Sunday, October 9, 2011

பரிந்து காக்கும் பண்ணாரி அம்மன்


பரதெய்வமான அன்னை பராசக்தி கொங்குவள நாட்டின் பண்ணாரி காட்டில் மாரியம்மன் என்ற பெயருடன் பாதுகாக்கும் பண்ணாரி அம்மனாக சக்தி வாய்ந்த தெய்வமாக அருள்கிறாள். 
[Image1]
தமிழ்நாடு தவிர கர்நாடக மாநில மக்களிடையேயும் பெரிய அளவில் புகழ் பெற்ற தலம்.

பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங் கரையில் வனப்பகுதி மக்கள் மாடு மேய்த்து வாழ்ந்தனர்
இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ள திம்பம் மலையின் அடிவாரத்தில் தென்மாரி தெய்வத்தின் அவதாரம் நிகழப்போகிறது என்பதை உலகினுக்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும், புலியும் ஓரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

ஒருநாள் காராம் பசு ஒன்று தினந்தோறும் பட்டியை விட்டுவிட்டு தனியே சென்று வருவதை மேய்ப்பன் கவனித்து விட்டான். பிறகு அப்பசுவை பின்தொடர்ந்து சென்று பார்க்கையில் அப்பசு தன்தனத்தூறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணம் புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாக பொழிவதை பார்த்தான்.

இதை ஊர் மக்களிடம் தெரிவிக்க அவர்கள் வந்து அந்த குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்கையில் ஒரு புற்றும் அதனருகில் சுயம்புலிங்கத் திருவுருவம் வேங்கை மரத்தடியில் இருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அங்கிருந்தவருக்கு அருள் வந்து கேரளாவிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன், எழில் மிகுந்த இவ்விடத்தில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் என போற்றி வழிபடுங்கள் என்ற அருள்வாக்கின்படி அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில், விமானத்துடன் சிறிய கோயில் கட்டப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் தற்போது அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது. சாந்த நிலையில் முகம் இருக்கிறது. பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

காலப்போக்கில் அம்மனின் அருள் பரவத்தொடங்கி இப்போது மிகப் பெரிய புகழ் பெற்ற கோயிலாக திகழ்கிறது.

அம்மன் சுயம்பு மூர்த்தியாக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 
புற்று மண் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை.  மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். 

ஆதரவற்ற சிறுவர்களை பராமரிப்பதற்கான கருணை இல்லம் ஒன்றும் கோயில் சார்பாக நடத்தப்படுகிறது.

பங்குனி குண்டம் பெருந்திருவிழா 20 நாள் திருவிழா ,அமாவாசை உள்ளிட்ட விஷேச தினங்கள்,  வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகள்  தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

பக்தர்கள் காடுகளுக்கு போய் மரம் வெட்டி ( இதை கரும்பு வெட்டுதல் என்கிறார்கள்) கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 8 அடி நீளம் பரப்பு கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள்..

இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், 
தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர் 

முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். 
பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள்.

காலை 4 மணி முதல் மாலை வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப்பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும்.


கடைசியாக ஆடு, மாடு, போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள். 

பண்ணாரி அம்மன் கோயிலில் மிக சிறப்பு வாய்ந்த 
குண்டம் திருவிழா தமிழ்நாட்டில் மிகப்புகழ் பெற்றது.

காட்டு இலாகா அதிகாரியாக பணியாற்றிய ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பண்ணாரி அம்மன் கோயில் சுவற்றில் குறிவைத்துச் சுட்டார்.

இதன்பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன.

தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார்.

இதனால் தற்போதும் கண்வியாதி உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

திருவிழா காலத்தில் தென்படாத மிருகங்கள்: பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலம் காட்டில் உள்ளது. இங்கு யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள், செந்நாய்கள், கரடிகள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன.

கோயில் தெப்பக்கிணறு அருகில் காட்டு யானைகள்
தண்ணீர் குடிக்க தொட்டிகளும் கட்டப் பட்டுள்ளன.

திருவிழா காலங்களில் இந்த மிருகங்கள்
பக்தர்கள் கண்களில் தென்படுவதில்லை. 

கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது.
தொட்டில் பிரார்த்தனை
[Gal1]
இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால்
அம்மை கண்டவர்கள் உடனே குணமடைகிறார்கள்.
BANNARI MARI AMMAN "GOLDEN CHARIOT 

 திருமணபாக்கியம், கை, கால் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், விவசாய செழிப்பு வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக்கொண்டால் பிரார்த்தனை கைகூடுகிறது.

