Thursday, May 10, 2012

மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ..





ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் அருள் பாலிக்கும் “தேனுபுரீஸ்வரர்’கோவில் பத்தாம் நூற்றாண்டில் சுந்தர சோழன் என்னும் இரண்டாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டது.  

பின்னர் வந்த முதலாம் குலோத்துங்க சோழனால் 
புனரமைப்பு செய்யப்பட்டது.

கபில முனிவர் சிவபெருமானை இடது கையால் ஆராதனை செய்ததற்காக கபில பசுவாக (தேனு) இத்தலத்தில் அவதரித்து சாப விமோசனம் பெற்றதாகவும், இதனை கனவில் கண்ட  சோழன் சுயம்புலிங்க மூர்த்தியை ஏரியில் கண்டு இக்கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது
கபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். 
இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தது. 
வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாப விமோசனம் தேடிக்கொண்டான்.

தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். 

ஒரு லிங்கத்தை இடது கையில் வைத்து, 
வலது கையால் மலர்களைத் தூவினார். 

அவருக்கு காட்சி தந்த சிவன், தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க, “”மணலில் லிங்கத்தை வைக்க மனமில்லை,” என்றார். 

சிவன் அவரிடம், “”கையில் லிங்கத்தை வைத்து பூஜித்த முறை சரியல்ல,” எனச் சொல்லி அவரை பசுவாகப் பிறக்கச் செய்துவிட்டார். 

பசுவாக பிறந்தகபிலர், இங்கு சிவனை வழிபட்டு முக்திபெற்றார். 

பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் 
இங்கு கோயில் எழுப்பினார். 

பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, 
தேனுபுரீஸ்வரர்’ எனப்பட்டார். “தேனு’ என்றால் “பசு’. 

இவருக்கு ”உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்’ என்றும் பெயர் உண்டு.

மூலஸ்தானத்தில் “தேனுபுரீஸ்வரர்’ சுவாமி சதுர பீடத்தில், 
சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். 
மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது.

லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து 
வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. 

பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. 
லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், 
நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது. 

சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்திக்கு மேலுள்ள சுவரில் அஷ்டதிக் பாலகர்கள் வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது விசேஷம். 

அம்பிகை தேனுகாம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள்.
[Gal1]
முன் மண்டபத்திலுள்ள தூணில் கபிலர், கையில் 
லிங்க பூஜை செய்த சிற்பம் இருக்கிறது

தேனுபுரீஸ்வரர்’ கோயிலிலுள்ள தூணில் சிற்பமாக 
சரபேஸ்வரர் காட்சி தருகிறார். 

இவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் 
விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது உற்சவரும் புறப்பாடாகிறார். 

ஒரு தூணில் விநாயகர் கையில் வீணையுடன் காட்சி தருகிறார். 

மற்றொரு தூணில் முருகன், யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இடது கையில் சேவல் இருக்கிறது. 
[Gal1]
சிவனை வணங்கியபடி திருமால் மற்றும் பிரம்மா, கங்கா பார்வதியுடன் சிவன், வாசுகி நாகத்தின் மீதுள்ள தாமரையில் அமர்ந்த சிவன், மனைவியருடன்டன் தெட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர்,  மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதம் தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய சிற்பங்கள் அவசியம் காணவேண்டியவை.
இங்கு வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

முருகன், வடுக பைரவர், சரபேஸ்வரர் ஆகியோர் பிரார்த்தனை மூர்த்திகளாக இருக்கின்றனர். 
கிரக, நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள 
சரபேஸ்வரரிடம்  வேண்டிக்கொள்கிறார்கள். 
[Gal1]
ஜாதகரீதியாக வக்கிர தோஷம் உள்ளவர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிறிய லிங்கத்திற்கு மல்லிகைப்பூ மாலை அணிவித்து, வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

இங்குள்ள வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவித்தும், வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். 

முகவரி : அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் 
மாடம்பாக்கம் – 600073 சென்னை.
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperTheppakulam of Thenubureeswarar temple


தங்கக் கை' சேஷாத்ரி சுவாமிகள் வேதம், பாஷ்யம், ஸ்லோகம் போன்ற அனைத்தையும் சிறுவயதிலேயே கசடறக் கற்றுணர்ந்தவர்...
 ரமணரை உலகுக்கு அடையாளம் காட்டி, அவரை ஸ்ரீரமண மகரிஷியாக்கிய பெருமை மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளையே சேரும்.
ஞான சத்குரு
 திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அக்னி லிங்கத்தை அடுத்து ஸ்ரீரமணாச்ரமத்துக்கு முன்னால் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் மகா சமாதி மற்றும் ஆசிரமம் உள்ளது.
Seshadri Ashram

மகா சமாதி
சென்னை, மாடம்பாக்கத்தில் உள்ள 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின்  ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

