரு சிங்கங்கள் ஆரோகணிக்கின்றன.  

 மந்திரகாளியம்மன் சிறிய வடிவில் தோழியருடன் காட்சி தருகிறாள். 

வேப்பமரம், தலமரம்.  

 பேரெழிலுடன் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி போன்றோரும்,  சப்தமாதர்களும் சுதை வடிவில் அருள்கின்றனர். 

கருவறை கோபுரத்தில் வாராஹி, வைஷ்ணவி, மகாலட்சுமி ஆகியோர் பொலிவுடன் திகழ்கின்றனர். 

ஆலய வலம் வந்து சங்கு, சக்கரம் ஏந்திய துவாரபாலகியரின் அனுமதி பெற்று பலிபீடம், சிங்கத்தை அடுத்து, கருவறையின் வலதுபுறம் விநாயகப்பெருமானை தரிசிக்கிறோம்.

மூலக் கருவறையில் இரு வாராஹிகளை தரிசிக்கலாம்.

ஒருவர், சிறு வடிவிலான ஆதிவாராஹி; அடுத்தவர் பெரிய வடிவிலான தற்போதைய வாராஹி.

இந்தப் பெரிய வாராஹியின் பீடத்தில் ஆறு மாதர்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

எருமை வாகனத்தில், பத்மாசனத்தில், நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அபய-வரத முத்திரைகள் தாங்கி தெற்கு நோக்கி அருள் பொங்க வீற்றிருக்கிறாள் அன்னை.

பூமியையே தன் பன்றி முகக்கொம்புக்கிடையில் தாங்கி காத்தருளிய மஹாவிஷ்ணுவைப்போல இந்த உலகோர் அனைவரையும் தன் பன்றிமுக அருட் பார்வையால் காத்து ரட்சிக்கிறாள் வாராஹி.

தன் அங்க தேவதையான லகுவார்த்தாலியையும், பிரத்யங்க தேவதையான ஸ்வப்ன வாராஹியையும், உபாங்க தேவதையான திரஸ்கரணியையும் தன்னுள்ளே ஏற்றிருக்கிறாள்.

தன் முன்னே நிறுவப்பட்டுள்ள ஸ்ரீசக்ரத்தின் மூலம், மேலும் தன் சக்தியை மகோன்னதமாக்கி பக்தர்களை வளப்படுத்து கிறாள்.

ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி தினங்களில் இந்த அன்னையின் சந்நதியில் வாழை இலையில் அரிசியைப் பரப்பி, உடைத்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள். 

சரிந்தவர்களையும் அன்னை அரவணைத்துத் தூக்கிச் சென்று சிகரத்தின் மேல் அமர்த்துகிறாள்.
  
செவ்வாய்க்கிழமைகளிலும், மற்ற நாட்களின் செவ்வாய் ஹோரை நேரத்திலும் இந்த அன்னையை செம்மாதுளை முத்துக்களால் அர்ச்சிப்போருக்கு, செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடுகிறது. அபிஷேகம் செய்து சிவப்பு நிற துணியை சாற்றி செவ்வரளிப் பூக்களால் அர்ச்சித்து, சர்க்கரை பொங்கலை நிவேதிக்க, தொழில் வளம் பெருகுகிறது.  

முழு கறுப்பு உளுந்தில் வடை செய்து அன்னைக்குப் படைத்திட மன நோய்கள், ஏவல், பில்லி&சூன்யம் போன்றவை நீங்குகின்றன. 

கரிநாளில் இந்த அன்னைக்கு ஒன்பது இளநீரால் அபிஷேகம் செய்து செவ்வரளிப்பூ சாற்றி, செம்மாதுளை முத்துக்கள், செவ்வாழைப் பழங்களை நிவேதித்தால், குடும்பப் பிரச்னைகள் பஞ்சாகப் பறந்து விடுகின்றன.

இதில் குறிப்பிட வேண்டியது, எந்தவித பூஜைக்கும் இந்த ஆலயத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தே நிவேதனப் பொருட்களை தயாரித்து வந்து படைக்கலாம்.
Lalita parameswari
வாராஹி தேவிக்கான ஸஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம், அரசாலை.

