"ஓம், ஸ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா'
- கணபதி மூல மந்திரம்..
"ஸுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே'
- விநாயகர் சித்தி மந்திரம்..
கணபதி ஞானத்தின் உருவம். . மூலாதாரமானவர்.
வேதங்களில் உள்ளதுபோல யோக அடிப்படையில்
வேதாந்த பூர்வமாக உள்ளவர்
நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இதிகாசங்களும் விநாயகரைப் போற்று கின்றன. தேவர்களும் கணபதியை வழிபட்ட பின்பே எச்செயலையும் தொடங்குவார்கள்.
திருவண்ணா மலை செந்தூர விநாயகர்,
விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார்,
திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார்,
மதுரை முக்குறுணிப் பிள்ளை யார்,
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்,
திரு நரையூர் பொள்ளாப் பிள்ளையார்.
- ஆகியவை கணபதியின் ஆறுபடை வீடுகள் ஆகும்.!
திருவண்ணாமலை விநாயகர் நெருப்பையும்;
திருவானைக்கா விநாயகர் நீரையும்;
சிதம்பரத்திலுள்ள விநாயகர் ஆகாயத்தையும்;
திருக்காளத்தி விநாயகர் வாயுவையும்;
காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய விநாயகர் நிலத்தையும் குறிக்கின்றனர். இவர்களை வணங்கினால் பஞ்சபூதங்களால் ஏற்படும் அல்லல் நீங்கும்
தேவர்கள் பாற்கடல் கடையும்போது கணபதியை வணங்காமல் செய்ததால் முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம்.
அதன்பின் தவறை உணர்ந்த தேவர்கள் உடனடியாக அங்குள்ள கடல் நுரையால் விநாயகர் உருவம் செய்து வணங்கியபின் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றனர்.
அதன்பின் தவறை உணர்ந்த தேவர்கள் உடனடியாக அங்குள்ள கடல் நுரையால் விநாயகர் உருவம் செய்து வணங்கியபின் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றனர்.
கடல் நுரை விநாயகரை திருவலஞ்சுழி தலத்தில் காணலாம்.
சிவபெருமான் திரிபுரம் எரிக்க தேரில் விரைவாகச் சென்றார்.
வழியில் தேரின் அச்சு முறிந்தது.
கணபதியை வழிபடாததால்தான் இப்படியானது என்று, கணபதி வழிபாடு செய்து அதன்பின் திரிபுரத்தை எரித்து முடித்தார் சிவன்.
அச்சு முறிந்த இடம்தான் சென்னை அருகே யுள்ள அச்சிறுபாக்கம்.
துன்பங்களுக்கெல்லாம் காரணமான வினைகளின் வினைப் பயனைத் தீர்ப்பவர்தான் மகாகணபதி- 18 கணங்களுக்கும் அதிபதி.
மஹாகணபதியை மனதால் நினைக்க, வாக்கினால் பாட, தலையால் வணங்க வினைகள் யாவும் தீரும். கருணை புரிவதில் இணையற்றவர். மிகவும் எளிமையானவர்.
ஐங்கரனின் ஐம்பூதத் தத்துவங்களையும், ஐம்பூதத் தலங்களையும், ஆறாதரங்களைக் கடக்க உதவும் அறுபடைத் தலங்களையும் ஐங்கரனின் சிறப்புகளை மிகவும் ரத்தினச் சுருக்கமாக, அழகு மிளிரும் படங்களுடன், அற்புதம் அழகு என வியக்கும் வண்ணம் மிக எளிமையாகத் தந்ததற்கு வாழ்த்துக்களும் ....பாராட்டுதல்களும்!
ReplyDeleteவிநாயகரை வணங்கி பரவசம் அடைகிறேன்.... பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகருணை புரிவதில் இணையற்ற எளிமையான கணபதியை மனதால் நினைத்து, வாக்கினால் பாடி, தலையால் வணங்குவோம்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
சிறப்பான விளக்கம்படங்களும் நன்று பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விக்னங்களை களையும் விநாயகரின் சிறப்பம்சங்கள், அழகான விநாயகர் படங்கள். சிறப்பானதொரு பகிர்வு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவினை தீர்ப்பான் எம்பெருமான் விக்ன விநாயகன்!
ReplyDeleteஅழகான அற்புதமான படங்கள்!
பார்க்கும் போது மனதிற்கு அமைதி கிட்டுகிறது!
பலவிடயங்கள் இன்றும் உங்கள் பதிவில்..
அருமை சகோதரி! வாழ்த்துக்கள்!
மஹா கணபதியின் அருமை பெருமைகளை வாசித்து மகிழ்வதே மகிழ்ச்சி.. பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteவிநாயகனே வினை தீர்ப்பவனே!!! ஞானத்தின் முதல்வனுமான வேழ முகத்தானைக் கண்டு மனம் குளிர்ந்தோம்! விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள்!
ReplyDeleteவிநாயகர் படங்கள் அருமை.ஆலிலை ஓவியம் அருமை.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
கணபதியின் ஆறு படை வீடுகளுள் விருத்தாச்சலம் மற்றும் திருநாரையூர் சென்றதில்லை. கொடுப்பினை இருக்கிறதா தெரியவில்லை.
ReplyDeleteநல்ல பகிர்வு அம்மா...
ReplyDeleteவணங்கிறேன்,,,
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅரச இலையில் உள்ள பிள்ளையார் கம்பீரமாக காட்சி தருகிறார். அடுத்து வரப் போகும் அதிக்ப் படங்கள் கொண்ட ஒரு பெரிய பதிவின் முன்னோட்டப் பதிவு இது
வினைகளை களையும் விநாயகர் பாதம் போற்றி.
ReplyDeleteஅழகான விளக்கம், அழகான படங்கள்.
வாழ்த்துக்கள்.