


தீபாவளித் திருநாளின் போதுதான் ஹரி மந்திர் எனும் சீக்கிய பொற்கோவிலின் அடிக்கல் இடப்பட்டது..
தீபாவளித் திருநாளின் போதுதான் குரு ஹரிகோவிந்தரின் ஆன்மிக பலத்தின் முன்னர் முகலாய சாம்ராஜ்ஜிய பலம் மண்டியிட்டது.
இந்து,இஸ்லாம் சமயங்களின் கலப்பு சீக்கியமத குரு அமர்தாஸ் தீபாவளித்திருநாளை அனைத்து சீக்கியர்களும் குருவினிடம் வந்து அருள் பெறும் நாளாக அறிவித்தார்.

தீபாவளி சீக்கிய சம்பிரதாயத்தில் ‘விடுதலை திருநாள்’
(பந்தி சோர் திவஸ்) என்றும் கொண்டாடப்படுகிறது.

அமிர்த சரஸில் தீபாவளி கொண்டாட அன்னிய ஆட்சியாளர்கள் தடை விதித்திருந்தனர்,
அதனை மீறியவர் குரு கோவிந்த சிம்மரின் சீடர் -தோழருமான குரு பாயி மணிசிங் ..
அவரை அன்றைய ஆட்சியாளர்கள் தீபாவளி தினத்தன்று கைது செய்தனர்.
கட்டாய மதமாற்றம் செய்ய சித்திரவதை செய்து ஒவ்வொரு மணிக்கட்டாக விரல்களை வெட்டி மதம் மாற நிர்ப்பந்தித்தனர்.
அதனை மீறியவர் குரு கோவிந்த சிம்மரின் சீடர் -தோழருமான குரு பாயி மணிசிங் ..
அவரை அன்றைய ஆட்சியாளர்கள் தீபாவளி தினத்தன்று கைது செய்தனர்.
கட்டாய மதமாற்றம் செய்ய சித்திரவதை செய்து ஒவ்வொரு மணிக்கட்டாக விரல்களை வெட்டி மதம் மாற நிர்ப்பந்தித்தனர்.
தன்னை அவ்வாறு சித்திரவதை செய்தவரே பொறுக்க முடியாமல் அவரை முழுமையாக கொல்ல நினைத்த போது பாயி மணிசிங் கருணையுடன் அவரை தன்னை சித்திரவதை செய்தே கொல்லும்படியும் இல்லாவிட்டால் சித்திரவதையாளர் அரச தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
பின்னர் ஏக ஓங்கார தியானத்தில் ஆழ்ந்த பாயி மணிசிங் தீபாவளித்திருநாளின் பலி தியாகியானார்.

அவரது தியாகத்தை கேட்டு வளர்ந்த அடுத்த தலைமுறை வீரர் மகாராஜா ரஞ்சித் சிங் அன்னியர் ஆட்சியை அகற்றி ஆப்கானிஸ்தான் வரை தருமத்தின் கொடியை பறக்க செய்தார்.

கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமிர்தசரஸ் சென்றிருந்தோம்.
அமிர்தசரசில் எல்லா ஹோட்டலுமே பொற்கோவிலின் நடை தூரத்திலேயே இருக்கிறது. ரிக்க்ஷாவிலும் செல்லலாம்.
உலகெங்கிலும் இருந்து சீக்கியர்கள் ஒருமுறையாவது வந்து தரிசிக்க நினைக்கும் கோயில்.சீக்கியர்களின் நான்காவது குரு "குரு ராம் தாஸ்" ஏற்கனவே இருந்த் நீர்நிலையை சுத்தம் செய்து மக்கள் உபயோகிக்கும்படி செய்து அதனை சுற்றி மக்கள் வாழத்தகுந்த இடமாக மாற்றினாராம்.
அந்த குளத்தின் நடுவில் தான் இந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட
கோயில் இருக்கிறது.
கோவில் அமைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அக்கோவில் அமைந்துள்ள தெப்பக்குளம் (சரோவர்) உருவாக்கப்பட்டுவிட்டது.

