Friday, August 22, 2014

சௌபாக்கியம் அருளும் ஸ்ரீசந்தோஷி மாதா



ஓம் ஐங்கரன் மகளே போற்றி
ஓம் சௌபாக்கியம் அருளவாய் போற்றி

ஓம் செல்வமாம் நிதியே போற்றி
ஓம் சந்தோஷி மாதா போற்றி

ஓம் சகலமும் அருள்வாய் போற்றி
ஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றி

ஓம் வெற்றிகள் தருவாய் போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி

ஓம் கஜமுகன் குழந்தாய் போற்றி
ஓம் குலம் காக்கும் சுடரே போற்றி

ஓம் ஜெகமெலாம் காப்பாய் போற்றி
ஓம் ஆரத்தி ஏற்பாய் போற்றி

      சந்தோஷி மாதா
(திருமண தடை நீங்க)
ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்

மிகவும் பிரசித்தி பெற்ற. விருகம்பாக்கம் ஆற்காட் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீசந்தோஷி மாதா திருக்கோவிலில்  வெள்ளை நிற பளிங்கு கல்லால் அம்மனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசந்தோஷி மாதா கோவில்
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத பௌர்ணமி நாளன்றும், விநாயகர் சதுர்த்தியன்றும் இங்கு சிறப்பாக திருவிழா நடைபெறுகிறது.
 
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் அன்னையை நினைத்து பயபக்தியுடன் விரதமிருப்பது சகோதரயோகத்தை அளிக்கும். 

குறிப்பாக பெண்கள் விரதத்தை மேற்கொள்வதன் மூலம் 
திருமண யோகம் முதலான பலன்களை அடையலாம்.
 
ஆதிபராசக்தியின் அம்சமான தேவியை 
நினைத்து வெள்ளிக்கிழமைகளில் விரதமிருக்க 
நினைத்தக் காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. 

ஸ்ரீசந்தோஷி மாதா அன்னைக்கு புளிப்பில்லாமலேயே 
பட்சணங்கள் செய்யப்படுகின்றன.

தொடர்புடைய பதிவுகள்..

 சந்தோஷ சந்தோஷி மாதா


கருணைக்கடல் சந்தோஷி மாதா.


15 comments:

  1. சௌபாக்கியம் அருளும் சாந்தோஷி மாதா அறிந்தேன்
    உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. பெயருக்கேற்றாற் போன்று மனமுருகி அம்பாளை சரணடைவோருக்கு சகல நன்மைகளும், சந்தோஷ வாழ்வும் அமையும்! அம்பாளை சிறப்புற தரிசனம் செய்த சந்தோஷம் ஏற்பட்டது. வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  3. ஜெய் சந்தோஷி மா...

    ReplyDelete
  4. வெள்ளிக்கிழமையான இன்று சந்தோஷிமாதாவின் சிறப்பான பதிவு.நன்றி

    ReplyDelete
  5. சந்தோஷம் அருள்பவள் - சந்தோஷி மாதா!..
    சிவகுடும்பத்தில் சேர்க்கப்பட்ட இனிய உறவு!..
    அழகிய படங்கள்.. மகிழ்ச்சி!..

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  7. அழகிய படங்களுடன் அன்னையின் தோற்றமே
    சந்தோஷத்தைத் தருகிறது!

    அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  8. என் மருமகள் ஒரு சந்தோஷி மாதா பக்தை. பூஜிக்க வரையறுத்த முறைகள்படி செய்வாள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. சந்தோஷி மாதா அனைவருக்கும் அருள் புரியட்டும்....

    ReplyDelete
  10. ’செளபாக்யம் அருளும் ஸ்ரீ சந்தோஷி மாதா’
    என்ற தலைப்பும் பதிவும் அருமையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  11. படங்கள் எல்லாம் வழக்கம்போல ஜோராக உள்ளன.

    முதல்படத்தில் தீபாராதனை அனிமேஷன் அசத்தலாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. காணொளியும் போற்றி, போற்றி வரிகளும்
    போற்றிட வைக்கும் விதமாக அமைந்துள்ளன.

    >>>>>

    ReplyDelete
  13. விருகம்பாக்கத்தில் உள்ள
    வெள்ளை நிற பளிங்குக்கற்களால் ஆன
    அம்மன் போலவே இந்தப் பதிவும்
    மிகவும் பளிச்சென்று தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  14. தொடர்புடைய பதிவுகளின் இணைப்புகள்
    கொடுத்துள்ளது பலருக்கும் பயனளிக்கக்கூடும்.

    மேலும் ஒருசில பதிவுகள்கூட தாங்கள் இதே சந்தோஷிமாதா பற்றி ஏற்கனவே கொடுத்திருந்தீர்கள்.

    அதில் நான் சொல்லியிருந்த பல்வேறு கருத்துக்கள் இன்னும் என் நினைவலைகளில் அப்படியே உள்ளன.

    ஏனோ அதற்கான இணைப்புகள் இங்கு கொடுக்கப்படவே இல்லை. அதனால் பரவாயில்லை. ஏதேனும் குறிப்பிட்ட காரணங்கள் இருக்கலாம்.

    >>>>>

    ReplyDelete
  15. இன்றைய வெள்ளிக்கிழமைக்கான
    பதிவு சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

    அனைத்துக்கும் என் நன்றிகள்,

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

    :) 1376 :)

    ooo ooo

    ReplyDelete