










திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து வந்த ஆண்டாள் மாலையை அணிந்து,கையில் கிளி தாங்கி,உற்சவரான மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதக்காட்சி!'

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை சதா சர்வ காலமும் இதயக்கமலத்தில் எழுந்தருளப்பண்ணி பூஜிக்கவும் அவருடைய திவ்ய தரிசனத்தை அனுபவிப்பதற்க்கும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்கவேண்டும்.

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்
செடியாய வல்வினைகள் தீர்க்கும் நெடியான் வேங்கடவன் -
வேத சொரூபனான கருடனில் பெருமாள் பவனி வரும் மோக்ஷமளிக்கும்
கருட சேவையின் மனம் நிறைக்கும் தரிசனம்..
Om Namo Narayanaaya | Om Namo Bagavadey Vasu Devaaya
நமஸ்தே கருடாரூடே
கோலஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே
![[garudasevai.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjirZRsui3R4eSf3CbtTp0p5Q6yp5gsJcE3dH8rwD1-DpTZq6_nexLO-RxbBF8HIhUIkj5ZatzCFwZeP65teNpNg7G_P1eY7xwUnA-uA9WySu0hrGv9COTac_jpgDtx1soAc9WJDJLskSw/s1600/garudasevai.jpg)
ஸ்ரீ, நித்யஸ்ரீ, அலைமகள், மஹாலக்ஷ்மி பெரிய பிராட்டி தாயார் கடைக்கண் பார்த்தாலே போதுமே, எல்லா சுபிக்ஷங்களும் மழையெனக்கொட்டும்,
ஆதி சங்கரர் முடியாத ஏழ்மை நிலையிலும் நெல்லிக்கனி பிச்சையிட்ட பெண்மணியின் ஏழ்மை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் பாடியபோது தங்க நெல்லிகனி மழை பொழிவித்தவள் அல்லவா ஸ்ரீ மஹாலக்ஷ்மித்தாயார்.
பெருமாளுக்கு உரிய கருட வாகனத்தில் தாயாரும் பவனி வருகின்றாள்.
திருச்சானூரில் பத்மாவதித்தாயாருக்கு கார்த்திகை பஞ்சமியை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. தாயாரும் பல்வேறு வாகனகங்களில் காலையும் மாலையும் சேவை சாதிக்கின்றாள்.

திருவேங்கடமலைக்கு ஆபரணமாக உள்ள ஸ்ரீநிவாஸனின் தயாதேவியே! மிக உயர்ந்த இடத்தில் உள்ள பிரம்மன் உனது பார்வையால் கடாக்ஷம் பெற்ற தன்னுடைய இருப்பிடத்தில் மகிழ்வுடன் உள்ளான். உன்னுடைய பார்வையைப் பெற்ற பார்வதியின் நாயகனான சிவன் எட்டு மூர்த்திகளுடன் சுகமாக உள்ளான். உனது பார்வை பெற்றவனும், தேவ அசுரர்களின் யுத்தத்தில் வென்றவனும் ஆகிய இந்திரன் தேவலோகத்தை ஆள்கிறான். -
அன்னையின் கருட சேவையைக் காணக்கண் கோடி வேண்டும்
கருட சேவை கண்டார்க்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.

Perumal with Maru+Dhava na Kondai and angi


Pinnazhgu during Garuda Sevai
![[pinnazhagu.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhap0fW1OcpY-OTmIKnYEXXO_FAXc1Ki4aw8WPtANT51zELMZ7Cd46_IjpbZ4PkzKAUW3SZKDX5oOhECAjZwFxdGAYnJMmEyQXpc9XkBXBF8sKhrJbBSv7lx2iRBEcjxz1XGlTT8wQD57M/s640/pinnazhagu.jpg)
Garuda Seva before Manduka Moksham