நான்கு பக்கமும் தண்ணீர் சூழ தகதகவென தங்கத்தில் மின்னிக் கணகளைக்கவர்கிறது பொற்கோவில்.
சூழலில் தெய்வீகம் கமழ்ந்தது. தலைமுடியை மூடாமல் குருத்வாராவுக்குள் செல்லமுடியாது.. கைக்குட்டையாவது கட்டிக்கொண்டு செல்லவேண்டும்.
சூழலில் தெய்வீகம் கமழ்ந்தது. தலைமுடியை மூடாமல் குருத்வாராவுக்குள் செல்லமுடியாது.. கைக்குட்டையாவது கட்டிக்கொண்டு செல்லவேண்டும்.
கால் நனைக்க நீர் ஓடை. அருமையான மார்பிள் கற்களால் இழைக்கப்பட்ட வளாகம் தூய்மையில் மிளிர்கிறது,..
பலர் புனித நீராடினாலும் தூய்மையாக பாதுகக்கபடுகிறது அந்த குளம்.
இந்தகுளத்தை கரசேவையாக மக்களே இல்லத்திலிருந்து உபகரணங்கள் கொண்டுவந்து தூய்மைப்படுத்தி குளத்தில் இருந்தவற்றை புனிதமான நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார்களாம்.
தூய்மைப்படுத்திய நீரால் குளத்தை நிரப்பி அருமையாகப் பராமரிக்கிறார்கள்.ஊர்கூடி குளம் மேம்படுத்தப் பட்டிருக்கிறது.
பலர் புனித நீராடினாலும் தூய்மையாக பாதுகக்கபடுகிறது அந்த குளம்.
இந்தகுளத்தை கரசேவையாக மக்களே இல்லத்திலிருந்து உபகரணங்கள் கொண்டுவந்து தூய்மைப்படுத்தி குளத்தில் இருந்தவற்றை புனிதமான நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார்களாம்.
தூய்மைப்படுத்திய நீரால் குளத்தை நிரப்பி அருமையாகப் பராமரிக்கிறார்கள்.ஊர்கூடி குளம் மேம்படுத்தப் பட்டிருக்கிறது.
எங்கும் புனிதமான அமைதி தவழ்கிறது. எல்லோரும் சமம்..ஏழை பணக்காரன் வித்தியாசம் , சிறப்பு கட்டணம், தரிசனம் எதுவும் கிடையாது
கோவில் பிரசாதமாக 'முழங்கை வழிவார நெய் பெய்த கேசரி மனதை தித்திக்க வைத்தது..
குருத்வாராக்களில் பிரசாதமோ, இல்லை உணவு சமயத்தில் . ரொட்டி/சப்பாத்தியோ இருகைகளை ஏந்தி வாங்குவதே உணவுக்கு மரியாதை செலுத்தும் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.
குருத்வாராக்களில் பிரசாதமோ, இல்லை உணவு சமயத்தில் . ரொட்டி/சப்பாத்தியோ இருகைகளை ஏந்தி வாங்குவதே உணவுக்கு மரியாதை செலுத்தும் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டவனிடம் செல்லும் பாதை:- ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் பொற்கோவில் தெப்பக் குளத்தின் மையப் பகுதியல் அமைந்துள்ளது.
நான்கு திசைகளை நோக்கியும் உள்ள நுழைவாயில்கள் சாதி, இனம், சமய வேறுபாடின்றி, யார் வேண்டுமானாலும் வந்து செல்லலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அழகிய கலைநயத்துடன் காணப்படுகின்றன.
பொற்கோவிலுக்குள் செல்வதற்கு என்று தெப்பக் குளத்தின் மீது பாலம் அமைத்திருக்கிறார்கள.
இந்த பாலத்தை கடந்து பொற்கோவிலை அடைந்ததும், கோவிலை சுற்றி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுப்பாதை ஆண்டவனிடம் அழைத்துச் செல்லும் படிக்கட்டாக கருதப்படுகிறது.
பொற்கோவில் மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது.
முன் பகுதி பாலத்தை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.
முதல் தளத்தின் மேல் பகுதியில் 4 அடி உயரத்திற்கு கைப்பிடி சுவர் நான்கு பக்கமும் கட்டப்பட்டுள்ளது.
நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மாடங்கள் சீக்கிய கட்டிடக்கலையை அழகாக பிரதிபலிக்கின்றன.
உள்ளே எல்லா இடங்களிலும் சுவர்களில் தங்கத்தகடுகளில் பஞ்சாபி எழுத்துக்களில் க்ரந்தத்தின் முக்கிய ஸ்லோகங்கள் எம்போஸ் செய்து பொறித்திருப்பது தாஜ்மஹாலை நினைவூட்டியது.
மூன்றாவது தளத்தின் மையப் பகுதியில் பிரதான பிரார்த்தனை மண்டபம் சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிராந்த் சாகிப்' வாசிக்கபபட்டு வருகிறது.
இரவில் பத்தரை மணி அளவில் கருவறையில் இருக்கும் புனித நூலைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டுவந்து ஸ்ரீ அக்கல்தக்த் சாஹிப் கட்டிடத்தில் ஒரு அறையில் உள்ள பெரிய கட்டிலில் வைத்து மறுபடி அதிகாலை அதே பல்லக்கில் ஏற்றிக் கொண்டுபோய் கருவறையில் பூஜைகள் செய்து படிக்க ஆரம்பிப்பது தினசரி நிகழ்ச்சி.
இந்தப் புனித நூலை, உயிருள்ள மதகுருவுக்கு ஈடாக மதித்து சாமரம் வீசுவது, பிரசாதங்கள் படைப்பது, பல்லக்கில் தூக்கிக்கொண்டு போவது, பள்ளியறையில் உறங்க வைப்பது என வழிபடுகிறார்கள்.
இந்த புத்தகத்தை வாங்கும் முன் அதனை புனிதமாக போற்றி பாதுகாப்பதாக உறுதி வாங்கியபின்பே கொடுப்பார்களாம்.
the interior of the Hari Mandir, with the Granthi turning the pages of the holy book,
while worshipper stands before the Gospel,