வேங்கைமரம் ஸ்தல விருட்சம் ஆகும்.

(கண்ணடக்கம்) உருவத்தகடுகள் (கை, கால், கண்) வாங்கி அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகிறார்கள்.

அக்னிகுண்டம் இறங்குதல், மெரவனை வேல் எடுத்து சுத்துதல், கெடா வெட்டுதல், அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் தங்கள் நேர்த்திகடன்களை நிறைவேற்றுகின்றனர்

பூச்சாற்று 
                              பங்குனி மாதம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூச்சாற்று நடக்கிறது. மறுநாள் அம்மன் சப்பரத்தில் சுற்றுவட்டாரப்பகுதிக்கு வீதி உலா வருகிறாள். 

சோளகர் என்ற மலைவாசிகள் வாத்தியங்ளும், அருந்ததி இனத்தார் தாரை, தப்பட்டை வாத்தியங்களும் முழங்க சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. 

பூச்சாற்று விழாவின் ஒன்பதாம் நாள் இரவில் அக்கினி கம்பம் அமைக்கப்பட்டு கம்பத்தருகில் மேளதாளத்துடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

15ம் நாள் திருவிழாவில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அக்கினிக் கரகம் ஏந்தியும், வேல், சூலம் தாங்கியும் மேளதாளங்கள் முழங்க அம்மனை வழிபடுகின்றனர்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து மைசூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் பண்ணாரியை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இங்கு செல்லலாம்.
Kodiveri Dam & Waterfalls
தற்போது பண்ணாரி கோவில் ஒரு சுற்றுலா தலமாக மாறிவிட்டது. கொடிவேரி அணை, பவானிசாகர் அணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கமாக மாறிவிட்டது.

ண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி தீ மிதித்த பூசாரி, பக்தர்கள்.....!
 குண்டம் இறங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
Statue of a god,Bannari Amman Temple,

40 comments:

  1. பண்ணாரி அம்மன் கோவில் பற்றிய விவரங்களுடன் பகிர்வு அருமை... புகைப்படங்கள் சேர்ப்பதில் உங்கள் பொறுமை... அப்பப்பா!

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பண்ணாரியம்மன் பற்றி அறிந்தேன் ,பகிர்வுக்கு நன்றி மேடம்


    படங்களும் வழக்கம் போல் அருமை

    ReplyDelete
  3. பண்ணாரி அம்மன் பற்றி படங்களுடன் நீங்கள் விளக்கியதில் இருந்து பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி மேடம்!

    ReplyDelete
  4. //திருவிழாக் காலங்களில் மிருகங்கள் தென்படாது//
    எப்படி தென்படும் அவர்களை விட கொடிய மிருகமான நாம் செல்லும் பொழுது...

    ReplyDelete
  5. தகவல்கள் முழுமையாக இருக்கிறது.படங்கள் அருமை.

    ReplyDelete
  6. பண்ணாரி அம்மன் கோவில் பற்றிய தகவல்,படங்கள் மிக அருமை.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. உங்களின் உழைப்பு பதிவில் தெரிகிறது! அபாரம்!

    ReplyDelete
  8. அனைத்து படங்களும் அருமையோ அருமை

    ReplyDelete
  9. பண்ணாரி அம்மன் பற்றிய அனைத்து விபரங்களும் அறிந்தோம்.

    நன்னாரி சர்பத் சாப்பிட்டது போல இனிமையாக இருந்தன.

    படங்கள் வழக்கம் போல அழகோ அழகு.

    தரிஸனம் செய்வித்த உங்களுக்கு என் ம்னமார்ந்த நன்றிகள்.

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.vgk

    ReplyDelete
  10. புன்னகை தவழும் பண்ணாரி அம்மனின் முதல் தரிசனம் கண்டேன்...

    அழகிய படங்களும், கட்டுரை பகிர்வும் ஸ்தல வரலாற்றை சொன்னவிதமும் அழகு....

    திருவிழா சமயங்களில் மிருகங்களின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக தரிசனம்....

    சுயம்பு லிங்க தோற்றமும், தீமிதி கூட்டமும், தங்கத்தேரோட்டமும் அழகு மனம் கொள்ளை கொள்ள வைத்ததுப்பா...

    கொஞ்ச நாட்களாக வரமுடியாத சூழல் ராஜேஸ்வரி....

