
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி யுள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே யமர்ந்தாய் போற்றி
ஆறங்க நால் வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி 1
அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

நேபாளின் காசி என்று போற்றப்படும் புனித பசுபதிநாத் கோவில் உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ் பெற்ற பசுபதிநாதர் கோவில் உள்ளது
காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் வழிபடப்படும் தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் பசுபதிநாதர் -நேபாளம் மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அதன் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்பான யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய அந்தஸ்தை பெற்ற இந்தகோவிலில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் பூசாரியாக உள்ளனர்
![[Pasupathinath+temple.jpeg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKQ-QbQ0z7bRMMlpJVHMTncrja_eZdAGTFsnpKG6il8fTTCv2TRJUYus5_0qMxv5PtAtjxDiRzZBcGYjTaqN2PrcNLHW24-uG2DOYd4n-oC4E3ZYK9JoX9LTQ1YSN9J68OHP2r8b1YqjY/s1600/Pasupathinath+temple.jpeg)
இந்துக்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
நேபாளத்தில் மன்னராட்சி நடந்த போது, தமிழ்நாடு, கர்நாடகா மாநில பூசாரிகள் தான், இந்த கோவிலில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்
சீனாவில் உள்ள பகோடா முறையின் அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கியவாறு கோவிலானது கனசதுர வடிவில் மரங்களைக் கொண்டும் தாமிர மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டும் கட்டப்பட்டுள்ளது.
பசுபதிநாதர் ஆலயம் வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு முதன்மை வாயில்களைக் கொண்டுள்ளது.
கோவிலின் மேல் தங்கத்தால் ஆன கலசமும் உள்ளது.
பசுபதிநாத் சிலை ஆறடி உயரத்தில் ஆறடி சுற்றளவில் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கிறது.
பசுபதிநாதரின் கிழக்குப் பகுதியில் வாசுகிநாதர் வீற்றுள்ளார்.
பசுக்களாகிய நம்முடைய ஆன்மாவின் பாசத்தை அறுத்து முக்தியளிக்க வல்ல பதியாகிய சிவபெருமான் நான்கு முக லிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்,
பசுபதிநாதரின் கிழக்குப் பகுதியில் வாசுகிநாதர் வீற்றுள்ளார்.
பசுக்களாகிய நம்முடைய ஆன்மாவின் பாசத்தை அறுத்து முக்தியளிக்க வல்ல பதியாகிய சிவபெருமான் நான்கு முக லிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்,
ஆலயத்தின் உள்ளேயே சக்தி பீடமான குஹ்யேஸ்வரி ஆலயமும் அமைந்துள்ளது

சிவபெருமான் ஒரு சமயம் மான் வடிவெடுத்து யாரும் அறியாமல் பாக்மதி காட்டில் சுற்றிக்கொண்டிருந்த பொது அவரைக் காணாமல் அல்லல் பட்ட தேவர்கள் பூலோகம் வந்து மானாக இருந்த சிவபெருமானை கண்டு வேண்ட அவர் மீண்டும் திருக்கயிலை சென்றார்.
அதற்கு பின்னர் அந்த மானின் கொம்பையே சிவலிங்கமாக வழிபட்டு வந்தனர் காலத்தால் கொம்பு அழிய அனைவரும் மறந்து விட்டனர்.
அதற்கு பின்னர் அந்த மானின் கொம்பையே சிவலிங்கமாக வழிபட்டு வந்தனர் காலத்தால் கொம்பு அழிய அனைவரும் மறந்து விட்டனர்.

பின்னர் ஒரு சமயம் ஒரு இடையன் காராம் பசுவொன்று தானாக புற்றில் பால் சொரிவதைக் கண்டு அவ்விடத்தில் தோண்டிப்பார்க்க சிவலிங்கம் கிடைத்தது பின்னர் கோவில் ஏற்பட்டது.
ஏகாதசி, சங்கராந்தி, மஹா சிவராத்திரி, அக்ஷ்ய திருதியை, கிரகண காலங்கள், பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் குவிகின்றனர். மஹா சிவராத்திரியன்று , இரவு முழுவதும் ஆலயம் நெய் விளக்குகளால் ஒளிர்கின்றது . பாக்மதி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் கண் விழித்து விரதம் இருந்து வழிபடுகின்றனர்.

ருத்ராபிஷேகம் செய்து பிரசாதமாக ருத்ராட்சமாலை அளித்தார்கள். பசுபதிநாதருக்கு அணிவிக்கபபட்ட அந்தமாலை அன்று யாராவது ஒருவருக்கு அளிக்கப்படுமாம்.
அன்று அந்தபாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.
அன்று அந்தபாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.


நிறைய குரங்குகள் ஆலயத்தில் ஓடி விளையாடுகின்றன்.
Baby monkey in Pashupatinath Temple, Kathmandu, Nepal



ஆலய வளாகமெங்கும் புறாக்களின் ஆலாபனை அழகு..

ஸ்தலமரமாக ருத்ராட்சமரங்கள் செழித்திருந்தன.தொலை நோக்கிவழியாக பசுமையான காடுகளும், நதிகளும், மலைத்தொடர்களும், அருமையான காட்சி.

டெல்லியிலிருந்து விமானம் மூலம் காத்மாண்டு பயணம் திகிலாக இருந்தது. அரதப் பழசான அந்த விமானமும்,விமானியும் காசியில் கூட வராத பக்தியை பய்ணிகளுக்கு வரவழைத்தார்கள்.
விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அனைவரும் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்!
விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அனைவரும் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

உடன் வந்த குடும்பத்தினர் பழம் நறுக்கவைத்திருந்த கத்தியை விமானத்தினுள் அனுமதிக்க மறுத்து நீண்ட நேரம் காக்கவைத்து கையெழுத்தொல்லாம் வாங்கிய பின்பே அவ்ர்களிடமிருந்து பாதுகாப்பாக கத்தியை வாங்கிவைத்துக்கொண்டு, மீண்டும் விமானத்திலிருந்து இறங்கிய பின் நீண்டநேரம் அனைவரையும் காக்கவைத்தது என்று அந்த சிறிய கத்திக்காக நேரம் நிறைய வீணானது.

விமானத்திலிருந்து கங்கை நதியின் பிரவாகம், இமயமலைத்தொடர், அடர்ந்தபச்சைக்காடுகள் என்று கண்கொள்ளாத அருமையான காட்சி.
முதன்முதலில் இந்திய நாணயத்தை மதிக்கும் ஒரு அயல்நாட்டுப்பயணம்.
பாக்மதி ஆற்றின் மறுகரையிலிருந்து பசுபதிநாத் கோவிலின் பரந்த தோற்றம்





entrance to the temple



Festivals at Pashupati Temple

காணக்கிடைத்த அற்புத சாளக்கிரமங்கள்...
Kalki avatar shaligrama ( in the form of horse)







பசுபதிநாதர் அருள்பெற்றோம் சகோதரி.
ReplyDeleteநேபாள பசுபதிநாதர் ஆலயம் அதிகாலை தரிசனமாய்க் கண்டேன்.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteமனம் கவரும் காணக்கிடைக்காத படங்கள்
விமானப் பயணம் குறித்து சொல்லிப் போனதைப் படிக்க என்னையறியாது
சப்தமாக சிரித்துவிட்டேன்.தங்களுக்கு பூசை உத்திராட்சம் கிடைத்தது குறித்து
ஆச்சரியப் பட ஏதுமில்லை. நீங்கள் பதிவுலகில் அனைவருக்குமாக
செய்கிற சேவை ஆண்டவனுக்கு தெரியாதா என்ன ?
உத்திராட்ச மரத்தை இப்போதுதான் பார்க்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்
பசுபதிநாதர் அருள் பூரணமாய் கிட்டட்டும்...
ReplyDeleteபடங்களும் அருமையாக வந்திருக்கின்றன...
ருத்ராக்ஷ மாலை பிரசாதமாகக் கிடைத்ததற்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteபசுபதிநாதர் பற்றிய பகிர்வுக்கு பாராட்டுக்கள் மேடம்...
ReplyDeleteThank you very much for taking us to NEPAL PASUPATHINATHAR TEMPLE.
ReplyDeleteAll are very impressive. vgk
காலைபொழுதில் மனதை நிறைவாக்கும் அருமையான பதிவு
ReplyDeleteபசுபதி நாதரை தரிசனம் செய்வித்தத்ற்கு நன்றி. ருத்திராட்ச மால ஆசீர்வாதமாக கிடைத்ததற்க்கு சந்தோஷம்.
ReplyDeleteருத்திராட்ச மாலை கிடைக்கப் பெற்ற நீங்கள் மிக பாக்கியம் செய்தவர் கள்தான். அருமையான அப்கிர்வும் படங்களும்.
ReplyDeleteஅழகிய பசுபதிநாதர் கோவில் படங்கள்.
ReplyDeleteருத்ராட்ச மாலை தங்களுக்கு கிடைத்தது பற்றி மிகவும் சந்தோஷம் மேடம்.
அபூர்வமான சாளக்கிராம படங்களுக்கு மிக்க நன்றி.
மிகவும் பாக்யசாலியான உங்களுக்கு அன்று ருத்ராக்ஷம் கிடைத்ததை கேட்க [மனசுக்குள் மத்தாப்பூ போல] எனக்கு எவ்ளோ சந்தோஷம் ஏற்படுகிறது தெரியுமா?
ReplyDeleteவாழ்த்துக்கள். என் சொந்த அண்ணா ஒருவர் நேபாள யாத்திரை சென்று வந்தார். அவ்ரும் எல்லாக் கதைகளும் மிகவும் த்ரில்லிங்கான தன் பயண அனுபவங்களும் நேரில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. வாழ்நாள் முழுவதுமே பகவத் கைங்கர்யங்களிலேயே ஈடு பட்டிருந்தார்.
கடைசி 2 ஆண்டுகள் துறவரம் மேற்கொண்டு, பிறகு தன் 67 ஆவது வயதில் [மே 2003 இல்] ஸித்தி அடைந்து விட்டார்.
பூர்வாஸ்ரமப்பெயர் ஸ்ரீ. ஸ்ரீகண்டன். துறவியான பின் ஸ்ரீ ஸதாசிவ பிரும்மானந்த ஸ்வாமிகள்.
அவருடைய அதிஷ்டானம் திருச்சி ஆங்கரை [மாந்துறைக்கு அடுத்த கிராமம்] காயத்ரி குளக்கரையில் அமைந்துள்ளது. நித்யப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தங்களின் நேபாள பசுபதிநாதர் ஆலயம் பற்றியப் பதிவைப் படித்ததும், அவரைப் [என் அன்புக்குரிய அண்ணாவை]பற்றிய நினைவு வந்து 2 சொட்டுக்கள் கண்ணீர் வந்தது.
நல்லதொரு பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள். vgk
அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா.
அருமையான தரிசனம் கிடைக்கப்பெற்றோம் படங்கள் அழகு
ReplyDeleteபசுபதிநாதர் கோவிலுக்கு நாங்களும் போனமாதம் போய் வந்தோம்.
ReplyDeleteஉங்கள் பதிவின் மூலம் மறுபடியும் தரிசனம் கிடைக்க பெற்றேன் நன்றி.
படங்கள் எல்லாம் அற்புதம்.
ருத்திராட்ச மாலை உங்களுக்கு கிடைத்தது இறைவனின் ஆசீர்வாதம்.
//ருத்ராபிஷேகம் செய்து பிரசாதமாக ருத்ராட்சமாலை அளித்தார்கள். பசுபதிநாதருக்கு அணிவிக்கபபட்ட அந்தமாலை அன்று யாராவது ஒருவருக்கு அளிக்கப்படுமாம். அன்று அந்தபாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.// தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பரி பூரணமாக ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். வணக்கமும், வாழ்த்துக்களும்.
ReplyDelete;)
ReplyDeleteஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி
ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி
ஆகமவேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாககங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேச்வரி ராஜராஜேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி
1195+3+1=1199
ReplyDelete