‘பிடியதன் உரு உமைகொள மிகு கரியது,
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்,
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை,
வடிவினர், பயில்வலி வலமுறை இறையே’
அழகிய தமது திருவடிகளை வணங்கும் அடியார்களின் துன்பத்தைப் போக்குவதற்காக வலிவலம் என்ற திருக்கோயிலில் இருக்கின்ற இறைவன் தான் ஆண்யானையாகவும் இறைவியைப் பெண்யானையாகவும் கொண்டு கணபதியாகிய விநாயகர் வர அருள்புரிந்தார் .என திருஞானசம்பந்தர் அருளினார்..
விநாயகப் பெருமான் தோன்றிய தினம் ஆவனி வளர்பிறைச் சதுர்த்தி எனவேதான் ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறோம்.
உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக சிவம் எனும் பரம்பொருள் விநாயகராக வடிவம் தாங்கித் தோன்றிய நாளே விநாயகர் சதுர்த்தி.
‘ஓம்’ எனும் மூல மந்திரத்தின் வடிவமே விநாயகரின் வடிவம்.
‘ஓம்’ எனும் மந்திரம் இறைவன் கொண்ட முதல் வடிவத்தை உணர்த்துவதாலேயே வழிபாட்டில் விநாயகருக்கு முதலில் பூசனை நடக்கின்றது.
விநாயகர் சதுர்த்தி என்பது சிவம் என்கின்ற பரம்பொருள் துன்பங்களைப் போக்குவதற்கு விநாயகர் வடிவம் கொண்ட நாளாகும்.
இறைவன் துன்பங்களைப் போக்க நாளும் ஓடி வருகின்றான் என்பதனை உணர்த்தும் நாள் - இறைவன் விநாயகர் வடிவம் தாங்கி வந்த நாள் -விநாயகர் சதுர்த்தியாகும்.
விநாயகர் சதுர்த்தியன்று மனம், வாக்கு, காயத்தால் தூய்மையாய் இருந்து இறைவனை இடைவிடாது நினைந்திருந்து வீட்டிலும் ஆலயங்களிலும் வழிபாடுகள் செய்யலாம்.
ஆலயங்களிலே நடைபெறும் சிறப்புப் பூசனைகளில் கலந்து கொள்வதோடு இறைவனை இடைவிடாது நினைப்பதற்குத் துணைபுரியும் சமய நிகழ்வுகளில் பங்கேற்று இறைவனைச் சிந்திக்கலாம்.
ஆலயங்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறை நடனங்கள், சமய நாடகங்கள், சமய சொற்பொழிவுகள், சமய திரைப்படங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.
வீட்டில் திருமுறைகளை ஓதுதல், சமய நூல்களை வாசித்தல்,
சமய உரைகளைக் கேட்டல் போன்றவற்றைச் செய்யலாம்.
சமய உரைகளைக் கேட்டல் போன்றவற்றைச் செய்யலாம்.
விநாயகர் சதுர்த்தியன்று புற்று மண்ணால் விநாயகப் பெருமானின் திருவுருவத்தினைச் செய்து, அதில் விநாயகரை மந்திரம், பாவனை (முத்திரைகள்), வழிபாட்டுக் கிரியைகளால் எழுந்தருளச் செய்து, நீராட்டு, அலங்காரங்கள் செய்து திருவமுது அளித்துப் போற்றி வழிபட்டு மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ, புண்ணிய ஆறுகளிலோ அல்லது கடலிலோ கரைத்து விடுவது வழ்க்கம்..!
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteகாய்கறி அலங்காரம் அழகு...
தங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகழகான விநாயகர் படங்கள். நன்றி.
கண்ணருவி தான்பெருகக் காட்சிபல கண்டேனே!
ReplyDeleteமண்ணுலக வாழ்விதன் மாண்பு!
அற்புதம்! அருமையான காட்சிகள்!
அனைவருக்கும் ஐங்கரன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்!
அருமையான விநாயகர் படங்கள். பதிவு அருமை.
ReplyDeleteஎத்தனை பிள்ளையார் இன்று பார்த்தோம் என்று பேசிக் கொள்வோம்.
அனைத்து பிள்ளையார்களையும் உங்கள் தளத்தில் பார்த்து விட்டேன்.
வணங்கி மகிழ்ந்தேன்.
வாழ்த்துக்கள்.
அன்பின் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! (புதுக்கோட்டையில் ஒரு திருமணம். காலையில் சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன்) எதிர்பார்த்தது போலவே தங்கள் பதிவில் நிறைய படங்கள்..
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்