
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

மந்திர பூர்வமான திருமுறைகளின்வழுவா மருத்துவத்தில் எந்த நோயும் வந்த வழி பார்க்கும் ..மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோய்கள் கூட நீங்கும்,, களவு போன பொருட்கள் கிடைக்க உதவும் பதிகம் இது..
சேரமான்பெருமான் கொடுத்த திரவியங்களை சுமந்து கொண்டு திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமசிவத்தின் கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகிவந்துஅடித்துப் பொருள்களைப் பறித்துப் போயின.
அப்போது சுந்தரமூர்த்திசுவாமிகள் இந்தப் பதிகம் ஓதி பொருள்களைப் பெற்றுக்கொண்டாராம்...

கந்தக் கடவுளே நம் சொந்தக் கடவுள் என்று பகதர்கள் வாஞ்சையுடன் கொண்டாடி மகிழும் குமரக்கடவுள் தன் தந்தைக்கு கோயில் எழுப்பி வழிபட்டு இறைவனே இறைவனுக்கு ஆலயம் அமைத்தபிரதானச் சிறப்பு மிளிரும் தலமே திருமுருகன் பூண்டி ..

தந்தைக்கு உபதேசம் செய்த முருகப் பெருமான், சூரனை வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் பெற்றார்.
தோஷம் அகல ஒரே வழி ஈசனை வணங்குவதே என்று தெளிந்தார்.
சிவலிங்கத்தை நிறுவி தந்தையை இதயத்தில் தரிசித்தார்.
இடையறாது பூஜித்தார். தோஷம் தூசாக பறந்தது.
கோயிலின் சக்தி இன்னும் பெருகியது.
இடையறாது பூஜித்தார். தோஷம் தூசாக பறந்தது.
கோயிலின் சக்தி இன்னும் பெருகியது.
கோயிலுக்குள் நுழையும்போது ஒப்பாரும், மிக்காரும் இல்லா திருமுருகநாதரின் ஆலயத் தோற்றப் பொலிவு அமானுஷ்ய சக்தி நம்மைச் சூழுவதை மிகச் சாதாரணமாக உணரலாம்.
மானிடரின் துயர் துடைக்க நின்றாலும், கந்தனுக்கே வந்த இடர் களைந்த திருத்தலமல்லவா திருமுருகன் பூண்டி !

பெருநகரங்களாகத் திகழும் பக்கத்திலுள்ள ஊர்களெல்லாம் ஒரு காலத்தில் இவ்வூருக்குள் அடக்கம் என்பது கொங்கு ராஜபுரம் என்று குறிப்பிடும் போதுதெளிவாகிறது.
கோயில் முழுவதும் ஒரு கல்கூட விட்டுவிடாமல் கல்வெட்டாக செதுக்கியிருக்கிறார்கள். ‘
கல்வெட்டுக் கருவூலம்’ எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.
கல்வெட்டுக் கருவூலம்’ எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.

அருணகிரிநாதர் திருப்புகழில் ஞானபூமி, பூண்டி மாநகர் என்று விளிக்கிறார்.
அவசியமும் வேண்டிப்பலகாலும்
அறிவில்உணர்ந்துஆண்டர்க்கொருநாளில்
தவசெபமும் தீண்டிக் கனிவாகிச்சரணமதும் பூண்டற்கு அருள்வாயே
சவதமொடுந் தாண்டித் தகரூர் வாய்சடுசமயங் காண்டற்கு அரியானே
சிவகுமரன் பூண்டிற் பெயரானே திருமுருகன் பூண்டிப் பெருமாளே.