மகானின் குருபூஜை மார்கழி மாதத்து ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத ஹஸ்தத்தில் ஜெயந்தி விழா நடக்கிறது.
 மாடம்பாக்கம் சபரிவார ஸ்ரீசக்ர மஹாமேரு 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் நடைபெறும் ஜெயந்தி விழாவில், கணபதி ஹோமம், கோமாதா பூஜை, அகோராஸ்தர ஹோமம் (மரணத்தை ஜெயிக்கக்கூடிய வேத மந்திரத்தால் சிவபெருமானைக் குறித்து செய்யப்படும் புனித வேள்வி), அஷ்ட பைரவர் ஹோமம், சுவாசினி பூஜை, செüபாக்ய லட்சுமி பூஜை ஆகிய பூஜைகள் நடைபெறும் .....
 சத்குரு மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின்  அருளாணையின்படி சூட்சும உத்தரவு பெற்று அவருக்கும் பதினெட்டு சித்தர்களுக்கும் மகானின் உள்ளம் விரும்பிய படி அன்னை ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரிக்கும் கோவில் எப்படி அமைய வேண்டும் , எந்தெந்த சன்னதி எந்தெந்த முறையில் இருக்கவேண்டும் , சிலை வடிக்க கற்கள் எங்கிருந்து கொண்டுவரவேண்டும் , சிலைகள் யாரால் செய்யப்படவேண்டும் என்று சூட்சும முறையில் மகானின் வழிநடத்தல் கிடைக்கப் பெற்று உருவாக்கப்பட்ட சக்தி மிக்க உன்னத ஆலயம்..
இக்காலத்தில் அமையும் கிரானைட் தளங்கள் ஜொலிக்கும் மின் விளக்குகள் ஆகியவை அமைக்காமல் மிகப்பழங்கால முறைப்படி எழுப்பட்டு சாந்நித்தியம் நிரம்பி ததும்பும் அருள்தலம்...

இரண்டரை ஏக்கர் பரப்பில் ஐந்துகோடி ரூபாய் செலவில் முழுக்க பக்தர்களின் நிதியைக்கொண்டே எழுப்பப்பட்டு சுவாமிகளின் திரு அவதார நட்சத்திரமான ஹஸ்த நட்சத்திரத்தில் மே மாத்ம் 30ம் தேதி 2004 ஆம் ஆண்டு  மிக விமரிசையாக குட முழுக்கு நடைபெற்றது....  

பதினெட்டு சித்தர்களும் தனித்தனியாக ஏகாந்தமாக தவம் செய்யும் கோலத்தில் தனித்த்னிக்குடில்களில் அருள்பொழிகின்றனர் ...

ஒவ்வொரு சித்தரையும் குறிப்பிட்ட சில நாட்களில் தொடர்ந்து வழிபட  நவக்கிரஹ தோஷம் உட்பட அனைத்து தோஷங்களும் சாபங்களும் நீங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது... 

மிகச்சிறந்த வரப்பிரசாதியான சக்திபீட கணபதி ஆலயத்தில் நுழைகையில் நம்மை வரவேற்று நம்பிக்கை அளிக்கிறார்..

கணபதியை வேண்டிக்கொண்டு மட்டைத்தேங்காய் அல்லது தேங்காய் ச்மர்ப்பிப்பதன் மூலம் வியாபாரம் தொழில் தடைகள் நீங்கி நலம் பெறலாம்..

வெளிநாட்டுப்பயணத்தடைகளையும் நீக்கி அருளுகிறார் சக்திபீட கணபதி !

சித்தூருக்கு அருகிலுள்ள காணிப்பாக்கம் என்கிற அருட்தலத்திலிருந்து அழைத்துவரப்பட்டவர்தானே !!!

அழகுக் குழந்தையாக வள்ளிதெய்வானையுடன் அருட் காட்சிதருகிறான் முருகன ....
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி , ஸ்ரீ மஹாவிஷ்ணு திருகோலங்கள் எழிலாய் மிளிர்கின்றன...

ஒரேகல்லில் கம்பீரமாக வடிக்கப்பட்டு கருத்தைக் கவர்கிறார் ஐயப்பன்..

லலிதா திரிபுர சுந்தரி ஸ்ரீ சக்கர ரூபிணியாக மஹாமேருவாக எழுந்தருளி செங்கோல் ஏந்தி மஹாமாதாவாக அருளாட்சி நடத்தும் எழில் கோலம் நம்மை ஆட்கொள்ளும்...

மரகதப் பச்சைக்கல்லால் ஆதிசங்கரர் வகுத்தளித்த ஸ்ரீ வித்யா முறைப்படி நாலரை அடி உயரத்தில் ஒளிரும் இந்த ஸ்ரீ மஹாமேரு ஷேசாத்திரி சுவாமிகள் சூட்சுமத்தால அடையாளம காட்டப்பட்டு சிறப்பாக ஒரே கல்லால் வடிக்கப்பட்டதாகும்.. வேறெங்கும் காணமுடியாத அபூர்வமானது ...