    இருந்தாலும் இப்பவே எல்லாம் படித்துவிடுகிறேன்பா...

    அழகிய தரிசனம் நேரிலும் சென்று காண வழி தந்ததும் அருமை...

    கோவைல இருந்து சத்தியமங்கலம் 70 கி மீ, அங்கிருந்து மைசூர் போகும் வழியில் 15 கி மீ தூரத்தில் அம்பாள் தரிசனம் கிடைத்துவிடும்....

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

    ReplyDelete
  11. பண்ணாரி அம்மன் பற்றிய பதிவும் படங்களும் அருமை.

    ReplyDelete
  12. பண்ணாரி அம்மன்பற்றி முழுமையாகத்தெரிந்து கொண்டோம் பதிவும் படங்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  13. வெங்கட் நாகராஜ் said...
    பண்ணாரி அம்மன் கோவில் பற்றிய விவரங்களுடன் பகிர்வு அருமை... புகைப்படங்கள் சேர்ப்பதில் உங்கள் பொறுமை... அப்பப்பா!

    நல்ல பகிர்வுக்கு நன்றி./

    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  14. M.R said...
    பண்ணாரியம்மன் பற்றி அறிந்தேன் ,பகிர்வுக்கு நன்றி மேடம்


    படங்களும் வழக்கம் போல் அருமை/

    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  15. விக்கியுலகம் said...
    பண்ணாரி அம்மன் பற்றி படங்களுடன் நீங்கள் விளக்கியதில் இருந்து பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி மேடம்!


    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  16. suryajeeva said...
    //திருவிழாக் காலங்களில் மிருகங்கள் தென்படாது//
    எப்படி தென்படும் அவர்களை விட கொடிய மிருகமான நாம் செல்லும் பொழுது../

    மிக உண்மையான தகவல்!..
    கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  17. shanmugavel said...
    தகவல்கள் முழுமையாக இருக்கிறது.படங்கள் அருமை./

    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  18. RAMVI said...
    பண்ணாரி அம்மன் கோவில் பற்றிய தகவல்,படங்கள் மிக அருமை.பகிர்வுக்கு நன்றி./

    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  19. ரமேஷ் வெங்கடபதி said...
    உங்களின் உழைப்பு பதிவில் தெரிகிறது! அபாரம்!/

    அபாரமான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  20. வைரை சதிஷ் said...
    அனைத்து படங்களும் அருமையோ அருமை/

    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    பண்ணாரி அம்மன் பற்றிய அனைத்து விபரங்களும் அறிந்தோம்.

    நன்னாரி சர்பத் சாப்பிட்டது போல இனிமையாக இருந்தன.

    படங்கள் வழக்கம் போல அழகோ அழகு.

    தரிஸனம் செய்வித்த உங்களுக்கு என் ம்னமார்ந்த நன்றிகள்.

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.vgk/

    இனிமை நிறைந்த அருமையான ஆதமார்த்தமான கருத்துரைகளுக்கும், வாழ்த்துரைகளுக்கும் பாராட்டுகளுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  22. மஞ்சுபாஷிணி said...
    புன்னகை தவழும் பண்ணாரி அம்மனின் முதல் தரிசனம் கண்டேன்...

    அழகிய படங்களும், கட்டுரை பகிர்வும் ஸ்தல வரலாற்றை சொன்னவிதமும் அழகு....

    திருவிழா சமயங்களில் மிருகங்களின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக தரிசனம்....

    சுயம்பு லிங்க தோற்றமும், தீமிதி கூட்டமும், தங்கத்தேரோட்டமும் அழகு மனம் கொள்ளை கொள்ள வைத்ததுப்பா...

    கொஞ்ச நாட்களாக வரமுடியாத சூழல் ராஜேஸ்வரி....

    இருந்தாலும் இப்பவே எல்லாம் படித்துவிடுகிறேன்பா...

    அழகிய தரிசனம் நேரிலும் சென்று காண வழி தந்ததும் அருமை...

    கோவைல இருந்து சத்தியமங்கலம் 70 கி மீ, அங்கிருந்து மைசூர் போகும் வழியில் 15 கி மீ தூரத்தில் அம்பாள் தரிசனம் கிடைத்துவிடும்....

