

Alangaravasal
கீழக்கரை அருகேயுள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுல்லாஹ் நினைவிடம் உள்ளது.

பெருமை வாய்ந்த ஏர்வாடி தர்காவில், வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு திருவிழா மிகவும் பிரசித்தம்..

பல லட்சம் பக்தர்கள் கூடும் விழா, இரவு துவங்கி, மறுநாள் காலை மகானின் சமாதியில் சந்தனம் பூசுவது வரை தொடரும். பல்வேறு சமுதாயத்தினர் உருவாக்கித் தந்த சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகளின் பின்னணியில் பவனி வருவதை காணவும், பங்கேற்கவும், பலன் பெறவும் வேண்டி, நாட்டின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.

மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் வெள்ளிப்பேழையில் யானை மீது எடுத்து வரப்படும் சந்தனம், மகானின் சமாதியில் அதிகாலை பூசப்படும்.
கூடியிருக்கும் அனைத்து சமூகத்தினரும் பூக்களை தூவி வரவேற்று தர்காவை மூன்று முறை வலம் வந்து, தர்கா வாசலில் பக்தர்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டபின், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
உலக நன்மைக்காக சிறப்புத் தொழுகை நடைபெறும்.
பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படும்.
Sandhanakkoodu

சந்தனக்கூட்டின் முன் தாரை, தப்பட்டை, மேள தாளத்தை ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் முழங்கி வர,
இருள் விலக்கி வழிகாட்டும் தீப்பந்தங்களை, தேவேந்திரர் சமுதாயத்தினர் ஏந்தி வர,
சந்தனக்கூட்டிற்கு தேவையான இணைப்பு கயிறை, சமுதாயத்தை பிணைக்கும் கயிறாக நினைத்து, நாடார் சமுதாயத்தினர் உருவாக்கித்தர,
விளக்கு ஏற்ற தேவைப்படும் எண்ணெய், திரியை சலவையாளர் சமுதாயத்தினர் கொண்டு தர,
தங்களது தோள் கொடுத்து சந்தனக்கூட்டை, யாதவ சமுதாயத்தினர் சுமந்து வர,
மக்கள் வெள்ளத்தில் மல்லிகை மலர்களை மாலைகளாக சூடி, மணக்க, மணக்க ஆடி அசைந்து வர கோலாகலமாக ஏர்வாடி
சந்தனக்கூடு திருவிழா அனைத்து மதத்தினரும் கொண்டாடும் மத நல்லிணக்க விழாவாக நடைபெறும்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இந்து மதத்தினரே கடந்த 265 ஆண்டுகளாக சந்தனக்கூட்டைதோளில் சுமந்தபடி தர்கா கொண்டு வருகின்றனர்.
அவர்களின் வேண்டுகோள்படி, சாரட் வண்டியில் ஊர்வலமாக கொண்டு வர தர்கா கமிட்டியினரின் ஏற்பாடு உண்டு
Erwadi flaghoisting.
அவர்களின் வேண்டுகோள்படி, சாரட் வண்டியில் ஊர்வலமாக கொண்டு வர தர்கா கமிட்டியினரின் ஏற்பாடு உண்டு
Erwadi flaghoisting.


இங்கு ராமநாதபுரத்தை ஆண்ட ரகுநாத சேதுபதி உள்ளிட்ட பலர் வந்து, தங்களது நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி சென்ற வரலாறும் உள்ளது.


ERWADIshariff ultimate




ஏர்வாடி தர்க்கா சந்தன்க்கூடு விழா கண்டு களித்தேன். நன்றி.
ReplyDeleteமத நல்லிணக்க திருவிழாவாக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
உண்மைதான்
ReplyDeleteஅழகான வரலாறு
இருமுறை கண்டுகளித்து இருக்கிறேன்
மீண்டும் நேரில் பார்த்த உணர்வு
நன்றி ராஜேஸ்வரி அம்மா
மகத்தான சேவை தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை !
ReplyDeleteசந்தனக்கூடு விழா பற்றி விரிவாகத்தெரிந்து கொண்டேன்.நன்றி.
ReplyDeleteThanks
ReplyDeleteநாகூர் சந்தனக்கூடு விழாவைப் பற்றித் தெரியும். ஏர்வாடி விழாவின் பட்ங்களையும் அவற்றின் விவரணங்களுக்கும் நன்றிகள்.
ReplyDeleteநண்பர்களுடன் ஸ்பெஷல் பேருந்து ஒன்றில் கேரளா, குற்றாலம் முதலிய இடங்களுக்குச் சுற்றுலா சென்றபோது ஒரே ஒருமுறை, சாதாரண நாளில், ஏர்வாடி தர்காவுக்குள் சென்று வந்துள்ளேன்.
ReplyDeleteமற்ற எல்லா விஷயங்களும், அழகழகான படங்களுடன் இன்று தங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன்.
பயனுள்ள பதிவுக்கு நன்றிகள். vgk
நல்ல பதிவு.
ReplyDelete"மத நல்லிணக்க திருவிழா" மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி நடாத்துவது சிறப்பு.
ReplyDeleteமத நல்லிணக்க திருவிழா வை உங்களின் பகிர்வில் தெரிந்து கொண்டேன் நன்றி
ReplyDeleteமிகப் புது விடயம் கேள்விப் பட்டதே இல்லை.மிக நன்றி. இப்படித்தானே புது விடயற்கள் அறிவது பாராட்டுகள் சகோதரி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இவ்வளவு விரிவாகத் தெரியாது,நன்றி
ReplyDeleteசூப்பர் ... காணக் கண் ஆயிரம் வேண்டும்.
ReplyDeleteநாகூரிலும் காரைக்காலிலும் சந்தனக்கூடு என்று விழா எடுப்பார்கள். என்னவென்று தெரியாமலே வளர்ந்தேன் (சாப்பாடு மட்டும் தெரியும் :)
ReplyDeleteநல்ல விவரங்கள். நன்றி.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இவ்விழாவினை தங்களது வலைப்பூவில் பதிந்து எங்கள் பகுதியினைப் பெருமைப்படுத்தியிருக்கின்றீர்கள்..
ReplyDeleteநன்றிகள் உரித்தாகுக..
இத்தனைகாலமாக தெரிந்திருக்காத விடங்களை அறிந்துகொண்டேன்.
ReplyDeleteSuper Share It To Muslims
ReplyDelete;)
ReplyDeleteஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி
ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி
ஆகமவேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாககங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேச்வரி ராஜராஜேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி
அருமையான பகிர்வு.
ReplyDelete1192+2+1=1195
ReplyDelete