

மந்திரமும் தந்திரமும் ஆனார்போலும்
வேலைக் கடல்நஞ்சை யுண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக்கமழ் குழலாள் பாகர் போலும்
இடைமருதுமேவிய ஊசனாரே." அருளாளர் அப்பர்...

அந்தி வெண்பிறை சூடும் எம்மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தைநீ எனக்கு உய்வகை அருளாய்
இடைமருதுறை எந்தை பிரானே."
என சுந்தரரால் படல் பெற்ற பெருமை மிக்க திருத்தலம் திருவிடைமருதூர் ..
என சுந்தரரால் படல் பெற்ற பெருமை மிக்க திருத்தலம் திருவிடைமருதூர் ..
தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண்சூழ் பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே. (வள்ளலார் - அருட்பா)
மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றானும் சிறப்புடைய திருத்தலம் திருவிடைமருதூர் தேவார மூவராலும் பாடல் பெற்ற சிறப்புடையது.. .
கருவூர்த்தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் அருணகிரிநாதர் கவிகாளமேகம் போன்ற .அருளாளர்கள் அனைவராலும் பாடல்களால் போற்றித் துதிக்கப்பட்ட அருட்தலம்...
சண்பகாரண்யம் சந்திபுரம் வில்வவனம் தபோவனம், ஜோதிபுரம், சர்வதீர்த்தபுரம், செல்வவிருத்திபுரம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், இடைமருது, வீரசோழபுரம், நைமிசாரண்யம் எனப் பன்னிரு பெயர்களால் வழங்க்கப்படும் சிறப்பு பெற்றது..
காசிக்கு நிகரான தலங்களாகக் குறிப்பிடும். பதினொரு சிவத்தலங்களில் திருவிடைமருதூர் திருத்தலம் (மத்தியார்ச்சுனம்) காவிரியின் தென்கரைத் தலமாகும்.
உலகில் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனா, புட்டார்ஜுனா மற்றும் திருவிடைமருதூர் போன்ற மூன்று இடங்களில் மட்டுமே அர்ச்சுனம் என்னும் மருத மரம் உள்ள விருஷத்தை தல விருஷமாகக் கொண்ட சிவன் ஆலயங்கள் உள்ளதாகவும் அவற்றின் மத்தியில் திருவிடைமருதூர் ஆலயம் உள்ளதால் இதை இடைமருதூர் என்று அழைக்கின்றார்கள்.
ஸ்தல விருட்சம் - மருத மரம்.