இதனால் ஆரம்பத்தில் அரசாலை அம்மன் என்றே இந்த தேவி வணங்கப்பட்டிருக்கிறாள் .

சிங்கத்தை வாகனமாகக் கொண்டு மூவுலகங்களுக்கும்  தேவியான லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாக தண்டநாதா எனும் திருநாமமும் இவளுக்கு உண்டு.

வாராஹி கல்பம் எனும் நூலில் வாராஹிக்கு பல்வேறு வாகனங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன விபத்துகள்  ஏற்படாமலும் இவள் காக்கிறாள்.


காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ளது பள்ளூர்.

மனதின் சுய நிலையான சுத்த நிலையே மூலமான வஜ்ர வராகி .
அவள் உள்ளத்தின் உள்ளே உறைகிறாள்,
எங்கும் தேடவேண்டாம்,

வெளியே தேடுதல் சிறுபிள்ளைத்தனமானது, மூடத்தனமானது.
மனதின் உண்மை நிலையானது,

எல்லாக் கற்பித்தல்களையும் கழிப்பது அதுவே மிக உயரிய சித்தி 

தண்டம் என்றாலே சைன்யம் என்று பெயர். சைன்யங்களின் தலைவர் தண்ட நாதா, அதாவது சேனாபதி. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தண்டநாதா என்று கூறுவர். 

கிரிசக்ர ரதத்தில் வந்து அன்னையை சேவிப்பதாக சொல்லப்படுகிறது.மங்களமே வடிவெடுத்தார் போல் விளங்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி:அகிலாண்டகோடி ப்ரம்மாண்டங்களையும் ஈன்ற அன்னை பரதேவதையாகிய அன்னை வாராஹி தேவியின் அம்சம்.


அன்னையின் இந்த வடிவமே வாராஹி என்றும் கூறுவது உண்டு. 

இவள் கிரிசக்ரம் என்ற ரதத்தை உடையவள். இங்கு கிரி என்பதற்கு மலை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. கிரி என்பதற்கு குதிரை என்றும் ஒரு பொருளுண்டு. 

புலன்களையும் கிரி என்பதுண்டு. தண்டநாதா அன்னை கையில் இருக்கும் பஞ்சபாணங்களிலிருந்து உதித்தவள் என்பர்.'கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா' என்பது ..



அம்பிகை பல சக்திகளாய் விரிந்து நிறைந்து இருப்பதையே அபிராமி பட்டர்,


“ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றால் இலையில் துயின்றெம்பெம்மானும் என் ஐயனுமே.”


என்கின்றார்.
“வாராஹி தேரிலும் சக்திகள் இருக்கின்றார்
வாராஹிப்போன்ற ப்ராக்கிரமமாய்க்
கோரமஹிஷம் மிருகம் சிம்ஹம் யாளிமேல்
கூட வருகிறார் சக்திகளும்
தண்டெடுத்து வரும் வாராஹியைப் போற்றி
அப்ஸரஸ்த்ரீகளும் தேவர்களும்
கண்டு பன்னிரண்டு நாமத்தால் வாராஹியைக்
கைகூப்பி ஸ்துதிக்கின்றார்-சோபனம் சோபனம்


Tanjore Periya Koil: Vegetable Alangaram for Varahi Amman

21 comments:

  1. வரம் தந்து அருளும் வாராஹி அம்மன் பதிவு அருமை...

    விரிவாகவும், அருமையான புகைப்படங்களுடனும் பதிவு களைகட்டியது...

    காலையில் வாராஹி அம்மன் தரிசனம் செய்ய வைத்தமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  2. //// சப்த மாதர்களில் ஒருவளான வாராஹி துர்மந்திரவாதியை வதம் செய்யப்போகும் நிகழ்வைக் காண மற்ற அறுவரான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஆலய வாயிலில் காத்திருந்தனர்.
    /////

    இன்று தான் கொஞ்சப் பேரது பேரில் தெளிவடைந்தேன்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

    ReplyDelete
  3. அருள்பவளே அருள்பவளே வாராஹி அம்மன்

    பதிவு அருமை

    ReplyDelete
  4. //தன் முன்னே நிறுவப்பட்டுள்ள ஸ்ரீசக்ரத்தின் மூலம், மேலும் தன் சக்தியை மகோன்னதமாக்கி பக்தர்களை வளப்படுத்து கிறாள்.//