குருத்வாராவுக்கு அருகிலேயே இலவச உணவு மையம்.. தட்டு கிண்ணங்களை அலசி எடுக்கும் பணியில் . சமைக்கும் இடத்திலும் விரும்பினால் உதவி செய்யலாம்
பகதர்கள் , வாசலில் விடும் செருப்பையும் அழகாக அடுக்கி வைப்பதும் ஒரு சேவை.
பொற்கோவில்சீக்கியர்களின் முக்கியமான புனித இடம்.
நான் - இழந்து மிதியடிகளைத் துடைத்து மனிதம் காட்டும் புனித இடம்.

சீக்கியர்களின் பொற்கோவிலிருக்கும் இலந்தை மரத்தை அவர்கள் துயர்துடைக்கும் மரமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.
பாபாபுதா தன்னுடய கிராமத்தில் எருமைகளை மேய்த்துக்கொண்டிருந்த போது மகான் குருநானக் அவர்களை சந்தித்து அவர்களுடய சீடரானார்.
பின்னர் பொற்கோவில் தலைமை அர்ச்சகருமானார்.
அப்போது அங்கு ஒரு குளம் வெட்டப்பட்டபோது இலந்தை மரத்தடியில் அமர்ந்து அவர் வேலைகளைக் கவனித்ததாகவும், இதுவே இன்றுவரை உயிர்வாழும் இலந்தை மரமுமாகும்.
பின்னர் பொற்கோவில் தலைமை அர்ச்சகருமானார்.
அப்போது அங்கு ஒரு குளம் வெட்டப்பட்டபோது இலந்தை மரத்தடியில் அமர்ந்து அவர் வேலைகளைக் கவனித்ததாகவும், இதுவே இன்றுவரை உயிர்வாழும் இலந்தை மரமுமாகும்.
கோவிலின் நுழைவாயிலான தர்ஷனி தியோரி என்ற இடத்தில் பிரமாண்டமான கதவு ஒன்று உள்ளது.
210 ஆண்டுகளுக்கு முன், இந்த கதவை மகாராஜா ரஞ்சித் சிங் இங்கு பொருத்தினார்.
சந்தன கட்டையிலான இந்த கதவு, தங்கத்திலான ஸ்குரூக்களால் முடுக்கப்பட்டு, இங்கு பொருத்தப்பட்டிருந்தது
இந்த கதவு, குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவிலுக்கு சொந்தமானது.
12ம் நூற்றாண்டில் ஆப்கனிலிருந்து படையெடுத்து வந்தவர்கள், இந்த கதவை கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் இந்த கதவு சீக்கியர்களின் கையில் கிடைத்தது.
இருந்தாலும், அப்போது இருந்த சீக்கிய மதத்தின் மூத்த தலைவர்கள் சிலர், கதவை மீண்டும் சோமநாதர் கோவில் ஒப்படைக்க விரும்பினர்.
12ம் நூற்றாண்டில் ஆப்கனிலிருந்து படையெடுத்து வந்தவர்கள், இந்த கதவை கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் இந்த கதவு சீக்கியர்களின் கையில் கிடைத்தது.
இருந்தாலும், அப்போது இருந்த சீக்கிய மதத்தின் மூத்த தலைவர்கள் சிலர், கதவை மீண்டும் சோமநாதர் கோவில் ஒப்படைக்க விரும்பினர்.