மகாலிங்கத் தலம் என்று புகழப்படும் திருவிடை மருதூரைச் சுற்றி திருவாவடுதுறை (நந்தி),
திருவலஞ்சுழி (விநாயகர்),
சுவாமிமலை (முருகன்),
திருவாரூர் ( சோமாஸ்கந்தர்),
சிதம்பரம் (நடராஜர்),
ஆலங்குடி ( தட்சிணாமூர்த்தி),
சிர்காழி (பைரவர்),
திருவாய்ப்பாடி (சண்டீசர்),
சூரியனார்கோவில் (நவகிரகம்)
ஆகியஒன்பது ஸ்தலங்கள் பரிவாரத் தலங்களாக விளங்குகிறன..
எந்த ஆலயத்திலும் மூலவரை சுற்றி இருக்குமாறு பரிவார மூர்த்திகள் எனப்படும் குடும்ப தெய்வங்கள் அங்காங்கு சன்னதிகளில் அமர்ந்து இருப்பார்கள்.
ஆனால் அந்தப் பகுதியை சேர்ந்த சோழ நாடு முழுவதுமே அமிர்தம் விழுந்த இடம் என்பதினால் மஹாலிங்க ஸ்வாமியின் ஆலயம் நமது கண்களுக்குத் தெரியும் வகையில் திருவிடைமருதூரில் இருந்தாலும், மஹாலிங்கர் எனப்படும் சிவபெருமான் ஆலயம் சூட்ஷும ரூபத்தில் சோழநாட்டின் ஒரு எல்லை முதல் அடுத்த எல்லை வரை விஸ்தரித்து இருப்பதால் அவரை சுற்றி ஆலய வளாகத்துக்குள்ளேயே இருக்க வேண்டிய பரிவார தெய்வங்களான
விநாயகர் திருவாஞ்சுலையிலும்,
முருகன் ஸ்வாமிமலையிலும்,
சோமஸ்கந்தர் திருவாரூரிலும்,
நடராஜர் சிதம்பரத்திலும்,
பைரவர் சீர்காழியிலும்,
நந்தி ஆடுதுரையிலும்,
தக்ஷிணாமூர்த்தி ஆலங்குடியிலும்,
சந்தேகேஸ்வரர் திருப்பாடியிலும்,
சூரியனார் ஆலயத்தில் அனைத்து நவகிரகங்களும் அமர்ந்து உள்ளார்கள் என்றும், நமது கண்களுக்குத் தெரியும் மஹாலிங்க ஸ்வாமியின் ஆலயம் சோழ நாட்டில் ஒரு சன்னதி மட்டுமே என்றும் ஐதீகம் உள்ளது.
.
திருவிடைமருதூர் தெரு அழகு' என்பது முதுமொழி.
வரகுண பாண்டியனுக்குப் பிரமஹத்தி நீங்கிய தலம். கிழக்குக் கோபுர வாயிலில் பிரஹத்தி உள்ளது.
இன்றளவும் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
திருவிடைமருதூர் ஆலயம் உண்மையில் ஏழு பிராகாரங்களைக் கொண்டது .அவற்றுள் முக்கியமானது வீதிக்கு அடுத்த தேர் ஓடும் பிராகாரம் ,
அடுத்தது அஸ்வமேத பிராகாரம்,
நான்கு பக்கமும் சேர்த்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவு நீண்டு உள்ள அஸ்வமேத பிராகாரத்தை ஒரு முறை சுற்றி வந்தால் அஸ்வமேத யாகம் செய்தப் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
வெளிப்பிரகாரமான பெரிய பிரகாரம் "அஸ்வ மேத பிராகாரம்" மூலம் சுவாமி அம்பாள் கோயிலை வலம் வரலாம். இப்பிராகாரத்தை¬ வலம் வந்தால் பேய், பைத்தியம் முதலியன நீங்கும். இன்றும் இவற்றால் பீடிக்கப்பட்டோர் வந்து வலம் செய்து குணமடைவதைப் பார்க்கலாம்.


அடுத்து பிரணவ பிராகாரம் அல்லது சித்திரப் பிராகாரம்,
பிரணவ பிராகாரத்தில் 32 தோற்றங்களைக் கொண்ட விநாயகரின் சிலைகளும் 108 நடன லட்ஷனன்களை எடுத்துக் காட்டும் சிவபெருமானின் நடராஜ தோற்றங்களும் உள்ள ஆலய வளாகம் ஏழு கோபுரங்களைக் கொண்டு உள்ளது.
பிரணவப் பிராகாரத்தினால் சுவாமியை வலம் வரலாம். இப்பிராகாரத்தில் தலமரம் உள்ளது. அம்பாள் கோயில் உள்ளது உள் பிராகாரம். உள்ளும் ஒரு பிராகாரமுள்ளது.








நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன.
தேரடியில் விநாயகர் கோயிலும்,
கீழவீதியில் விசுவநாதர் கோயிலும்,
மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும்,
தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும்,
வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க,
இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கின்றார்.
எனவே இத்தலம் "பஞ்ச லிங்கத்தலம்" என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
வடக்குக் கோபுர வாயிலில் அகோர வீரபத்திரர் கோயிலும்,
மேற்குக் கோபுர வாயிலில் குமரன் கோயிலும் உள்ளன.
கிழக்கு வாயிலில் படித்துறை விநாயகரும் பட்டினத்தாரும், தரிசனம் த்ருகின்றனர்..
படித்துறை விநாயகர்
மேல் வாயிலில் பர்த்ருஹரியாரும் தரிசனம் தருகின்றனர்.
சொக்கநாதர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து
மேகராகக் குறிஞ்சி பண்பாடினால் மழைபெய்யும் என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கை...

கிழக்கு நோக்கிய சுவாமி அம்பாள் சந்நிதிகள் கோயிலின் உள்ளே உள்ள பாண்டியன் கோபுரத்தையும் சேர்த்து ஐந்து ராஜகோபுரங்கள் உள்ளன.
உமாதேவியார், விநாயகர், முருகன், திருமால், காளி, இலக்குமி, சரஸ்வதி, வேதம், வசிட்டர், உரோமேச முனிவர், ஐராவணம், சிவவாக்கியர், கபிலர், அகத்தியர், வரகுண பாண்டியன் முதலியோர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.
மருத மரத்தின் கீழே கட்டுண்ட கண்ணனின் உருவம் உள்ளது. பக்கத்தில் காவிரி ஓடுகிறது.
மூலவர் மகாலிங்கேஸ்வரர் - அழகான மூர்த்தி. நிறைவான தரிசனம்.
அம்பாள் அழகிய கோலத்துடன் தரிசனம். அம்பிகை மௌனமாக இருந்து தவஞ்செய்த மூகாம்பிகை சந்நிதியும், மேரு பிரதிஷ்டையும் தரிசிக்கத் தக்கவை.

கோயில் நன்கு பராமரிக்கப்பட்டுப் பொலிவுடன் திகழ்கிறது.
தைப்பூசத்தில் சுவாமி காவிரிக்கு எழுந்தருளி ஐராவணத்துறையில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பாக நடைபெறுகிறது.
.கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து அந்நாளில் சுவாமி திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வர மண்குடங்களே பயன்படுத்தப்பட்டன என்னும் செய்தியை அறிகிறோம்.


இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும்.


மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.

திருவிடை மருதூர் ஆலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.

அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
mookambigai,thiruvidaimaruthur

ஸ்ரீ மூகாம்பிகை தவநிலையில் காட்சி அருளும் அன்னை சோழர்காலக் கல்வெட்டில் யோகிருந்த பரமேஸ்வரி' என்று குறிப்பிடப்படுகிறார்.
mookambigai,thiruvidaimaruthur
ஸ்ரீ மூகாம்பிகை தவநிலையில் காட்சி அருளும் அன்னை சோழர்காலக் கல்வெட்டில் யோகிருந்த பரமேஸ்வரி' என்று குறிப்பிடப்படுகிறார்.

அம்மன் சன்னதி விமானம்

தலவிநாயகர் ..கல்வெட்டில் ' புராண கணபதி' என்று குறிப்பிடப்படும்.ஆண்டவிநாயகர்
ஆண்ட விநாயகர் பூசித்ததாகப் புராணவரலாறு , ஆதலால் அருள்மிகு மகாலிங்கப் பெருமானுக்கு அபிடேகம், நைவேத்தியம், தீபாராதனை நடைபெறுவது இத்தலச்சிறப்பாகும்.
இத்தலத்தில் சோமாஸ்கந்தரை ஏகநாயகர் என்றும் நடராசரை மாணிக்கக்கூத்தர் என்றும் கல்வெட்டுகள் குறிக்கிற்ன.


ஒருமுறை பாண்டிய மன்னனான வரகுண பாண்டியன் என்பவர் தன நாட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது இரவாகி விட அதி வேகமாக ஓடி வந்து கொண்டு இருந்த அவர் ஏறி வந்த குதிரையின் காலடிக் குளம்புகளால் மிதிக்கப்பட்டு வழியில் படுத்து இருந்த அந்தணர் ஒருவர் மரணம் அடைந்தார்.
தவறுதலாக ஒரு பிராமணரைக் கொன்று விட அவருக்கு பிரும்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இறந்து போன பிராமணன் அவர் பின்னால் பிரும்மஹத்தியாக தொடர்ந்து சென்று கொண்டு மன வேதனையை அளித்து வந்தார்.
ஆகவே அந்த மன்னன் மதுரை சோமசுந்தரர் ஆலயத்தில் சென்று பிரும்மஹத்தி தோஷத்தைக் களைய பூஜை செய்தபோது அந்த மன்னன் கனவில் வந்த சிவபெருமான் தன்னை திருவிடைமருதூரில் வந்து வணங்கினால் அவரை தொடர்ந்து கொண்டு வந்து இருந்த பிரும்மஹத்தி பிரச்சனை முடிவுக்கு வரும் என்றார்.