    ஸ்ரீசக்ரத்தை வெகு அருமையாகக் காட்டியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  5. //தண்டம் என்றாலே சைன்யம் என்று பெயர். சைன்யங்களின் தலைவர் தண்ட நாதா, அதாவது சேனாபதி. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தண்டநாதா என்று கூறுவர்.
    கிரிசக்ர ரதத்தில் வந்து அன்னையை சேவிப்பதாக சொல்லப்படுகிறது.மங்களமே வடிவெடுத்தார் போல் விளங்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி:அகிலாண்டகோடி ப்ரம்மாண்டங்களையும் ஈன்ற அன்னை பரதேவதையாகிய அன்னை வாராஹி தேவியின் அம்சம்.//

    புதிய தகவல்.அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகியான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும், அவளை இன்று தரிஸிக்க வைத்துள்ள தங்களையும் வணங்கி மகிழ்கிறேன்.

    நன்றி, நன்றி, நன்றி!!!

    ReplyDelete
  6. //மனதின் சுய நிலையான சுத்த நிலையே
    மூலமான வஜ்ர வராகி .
    அவள் உள்ளத்தின் உள்ளே உறைகிறாள்,
    எங்கும் தேடவேண்டாம்,//

    ஆம் கடவுளை எங்கும் தேடவேண்டாம்.நம் உள்ளத்திலேயே இருக்கிறார். “கட உள்” என்ற அர்த்தத்தில் “கடவுள்” என்று சொல்லப்படுவதாக நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. வரம் தரும் வாராஹியின் இரண்டாவது பதிவு.அருமை.

    ReplyDelete
  8. பள்ளூர் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு..

    பலமுறை திருமால்பூர்
    ( திருமால்பேறு ) போயிருக்கிறேன்
    ஆனால் பள்ளூர் போனதில்லை ...

    இதை படித்ததும் அடுத்தமுறை சென்றுவிட வேண்டும் எனத் தோன்றியது.

    நன்றி..

    ReplyDelete
  10. முத்தான மூன்று
    ( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )

    என ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..

    நன்றி.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  11. சப்த மாதர்களில் வாரஹியின் பெருமை அளவிடுதற்கரியது. பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றி தோழி..

    ReplyDelete
  13. ஆலய தரிசனம் அருமை.

    படங்கள், கோவிலை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏன் ஆதங்கத்தை போக்குகிறது .
    நன்றி பதிவிற்கு

    ReplyDelete
  14. சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. கவிதை, கதை, சினிமா போன்ற மொக்கை விஷயங்கள் மட்டுமே பிளாக்கில் இருக்குமென்ற என் நம்பிக்கையை தங்கள் தளம் பொய்ப்பித்துவிட்டது. நன்றி

    ReplyDelete
  16. @ராஜி said...//

    சிரமம் என்ன தோழி. குழந்தையை வாழ்த்த கொடுத்தல்லவா வைத்திருக்கவேண்டு. மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. வருகைதந்து சிற்ப்பித்து கருத்துரை வழ்ங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.நன்றி....

    ReplyDelete
  18. கேள்விப்படாத ஆலயம். நன்றி.
    ஓம் சக்தி

    ReplyDelete
  19. துஷ்டர்கள் செய்யும் சதிகளுக்கு நேரம் வரும்போது அழிவார்கள் ... என்பதை வாராஹி தேவி துர்மந்திரவாதியை அழித்தவிதமே ஓர் உதாரணம்... நல்லதொரு ஆன்மீக பகிர்வு

    ReplyDelete
  20. ராமாய ராமபத்ராய

    ராமசந்த்ராய வேதஸே!

    ரகுநாதாய நாதாய

    ஸீதாயா: பதயே நம:!!-4


    அக்ரத: ப்ருஷ்டதச்சைவ

    பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!

    ஆகர்ண பூர்ணதந்வாநெள

    ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5


    ஸந்நத்த: கவசீ கட்கீ

    சாபபாணதரோ யுவா!

    கச்சந் மமாக்ரதோ நித்யம்

    ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6

    ReplyDelete