மேற்குத் திசை நோக்கிய சிவாலயம் இது.
ஊர் மேடாகவும் கோயில் சற்று தாழ்வான இடத்திலும் உள்ளது.
உள்ளே நுழைந்ததும் இருபுறமும் சுந்தரர் சிலைகள் காணப்படுகின்றன.
ஊர் மேடாகவும் கோயில் சற்று தாழ்வான இடத்திலும் உள்ளது.
உள்ளே நுழைந்ததும் இருபுறமும் சுந்தரர் சிலைகள் காணப்படுகின்றன.
ஒன்றில் பொருளிழந்த சுந்தரர் தோற்றமும், மற்றொன்றில் பொருளோடு கூடிய சுந்தரருமாக இரு நிலைகளில் உள்ளார்.
முக அமைப்புகளை நுணுக்கமாக செதுக்கியுள்ளனர்.
முக அமைப்புகளை நுணுக்கமாக செதுக்கியுள்ளனர்.
கோயிலின் பிரதான நாயகர் சண்முகநாதர்
உள்முக மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.
ஈசன் இங்கு ஆடிய பிரம்மதாண்டவம் மிக்க சிறப்புடையது.
உள்முக மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.
ஈசன் இங்கு ஆடிய பிரம்மதாண்டவம் மிக்க சிறப்புடையது.

சுற்றுப் பிராகாரத்தில் கண்கவரும் சிற்பங்கள் செதுக்கி கற்களில்
மாயம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

கண்களைக் கவரும் இச்சிற்பங்கள் கருத்தோடு சேர்ந்து பிரமிப்பூட்டுகின்றன.

சுந்தரர் வேடுபறி நிகழ்ச்சியும், அவிநாசிப் பெருமான் முதலை வாயினின்று பாலகனைக் கொணரும் சிற்பமும், சுந்தரரும், சேரமான் பெருமான் நாயனாரும் வெண்களிறில் கயிலைக்கு செல்லும் காட்சியும், ஞான சம்பந்தர் பல்லக்கில் எழுந்தருளுதலையும் மனக் கண்ணில் மிதக்க விட்டிருக்கின்றனர்.


அப்பரடிகள் சமணத்தை விட்டு சைவத்திற்கு மீளும் காட்சியும், காரைக்கால் அம்மை கயிலை நோக்கி தவழ்ந்து முன்னேறும் காட்சியும், திருப்புண்கூரில் நந்தி விலகி நந்தனாருக்கு ஏற்படுத்தித் தந்த
சிவ தரிசனத்தை காணும்போதே மனம் கனிந்து போகிறது.
எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆலயத்தின் ஈசான மூலையில் பைரவர் உள்ளார்.
அருகேயே அண்மைக் காலத்து நவகிரகங்கள் உள்ளன.
அதையொட்டிய மூலையின் ஓர் புறம் குழி ஒன்று காணப்படுகிறது. இதில்தான் ஈசன், சுந்தரரிடமிருந்து பறித்த பொருட்களை வைத்திருந்ததாகக் கூறுகின்றனர்.
கோயிலின் வெளிப்புறத்தில் வேப்ப மரத்தின் கீழே வேம்படி முருகன் எனும் பெயரில் தனியே முருகன் வீற்றிருக்கிறார்.
அது முருகன், இறைவனை வழிபட்டபோது தன்னிலிருந்து பிரிந்த பிரம்மஹத்தியின் வடிவம் என்று கூறுகிறார்கள்.

இவ்வூரில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் ‘கூப்பிடு விநாயகர்’
என்ற திருக்கோயில் உண்டு.
சுந்தரர் பொருளைப் பறிகொடுத்ததை முருகன்பூண்டி மக்களுக்கு அறிவிக்க யானைமுகப் பெருமான் கூவிக்கூவி ஊராரைக் கூப்பிட்டாராம்.
இறைவன் சினந்து ‘இனிமேல் நீ தனித்து இருப்பாயாக’ என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆயிரத்தெட்டு அண்டங்களை அடக்கியாளும் திறத்தை, ஈசனால் பெற்ற சூரபத்மன், தன் திறத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவர்களை சிறைப்படுத்தி, சித்திரவதை செய்ததால், ஆறுமுகங்கள் கொண்டு, வெற்றிவேல், வீரவேல் கொண்டு சுற்றி வந்து பகைவர்களை அழித்ததால், செவ்வேலாக மாறியது.

பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்டதால் சித்தம் கலங்கி, பித்துப் பிடித்த நிலையில் திரிந்த முருகன், கயிலையில் இறைவன் அருளியபடி
மாதவி வனநாதரை வழிபட வந்தார்.

