அசுரனை அழிக்க முப்பெரும் தேவிகளும் இணைந்து தவம் செய்ததே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் நவராத்தரி விழா கொலுவாக கொண்டாடப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற மைசூரில், நவராத்திரி விழாவான தசரா விழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கோலாகலமாக பத்து நாட்களுக்கு .கொண்டாடப்பட்டு வருகிறது.
மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியைக் கொண்டாடும் நவராத்திரித் திருவிழா .சாமுண்டி மலையில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.
விழாவின் 10-ம் நாளன்று அன்னை சாமுண்டீஸ்வரி அலங்கரிக்கப்பட்ட யானையில் தங்க பல்லக்கில் தகதகவென்று ஜொலிக்கும் சர்வ அலங்காரத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
அம்மன் பவனி வரும் யானையை பின்தொடர்ந்து யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவையும் வரும்
அரண்மனை மின்னொளியில் ஜொலிக்கும் அழகையும், மைசூர் நகரமே மின்னொளியில் ஜொலி ஜொலிக்கும் காட்சியையும் காண இந்தியா வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அன்றைய தினம் தவறாமல் மைசூருக்கு வந்து விடுகின்றனர்.
மைசூர் தசரா பண்டிகையில் யானைகளுக்கு முக்கியப்பங்கு உண்டு. மொத்தம் 12 யானைகள் கலந்து கொள்கின்றன. இதற்காக யானைகள் நாகாஹொளே தேசியப் பூங்காவிலிருந்து அழைத்து வரப்படுகின்றன. யானைப் பேரணிக்கு தலைமை தாங்கும் பலராமாவுக்கு தனிச் சிறப்புண்டு. தொடர்ந்து பல வருடமாக அது தங்க அம்பாரியைச் சுமக்கிறது. துரோணா என்ற யானை இதுவரை 14 தடவை தங்க அம்பாரியைச் சுமந்து சாதனை படைத்துள்ளது.
பலராமாவுடன் அர்ஜுனா, பரதா, கஜேந்திரா போன்ற யானைகளும் வரும்.
BALARAMA ELEPHANT CARRYING THE GOLDEN HOWDAH
தசராவுக்காக காட்டிலிருந்து வரும் இந்த யானைகளுக்குத் தரப்படும் வரவேற்பே தனி அழகு. மலர்கள் தூவப்பட்டு ஆட்டம் பாட்டத்துடன் யானைகள் வரவேற்கப்படுவதைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர். யானைகள் வந்துவிட்டாலே தசரா களை கட்டிவிடும்.வண்ண, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பலராமா யானை கம்பீரமாக நடந்து செல்ல, அதன் இருபக்கமும் இரு யானைகள் நடந்து வர ஊர்வலம் அரண்மனையில் இருந்து புறப்படும்.
கட்டிடக்கலையில் அசத்தும் மைசூர் அரண்மனைமிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அசத்தலான ஆர்க்கிடெக்ச்சர்!
படங்கள் பதிவுக்கு பலம் சேர்க்கிறது.
ReplyDeleteபடவிளக்கங்களுடன் ”தசரா விழா” படிக்க படிக்க அருமை
ReplyDeleteதங்களின் அயராத முயற்சி தொடரட்டும்
நன்றியுடன்
சம்பத்குமார்
இனிய பகிர்வு.... படங்கள் அருமை...
ReplyDelete//the victory of good over evil//
ReplyDeleteதசராவுக்கும் ராவணனுக்கும் என்னங்க சம்பந்தம்?
முத போட்டோ.. சூப்பர்
ReplyDelete2 suryajeeva said...
ReplyDelete//the victory of good over evil//
தசராவுக்கும் ராவணனுக்கும் என்னங்க சம்பந்தம்?//
சம்பந்தம் இருக்கிறதே
விஜய தசமி:-
வட இந்தியர்கள் இந்த நவராத்திரி விழாவை பத்து நாள் தசரா விழாவாகக் கொண்டாடுகின்றனர். அயோத்தி இளவரசன் ஸ்ரீராமன், காட்டில் தங்கி வசித்து வரும்போது, தனது மனைவி சீதாதேவியைக் கடத்திச் சென்று சிறை வைத்த இலங்கை வேந்தன் ராவணன் மீது போர் தொடுத்துச் சென்று, அவனை மாய்த்துச் சீதையை மீட்டுக் கொண்டு, அவள் மீண்டும் அயோத்தி நகர் திரும்பிய தினமாக விஜய தசமியை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இரண்டாவது படமும் நிஜத்தில் தீப காணிக்கை காட்டுவது போல் அழகாக ஜொலிக்கிறது..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇரவில் ஜொலிக்கும் அரண்மனை அட்டகாசம்...