....தொடர்ச்சி நாளை.........
”திருவிடைமருதூர்”
ReplyDeleteநல்லதொரு மிகச்சிறப்பான ஊரைப்பற்றியும், கோயிலைப்பற்றியும்
கொடுத்துள்ள மிக அழகான பகிர்வு.
காட்டப்பட்டுள்ள நந்திகள் இரண்டும் நல்ல அழகு !
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "திரு இடைமருதிற் பூரணம்":
ReplyDeleteதுவஜஸ்தம்பம் இரண்டும் எவ்ளோ நீளம் [
நல்லதொரு கவரேஜ். சபாஷ்!
அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..
ஐம்பது வருடங்களுக்கு முன் பார்த்த கோவில். அதன் பிறகு எத்தனையோ முறை அந்த வழியில் போனாலும் உள்ளே போக முடியவில்லை. இன்று உங்கள் புண்ணியத்தில் தரிசனம் கிடைத்தது.
ReplyDeleteசாந்த ஸ்வரூபியான அம்பாளுக்குக் கோபம் வந்தால் ..... புரிந்து விட்டது.
ReplyDeleteஅது தான் ஸ்ரீ மஹா லக்ஷ்மி துர்க்கைப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
அழகிய செந்தாமரையில் அமைதியாக வீற்றிருக்க வேண்டியவள், சிங்கத்தையே காலடியில் போட்டு மிதித்துக்கொண்டு அனைத்துத் திருக்கரங்களிலும், ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு ....
அப்பப்பா ...
ரஸிக்கவில்லை .. சகிக்கவில்லை ..
சீற்றம் கூடாது தாயே!!
சாந்த ஸ்வரூபியான அம்பாளே என்றும் எனக்குத்தேவை.
பொதுவாக இந்தப்பதிவு மிகவும் அருமையாக அமைந்துள்ளது.
ReplyDeleteவேறொரு நண்பர் வீட்டில் அமர்ந்து பின்னூட்டமிடுவதால் இன்று இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டியுள்ளது.
நாளை பொழுதாவது நல்ல பொழுதாகப் பிறந்து, என் வீட்டு கணினியில் நெட் வொர்க் கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும்.
அதற்கும் அம்பாள் தான் அருள் புரிய வேண்டும்.
vgk
மிக அருமை ராஜி.. எப்போதும் உங்கள் பகிர்வுகள் அற்புதம். எனக்கு நேரமின்மையால் வரக் கூடவில்லை. மன்னிக்கவும்.:)
ReplyDeleteniraivana padhivu amma
ReplyDeleteniraivana padhivu amma
ReplyDeleteniraivana padhivu amma
ReplyDeleteதிருவிடைமருதூரின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டேன். படங்கள் வழக்கம் போல அருமை.
ReplyDeleteகொடிமரம் போட்டோ மிக அருமையாக உள்ளது.கண் சிமிட்டும் கடல் நஞ்சுண்ட சிவபெருமான் சூப்பர்.
ReplyDeleteவலைச்சரத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
ReplyDeletekaalaiyil nalla tharisanam thangal valaipoovil.
படங்களும் தகவல்களும் மிக அருமை.
ReplyDeleteமிகச்சிறப்பான ஊரைப்பற்றியும், கோயிலைப்பற்றியும்
ReplyDeleteகொடுத்துள்ள மிக அழகான பகிர்வு.படங்கள் வழக்கம் போல அருமை
மனம் சஞ்சலத்தோடவும் வருத்தத்தோடவும் வந்தேன். ஏதோ விடை கொடுத்த மாதிரி இருந்தது இந்தப் பதிவு. மிக அழகான படங்கள்.விளக்கங்கள். அழகு ராஜேஷ்வரி. மனம் சொல்கிறது நன்றி.
ReplyDeleteவணக்கம்! நான் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், சூரியனார் கோயில் சென்றுவிட்டு திருவிடைமருதூர் கோயிலுக்கும் சென்று வந்தேன். பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் இருந்த அந்த கோயிலைப் பற்றிய தங்கள் வண்ணப் பதிவு அருமை.
ReplyDeleteமிக அழகான பகிர்வு.பாராட்டுக்கள்
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
119. ஸ்ரீ நிவாஸா கோவிந்தா
ReplyDelete3016+5+1=3022 ;) ஒரு பதிலுக்கு நன்றி.
ReplyDelete