பூஜைக்கு நீர் தேவைப்பட்டதால் வேற்படையை நிலத்தில்
ஊன்ற ஆங்கொரு தீர்த்தம் உண்டாகியது.
நாள்தோறும் அதில் தீர்த்தமாடி அகங்கையால் நீரெடுத்து மங்களாம்பிகை உடனமர் மாதவி வனநாதரை வழிபட்டார்.

இதனால் பிரம்மஹத்தி விலகி வேப்ப மரம் பக்கம் ஒதுங்கியது. இறைவனைப் பீடித்து இருந்த தோஷம் ஒழிந்த தீர்த்தத்தில் நீராடி இன்றும் பலர் மனநோயிலிருந்து தெளிகின்றனர்.
சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாள்கள் இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம்.
இங்குள்ள பிரமதாண்டவ நடராஜர் சந்நிதி விசேஷமானது.
இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி. இது விசேஷமானது.

இதில் நீராடுவதால் மனநோய் மட்டுமின்றி தொழு நோய் போன்ற கொடிய நோய்களும் நீங்குகின்றதாம்.
பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்கள் உள்ளன. தலமரம் = வில்வம்.
அவிநாசியிலிருந்து கோவை - திருப்பூர் நெடுஞ்சாலையில் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருமுருகன்பூண்டி.
இங்கே நிறைய சிற்ப வேலைப்பாடுகள் செய்யும்
அற்புத இடங்களைக் காணலாம்..
கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் நாவலில் வரும் ஆயனச்சிற்பி மனதில் நிழலாடத் தயங்கவில்லை..
திருக்கோவில் ஒன்றுக்கு பிரதிஷ்ட்டை செய்ய விக்ரஹங்கள் வாங்கச் செல்லும் போது அங்கிருந்த சிற்பிகளிடம் ஆர்வமாகக் கேட்டு நிறைய அரிய செய்திகளைத் தெரிந்துகொண்டோம்...
எத்தனையோ நவீன அளவீடுகள் வந்துவிட்டபோதிலும் யவை என்னும் தானியம் தான் காலமாற்றத்தில் மாறாமல் இருப்பதாகவும் யவை அளவிலேயே சிற்பங்களை இன்னும் அளவிடப் பயன்படுத்துவதும் கேட்டு வியந்தோம்...


விக்ரஹம் செய்து கடைசிக்கட்டத்தில் தான் கண்கள் செதுக்குவார்களாம்.. கண் திறப்பதற்கான தங்க ஊசியும் பார்வையிடக் கிடைத்த அரிய வாய்ப்பு என்றும் நினைவில் நிற்கும்..
ராஜ கம்பீரமாக தோற்றமளித்த கர்ப்பக்கிரஹ அம்பிகையின் சாமுத்ரிகா லட்சணங்களை அறியத் தந்தார் தலைமைச் சிற்பி,,
அனுமனின் சிலையின் நுணுக்கங்கள் பிரமிக்கவைத்தது....




