Wednesday, August 27, 2014

புன்னை நல்லூர் மாரியம்மன்கோவில் ஆவணிதிருவிழா






Punnainallur Mariamman Koil's profile photo

Punnainallur Mariamman Koil's profile photo


Punnainallur Mariamman Koil's profile photoPunnainallur Mariamman Koil's profile photoPunnainallur Mariamman Koil's profile photoPunnainallur Mariamman Koil's profile photoPunnainallur Mariamman Koil's profile photo





















ஆதியிலே அமைந்த சக்தி எங்கள் புன்னைநல்லூர் முத்து மாரி - அம்மா
ஆள்கிறாளாம் பூமியெல்லாம் சிங்கத்தின்மேல் ஏறி 
கத்தி போல் வேப்பிலையாம் காளியம்மன் மருத்துவராம்!
ஈட்டி போல் வேப்பிலையாம் ஈஸ்வரியின் அருமருந்தாம்!
வேப்பிலையின் உள்ளிருக்கும் விந்தைதனை யார் அறிவார்! 

  பரிகாரம் கேட்டு விட்டா, பக்கத்துணை இருப்பவள்
’’புன்னைநல் லூர் பவள  முத்துமாரி  அம்மையே
  அன்னை  அகிலாண்ட  ஆத்தாளே, -என்னையுன்,
  புற்று மணலாக்கிப்  புரிவாய்  அருளேநீ,
  கற்ற கைமண்ணுக்கு புற்றுமண் காப்பு’!
தஞ்சாவூர்,புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் ஆவணி                           திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது  வழக்கம்...

தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் 
எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை 
காவல் தெய்வங்களாக அமைத்தனர். 

அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் அமைய பெற்ற 
சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். 
தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் 
புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் உள்ளது. 
 புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் மூலவர் புற்று மண்ணால்  உருவாக்கப்பட்டதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிசேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர்   புன்னைநல்லூர் கோவிலுக்கு வந்து புற்றில் மாரியன்னை வடிவமும் கொடுத்து ஸ்ரீசக்கரமும் உருவாக்கம் செய்தார் .
 அம்மனுக்கு அபிஷேகம் செய்வது கிடையாது . விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் தினமும் அபிஷேகம் நடத்தப்படும்

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிசேகம் அம்மனுக்கு நடைபெறும் சமயத்தில் ஒரு மண்டலம் அம்மனை ஒரு வெண்திரையில் வரைந்து ஆவாகனம் செய்து அதற்கு தான் அர்ச்சனை, ஆராதனை நடைபெறும். 

அப்போது மூலஸ்தான அம்மனுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிசேகம் நடைபெறும்.  ஆகமவிதிப்படி தினசரி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

 சிறப்பு மிக்க புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்றாகும்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலின் ஆவணி திருவிழா  கொடியேற்றத்திற்கு. முன்னதாக கொடி கம்பத்திற்கு மஞ்சள், பால், தயிர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்யப்படும்..

பின்பு வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் கொடி ஏற்றப்படும்... இதையடுத்து கொடிகம்பத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு  தரிசனம் அளிக்கும்..!

படிச்சட்டத்தில் அம்மன் வீதிஉலா . , சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடும்,  அன்ன வாகனத்தில் அம்மன் புறப்பாடும்,  சிம்மவாகனத்தில் அம்மன் புறப்பாடும்,  பெரியகாப்பு, படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடும், அன்னவாகனத்தில் அம்மன் புறப்பாடும் திருவிழாவாக நடைபெறும்..
பால்குட ஊர்வலம்
தேர்பவனி விடையாற்றி விழா . மஞ்சள் நீர் தீர்த்தாரி நடைபெற்ற பிறகு  கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்க்கும்..!  தெப்ப உற்சவமும்,  தெப்ப உற்சவ விடையாற்றி விழாவும் மிகச்சிறப்பாக நடைபெறும்... 

7 comments:

  1. அன்னையின் சிலிர்க்க வைக்கும் அற்புதங்களை உணர்ந்தவர்கள் நிறையபேர்கள். இவர்களைப் போன்ற தூய உள்ளம் கொண்டோரெல்லாம் சேர்ந்து கொண்டாடும் வைபவம் அன்னையின் அருளாட்சியினை உணர்த்துகின்றன. அருளாட்சி பெற விரும்புவோருக்கும் தக்க சமயத்தில் தக்க உதவிகள் செய்வதில் மாயக் கண்ணனுக்கு, சகோதரி மாரித் தாயும் சளைத்தவள் அல்ல!
    இத்தகைய திருவிழாக்களின் சிறப்பினை நயமுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி!
    தொலைவில் உள்ளோரையும் இவ்விழாவில் கலந்து கொண்ட திருப்தி அளிக்கும் உன்னத பகிர்வு! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  2. அம்மனின் அருள் தரிசனம்.. வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  3. புன்னைநல்லூர் மாரியம்மனின் தகவல்கள், அக்கோவிலின் சிறப்புகளை அழகான படங்களுடன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மாரியம்மன் மாண்புகள் அறிந்தேன்.
    அழகான படங்களுடன் அற்புதம்!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  5. மாரியம்மனை பற்றி அழகு தமிழில் படைத்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பரிகாரம் கேட்டுவிட்டா பக்கத் துணையாக நிற்கும் புன்னைநல்லூர் மாரியம்மனைப்பறிறிய பற்பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். படங்களும் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம் கிடைத்து விட்டது.
    மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete