Monday, May 21, 2012

ஈஸ்வர மைந்தர் ஈச்சனாரி விநாயகர்




இன்று ஹலோ எஃப் . எம் வானொலி நிகழ்ச்சியில் 
சாதனைப்பெண்கள் நிகழ்ச்சியில் http://jaghamani.blogspot.com/
 வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. 



சுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்னம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
ஈச்சனாரி விநாயகர், தங்க கவசம், அலங்காரம்,

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லீம்-க்லௌம்-கங், கணபதியே
வரவரத, ஸர்வஜனம்மே வசமானய ஸ்வாஹா!

அப்பனுக்கு முந்திவரும் அருட்கனி கணபதி
அப்பமுடன் பொரி கடலை அவலுடனே 
அருங்கதலி ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்பித்து
எப்பொழுதும் வணங்கிடும் விநாயகர் உலகின் தலையாய எழுத்தர் ..
அவர்தானே தன் அழகிய கொம்பின் முனை உடைத்து வியாசர் தந்த விருந்தான மஹாபாரதக்கதையை எழுதியவர் !

மரியாதைத்தமிழால் பேச்சுத்தமிழை அலங்கரித்து இனிய சிறுவாணித்தண்ணீரால் பெருமைபெற்று , குளிச்சியான தென்றலால் மகிழ்வுறும் கோவை மாநகரில் ஈஸ்வர மைந்தராம் ஈச்சனாரி விநாயகர் அருளும் ஆலயத்திற்கு சென்றிருந்தோம்..


அஸ்வினி நட்சத்திரம் முதல் ரேவதி வரையிலான 
27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான அலங்காரம் ..
அலங்கரிக்கும் எழில் மிகு. நட்சத்திர அலங்கார பூஜை 
ஈச்சனாரி கோயிலின் சிறப்பம்சம். 
Eachanari Vinayagar Temple, Coimbatore
கோயிலின் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மலர் மற்றும் கோயிலின் மின் கட்டணம் அனைத்தும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது...
கோயிலின் அழகிய கோபுரம், மாடங்கள், மண்டபங்கள் 
வேறு எங்கும் காண முடியாதவை.

   

  •  மேலைச் சிதம்பரம் என திகழும் பெருமை வாய்ந்த பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட விநாயகர் திருவுள்ளம் கொண்ட பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றால் இயலுமா என்ன ??
  • தெய்வ சித்தத்தை அறிந்த மகான் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி விநாயகர் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது. 
 ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தங்கரத்தில் உலா வந்து தண்னருள் பொழியும் கணபதி !

மாத கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தி நாட்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு நாட்களிலும்,  விசேஷ தினங்களிலும் ஈஸ்வர மைந்தனாம் ஈச்சனாரி விநாயகரை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுகிறார்கள். ஏற்றம் காண்கிறார்கள்..

சாலையில் செல்லும் வாகனங்களிலிருந்தே வணங்கும் வண்ணம் கண்களுக்கு விருந்தளித்து செல்லும் காரியங்களின் தடைகளை நீக்கி நம்பிக்கை அருள்கிறார் கணபதி !
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா


Ganapathy Homam

 
 நிறைந்த நன்றிகள் http://www.eachanarivinayagar.com/galary.html

,MALAYSIA


DATTAPEETHAM-VIJAYAWADA மோதகம்-கொழுக்கட்டை அலங்காரம்.

செல்வ விநாயகர், மோதக மாலை, வெண்ணை காப்பு

பனை ஓலை விநாயகர்

இனிப்பு பூந்தி விநாயகர்

கரும்பு அலங்காரம், தேனி -  பெத்தாட்சி பிள்ளையார்,


ஆசியாவின் பெரிய விநாயகர்

மணக்குள விநாயகர் ...

35 comments:

  1. ஆசியாவின் மிகப்பெரிய பிள்ளையார் எனக்காட்டப்பட்டுள்ள புலியகுளம் அருள்மிகு முந்தி விநாயகர் நல்லா மோத முழங்க ஜோராக இருக்கிறார்.

    எனக்குத் தெரிந்தவரை கோயம்பத்தூர் ஆசாமிகள் எல்லோருமே பெரிய .... மிகப்பெரிய .. ஆட்கள் தான்! ;)))))

    ReplyDelete
  2. முதல் படத்தில் நம் பிள்ளையார் எலியாருடன் ஜோராக ஸ்வஸ்திக் சின்னத்தில் ஜொலிக்கிறாரே ! ;))))) அருமை.

    ReplyDelete
  3. //இன்று ஹ்லோ எஃப் . எம் வானொலி நிகழ்ச்சியில் சாதனைப்பெண்கள் நிகழ்ச்சியில் http://jaghamani.blogspot.com/ வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. //

    மனமார்ந்த வாழ்த்துகள்.

    இனிமையான செய்திக்கு பாராட்டுக்கள்.

    இப்போதான் சொன்னேன் முதல் பின்னூட்டத்தில்.... கோவைக் காரர்களைப்பற்றி .... அதற்குள் இந்த மகிழ்ச்சியான செய்தியை இப்போ தான் படிக்கிறேன்.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  4. /எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட/

    திருச்சி சென்னை வழித்தடத்தின் நடுவே உள்ள ”அச்சரப்பாக்கம்” என்ற இடத்திற்கும், இதே போல அச்சு முறிந்த கதையைச் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  5. கரும்பு, கொழுக்கட்டை, வெண்ணைன்னு பல அலங்காரங்களில் பிள்ளையாரை தரிசித்தோம். ஆசியாவிலேயே பெரிய பிள்ளையாரை தரிசிக்க வைத்தமைக்கும் நன்றி அம்மா

    ReplyDelete
  6. //மரியாதைத்தமிழால் பேச்சுத்தமிழை அலங்கரித்து

    இனிய சிறுவாணித்தண்ணீரால் பெருமைபெற்று

    குளிச்சியான தென்றலால் மகிழ்வுறும் கோவை மாநகரில்

    ஈஸ்வர மைந்தராம் ஈச்சனாரி விநாயகர் அருளும் ஆலயத்திற்கு சென்றிருந்தோம்.//


    ஆஹா ! அழகான இத்தகைய வர்ணனைகளிலேயே, எங்களையும் தங்களுடன் அழைத்துச் சென்று, சிறப்பு தரிஸனம் செய்துவைத்து, நெய் மோதகம் பிரஸாதமாகக் கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்படுகிறது.

    சிறுவாணித் தண்ணீர் ஒருசிலமுறை குடித்துள்ளேன்.

    மரியாதைத் தமிழையும் KG St., பொன்ற நிறைய இடங்களில் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

    ReplyDelete
  7. /தங்கரத்தில் உலா வந்து தண்னருள் பொழியும் கணபதி/

    படம் வெகு அழகாக ஜொலிக்கக்கண்டேன்.

    அதில் இரண்டு புறமும் உள்ள குதிரைகளுக்கும், குத்துவிளக்குகளுக்கும் கூட அழகாக மாலையிட்டுள்ளதும், சப்பரத்தில் ஸ்வாமியைச்சுற்றிலும், நல்ல இடைவெளி விட்டு, மஞ்சள் சிகப்பு, பச்சைக்கலர்களில் தொங்கவிடப்பட்டுள்ள ஒத்தை மாலைகளும் நல்ல எடுப்பாக அமைந்துள்ளது, சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  8. அடடா! மலேசியாவின் நவக்கிரஹ விநாயகர் படு ஜோராக இருக்கிறாரே!

    நவக்கிரஹங்களையும் கை, கால், துதிக்கை, தலை என தன்னுடைய ஸர்வாங்கத்தாலும், சும்மா பந்தாடுகிறார் போலிருக்கே!

    நல்ல ஷைனிங்காகவும் இருக்கிறார்.

    என்னைப்போல நல்ல தொந்தியும் தொப்பையுமாகவும் இருக்கிறார்.

    அவரின் மற்றொரு (வலது) பாதத்தை தரிஸிக்க முடியாமல் அந்தபடம் உள்ளதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் ஏற்படுகிறது.

    ReplyDelete
  9. ஆஹா! விஜயவாடாவில் முழுவதும் மோதஹத்தாலேயே அலங்காரமா?

    இப்போதான் முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன். பார்க்கிறேன்.

    மகிழ்ச்சியாக உள்ளது.

    எவ்வளவு மாமிகள் சேர்ந்து மடி ஆச்சாரமாக மாதிரி பார்க்காமல், பசி பட்டினி இருந்து, குட்டிக்குட்டியாக ஒரே மாதிரி சைஸில், இவ்வளவு கொழுக்கட்டைகளைச் செய்திருப்பார்கள்!

    கடும் உழைப்பு தான் ,,,, தாங்கள் தினமும் ஒரு பதிவுக்ள் தருவது போலவே.

    உள்ளே பூரணம் ஒரு உத்தரணியோ அல்லது அரை உத்தரணியோ தான் ஒவ்வொரு கொழுக்கட்டையிலும் வைத்திருப்பார்கள். அப்படியே உருக்கிய நெய்யில் போட்டு எடுத்து விடுவார்கள். நல்ல சுவையாக இருக்கும்.

    அதைவிட வேடிக்கை, அந்தக் கொழுக்கட்டைகளை எப்படிக் கீழே விழாமல் [உடம்போடு ஒட்டிய ஜாக்கெட் போல] பதித்துள்ளார்கள்?

    ரொம்பவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  10. வெண்ணெய்க்காப்புடன் காட்டியுள்ள செல்வ விநாயக்ருக்கு மோதக மாலை போட்டுள்ளதாக நல்லவேளை தெரிவித்து விட்டீர்கள்.

    அது ஏதோ ஸம்ஸாவோ, பூரிமஸாலோ என நான் நினைத்து விட்டேன். வட இந்திய மாமிகள் யாராவது செய்த்தாக இருக்கும் போலிருக்கு.

    சைடுகளில் பார்த்ததும் வாழைப்பழங்களைக் கோர்த்துக் கட்டியுள்ளதோ என ஒரு நிமிட்ம் நினைத்தேன். பிறகு பிள்ளையார் காலடியில் உள்ளவைகளைப் பார்த்து ஸம்ஸாவோ என நினைத்தேன்.

    பிறகு தான் நீங்கள் மேலே எழுதியிருந்ததைப் படித்தேன்.

    ஓஹோ, ஸம்ஸா டைப்பில் செய்யப்பட்ட கொழுக்கட்டையாக இருக்கும் என யூகித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

    ReplyDelete
  11. பனை ஓலை விநாயகரை நன்றாகவே செய்துள்ளார்கள்.

    தொந்திக்கு பறங்க்கிக்காய் போல ஓலைகளை அழகாக வளைத்து விட்டும், துதிக்கைக்கு ஒரே நீண்ட ஓலையை அழகாக சற்றே கீழ்புறம் மடக்கிவிட்டும், கண்கள், விபூதிப்பட்டை போன்றவைகளை அழகாக வரைந்தும் உள்ளது சிறப்பு. அது போலவே மஃளர் கட்டியதுபோல மேலே ஜோராக முண்டாஸு கட்டி விட்டு அமர்க்களப் படுத்தியுள்ளார்களே!

    பூந்தி விநாயகர், கரும்பு விநாயகர் என எவ்ளோ விநாயகர்களைத் தேடிப் பிடித்து கொண்டு வந்து நிறுத்தியுள்ளீர்கள். அடேங்கப்பா ....

    ReplyDelete
  12. மூன்றாவது படம் இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது.

    என் கைவிரல்கள் மேலும் மேலும் வலிக்கக்கூடுமே என நினைத்து அந்தப்பிள்ளையார் தான் அதை இதுவரை மறைத்துள்ளாரோ என்னவோ?

    இன்று சீனாவுக்கு [CHINA] கூட்டிப்போகப் போகிறீர்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்.

    எப்படியோ பிள்ளையார்களை தரிஸிக்க வைத்தது மிக்க மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.vgk

    ReplyDelete
  13. bakthi pathivugalin arasikku parattukkal ethanai murai vasithalum thigatadha valaipoo thanguladayathu amma nanri amma

    ReplyDelete
  14. indhira said...
    //bakthi pathivugalin arasikku parattukkal ethanai murai vasithalum thigatadha valaipoo thanguladayathu amma nanri amma பக்திப்பதிவுகளின் அரசிக்குப்பாராட்டுக்கள். எத்தனை முறை வாசித்தாலும் திகட்டாத வலைப்பூ தங்களுடையது அம்மா .. நன்றி அம்மா//

    ’அம்மா’ன்னா என்ன சும்மாவா?

    "சாதனைப் பெண்மணியாக்கும்"! ;)

    நான் இதையே தான் அடிக்கடிச் சொன்னபோது யாரும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

    இன்று பாருங்கள்

    ”ஹலோ எஃப்.எம் வானொலி நிகழ்ச்சியிலேயே சொல்லிட்டாங்க.

    ஏழைச்சொல் எப்போது அம்பலமாகாது என்பார்கள்.

    ஆனால் ஏழையாகிய என் சொல் இன்று வானொலி மூலம் அம்பலமாகி விட்டது.

    இதைக்கேட்ட நானும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளேன்.

    vgk

    ReplyDelete
  15. அதீதஇறைஆற்றல் இறை சிந்தனைநிறைந்த தாங்கள் மேலும்சிகரங்களைஅடைய பகவானைப் பிரார்த்திக்கிறேன்அம்மா

    ReplyDelete
  16. அதீதஇறைஆற்றல் இறை சிந்தனைநிறைந்த தாங்கள் மேலும்சிகரங்களைஅடைய பகவானைப் பிரார்த்திக்கிறேன்அம்மா

    ReplyDelete
  17. திறக்கப்படாமல் திரை போடப்பட்டிருந்த விநாயகர்கள் எல்லோருமே நள்ளிரவில் எனக்கு தரிஸனம் தந்து விட்டார்கள்.
    குறையொன்றும் இல்லை.