Azhagar as Matsya, Koorma and Vaamana Avataras

As Raama, Krishna and Mohini at Thenur Mandapam

மலையப்பா சாமியின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்....
ReplyDeleteநல்ல பகிர்வு... புகைப்படங்கள் அருமை.
இரண்டாம் சாமி தரிசனம்
ReplyDeleteகாலை தரிசனம்.நன்றி.
ReplyDeleteபடங்களும் பதிவும் நல்லா இருக்கு.
ReplyDeleteகருட சேவை தரிசனம் எனது பாக்கியம்...
ReplyDeleteமிக்க நன்றி.
நேரில் சென்றால்கூட கண்குளிர காண முடியாத தரிசனம் உங்கள் பதிவின் வழியே எங்கள் கண்களுக்கு...
ReplyDeleteமிக்க நன்றி...
கரியவனைக் காணாத கண்னென கண்ணே
ReplyDeleteமுதல் அசையும் படத்தில் உள்ள் அனைத்தும் பெருமாள் வாகனமாகிய எட்டு கருடன்களைக் குறிக்கின்றதோ? [Eagle symbol]
ReplyDeleteஅடுத்துள்ள படத்தில் அம்பாளுக்கு பச்சைப்பாவாடையில் அரக்கு பார்டர் ஜரிகையுடன், திருமாங்கல்யம், தங்கக்காசு மாலைகள், மார்பினில் நான்கு ஒளிவீசும் நீலக்கற்களுடன் மாலை, அபய ஹஸ்தங்கள், தலையில் கொண்டை, முரட்டு புஷ்ப மாலைகள், பச்சைக்கிளி அனைத்தும் அருமை.
அனைத்துப்புறப்பாட்டு ஸ்வாமிகளும், கருட வாகனங்களும், ஸ்ரீவில்லிப்புத்தூர் சூடித்தந்த சுடர்கொடியாள் [ஆண்டாள்] திருக்கைகளால் செய்து தந்த மாலையுடன் ஸ்வாமி மோஹினி அலங்காரப் புறப்பாடும், தாங்கள் சொல்வது போல காணக்கண்கோடி வேண்டும், பூர்வஜன்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
ReplyDeleteஉங்களால் இன்று நாங்களும் கண்டு களிக்கும் பாக்யம் பெற்றது நாங்கள் செய்துள்ள ஏதோ எத்கிஞ்சுது புண்ணியம் போலும்.
ஏழையான குசேலர் ஒரு பிடி அவலைக் அன்புடன் கொடுத்து பெரும் பணக்காரர் ஆன கதை;
ReplyDeleteகனகதாரா ஸ்தோத்ரத்தினால் அம்பாள் ஸ்வர்ண நெல்லி மழை பெய்வித்தது;
மறுபிறவி இல்லாமல் செய்யும் கருடசேவையின் மகத்துவம்;
பிரம்மோற்சவத்தின் சிறப்புகள்;
தெப்பத்தின் அழகு,
கருடசேவையில் அம்பாளின் பின்னழகும், பின்னல் அலங்காரமும்;
மண்டூக மோக்ஷத்திற்கு முன்பு தெரியும் ஸ்பெஷல் கருடசேவை;
மச்ச, கூர்ம வராஹ அழகோ அழகான உற்சவ மூர்த்திகள்,
ராமர், கிருஷ்ணர், மோஹினி அலங்காரங்கள்
அனைத்தும் திவ்யமாக தரிஸிக்கச் செய்துள்ள தங்களின் கடும் உழைப்புக்கு, என் மனமார்ந்த ஆசிகள், நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். vgk
அருமையான தகவல்கள்.,
ReplyDeleteஅசத்தலான படங்கள்.,
பகிர்வுக்கு நன்றி சகோ.
நேரில் சென்றால் கூட இவ்வளவு
ReplyDeleteஅருமையான தரிசனம் கிடைப்பது அரிதே
அழகான பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ஆகா.அருமை!கோவிந்தனடி போற்றி!
ReplyDeleteநன்றி.
தினமும் படங்களோடு வாரிங்க....... ம்.. சூப்பர்
ReplyDeleteபடங்களும் பதிவும் நல்லா இருக்கு...
ReplyDeleteதிருப்பதி பிரம்மோர்த்சவ காட்சிகள் அருமை.
ReplyDeleteகடவுளின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிட்டும்.
அருமையான படங்கள் நிறைந்த அற்புதமான பதிவு.
ReplyDeleteமனப்பூர்வ வாழ்த்துக்கள்.
;)
ReplyDeleteஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மநோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வராநநே!!
1157+4+1=1162
ReplyDelete