வரம் தரும் அன்னையாக ஸ்ரீலலிதாவின் மந்திரிணிதேவியான ஸ்ரீ துர்க்கையாக சாந்த ஸ்வரூபிணியாக ராஜகாளியம்மன் சகல் தோஷங்கள் அனைத்தையும் நீக்கி நம்பிக்கை அளித்து அருளாட்சி நடத்துகிறாள் சுற்றுப்பிரகாரத்தில்..எலுமிச்சையில் தீபம ஏற்றி வழிபடுதல் விஷேஷம்...

குருவாயூரை நினைவுபடுத்தும் அதே அமைப்பில் அருள்புரிகிறான் மகானின் மனம் கவர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன்..

சன்னதி முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் குன்றிமணிகளை அளைவதன் மூலம் தோஷங்கள் நீங்கி புத்திரப்பேறு முதலிய வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன...
Satugru Sri Seshadri Swamigal
தனிச்சன்னதியில் அருள்பாலிக்கும் மகான் ஷேசாத்திரி சுவாமிகள் சிலாரூத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளார்... மகானின் உத்தரவுப்படி அடி அண்ணாமல்யில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்லில் சிரிக்கும் தோற்றத்தில் உள்ள மகானின் சன்னதி அதிர்வலைகள் நிரம்பியது...இங்கு அமர்ந்து தியானம் செய்வது ஆனம நலம் பெருக வழிவகுக்கும்...

தனிச்சன்னதில் அருளும் கோதண்ட ராமருக்கு எதிரில் வணங்கிய நிலையில் ஸ்ரீ ஆனுமன்...

திருநாகேஸ்வரத்தில் நாகவல்லி ,நாகலஷ்மி சமேதராக நாகராஜா  அருட்காட்சி அமைப்பிலேயே இங்கும் காட்சிதந்து நாகதோஷம் புத்திர தோஷம் நீக்கி அருள்கிறார்..அபிஷேக அர்ச்ச்னை செய்கிறார்கள்..

ஆலயமுகவரி

ஸ்ரீ சக்ர மஹாமேரு பதினெண்சித்தர்கள் பிருந்தாவன் சித்தர் பீடம்,
எண் 1 --சன்னதித்தெரு , மாடம்பாக்கம் ,
சென்னை 600073 , 

இணைய தளம் <http://www.seshadri.info/

சத்குரு
சத்குருவின் தங்கப்பாதுகை
கிருஷ்ணன்


14 comments:

  1. ஒரு அரிய பிரபல மஹான் பற்றிய அழகான அருமையான பதிவு. ;)))))
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ethanai thagaval evvalavu uzhaippu namaskaram amma.

    ReplyDelete
  3. சத்குருவின் தங்கப்பாதுகையைப் பார்த்ததும், ஜகத்குரு பரமாச்சார்யாளிடமிருந்து எனக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கப்பட்டு, அதற்கு நான் வெள்ளிக்கவசமிட்டு, எங்கள் குடும்பத்தில், பிரதி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவரும், அந்தப்பாதுகா பூஜை நினைவுக்கு வந்தது.

    இதைத் தங்கள் பதிவினில் பார்த்ததும், நாமும் நமக்குக் கிடைத்துள்ள விலைமதிப்ப்ற்ற, பொக்கிஷமான அந்த மஹானின் பாதுகைகளை, தங்கக் கவசமாக மாற்றிவிடலாமா என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

    பிராப்தம் இருந்தால் இதுவும் அந்த மஹான் அருளால் மிகச்சுலபமாக என்னால் விரைவில் நிறைவேற்றப்பட்டுவிடும்.

    இந்த எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ள இந்தப்பதிவுக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  4. ஒரு அரிய பிரபல மஹான் பற்றிய அழகான அருமையான பதிவு.
    பாராட்டுக்கள

    ReplyDelete
  5. எத்தனை செய்திகள்!எத்தனை படங்கள்!பிரமிக்க வைக்கிறீர்கள்!

    ReplyDelete
  6. நல்ல பதிவு...அருமையான படங்கள்...சுவாரசியமான தகவல்கள்...நன்றி.

    ReplyDelete
  7. நல்ல பதிவு...அருமையான படங்கள்...சுவாரசியமான தகவல்கள்...நன்றி.

    ReplyDelete
  8. நல்ல பதிவு...அருமையான படங்கள்...சுவாரசியமான தகவல்கள்...நன்றி.

    ReplyDelete
  9. இந்த பதிவு மிக முக்கியமான தகவல்
    ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பற்றிய பதிவு
    ரொம்ப நன்றிம்மா
    படங்களுடன்
    ஒரு முறையாவது இந்த இடத்தை பார்த்து விட வேண்டும்

    ReplyDelete
  10. எப்போதும் பிரமிப்பும் அதிசயமும்தான் உங்கள் பதிவில் !

    ReplyDelete
  11. மிகவும் அருமையான படங்கள் தகவல்கள்.

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. 116. துளசீவனமாலா கோவிந்தா

    ReplyDelete