ஆனால், கோவில் நிர்வாகம் இதை ஏற்க மறுத்து விட்டது. ஆப்கானியர்கள் கொள்ளையடித்து சென்றதால், கதவின் புனிதம் கெட்டு விட்டதென கூறிவிட்டனர்.
இதையடுத்து தான் இந்த கதவு, பொற்கோவிலின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டது.
இதையடுத்து தான் இந்த கதவு, பொற்கோவிலின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டது.



![[goldentemple-wallpaper1.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiitzkYUevGv6fwwVtgnyNR1wndThZKhkO6FWMFBMCh2bb0VbywabXe4hJAUZdlp4F9CruZMq5RifPjyqxnNgOQ44vPrak_P77ztBdKJuXGDWJvVInUDXBPSaE3pFN0YtQWQRw1b11mj2Y/s640/goldentemple-wallpaper1.jpg)

இன்று சனிக்கிழமை
ReplyDeleteபடங்களுடன் இன்றும் அருமை
அட அழகு
ReplyDeleteவேளைக்கொரு அழகு! அருமை!
ReplyDeleteபொற்கோவில் பற்றிய நல்ல தகவல்கள்... படங்களும் மிக அருமை...
ReplyDeleteஅழகான புகைப்படங்கள் ,அருமையான அறியத் தகவல்கள் .நேரில் காண இயலவில்லை எனினும் தங்கள் தளம் மூலம் தரிசித்தேன் .நன்றி .
ReplyDeleteசோமநாதர் கோவில் கதவு இப்போது பொற்கோவில் கதவு ஆகிவிட்டது எனக்கு புது செய்தி.
ReplyDeleteநாங்கள் குடும்பத்துடன் போய் தரிசனம் செய்து வந்தோம்.
என் பெண் அங்கு சமையல் அறையில் உதவி செய்து வந்தாள்.
படங்கள் எல்லாம் அருமை.
தில்லியில் இருக்கும்போது பலமுறை போக எண்ணி முடியாமல் போய்விட்டது.இப்போது பார்த்த திருப்தி!அருமையான படங்கள்.நன்றி.
ReplyDeleteதங்கத்தைத்தான் வெட்டி எடுக்க முடியாது...ஒரு படத்தை தரவிறக்கி வைத்துக் கொள்ளலாமே...ரங் தே பசந்தி படத்தில் பெண் குரலில் வரும் அந்த சிறிய பாடல் நினைவுக்கு வருகிறது. ஜெயில் சிங்குக்கு ஒரு முறை பாதுகைகளை பாது காக்கும் பணி ஒரு பரிகாரமாக வழங்கப் பட்ட சம்பவமும் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteமிக அபூர்வமான தகவல்கல்.சீக்கியர்களின் புனித புத்தகம் அதனை வழிபடும் விவரங்களாகியவை அருமை மேடம்.
ReplyDeleteபடத்தில் தங்கக்கோவில் தகதகக்கிறது.அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.
கீழிருந்து 9வது படம் எனக்கு மிகப் பிடித்துது. அத்துடன் கீழே தனிய கோவில் படங்களும் அருமை. நல்ல விவரணங்கள் நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துகள். காலையில் எனது ஆக்கம் வலையேற்றி தமிழ் வெளியைக் காணும் போது உங்கள் புது ஆக்கத்தைக் கண்டு உடனே கிளிக்குவது இந்தக் கருத்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
இன்னும் எந்த எந்த மதங்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்று என்ன தோன்றுகிறது, மேலும் விவரங்கள் வரும் என்று விடை பெறுகிறேன்
ReplyDeleteபொற்கோவிலின் நிழற்படங்கள்
ReplyDeleteஅத்தனையும் கண்ணைக் கவரும் வகையில்
அருமை சகோதரி.
இந்தியாவில் நான் பார்த்து விடத்துடிக்கும் ஒரு சில இடங்களில் இந்த கோவிலும் ஒன்று. உங்கள் பதிவு மேலும் அந்த துடிப்பை அதிகப்படுத்தி விட்டது. நன்றி.
ReplyDeleteபொற்கோயில் பற்றிய ஜொலிக்கும் படங்கள் யாவும் அருமையோ அருமை.
ReplyDeleteவிளக்கங்கள் யாவும் படித்தேன்.
எல்லாமே புதுப்புதுத்தகவல்களாக, தகவல் களஞ்சியத்தின் வாயிலாகவே, இன்று முதன் முதலாக அறிய முடிந்தது.
//’நான்’ இழந்து மிதியடிகளைத் துடைத்து ’மனிதம்’ காட்டும் புனித இடம்//