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஇனிய பகிர்வு.... படங்கள் அருமை.../
நன்றி.
சம்பத்குமார் said...
ReplyDeleteபடவிளக்கங்களுடன் ”தசரா விழா” படிக்க படிக்க அருமை
தங்களின் அயராத முயற்சி தொடரட்டும்
நன்றியுடன்
சம்பத்குமார்/
கருத்துரைக்கு நன்றி.
பலராம யானை தான் ஹீரோ போலிருக்கிறது.
ReplyDeleteசார்வாகன் said...
ReplyDeletenice/
நன்றி
விமலன் said...
ReplyDeleteபடங்கள் பதிவுக்கு பலம் சேர்க்கிறது./
கருத்துரைக்கு நன்றி.
தசரா பண்டிகையை ஊர்மக்களுடன் சேர்ந்து வேடிக்கை பார்ப்பது போன்ற உணர்வை பதிவு ஏற்படுத்திருக்கிறது நன்றி... வாழ்த்துக்கள்
ReplyDeleteமாய உலகம் said...
ReplyDeleteதசரா பண்டிகையை ஊர்மக்களுடன் சேர்ந்து வேடிக்கை பார்ப்பது போன்ற உணர்வை பதிவு ஏற்படுத்திருக்கிறது நன்றி... வாழ்த்துக்கள்/
அனைத்து அருமையான கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
படங்கள்+பதிவு= அசத்தல்.
ReplyDeleteகுட்...
படங்கள் அருமை.
ReplyDeleteமைசூர் சென்று தசரா பார்த்த மகிழ்ச்சி.
வடமாநிலத்தில் நடக்கும் ராவணஎரிப்பு என்ற ராம்லீலா கொண்ட்டாட்டமும் பார்த்து விட்டோம் நன்றி.
கண்கொள்ளா காட்சி
ReplyDeleteமைசூர் அரண்மனை வாசலில் இருந்து
பார்ப்பதைப்போலவே இருந்தது
விளக்கிச் செல்லும் விதமும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
காண கண்கோடி வேண்டும்
ReplyDeleteமுதல் படத்தில் அம்பாளின் வைர மூக்குத்தி மின்னுகிறது. நெற்றிபொட்டில் சூரியன் பிரகாஸிக்கிறது. கண்களின் கரு விழிகளின் நடுவே பெளர்ணமிச் சந்திர ஒளி போல ஒரு சிறிய மின்னல் காட்டியுள்ளது, அம்பாளைச்சுற்றியுள்ள நக்ஷத்திரங்கள் ஜொலிப்பது, கிரீடத்தின் நடுவே உள்ள ஜொலிப்பு, காதணிகளில் அன்பின் அடையாளமான ஹாட்டீன் எல்லாமே அழகாக உள்ளது.
ReplyDeleteமைசூர் அரண்மனைப்படம் ஜகத்ஜோதியாக காட்டப்பட்டுள்ளது அருமையோ அருமை தான்.
ReplyDeleteநான் முதன் முதலாக பெங்களூர், மைசூர், ஊட்டி, கொடைக்கானல் முதலிய இடங்களுக்கு சுற்றுலா சென்ற போது என்னை மிகவும் பிரமிக்க வைத்த இடம் ஒன்று உண்டென்றால் அது இந்த மைசூர் மஹாராஜா அரண்மனை என்றே சொல்வேன். உள்ளே போனால் எவ்வளவு பிரும்மாண்டம், வெள்ளியினாலும் தங்கத்தினாலும் ஆன கலை நயம் மிகுந்த ராக்ஷச உருவக் கதவுகள், எத்தனை தூய்மை, எத்தனை எத்தனை நிலைக்கண்ணாடிகள். உள்ளே சென்று ஒவ்வொன்றையும் கலை நுணுக்கத்துடன் கண்டு களித்த எனக்கு வெளியே வரவே மனது இல்லை.
மலரும் நினைவுகளை இன்றும் கிளறி விட்டுவிட்டீர்கள்.