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.../

    வாங்க மஞ்சுபாஷிணி வாங்க!
    மதுரமாய் பதிவிற்கு அழகு சேர்க்கும் வண்ணமயமாய் ரசித்து அளித்த உற்சாகமூட்டி அளித்த அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்>

    ReplyDelete
  23. ஸ்ரீராம். said...
    பண்ணாரி அம்மன் பற்றிய பதிவும் படங்களும் அருமை./

    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  24. Lakshmi said...
    பண்ணாரி அம்மன்பற்றி முழுமையாகத்தெரிந்து கொண்டோம் பதிவும் படங்களும் நல்லா இருக்கு/

    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள் அம்மா...

    ReplyDelete
  25. உங்கள் பதிவுகளில் படங்கள் அனைத்தும் மிக நன்று தினம் ஒரு ஆன்மீக தலத்தை பற்றி தகவல்களோடு தரும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  26. சிறு வயதில் பசு பால் பொழியும் அற்புதம், அது கோவிலானது பற்றிப் படித்தது நினைவு வருகிறது. எந்த வயது வகுப்பு என்பவை ஞாபகம் இல்லை. மிக அருமை படங்களும் தகவல்களும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  27. சிறு வயதில் பசு பால் பொழியும் அற்புதம், அது கோவிலானது பற்றிப் படித்தது நினைவு வருகிறது. எந்த வயது வகுப்பு என்பவை ஞாபகம் இல்லை. மிக அருமை படங்களும் தகவல்களும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  28. சிறு வயதில் பசு பால் பொழியும் அற்புதம், அது கோவிலானது பற்றிப் படித்தது நினைவு வருகிறது. எந்த வயது வகுப்பு என்பவை ஞாபகம் இல்லை. மிக அருமை படங்களும் தகவல்களும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  29. சிறு வயதில் பசு பால் பொழியும் அற்புதம், அது கோவிலானது பற்றிப் படித்தது நினைவு வருகிறது. எந்த வயது வகுப்பு என்பவை ஞாபகம் இல்லை. மிக அருமை படங்களும் தகவல்களும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  30. சிறு வயதில் பசு பால் பொழியும் அற்புதம், அது கோவிலானது பற்றிப் படித்தது நினைவு வருகிறது. எந்த வயது வகுப்பு என்பவை ஞாபகம் இல்லை. மிக அருமை படங்களும் தகவல்களும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  31. சிறு வயதில் பசு பால் பொழியும் அற்புதம், அது கோவிலானது பற்றிப் படித்தது நினைவு வருகிறது. எந்த வயது வகுப்பு என்பவை ஞாபகம் இல்லை. மிக அருமை படங்களும் தகவல்களும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  32. சிறு வயதில் பசு பால் பொழியும் அற்புதம், அது கோவிலானது பற்றிப் படித்தது நினைவு வருகிறது. எந்த வயது வகுப்பு என்பவை ஞாபகம் இல்லை. மிக அருமை படங்களும் தகவல்களும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  33. சிறு வயதில் பசு பால் பொழியும் அற்புதம், அது கோவிலானது பற்றிப் படித்தது நினைவு வருகிறது. எந்த வயது வகுப்பு என்பவை ஞாபகம் இல்லை. மிக அருமை படங்களும் தகவல்களும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  34. ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் எந்த விவரமும் இதுவரை அறிந்ததில்லை. மிகவும் நன்றி.
    படங்களும் விவரங்களும் வழக்கம் போல் பிரமாதம்.
    தீ மிதிக்க இப்படி ஓடுகிறார்களே! பார்க்கும் பொழுதே குறுகுறுக்கிறது!

    ReplyDelete
  36. மெரவனை வேல் எடுத்து சுற்றுதல் என்றால் என்ன?

    ReplyDelete
  37. கதை சொல்லி விளக்கி இருப்பது, நன்றாக இருக்கிறது.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  38. அப்பாதுரை said...
    மெரவனை வேல் எடுத்து சுற்றுதல் என்றால் என்ன?/////////////////

    வேண்டுதலாளர்கள் அம்பிக்கையின் (மெரவனை) திருவீதியுலா நடைபெறும். மெரவணைக்குரிய கட்டணத்தைச் செலுத்தி வேலைப்பெற்றுக் கொள்ள வேண்டும். நன்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பிகையை எழுந்தருளச் செய்து, பல வாத்தியங்கள் முழங்கப் பக்த கோடிகள், வேண்டுதலாளர்கள், வேல் சூலங்களுடன் கோயிலைச் சுற்றி வழிபாடு செய்வார்கள்.

    ReplyDelete
  39. 1154+2+1=1157 ;)

    பதிலுக்கு நன்றிகள்.

    ReplyDelete