    மொத்தம் 18 பிள்ளையார்கள் தெளிவாக தரிஸனம் தந்தார்கள்.

    இது தங்கள் தகவலுக்காகவே.

    ReplyDelete
  18. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - ஹலோ எஃபெம்மில் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. கின்னஸ் ரெகார்டில் விரைவினில் வர நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா.

    ReplyDelete
  19. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - என் மனதில் என்றும் எப்பொழுதும் எவ்விநாடியிலும் இருக்கும் என் பிள்ளையார் பற்றிய பதிவு அருமை. இத்தனை பிள்ளையார்களா ? அடேங்கப்பா - படங்களூம் விளக்கங்கலூம் அருமை- மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமை நண்பர் வை.கோவின் மறுமொழிகளை அஒப்படியே வரிக்கு வரி பின் மொழிகிறேன். நான் எழுத நினைத்ததெல்லாம் அவர் எழுதி என் பணீயினை எளீதாக்கி விடுகிறார். இருவருக்கும் வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  21. ஈச்சனாரி விநாயகருக்கு 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்யும் விதம் சிறப்பம்சம் - அடேங்கப்பா ! ஆச்சரியம்.

    ReplyDelete
  22. ப்ட்டீஸ்வரம் செல்ல வேண்டிய பிள்ளையார் ஈச்சநாரியில் உட்கார்ந்து விட்டார். பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் அருள் வாக்குப்படி ஈச்சநாரி விநாயகர் திருக்கோவில் அமைந்தது நன்று.

    ReplyDelete
  23. நவக்கிரக விநாயகர் - மலேஷியா , கொழுக்கட்டைப் பிரியருக்கு கொழுக்கட்டை அலங்காரம் , மோதக மாலை வெண்ணைக் காப்பு, பனை ஓலைப் பிள்ளையார் ( நெசமாவே சூப்பர் பிள்ளையார் இவர்தான் ), பூந்தி பிள்ளையார், பெத்தாட்சிப்பிள்ளையாரின் கரும்பு அலங்காரம், ஆசியாவின் பெரிய விநாயகர், மணக்குள விநாயகரென அத்தனை பிளளையாரையும் கண் முன்னே காட்டி எங்களை மகிழ்வித்த இராஜ இராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ReplyDelete
  24. It is a very good news that this blog is referred by Radio.
    You are correct person to be done like this Rajeswari.
    Then aha what a variation alankarams of Ganeshas.
    Very pretty post and congragulations,
    We expect more and more from you dear.
    viji

    ReplyDelete
  25. தங்கள் தளத்தினை எப்ஃஎம்மில் அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல சிறப்புகளைப் பெற விநாயகனை வணங்குகின்றேன்.

    ReplyDelete
  26. விநாயகர் வடிவம் எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் பார்த்த மகிழ்ச்சி எனக்கு. அக்கா எல்லாமே மிகவும் அருமை.

    ReplyDelete
  27. எப்ஃஎம்மில் சாதனைப்பெண்மணியாக அறிமுகமானதற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  28. ஆசியாவின் மிகப்பெரிய பிள்ளையார் மற்றும் கண்களுக்கு விருந்தளித்த பல்வேறு அழகுக்கோலங்களில் அருள்பாலித்து சிந்தை நிறைக்கும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  29. கண்களுக்கும் விருந்து, மனமும் குளிர்ந்து, உளம் உருகி, கண்களில் கண்ணீர் மல்கி. கண நாதனை தரிசிக்க வைத்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  30. அருமையான விநாயகர்களின் தரிசனம்...
    ஈச்சனாரி பிள்ளையார் தகவல்களும் தரிசனமும் அருமை...
    நான் 4 நாட்களுக்கு முன் தரிசத்த ஈச்சனாரி பிள்ளையாரை இங்கும் கண்டது மகிழ்ச்சி...

    ReplyDelete
  31. அத்தனை படங்களும் அற்புதம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. //cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி,

    அருமை நண்பர் வை.கோவின் மறுமொழிகளை அப்படியே வரிக்கு வரி பின் மொழிகிறேன்.

    நான் எழுத நினைத்ததெல்லாம் அவர் எழுதி என் பணியினை எளிதாக்கி விடுகிறார்.

    இருவருக்கும் வாழ்த்துகள் - நட்புடன் சீனா.//

    அன்பின் ஐயா, வணக்கம்.

    தங்களின் உற்சாகமூட்டும் இத்தகைய மறுமொழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்பின் VGK


    May 22, 2012 4:58 AM

    ReplyDelete
  33. ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம !

    ReplyDelete
  34. 3119+15+1=3135

    அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

    ReplyDelete