ஒரேயொரு யானையை சுத்த A.K ஆக [அதாவது எந்தவொரு ஆடை ஆபரணங்களுமின்றி, பிறந்த மேனிக்கு], எங்காவது எப்போதாவது பார்க்க நேர்ந்தாலே நம் மனம் அதனுடன் ஒன்றிப்போய் விடுகிறது.
ReplyDeleteகேரளாவிலும், மைசூரிலும், யானைகளுக்கு சர்வ அலங்காரம் செய்து கூட்டம் கூட்டமாக யானைகள் அணிவகித்து வருவதையும், அவை பகவத் கைங்கர்யம் செய்வதையும் அடிக்கடி எங்களுக்குக் காட்டி, வைத்த கண் வாங்காமல், மயங்கிடச் செய்து விடுகிறீர்கள். உண்மையிலேயே நாங்கள் மிகவும் பாக்யம் செய்துள்ளோம். வேறென்ன சொல்ல முடியும்?
புலிவேஷக்காரர்களையும், புலிமேல் அமர்ந்த வீர தீர பராசக்தியையும் காட்டி, ஆன்மீகப்பதிவுகளும் அழகழகான படங்களும் அன்றாடம் தந்து அசத்துவதில் தாங்களும் ஒரு புலி தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
ReplyDeleteபெண்மணிகளின் லம்பாடி நடனம், மைசூர் கொலு பொம்மைகள், கலை கலாச்சார நிகழ்ச்சிகள் யாவும் கோலாகல தஸரா கொண்டாட்டங்களைப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.
ReplyDeleteஇரண்டாவது படத்தில் ஈஸ்வரிக்கு தீப ஹாரத்தி சுற்றுவது மிகவும் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது.
நாங்களும் எங்கள் கற்பனையில், நல்லதொரு பதிவு தந்த ஸ்ரீஇராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு இந்த இனிய நவராத்திரி நன்னாளில் அன்புடன் ஹாரத்தி சுற்றி மகிழ்கிறோம்.
தொடரட்டும் தங்களின் இதுபோன்ற மகத்தான சேவைகளும், இறை பணிகளும்.
அன்பான ஆசிகள்,
வாழ்த்துக்கள்,
பாராட்டுக்கள்,
நன்றிகள்.
vgk
பெண்மணிகளின் லம்பாடி நடனம், மைசூர் கொலு பொம்மைகள், கலை கலாச்சார நிகழ்ச்சிகள் யாவும் கோலாகல தஸரா கொண்டாட்டங்களைப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.
ReplyDeleteஇரண்டாவது படத்தில் ஈஸ்வரிக்கு தீப ஹாரத்தி சுற்றுவது மிகவும் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது.
நாங்களும் எங்கள் கற்பனையில், நல்லதொரு பதிவு தந்த ஸ்ரீஇராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு இந்த இனிய நவராத்திரி நன்னாளில் அன்புடன் ஹாரத்தி சுற்றி மகிழ்கிறோம்.
தொடரட்டும் தங்களின் இதுபோன்ற மகத்தான சேவைகளும், இறை பணிகளும்.
அன்பான ஆசிகள்,
வாழ்த்துக்கள்,
பாராட்டுக்கள்,
நன்றிகள்.
vgk
யானை படங்களும், அரண்மனை படங்களும் சூப்பர்ப்...!!!
ReplyDeleteநல்ல பகிர்வு. படங்களுடன் அருமை.
ReplyDeleteகண்ணைப்பறிக்கும் அழகிய காட்சிப் படங்கள் அருமை!.....
ReplyDeleteவாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...........
நவராத்ரியின் ஏழாம் நாள் பதிவு
ReplyDeleteநெகிழ்வாய்....
வை.கோபாலகிருஷ்ணன் said.../
ReplyDeleteதங்கள் அத்தனை கருத்துரைகளும் பதிவிற்கு மணிமகுடம் சூட்டி ஹாரத்தி சுற்றியது போல் ஜொலிஜொலிக்க வைத்திருக்கின்றன.
ஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் ,பாராட்டுக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். ஐயா.
மைசூர் மஹாராஜாவின் அரண்மனையை 360 டிகிரி கோணத்தில் கண்டு மகிழக்கூடிய ஒரு மின் அஞ்சல் சில நாட்களுக்கு முன் வந்தது. அதனை உங்களுக்கு அனுப்பக் கூச்சமாக இருந்தது. அருமையான படங்களுடனான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதசராவை இங்கிருந்த படியே கண்டு கழிக்க வைச்சுட்டிங்க.