திரு மீண்ட திரு முருகன் பூண்டி
ReplyDeleteமுதல் படமே அழகோ அழகு! ;)))))
.....
சிற்பி செதுக்கும் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர்கள் கல்வெட்டுக்கள், மிகப்பெரிய கிணறு முதலிய எல்லாம் மிகச்சிறப்பாகவே காட்டப்பட்டுள்ளன.
ReplyDeleteமலர்ந்த ஆறு செந்தாமரைகளில் குழந்தை வடிவில் ஆறுமுகம், சிவனாரின் அருட்பார்வையுடன் அற்புதமாக உள்ளது.
ReplyDelete/எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டு உள்ளது/
ReplyDeleteபால்கோவா போல நந்தியை, பளபளன்னு, வழவழன்னு, பளீச்சென்று பார்ப்பது மகிழ்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.
/இவ்வூரில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் ‘கூப்பிடு விநாயகர்’ என்ற திருக்கோயில் உண்டு/
ReplyDeleteகூப்பிடு தூரத்தில் [அரை கிலோ மீட்டர்?] இருப்பதால் அந்தப்பெயராக இருக்கலாம்.
சுந்தரருக்கு உதவப்போய் தனியே தவிக்க விட்டுவிட்டாரா ஈசன் ?
பிறருக்கு உதவலாம் என்றாலே பல உபத்ரவங்கள் ... அதுவும் நம் தொந்திப்பிள்ளையாருக்கே! என்றால் நாம் எம்மாத்த்ரம்?
/விக்ரஹம் செய்து கடைசிக்கட்டத்தில் தான் கண்கள் செதுக்குவார்களாம்.. கண் திறப்பதற்கான தங்க ஊசியும் பார்வையிடக் கிடைத்த அரிய வாய்ப்பு என்றும் நினைவில் நிற்கும்/
ReplyDeleteதங்க ஊசியோ, வைர ஊசியோ என்பதற்காக நாம் நம் கண்ணிலா குத்திப்பார்க்க முடியும்? என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
விக்ரஹத்தின் கண்களைக் கடைசியாகத் திறக்க சிற்பிகள் இவற்றைப் பயன் படுத்துகிறார்கள்! ;)
நல்லதொரு தகவல் தான்.
கொல்லப்படுபவர் கெட்டவராக (அரக்கனாக) இருந்தால் கூட ஒரு உயிரை அழித்தல் எத்தகைய மகாபாவத்தை அந்த உயிரை கொல்பவருக்கு (இறைவனாக இருந்தாலும் கூட) உண்டாக்குகிறது என்பதை எத்தனை அழகாய் எண்ணிலடங்கா இந்து புராணங்கள் சித்தரிக்கின்றன..,
ReplyDeleteவியக்கிறேன் ..!
/ராஜ கம்பீரமாக தோற்றமளித்த கர்ப்பக்கிரஹ அம்பிகையின் சாமுத்ரிகா லட்சணங்களை அறியத் தந்தார் தலைமைச் சிற்பி/
ReplyDeleteஆஹா!
அம்பிகையின் சாமுத்ரிகா லட்சணங்களைக் கேட்டு அறிய மிகவும் கொடுத்து வைத்துள்ளவர்கள் அல்லவா!
அதனால் தான் அறிய முடிந்துள்ளது இந்த இரகசியத்தகவல்.
முதல் படத்தில் புஷ்ப அலங்காரங்களும், பூ மாலையும்,
ReplyDeleteதலைமேல் மல்லிகைச்சரமும்,
ஒரு ஜோடி தாமரைகளும்,
முருகனின் ஜொலிக்கும் விக்ரஹமும், பல்வேறு ஆபரணங்களும்,
நெஞ்சினில் ஓம் என்னும் பிரணவத்தைக் காட்டியுள்ளதும்,
சேவலுடன் கூடிய கொடியும்
எல்லாமே நல்ல அழகு.
அதை முழுப்படமாகக் காட்டியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
ariyatha sthalam theryatha thagaval thangalal therinthu konden migavum nanri amma
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி
ReplyDeleteதிரு மீண்ட திரு முருகன் பூண்டி - பதிவ அருமை . எத்தனை எத்தனை தகவல்கள் - எத்தனை எத்த்னை படங்கள் - எத்தனை எத்த்னை விளக்கங்கள். அத்த்னையும் பொறுமையாகப் படித்து, இரசித்து, மகிழ்ந்தேன். நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா
முருகனின் அருளும் அதன் சிற்ப வடிவும் பற்றி தெரிவித்ததற்கு நன்றி அக்கா.
ReplyDeleteநேரில் பலதடவை பார்த்துள்ளதால் நன்றாக ரசித்தேன்.
ReplyDeleteSir Can i know the exact way of worshiping the God kindly guide as i am going there for the first time.
DeleteSir i want to know the way of worshiping the god as i going for the first time
Deleteசிற்பங்கள் அழகு.அந்த கிணறின் தோற்றத்தை நன்கு படம் பிடித்துள்ளீர்கள்.
ReplyDeleteAha....
ReplyDeleteYou made my day happy by bringing my olden days i spent with my father here.
Nice dear.
Nice post.
viji
அருமையான பதிவு.
ReplyDeleteபிரமிக்க வைக்கும் உங்கள் உழைப்பு.
வாழ்த்துகள் அம்மா.
3192+8+1=3201
ReplyDelete