
கராரவிந்தேன பதாரவிந்தம்முகாரவிந்தே விநிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
இந்தீவரஸ்யாமள கோமளாங்கம் இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம் ஸந்தான கல்பத்ருமமாஸ்ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

நீலோத்பல மலரைப்போல கருநீல வண்ணமும் பேரழகும் வாய்ந்த திருமேனி கொண்டவரே, கோவிந்தா... நமஸ்காரம்.

இந்திரன் முதலான தேவர்களால் பூஜிக்கப்பட்ட திருவடிகளை உடையவரே, வருந்தி வேண்டுவோருக்கு எல்லா பேறுகளையும் குறிப்பாக புத்திர பாக்கியம் அருளும் கற்பகவிருக்ஷம் போன்றவரே... பாலமுகுந்தா, நமஸ்காரம்.

(கோகுலாஷ்டமி அன்று பால முகுந்தாஷ்டகம் துதியை பாராயணம் செய்தால் திருவருளும் , எல்லா நலன்களும் வந்து சேரும்.)

வஸுதேவஸுதம் தேவம்கம்ஸசாணூரமர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருக்ஷணம் வந்தே ஜகத்குரும்

பூர்ணாவதாரமாக கண்ண பரமாத்மா திகழ்வதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து கோகுலாஷ்டமி என்று கோலாகலமாக கொண்டாட்ப்படுகிறது..!.





கிருஷ்ணாவதாரத்தில் பரிபூரணாநந்த ஸ்வரூபம் கோகுலாஷ்டமி அன்று உதித்தது..!
குழந்தை முதல் பலவிதமான லீலைகளையெல்லாம் செய்தவர். தாய்க்கு உலகம் முழுவதையம் தன் வாய்க்குள்ளேயே காட்டியவர்.
பிரம்ம தேவருக்கு பசுக்களை அழைத்துச் செல்லும்போது தானே பசுவாகவும் கன்றாகவும் இருந்து காட்டியவர்.
பல இடங்களில் விஸ்வரூபத்தை வெளிக்காட்டியிருக்கிறார். பாண்டவர்களின் தூதுவராக போகும்போது கூட தன் விஸ்வரூபத்தைக் காட்டியவர்.
அர்ஜுனனுக்கு மட்டும் தெரிந்த விஸ்வரூப ஸ்வரூபம் பகவத்கீதையில் காட்டிய விஸ்வரூப ஸ்வரூபமாகும்.
விஸ்வரூப வடிவமாக உலக வடிவமாக எல்லா வடிவமாகவும் இருந்து அருள்பாலிப்பவர் கண்ணபிரான்.
கண்ணன் இரவில் பிறந்தார். ஆகவேதான் அறியாமையை அகற்றும் ஜோதியாக விளங்குகிறார்.

அஷ்டமி நவமி காலங்களில் மங்களகரமான காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள். ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான் கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.

கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம்.

குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும் அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலமாக வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவதைப் பார்க்கும்போது, சின்னக்கண்ணன் வீட்டிற்குள் வந்து விட்டது போன்ற உணர்வு தோன்றும்.


இது, ஏதோ அலங்காரத்துக்காக அல்ல;. கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான். ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியைப் பாடினர். , "என் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் 'கிருஷ்ணா...' என்று, பகவான் காலில் விழுந்து விட்டால், அதைத்தான், "சரணாகதி தத்துவம்' என்கிறது .


சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' என்று கோவிந்தன் பெயரைச் சொன்னால் கேட்பவர்களும் ""கோவிந்தா கோவிந்தா'' என்று தான் சொல்வர். "சர்வத்ர' என்றால் "எல்லாக் காலத்திலும்', "எல்லா இடத்திலும்', "எங்கும்' என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான். சர்வலோக சக்கரவர்த்தியாக இருக்கும் இறைவன், பரம எளியவனாக பசுக்கூட்டத்தோடு பால கிருஷ்ணனாக திரிந்த வேளையில் ஏற்பட்ட பெயர் "கோவிந்தன்' என்பதாகும்.



அந்த பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த ஆலிலையில் குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு படுத்துக் காட்சி தந்தார்.

அப்போது உலகசிருஷ்டி அனைத்தும் குழந்தை பாலகிருஷ்ணனுக்குள் ஒடுங்கிக் கிடந்தது. ஆலிலைக் கண்ணனை "முக்தி தருகின்றவன்' என்னும் பொருளில் "முகுந்தன்' என பெயர் வந்தது .
தாமரைப் பூப்போன்ற தன் கால் கட்டை விரலை தாமரைப் பூப்போன்ற தன் கையினால் பிடித்து இழுத்து, வாயிதழால் சுவைத்தபடி சயனித்திருக்கும் இக்கோலத்தை வழிபட்டால் பிறவித் துன்பம் நீங்குவதோடு வைகுண்டத்திலும் வாழும் பாக்கியம் உண்டாகும்.
""சாப்பிடுவது பிரம்மம். சாப்பிடப்படுவது பிரம்மம். சாப்பாடு போடுவதும் பிரம்மம்,'' என்றொரு மந்திரம் உண்டு. அந்த மந்திரத்தை மெய்ப்பிக்கும் வகையில் கண்ணனே மாயாலீலைகளைச் செய்து மகிழ்ந்ததாக வணங்கித்துதிக்கிறோம்..

முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார்.




கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.



ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்'' செயலைச் செய்தாலும் அதன் பலனை கிருஷ்ணருக்கே சமர்ப்பணம் செய்து விட வேண்டும். இதனால் பிறவித்துன்பத்தில் இருந்து விடுபடலாம்.
"போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!'












இரவில் பிறந்த அறியாமையை அகற்றும் கண்ணன் தொட்டிலில் ஆடும் அழகே அழகு. கண்கொள்ளா காட்சி அத்தனை படங்களும்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
சிறப்பான விளக்கம் + படங்கள் எல்லாம் அழகு பகிர்வுக்கு நன்றி அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எம் கிருஷ்ணரின் லீலைகளையும் அருமைகளையும் அழகிய வண்ணப் படங்களுடன், கருத்தினில் நிலை பெற வைக்கும் அழகிய பொருளார்ந்த சொற்றொடர்களுடன், திவ்யமாய் மனதினில் பதிய வைக்கும் பதிவு! கிருஷ்ணரின் திவ்ய தரிசனம் செய்ய வைக்கும் பதிவு! வாழ்க! வளர்க!! கிருஷ்ணன் அருள்புரிவானாக!
ReplyDeleteகிருஷ்ணார்ப்பனம்!
கிருஷ்ணரின் படங்களை ரசிக்காமளிருக்கவும் முடியுமோ!
ReplyDeleteமுறுக்கு, சீடை(கள்) தட்டை, அப்பம் வாழ்த்துகள்!
அழகிய படங்களுடன் இனிய பதிவு..
ReplyDeleteஸ்ரீகிருஷ்ணனைப் பற்றிப் பேசவும் கேட்கவும் பிறவி ஒன்று போதுமோ!..
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
உங்கள் ஆன்மீகப் பதிவுகளின் சிறப்பே அதில் உள்ள வண்ணப் படங்களே. கண்ணன் என்றால் சொல்லவும் வேண்டுமோ? அந்த மயில்வாசல் படம் பார்க்கப் பார்க்க பிரமிப்பு தட்டுகிறது. (முன்பெல்லாம் படங்களை ஒரே சீராக அமைப்பீர்கள். இப்போது சிறிதும் பெரிதுமாக படங்கள உள்ளன)
ReplyDeleteமுதல் வீடியோவில் ஆடியோ சரியாக வரவில்லை. இரண்டாவது வீடியோவை நன்றாகவே கண்டும் கேட்டும் ரசித்தேன்.
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்!
பாலமுகுந்தாஷ்டகத்துடன்
ReplyDeleteகோகுலாஷ்டமி விழா பதிவினைக்
கோலாகலமாக துவங்கியுள்ளது
அருமையாக உள்ளது.
>>>>>
ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகுக்கு அழகு
ReplyDeleteசேர்ப்பதாக உள்ளன, தாங்கள்
கஷ்டப்பட்டு கோர்த்துள்ள இதழ்
விரித்த 65 தாமரை புஷ்பங்கள்.
எப்படித்தான் இப்படியெல்லாம் செய்கிறீர்களோ?
தங்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியது
ஏராளம் ஏராளமாக உள்ளனவாக்கும்.
எப்போ என்னை அழைத்துக்
கற்றுத்தருவதாக உள்ளீர்கள் ?
>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteகுருவாயூருக்கே சென்று வந்தது போல திருப்தியாக உள்ளது.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுருவாயூர் கோயிலில் எங்கள் இல்லத்து அனைவருக்கும் துலாபாரம் செலுத்திவிட்டு வந்தோம். அந்த இனிய நினைவுகளும் ஞாபகத்துக்கு வந்தன.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுருவாயூர் அருமே ஆனகட்டா என்ற இடத்துக்கும் நாங்கள் சென்று வந்தோம்,. நூற்றுக்கணக்கான யானைகள் அங்கு இருந்தன. பார்த்து அப்படியே பிரமித்துப்போனோம்.
Deleteஅந்தப்படத்தையே நெடுநேரம்
ReplyDeleteபார்த்து எனக்குள் மிகவும்
மகிழ்ந்துகொண்டேன். ;)
>>>>>
எல்லாப்படங்களும் காணொளிகளும்
ReplyDeleteவழக்கம்போல அருமை.
விளக்கங்களும் சூப்பர்
>>>>>
பிரஸாதங்களைக் கண்களால்
ReplyDeleteஸ்வீகரித்துக்கொண்டேன்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ......
ஒரு பெருமூச்சு !
எதுவும் எனக்கு வேண்டாம்
கவலைப்படாதீங்கோ.
என் பங்கையும் சேர்த்து _ _ _ _
நீங்களே சாப்பிட்டுக்கோங்கோ.
>>>>>
கோபாலகிருஷ்ணனின்
ReplyDeleteஇனிய கோகுலாஷ்டமி
நல்வாழ்த்துகள்.
>>>>>
கோபாலகிருஷ்ணனின்
ReplyDeleteஇனிய கோகுலாஷ்டமி
நல்வாழ்த்துகள்.
>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteHAPPY BIRTH DAY TO OUR LORD KRISHNA !
Deleteஅனைத்துக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
Deleteஅழகு கொஞ்சும் கிருஷ்ணர் படங்கள் அழகோ...!!!அழகு.
ReplyDeleteகோகுலாஷ்டமி தகவல்கள் சிறப்பு! அழகிய கிருஷ்ணரின் படங்கள் அணிவகுத்து மகிழ்விக்கச் செய்தன! நன்றி!
ReplyDeletethanks for sharing my god pic
ReplyDeleteமேடம், வை.கோபாலகிருஷ்ணனின் வரம்பு மீறிய / இரட்டை அர்த்தங்களுடன் கூடிய கமெண்ட்ஸ்'ஐ நீங்கள் ஏன் காவல் துறையின் சைபர் க்ரைமிடம் (Cyber Crime) புகார் செய்ய கூடாது ?
ReplyDeleteதட்டுங்கள் திறக்கப்படும் !