ReplyDeleteநன்றி!
புகைப்படங்கள் அருமை,அத்தனை துல்லியம்,பார்த்துக்கொண்டே இருக்க தூண்டுகிறது.
நாட்கள் பறக்கின்றன ..அதுக்குள்ளே தசராவா..படங்கள் அருமை...
ReplyDeleteரசித்தேன், ரசித்துக் கொண்டே இருக்கிறேன்.
ReplyDeleteபடங்கள் அட்டகாசம் .தசரா வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா....
ReplyDeleteதிவ்ய தரிசனம்...
கம்மல் பொட்டு மூக்குத்தி முகமே ஜொலி ஜொலிக்குதே பளபளக்குதே...
ஆரத்தி காண்பிக்கும் தீபங்கள்....
படங்கள் அசத்தல் கட்டுரையும் அருமை...
இறுதியில் ராவணனின் பத்து தலை ஒரு சிறு தீக்குச்சியால் உரசி அழிப்பது அழகு....
சூர்யஜீவா கேட்டதே நானும் கேட்க நினைச்சேன்பா... ஆனா நீங்க அதுக்குள் பதில் கொடுத்துட்டீங்க...
அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு....
முதல் படம் அற்புதம்.
ReplyDeleteபதிவும் படங்களும் அபாரம்..
ReplyDeleteமேடம் படங்களுடன் கலக்கல் பதிவு நன்றி!
ReplyDeleteNice post Rajeswari.
ReplyDeleteThe first and second are nice animation. The palace photos are very very pretty.
I felt as if went to Mysore to participate the function.
Very nice post.
Thanks dear.
viji
ராவணன் தசரா சம்பந்தம் குறித்து விளக்கி புது விஷயம் தெரிய வைத்ததற்கு நன்றி
ReplyDeleteG.M Balasubramaniam said...
ReplyDeleteமைசூர் மஹாராஜாவின் அரண்மனையை 360 டிகிரி கோணத்தில் கண்டு மகிழக்கூடிய ஒரு மின் அஞ்சல் சில நாட்களுக்கு முன் வந்தது. அதனை உங்களுக்கு அனுப்பக் கூச்சமாக இருந்தது. அருமையான படங்களுடனான பதிவு. வாழ்த்துக்கள்.
அனுப்பிவைத்த அஞ்சல் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தத்து.
மனம் நிறைந்த நன்றிகள்.
மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteஆஹா....
திவ்ய தரிசனம்...
கம்மல் பொட்டு மூக்குத்தி முகமே ஜொலி ஜொலிக்குதே பளபளக்குதே...
ஆரத்தி காண்பிக்கும் தீபங்கள்....
படங்கள் அசத்தல் கட்டுரையும் அருமை...
இறுதியில் ராவணனின் பத்து தலை ஒரு சிறு தீக்குச்சியால் உரசி அழிப்பது அழகு....
சூர்யஜீவா கேட்டதே நானும் கேட்க நினைச்சேன்பா... ஆனா நீங்க அதுக்குள் பதில் கொடுத்துட்டீங்க...
அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு../
திவ்யமாய் அளித்த கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
viji said...
ReplyDeleteNice post Rajeswari.
The first and second are nice animation. The palace photos are very very pretty.
I felt as if went to Mysore to participate the function.
Very nice post.
Thanks dear.
viji/
வாங்க விஜி. அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
தசரா பண்டிகை கண்களையும் மனதையும் ஒளிரவைக்கின்றது.
ReplyDeleteபார்த்து வியந்ததில் ஒரு இடம் மைசூர்பலஸ்.
சாகம்பரி said...
ReplyDeleteஎன் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5/11/11 -சனிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com//
மகிழம்பூச்சரத்தின் மணமிக்க
மனம் கவர்ந்த அறிமுகத்திற்கு
நிறைந்த நன்றிகள்..
padanglain vannangal nenjil nirkindrana......
ReplyDeletechandhan-lakshmi.blogspot.com
;)
ReplyDeleteஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மநோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வராநநே!!
1109+7+1=1117 ;)))))
ReplyDelete’மணிமகுடம் + ஹாரத்தி + ஜொலிஜொலிக்கும்’ என அன்பான தங்களின் ஆத்மார்த்தமான பதிலுக்கு சந்தோஷம். மிக்க நன்றி. ;)