;))))
பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.
ஆன்மீகத்தோடு சேர்த்து அன்னியர் ஆக்ரமிப்பால் நேர்ந்த கொடுமையையும் சொன்ன விதம் அருமை....படங்கள் அனைத்தும் பிரமாதம் ...
ReplyDeleteநீங்கள் ஒரு தகவல் களஞ்சியம். பொற்கோயில் உங்கள் பதிவில் பளபளக்கிறது. :-)
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன்.
ReplyDeleteபதிவே தகதகவென்று மின்னுகிறது... அப்பா சூப்பர் போட்டோஸ்.. பொற்கோவிலைப்பற்றி தெரிந்துகோண்டேன்..... போட்ட்ஸோஸ் தங்கமாக ஜொலிக்கிறது.. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது... நன்றி நன்றி... சூப்பர் ... வாழ்த்துக்கள்
ReplyDeleteவண்ணமயமான மனதை கொள்ளை கொள்ளும்
ReplyDeleteபதிவினைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி .வாழ்த்துக்கள்
இதுவரை அறியாத தகவல்கள் .நல்ல படங்களுடன்.நன்றி.
ReplyDeleteஅமிர்தசரஸ்பொற்கோவில் சென்றிருக்கிறேன். வண்ணப்படங்களுடன் பதிவு அருமை. பஞ்சாபில் நான் என்ற என் பதிவில் நானும் எழுதியிருந்தேன். ஆனால் ராஜராஜேஸ்வரிபோல் படங்களுடன் அல்ல.வேறு கோணம். பாராட்டுக்கள்.
ReplyDeleteபொன்னான பதிவு!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.
வாழ்த்துக்கள் அம்மா.
படங்களுடன் அருமையான தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள்..செம சூப்பர்!!!
ReplyDeleteAha!!!
ReplyDeleteUllam kollai poividathu Rajeswari.
Parkka parkka thikataveillai.
Enakkum Por koil parkavendum pol erruiikarathu.
viji
;)
ReplyDeleteஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி
ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி
ஆகமவேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாககங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேச்வரி ராஜராஜேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி
வணக்கம்
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி (அம்மா)
25,11,2012 இன்று உங்களின் ஆக்கம் ஒன்று வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் மிகவும் அருமையான படைப்பு படங்கள் எல்லாம் அழகாக இருக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாவ்..செம..
ReplyDeleteஇரவில் இப்படி இருக்குமென ரொம்ப எதிர்பார்த்தோம். விசேச நாட்களில் மட்டும் இருக்கும் போல. நாங்கள் சென்ற தினம் இப்படியில்லை.. :(
1211+2+1=1214
ReplyDeleteவாழ்த்துகள். நீங்கள் எழுதவில்லை என்றாலே எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். பொற்கோயில் கதவைக் குறித்துக் கேள்விப் பட்டேன். ஆனால் உறுதியாகத் தெரியாததால் அதைச் சொல்லவில்லை. :))))சிலர் சோம்நாத் கதவு மெக்காவில் இருப்பதாகவும் கூறினார்கள். இன்னும் சிலர் கதவு சுக்குச் சுக்காக உடைக்கப்பட்டது என்றார்கள். :))) இங்கே பொருத்தப்பட்டிருப்பது உங்கள் பதிவின் மூலம் உறுதியாகியது.
ReplyDeleteலங்கருக்கு நாங்கள் செல்லவில்லை. தரிசனம் முடிஞ்சு திரும்புகையிலேயே 2 மணி ஆகிவிட்டது. அதன் பின்னர் கொஞ்சம் கடைத்தெருவுக்குப்போய்விட்டு, ரயில்வே ஸ்டேஷன் செல்லத் தான் நேரம் இருந்தது. பொதுவாக எல்லா குருத்வாரா லங்கரிலும் சாப்பாடு கிடைக்கும்.
ReplyDelete